|
|
சனி, 24 ஆகஸ்ட், 2013
new..
Vittal Rao./ sramakrishnan
வாழ்வின் சில உன்னதங்கள்
பழைய புத்தகங்களை விற்பவர்கள் தனிரகத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் மனப்போக்கினை நாம் முடிவு செய்யவே முடியாது, சில வேளைகளில் ஐம்பது பக்க அளவுள்ள புத்தகத்திற்கு இருநூறு கேட்பார்கள், சில நேரம் ஆயிரம் பக்க நூலை பத்து ரூபாய்க்குத் தந்துவிடுவார்கள், நன்றாக சிரித்துப் பேசுவார்கள், சட்டென எரிந்து விழுவதும் உண்டு,
புத்தகங்களில் அழகிய ஒவியங்கள் இருந்துவிட்டால் கட்டாயம் விலை அதிகமாகிவிடும், படமில்லாத நாவல்கள் என்றால் ஐந்தோ பத்தோ போதும் என வாங்கிக் கொள்வார்கள்,
நான் ஒரு முறை The Thief’s Journal என்ற ஜெனேயின் நூலை பிளாட்பாரக் கடையில் பார்த்தேன், கடைக்காரர் ஐந்து ரூபாய் சொன்னார், அது அச்சில் இல்லாத ஒன்று, ஆனால் அதன் முக்கியத்துவத்தை கடைக்காரர் அறியவேயில்லை, நானாக அதற்கு 25 ரூபாய் தந்தேன், இது முக்கியமான புத்தகம் என்றும் கூறினேன்,
கடைக்காரர் சிரித்தபடியே அதுக்காக ஜாஸ்தி பணம் குடுக்கிறயா, என வாங்கிக் கொண்டார், இந்த ஒரு செய்கை அதன் பிறகு எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் நீயே விலை போட்டுக்குடு என கடைக்காரரைச் சொல்ல வைத்தது,
மழைக்காலம் தான் பழைய புத்தக்கடைக்காரர்களுக்கு சிரமமான மாதம், ஒருமுறை பழைய புத்தக கடைக்காரர் ஒருவர் மழைநாளில் எனது அறையை தேடிவந்து தம்பி ஒரு ஆயிர ரூபா கடனா வேணும், புத்தகம் வாங்கி கழிச்சிக்கோங்க என்றார்,
எனக்கு அவரது கஷ்டம் தெரியும் என்பதால் உடனே தந்து அனுப்பினேன், அடுத்தவாரம் அவர் கடைக்குப் போன போது, அவர் கடையை விற்றுவிட்டு போய்விட்டது தெரியவந்த்து,
என்னை ஏமாற்றிவிட்டரே என நினைத்துக் கொண்டு அவரைத்தேடினேன், ஆளே கண்ணில் படவில்லை, பின்பு அவரை மறந்து போனேன், நான்கு வருடங்களுக்கு பிறகு ஒரு மதியம் என் அறைக்கு வந்து அவர் கதவைத் தட்டினார், கோபத்துடன் என்ன வேணும் என்று கேட்டேன்,
கடை நடத்தமுடியலை, வித்துட்டேன், அதான் உனக்குப் பணத்தைக் குடுக்க முடியலை, ஒரு வக்கீல் வீட்ல கொஞ்சம் பழைய புத்தகம் கிடைத்தது, உனக்காக கொண்டுவந்தேன் என்று இரண்டு கட்டுப் புத்தகங்க்ளை நீட்டினார், அதில் ஷேக்ஸ்பியர் முழுதொகுதி, மில்டன், கதே, டிக்கன்ஸ், வேர்ட்ஸ்வெர்த் என நாற்பது புத்தகங்களுக்கும் மேல் இருந்தன,
என் கையைப் பற்றியபடியே உன் கடனுக்கு இதை வட்டியா நினைச்சிக்கோ, கடனை திரும்ப குடுத்துருவேன் என்றார், நான் கலங்கிப்போனவனாக பரவாயில்லை, நான் தான் இந்த புத்தகத்துக்கு மிச்சப் பணம் தரணும் என 300 ரூபாய் கொடுத்தேன்,
