வெள்ளி, 8 ஜூலை, 2011

A muthulingam.

'எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை!'My Photo




சமீபத்தில் நான், விகடனில் ஒரு செய்தி படித்தேன். மிஸ் சென்னை 99 போட்டியின் கடைசிச் சுற்றில் ஒரு கேள்வி கேட்டார்கள்.

'மனிதர்களுக்குத் தேவையான குணம் எது?’

இந்தக் கேள்விக்கு, 'நேர்மை’ என்று பதில் அளித்து, த்ரிஷா என்கிற பெண் கிரீடத்தைத் தட்டிக் கொண்டு போனாள். இதில் என்னை ஆச்சர்யப்படவைத்த விஷயம் என்ன என்றால், இளைய தலைமுறையினர்கூட, நேர்மையான குணத்தை மெச்சுகிறார்கள் என்பதுதான். இப்படி நான் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

பக்கத்து வீட்டுப் பெண் குழந்தை கதை சொல்ல வந்திருந்தாள். நாலு வயது இருக்கும்.



'ஒரு ஊர்ல ஒரு கௌவி இருந்தா. அவ வடை சுட்டப்போ, ஒரு காக்கா வந்து வடையைப் பறிச்சுண்டு போய், ஒரு மரத்துல உக்காந்துச்சு. அந்தப் பக்கத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு வடையைப் பார்த்ததும் வாயில எச்சில் ஊறிச்சாம். அது காக்காவப் பார்த்து, 'காக்கா... காக்கா... நீ நல்ல அழகா இருக்க... உன் குரல் இன்னும் அழகா இருக்கு. ஒரு பாட்டுப் பாடு’ன்னுச்சாம். காக்கா, 'கா... கா...’ன்னு கத்த, வடை கீழே விழுந்துச்சாம். நரி எடுத்துண்டு ஓடிச்சாம்!’

நரியும் காகமும், வடையும் காகமும், கிழவியும் வடையும், நரியும் வடையும் என்று பலவிதத் தலைப்புகளைக்கொண்ட இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, சிறுமி போய்விட்டாள்.



அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்காவிலேயே வளர்ந்த ஒரு சிறு பெண்ணிடம், இந்தக் கதையின் போதனை என்ன என்று ஒரு முறை கேட்டேன். அந்தப் பெண் கொஞ்சமும் தயங்காமல், 'வாய்க்குள் சாப்பாடு வைத்துக்கொண்டு பேசக் கூடாது!’ என்றாள். அமெரிக்காவில் உணவை வாயில் வைத்துக்கொன்டு பேசுவது மிகவும் பாவமான செயல் என்பது புரிந்தது.



இன்னொரு சிறுவன் சொன்னான், 'ஏமாற்றினால் நீயும் ஏமாற்றப்படுவாய்’ என்று. ஒரு சிறுமி மாத்திரம் 'முகஸ்துதிக்கு மயங்கக் கூடாது’ என்றாள்.

உண்மையில், இந்தக் கதையில் நாயகன் யார் என்று எனக்குத் தெரியவில்லை. கிழவியா, நரியா, காகமா அல்லது வடையா? வடைதான் ஊடுசரடாகக் கதை முழுக்க வியாபித்து இருக்கிறது என்று கூறுவார்கள்.



அந்தப் பெண் குழந்தை, கதையின் கடைசி வரியைச் சொல்லும்போது, இரண்டு கால் பெருவிரல்களையும் நிலத்தில் ஊன்றி எம்பி நின்று 'நரி எடுத்துண்டு ஓடிச்சாம்’ என்று சொன்னபோது, அதன் முகத்தில்தான் எத்தனை பரவசம். காகம் ஏமாந்ததில் அத்தனை சந்தோஷம்! பாடம்: ஏமாற்றினால் பிழைக்கலாம்.



இன்னும