வேணாம் தம்பி, ஒரு சாப்பாடு மட்டும் வாங்கிகுடு போதும் என்றார், இருவரும் சரவணபவனில் போய் சாப்பிட்டோம், திரும்பி போகும்போது சொன்னார்,
படிக்கிறவனை ஏமாற்றினா நாம உருப்பட முடியாது தம்பி, இப்போ தான் மனசு குளிர்ந்து இருக்கு, பில்லர் கிட்டே தள்ளுவண்டியில சூப் கடை வச்சி நடத்தப்போறேன், எப்பவும் போல வந்து போங்க என்றார்,
சில வாரங்களுக்கு பின்பு பில்லர் பக்கம் போன போது அவரைத்தேடினேன், அப்படி கடை எதையும் காணவில்லை, நகர நெருக்கடிகளுக்குள் எங்கே போனார் என்றே தெரியவில்லை, ஆனால் மனது அவரை இன்றும் தேடிக்கொண்டுதானிருக்கிறது,
பழைய புத்தக கடைகளில் உங்களுக்கு அதிர்ஷடமிருந்தால் தான் நல்ல புத்தகங்கள் கிடைக்ககூடும், பழைய புத்தகங்களைத் தேடி அலைந்து நான் சுவாச ஒவ்வாமையை தேடிக் கொண்டேன், மருத்துவர், நீங்கள் பழைய புத்தகக் கடைப்பக்கமே போக கூடாது, அந்த தூசி உங்களுக்கு அலர்ஜி என்று கறாராகக் கூறிவிட்டார்,
ஆறு மாதங்களுக்கு பழைய புத்தகக் கடை பக்கம் போய் ஆசையோடு தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன், அது போல கொடுமையான அனுபவம் வேறு கிடையாது, எனது தவிப்பை அறிந்த பழைய புத்தக கடைக்காரர் அறையை தேடி வந்து தானே தேர்வு செய்த பத்து இருபது புத்தகங்களை கொடுத்து போவதை வழக்கமாக கொண்டார், அந்த நன்றி மறக்கமுடியாதது, பின்பு மருத்துவ அறிவுரையை காற்றில் பறக்கவிட்டு வழக்கம் போல பழைய புத்தகக் கடைகளில் தேடி அலைய ஆரம்பித்தேன், ஒவ்வாமையை பழகிப்போய்விட்டது,
பழைய புத்தகங்களுடன் உள்ள உறவு புதிய புத்தகங்களுடன் ஏற்படுவதில்லை, பலநேரம் அந்த புத்தகங்களை வாங்கியவர் யார், படித்தவர்கள் எத்தனை பேர் என்று யோசித்துக் கொண்டிருப்பேன், ஆஸ்கார் ஒயில்ட் பற்றிய பழைய புத்தகம் ஒன்றில் இரண்டாக மடிக்கபட்ட ஒரு கடிதம் ஒன்றினைக் கண்டு எடுத்தேன்,
அது வக்கீல் பாஷ்யம் என்பவருக்கு அவரது தந்தை எழுதிய ஆங்கில கடிதம், கல்கத்தா என முகவரி எழுதப்பட்டிருந்தது, அந்தக் கடிதத்தில் பிழைக்கப் போன இடத்தில் நல்ல சாப்பாடு, பேச்சுத்துணை , மான அவமானங்களைப் பற்றி யோசிக்க கூடாது, நீ ஜெயிக்க வேண்டும், அந்த ஒன்று எல்லாவற்றையும் தானே தேடி தந்துவிடும் என்று எழுதப்பட்டிருந்தது,
யாரோ, யாருக்கோ எழுதிய கடிதம் எனக்கு மிகுந்த உத்வேகம் தருவதாக அமைந்த்து, ஒருமுறை பழைய புத்தகம் ஒன்றுக்குள் பத்து ரூபாய் ஒன்று ஒளித்து வைக்கபட்டிருந்தது, அது எனது ஒரு நாளைக் காப்பாற்றியது, பி. ஜி. வுட்ஹவுஸ் புத்தகத்தில் அதை வாசித்தவர் ஆங்காங்கே எழுதிய அடிக்குறிப்புகள் புத்தகத்தை விட சுவாரஸ்யமாக இருந்தது.
பழைய புத்தகங்களைத் தேடி வாசிக்கின்றவன் என்ற காரணமே விட்டல்ராவின் வாழ்வின் சில உன்னதங்கள் புத்தகத்தை தேடிப்படிக்க முக்கிய காரணமாக இருந்தது, கடந்த பத்து ஆண்டுகளில் நான் படித்த கட்டுரை புத்தகங்களில் மிக முக்கியமானது என்று இந்த நூலைக் கூறுவேன்,
விட்டல்ராவ், சிறந்த எழுத்தாளர், ஒவியர், கட்டுரையாளர், அவரை திருவல்லிகேணி, அண்ணாசாலை பழைய புத்தக கடைகளில் நானே பலமுறை பார்த்திருக்கிறேன், நுண்கலைகள் பற்றி தேர்ந்த அனுபவமும் தெளிந்த ஞானமும் கொண்டவர்,
தான் பழைய புத்தகங்களை எப்படிச் சேகரித்தேன் என்பதையும் பழைய புத்தக கடைகாரர்களின் குணாதிசயங்களையும், இலக்கிய இதழ்களின் முக்கியத்துவம் பற்றியும் அற்புதமாக எழுதியிருக்கிறார், இது ஒரு அரிய ஆவணப்படுத்துதல்,
விட்டல்ராவின் அனுபவத்தில் பெரும்பான்மை எனக்கும் நேர்ந்திருக்கிறது என்பதால் படிக்கையில் மிகுந்த நெகிழ்ச்சி அடைய நேர்ந்தது, குறிப்பாக மூர்மார்க்கெட் எரிக்கபட்டது பற்றிய கட்டுரை மிக முக்கியமானது.
நான் சென்னைக்கு வந்து போய் கொண்டிருந்த கல்லூரி நாட்களில் ரயிலை விட்டு இறங்கியதுமே நேராக மூர்மார்க்கெட்டிற்குப் போய்விடுவேன், அங்கே ஒரு பை நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு தான் நண்பர்களைக் காணச்செல்வேன், 1952ல் ஹெமிங்வே அட்டையுடன் வெளியான LIFE இதழில் The Old Man and the Sea வெளியாகி இருந்த்து, அந்த இதழை மூர்மார்க்கெட்டில் தான் வாங்கினேன்,
இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா, இம்ப்ரிண்ட், எஸ்கொயர், Paris Review. Chimera. Horizon. என நிறைய இதழ்களை அங்கே வாங்கியிருக்கிறேன், 1985 ல் மூர்மார்க்கெட் எரிக்கபட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அந்த இடத்திற்கு போய் நின்ற போது மனது கலங்கிப்போய்விட்டது, உடலின் ஒரு பகுதி துண்டிக்கபட்டது போலவே உணர்ந்தேன், புகைபடிந்த கற்களை வெறித்துப் பார்த்தபடியே நின்றபோது தொண்டை அடைத்தது, திட்டமிட்டு உருவாக்கபட்ட விபத்து என்று சொன்னார்கள், நிஜம் என்றால் அது போல ஒரு அநியாயம் வேறு ஒன்றுமேயில்லை, அந்த மூர்மார்க்கெட்டுடன் தனக்குள்ள உறவைப் பற்றி விட்டல்ராவ் அற்புதமாக எழுதியிருக்கிறார், அவை முற்றிலும் உண்மை என்பதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்,
விட்டல்ராவின் இந்த நூல் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய கலை இலக்கிய இதழ்களையும், அரிய இலக்கியத் தகவல்களையும், ஒவியங்களையும் உள்ளடக்கியது, ஒவியர் என்பதால் விட்டல்ராவ் ஆங்கில இதழ்களின் கோட்டுப்படங்கள், புகைப்படங்கள் குறித்து நுட்பமாக சிலாகித்து எழுதியிருக்கிறார், இந்த நூலை வாசித்தபிறகு அவர் சொன்ன சில இதழ்களை எடுத்துப்புரட்டி அந்த ஒவியங்களின் அருமையை புரிந்து கொண்டேன்,
விட்டல்ராவின் தந்தைக்கும், பழைய புத்தக கடைக்காரர் ஒருவருக்குமான நட்பு பற்றிய கட்டுரை மிகுந்த உணர்ச்சிபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது, அக்கட்டுரை குறும்படமாக உருவாக்க வேண்டிய ஒன்று,
அது போலவே பைண்டிங் செய்கின்றவரை பற்றியும், மூர்மார்கெட் ஐயர் பற்றிய கட்டுரையும் ஒளிரும் சித்திரங்களாக உள்ளன , இலக்கியம், ஓவியம், சிற்பம், வரலாறு எனப் பல துறைகளில் வெளிவந்த தொடர்களை விட்டல் ராவ் தேடித்தேடி சேகரித்து பாதுகாத்து வைத்திருக்கிறார், இந்த ரசனையும் ஈடுபாடும் தான் அவரை மிகச்சிறந்த எழுத்தாளராக உருமாற்றியிருக்கின்றன
தமிழில் இது போன்று பழைய புத்தக உலகம் குறித்து எவரும் இத்தனை விரிவாக, நுட்பமாக எழுதியதில்லை, அவ்வகையில் விட்டல்ராவின் புத்தகம் ஒரு கொடை என்றே சொல்வேன்,
வாழ்வின் சில உன்னதங்கள் விட்டல்ராவின் வாழ்க்கையாக மட்டுமில்லை, புத்தகங்களை தேடித் திரியும் எல்லோரது வாழ்க்கையின் பகுதியாகவுமிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு
அமெரிக்கன் சென்டர், மேக்ஸ்முல்லர் பவன், அலியான்சே பிரான்சே, அடையார் நூலகம் என்று வெளிநாட்டு இதழ்களை வாசிப்பதற்குத் தேடி அலைந்த நாட்களை நினைவூட்டும் இக்கட்டுரைகள் இணைய யுகத்தில் வாழும் இளைஞர்களுக்கு வெறும் அனுபவமாக மட்டுமே தோன்றக்கூடும், ஆனால் இது அனுபவம் மட்டுமில்லை, ஒரு வாழ்க்கை முறை, வாழ்த்துபார்த்தவர்கள் தான் அதன் உன்னதத்தை அறிய முடியும், விட்டல்ராவ் அப்படியான ஒருவர்.
••
வாழ்வின் சில உன்னதங்கள் விட்டல்ராவ் நர்மதா பதிப்பகம், சென்னை-17, விலை ரூ. 200/-
வெள்ளி, 31 மே, 2013
new..
|
|
வியாழன், 16 மே, 2013
neenda edaiveluikku pin...
Edhiroli Tamil shared எதிரொலி's status.
பாஜக என்கிற அரசியல் கட்சிக்கும், விஎச்பி, பஜ்ரங்தள், எபிவிபி, இந்துமுன்னணி உள்ளிட்ட வெவ்வேறு பெயர்களில் இயங்கும் வலதுசாரி இந்துதுவ அமைப்புக்களுக்கும் தாய் அமைப்பு ஆர்எஸ்எஸ். இந்த எல்லா அமைப்புக்களையும் சேர்த்து சங்பரிவார் என்று ஆர்எஸ்எஸ்காரர்கள் அழைக்கிறார்கள்.
இவர்களின் அரசியல் எல்லாமே இந்து மதம் சார்ந்தது. இந்துமதக் கடவுள்கள் தான் இவர்களின் உதாரண புருஷர்கள். வழிபாட்டுக்குரிய, பின்பற்றத்தக்க முன்னோடிகள். இந்து மதத்தின் பிரதான கடவுள்கள் மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் சிவன், விஷ்ணு, பிரம்மா. முன்றாவது மூர்த்தியான பிரம்மனைப் பற்றி அவர்கள் அதிகம் பேசுவதில்லை. ஒருவேளை தன் மகளான சரஸ்வதியை, தந்தையான பிரம்மனே மணந்த செயலை நியாயப்படுத்துவதில் சங்பரிவாரங்களுக்கே கூட சங்கடம் ஏற்பட்டிருக்கலாம். அதனால் அவர்கள் பிரம்மன் குறித்து அதிகம் பேசுவதில்லை. எனவே நாமும் அவரை இப்போதைக்கு விட்டுவிடலாம்.
சிவனுக்கு சக்தி என்கிற மனைவி, கங்கை என்கிற துணைவி. சிவனைப் பொறுத்தவரை அவர் ஒருபக்கம் தன்னிடம் காமத்தை தூண்ட முயன்ற மன்மதனை நெற்றிகண்ணால் எரித்து சாம்பலும் ஆக்கியிருக்கிறார். மறுபக்கம் திருவிளையாடல் புராணத்தில் இதே சிவபெருமான் தனது பக்தனின் சின்னவீட்டுக்கு தானே தூது போய் (என்ன ஒரு முக்கிய சேவை பாருங்கள்) சின்னவீட்டை பக்தனுக்காக செட் அப் செய்தும் கொடுத்திருக்கிறார்.
அடுத்து விஷ்ணுவுக்கு எத்தனை மனைவிகள் என்று கணக்கிடுவதில் இன்றுவரை பெரிய சிக்கல் நீடிக்கிறது.காரணம் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் எவை என்பதில் வைணவர்கள் மத்தியில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதில் ஒவ்வொரு அவதாரத்திலும் விஷ்ணு ஒவ்வொரு மாதிரி துணைகளை, இணைகளை வைத்துக்கொள்கிறார்.
பரசுராம அவதாரத்தில் அவர் பிரம்மச்சாரி. ராம அவதாரத்தில் அவருக்கு சீதை என்கிற ஒரே மனைவி. அந்த ஒரே ஒரு மனைவியை ராமர் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல. முதலில் தீயில் இறங்கி தனது தூய்மையை நிரூபிக்கச்சொன்னார். அடுத்து நிறைமாத கர்ப்பிணியான சீதையை காட்டுக்கு விரட்டினார். அவ்வளவு தூரம் மனைவியையே நம்பாத சந்தேகப்பேர்வழிதான் விஷ்ணுவின் அவதாரமான ராமர்.
இதற்கெல்லாம் சேர்த்துவைத்து கிருஷ்ண அவதாரத்தில் விஷ்ணு காதல் விஷயத்தில் சும்மா புகுந்து விளையாடுகிறார். ராதா, ருக்மணி, சத்யபாமா, ஜாம்பவதி, களிந்தி, மித்ரவிந்தா, நாகநஜிதி, பத்ரா, லக்ஷமணா என்று மொத்தம் ஒன்பது அதிகாரப்பூர்வ மனைவி மற்றும் துணைவிகள். இவர்கள் தவிர கிருஷ்ண பகவான் கணக்கிலடங்கா கோபிகைகளுடன் ராசலீலையிலும், ஜலக்கிரீடைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
இப்படியாக வெறும் பெண்களை மட்டுமே கூடி கூடிக் களைத்துப் போகும் போது ஒரு சேஞ்சுக்காக கிருஷ்ண பகவான் மோகினி அவதாரமெடுத்து சிவனுடனும், நாரதனுடனும் கூடி பிள்ளைகள் பெற்றுக் கொண்டார். அப்படி அவர் பெற்ற பிள்ளைகளில் சிவனுக்கு பிறந்தவர் ஐயப்பன். நாரதருக்குப் பிறந்தவர்கள் தான் சித்திரை மாதம் துவங்கும் தமிழ் ஆண்டுப்பெயர்களில் இருக்கும் அறுபது குழந்தைகள்.
விஷ்ணுவின் அவதாரமான திருப்பதி வெங்கடாஜலபதிக்கு ஒரு மனைவி, ஒரு துணைவி. இதுபோறாதென்று துலுக்கநாச்சியார் என்று மூன்றாவதாக ஒரு தொடுப்பு வேறு.
இங்கே தமிழ்நாட்டில் விஷ்ணுவின் தீவிர பக்தையான ஆண்டாள் பாசுரத்தில் வெளிப்படாத காதலோ காமமோ வேறொரு இலக்கியத்தில் இல்லை. அப்படி ஒரு அனுபவித்து எழுதிய காதல் சுரங்கக் கவிதைகள்.
சரி இதெல்லாம் கற்பனையென்று ஒரே வரியில் நீங்கள் புறந்தள்ளலாம். அதனால் அவற்றை நாமும் விட்டுவிடலாம். ஆனால் நம் சமகால காஞ்சி சங்கராச்சாரியார் கதைக்கு உங்கள் பதில் என்ன சங்பரிவாரிகளே? ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக அரசியல்வாதிகளும், சங்பரிவாரத் தலைவர்களும் தவறாமல் போய் சலாம் போடுவது காஞ்சி சங்கராச்சாரியார்களின் மடத்தில். அந்த மடத்தின் மூத்தவர் பெயர் ஜெயேந்திரர்; இளையவர் பெயர் விஜயேந்திரர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து ஒருவரை கோவிலுக்குள்ளேயே கொடூரமாக வெட்டிக்கொன்றதாக குற்றச்சாட்டு. கொல்லப்பட்டவர் பெயர் சங்கரராமன். கொலைக்கான காரணம் இரண்டு சங்கராச்சாரியார்களும் பல பெண்களிடம் கள்ளக்காதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதை தான் வெளியில் சொல்லிவிடுவேன் என்று சங்கரராமன் மிரட்டியதாகவும் அந்த மிரட்டலைத் தொடர்ந்து தங்களின் கள்ளக்காதல் விவகாரங்கள் வெளியில் வராமல் தடுக்கும் நோக்கில் சங்கராச்சாரியார்கள் கூலிப்படை மூலம் சங்கரராமனை கோவிலுக்குள்ளேயே வைத்து கொடூரமாக கொலை செய்ததாகவும் தமிழக காவல்துறை தொடர்ந்த வழக்கு பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது.
சன்னியாசியான சங்கராச்சாரியார் காதல் விவகாரத்தில் சிக்கியது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே 1987 ஆம் ஆண்டு சன்னியாசிக்கான அடையாளமான தனது தண்டத்தை மடத்தில் விட்டுவிட்டு அவர் பாட்டுக்கு தலைக்காவிரிக்கு இரவோடிரவாக ஓடிப்போனார். அவருடன் கூடவே ஒரு பெண்ணும் போனதாக ஊடகங்களில் எல்லாம் ஊகங்கள் வெளியானது.
அப்போது டெல்லியில் இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்த சங்கராச்சாரியாரின் சீடர் ஆர் வெங்கட்ராமனின் மனைவி இரவோடிரவாய் சிறப்பு விமானத்தில் ஓடோடி வந்து சமாதானம் பேசி குடும்பஸ்தனாகப் போனவரை மீண்டும் கொண்டுவந்து சன்னியாசியாக்கினார்கள்.
அதற்குப்பிறகும் சங்கராச்சாரியார் சும்மா இல்லை. விதவைகள் எல்லாம் "தரிசு நிலம்" என்று கூறிய ஜெயேந்திரர், அவரது பார்வையில் "தரிசு நிலமாக" இருந்த புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் அனுராதா ரமணனின் கையை பிடித்து இழுத்து "தரிசுநில மேம்பாடு" செய்ய முயன்றதாக அந்தம்மாவே கண்ணீர் மல்க விரிவாக புகரை பதிவு செய்திருக்கிறார்.
ஊரறிந்த துறவியான (?) "லோக குருவின்" லட்சணம் இதுவென்றால், அரசியல் துறவிகளான பாஜக தலைவர்களைப்பற்றி என்னத்தை சொல்ல. அது ஒரு நீண்ட பட்டியல், சமீபத்திய சில உதாரணங்களை மட்டும் தொட்டுக்காட்டினால் போதும்.
ஆர் எஸ் எஸ் அமைப்பிலிருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு அனுப்பப்பட்ட இரண்டு பெரிய தலைவர்கள் கோவிந்தாச்சார்யா மற்றும் சந்நியாசினி உமாபாதி. இவர்களுக்கு இடையில் உருவான காதல் கல்யாணத்தில் முடிவதற்குள் கட்சிக்குள் இருந்த சிலர் இதை ஊடகங்களுக்கு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டதால் திருமணம் நின்று போனது.
அதேபோல, ஆர் எஸ் எஸ் அமைப்பிலிருந்து பாரதீய ஜனதாவுக்கு அனுப்பப்பட்ட இன்னொரு பெரிய ஆள் சஞ்சய் ஜோஷி. பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர் காதல் விவகாரத்தில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் ஒரே ஒருமுறை ஆட்சி செய்தாலும், பாஜக தலைவர்களின் காதல் லீலைகள் கொஞ்சநஞ்சமல்ல. கர்நாடக சட்டமன்றத்திற்குள்ளேயே, கைபேசிகளில் பாரதீய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்த காணொளிகளில் துவங்கி, உடுப்பி சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி பட் ஏடாகூடமான காணொளியில் சிக்கியதுவரை பாரதீய ஜனதா கட்சியின் கர்நாடக லீலாவிநோதங்களுக்கு தனி அத்தியாயம் தேவை.
இப்படியான சின்ன ஆட்களைத்தவிர ஆனப்பெரிய தலைவரான அடல்பிஹாரி வாஜ்பாய் கதை இன்னும் சுவாரஸ்யமானது. அதிகாரப் பூர்வமாக அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அவருக்கு “குடும்பம்” இருக்கிறது, “குழந்தைகள்” இருக்கிறார்கள் என்கிறார் அவரது முன்னாள் நெருங்கிய நண்பரும், தற்போது பாரதீய ஜனதா கட்சியின் மிக முக்கிய கூட்டாளியுமான சுப்பிரமணிய சுவாமி. வாஜ்பாயியின் லீலாவிநோதங்கள் மற்றும் அவரது “குடும்பம்” எப்படி உருவானது (?) என்கிற விவரங்களை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்கண்ட பதிவை சென்று படித்து பயன்பெறவும். அதை தமிழில் மொழிபெயர்த்தால் வரக்கூடிய திட்டுக்களைத் தாங்க எதிரொலியால் முடியாது. அவ்வளவு மோசம்.
http://
பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் கதை இதுவென்றால், அவர்களின் எதிர்கால பிரதமராக முன் நிறுத்தப்படும் நரேந்திரமோடியின் கதை இதைவிட விசித்திரமானது. வாஜ்பாயி திருமணாமாகாமலே “குடும்பத்”துடன் வாழ்கிறார் என்றால், நரேந்திர மோடி தனக்கு இருக்கும் குடும்பத்தை மறைப்பதில் கவனமாக இருக்கிறார். தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்த கதையை பேசாமல், தனக்கு ஒருமனைவி இருக்கிறார் என்பதையும் வெளி உலகுக்கு காட்டாமல் மறைப்பதில் மோடி மிக மிக கவனமாக இருக்கிறார். நரேந்திர மோடியால் மிகக்கவனமாக மறைக்கப்படும் அவரது மனைவியை சந்தித்து பேட்டி எடுக்கப்போன ஊடகவியலாளருக்கு நேர்ந்த அனுபவம் குறித்த விரிவான செய்திக்கு இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.
http://
இந்த கட்டுரையில் பட்டியலிடப்பட்டிருப்பவை எல்லாமே ஏற்கெனவே ஆவணரீதியில் பதிவு செய்யப்பட்ட தகவல்களே. இதில் எதுவுமே எதிரொலியின் புதிய கண்டுபிடிப்பல்ல. கடவுளானாலும், மனிதர்களானாலும் அவரவர் காதலும் காமமும் அவரவர் தனிப்பட்ட அந்தரங்கம். அவற்றில் தலையிடவோ, அவர்கள் செய்ததில் எது சரி எது தவறு என்று தீர்ப்பு எழுதவோ எதிரொலி உட்பட யாருக்குமே எந்த உரிமையும் இல்லை. யோக்கியதையும் இல்லை. அவர்களின் காதல் அல்லது காமம், சட்ட மீறலாகவோ, மனித உரிமை மீறலாகவோ புகாராக வந்தால் மட்டுமே, அரசு உட்பட மற்றவர் இதில் தலையிட முடியும், இது குறித்து கருத்து சொல்ல முடியும். விவாதிக்க முடியும்.
சங்பரிவாரிகளுக்கு பொருந்தும் இந்த நியாயம், இந்த அளவுகோல் கருணாநிதிக்கும் பொருந்தும் என்பதை எடுத்துக்காட்டவே எதிரொலி இந்த உதாரணங்களை இங்கே அடுக்கியது. அவ்வளவே.
வியாழன், 13 டிசம்பர், 2012
Manushyaputthiran.
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
எப்போதும் உருவாகிவிடுகிறது
ஒரு சதுரங்கக் கட்டம்
ஒரு கலைக்கமுடியாத பாவனையின்
மர்ம நிழல்
ஒரு சர்க்கஸ் கோமாளியின்
அபாயகரமான சாகசங்கள்
ஒரு அபத்த வெளியில்
விரிக்கப்பட்ட வலை
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேதிகளின் கண்களை
முற்றாகத் தவிர்த்துவிடுகிறேன்
அவளது ஆடையின் வண்ணங்களை
அவளது தேனீரின் ரகசியப் பிரியங்களை
மறுதலித்துவிடுகிறேன்
அவளைப் பற்றிய ஒரு நினைவை
வேறொரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன்
அவளது கணவனைப்போலவே
அவளது இருப்பை
ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகிதங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது
ஒரு கருணை
அது நம்மிடம் காட்டப்படும்
ஒரு பெருந்தன்மை
சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு
காட்டப்படும் பெருந்தன்மை
நாம் சந்தேதிக்கப்படவில்லை
என நம்மை நம்ப வைக்கும்
ஒரு தந்திரமான விளையாட்டு
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதி எப்போதும்
பிசாசுகளின் புதிர்மொழியொன்றைப்
பேசுகிறாள்
உரையாடல்களின்
அபாயகரமான திருப்பங்களை
பதற்றத்துடன் லாவகமாகக் கடந்து செல்கிறாள்
எதைப் பற்றிய பேச்சிலும்
கணவரைப் பற்றிய
ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள்
ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்
மிகவும் ஆயாசமடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது
நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களின் இடையே இருப்பது
ஒரு உறவல்ல
இலக்குகள் ஏதுமற்ற
ஒரு பந்தயம்
ஒரு அன்னியனுக்குக் காட்டும்
வன்மம் மிகுந்த மரியாதை
ஒரு சட்டபூர்வ உரிமையாளனுக்கு எதிராக
ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம்
தொண்டையில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட
ஒரு மீன் முள்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை
மாற்றிக் கொள்கிறேன்
அவர்களது எல்லா அக்கறைகளையும்
எனது அக்கறைகளாக்கிக் கொள்கிறேன்
சிநேகிதிகளுடன் பேச
ஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது
அவர்களின் கணவர்களுடன் பேச
ஏராளமான கச்சாப் பொருள்கள் தேவைப்படுகின்றன
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
சிநேகிதிக்குப் பதில்
சிநேகிதியின் குழந்தைகளை
நேசிக்கக் கற்றுக் கொண்டேன்
எவ்வளவு குடிக்க வேண்டும்
ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும்
நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும்
எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும்
என எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன்
நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று
அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை
‘சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று
*
சிநேகங்களில்
எப்போதும் உருவாகிவிடுகிறது
ஒரு சதுரங்கக் கட்டம்
ஒரு கலைக்கமுடியாத பாவனையின்
மர்ம நிழல்
ஒரு சர்க்கஸ் கோமாளியின்
அபாயகரமான சாகசங்கள்
ஒரு அபத்த வெளியில்
விரிக்கப்பட்ட வலை
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேதிகளின் கண்களை
முற்றாகத் தவிர்த்துவிடுகிறேன்
அவளது ஆடையின் வண்ணங்களை
அவளது தேனீரின் ரகசியப் பிரியங்களை
மறுதலித்துவிடுகிறேன்
அவளைப் பற்றிய ஒரு நினைவை
வேறொரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன்
அவளது கணவனைப்போலவே
அவளது இருப்பை
ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகிதங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது
ஒரு கருணை
அது நம்மிடம் காட்டப்படும்
ஒரு பெருந்தன்மை
சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு
காட்டப்படும் பெருந்தன்மை
நாம் சந்தேதிக்கப்படவில்லை
என நம்மை நம்ப வைக்கும்
ஒரு தந்திரமான விளையாட்டு
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதி எப்போதும்
பிசாசுகளின் புதிர்மொழியொன்றைப்
பேசுகிறாள்
உரையாடல்களின்
அபாயகரமான திருப்பங்களை
பதற்றத்துடன் லாவகமாகக் கடந்து செல்கிறாள்
எதைப் பற்றிய பேச்சிலும்
கணவரைப் பற்றிய
ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள்
ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்
மிகவும் ஆயாசமடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது
நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களின் இடையே இருப்பது
ஒரு உறவல்ல
இலக்குகள் ஏதுமற்ற
ஒரு பந்தயம்
ஒரு அன்னியனுக்குக் காட்டும்
வன்மம் மிகுந்த மரியாதை
ஒரு சட்டபூர்வ உரிமையாளனுக்கு எதிராக
ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம்
தொண்டையில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட
ஒரு மீன் முள்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை
மாற்றிக் கொள்கிறேன்
அவர்களது எல்லா அக்கறைகளையும்
எனது அக்கறைகளாக்கிக் கொள்கிறேன்
சிநேகிதிகளுடன் பேச
ஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது
அவர்களின் கணவர்களுடன் பேச
ஏராளமான கச்சாப் பொருள்கள் தேவைப்படுகின்றன
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
சிநேகிதிக்குப் பதில்
சிநேகிதியின் குழந்தைகளை
நேசிக்கக் கற்றுக் கொண்டேன்
எவ்வளவு குடிக்க வேண்டும்
ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும்
நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும்
எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும்
என எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன்
நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று
அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை
‘சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று
*
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)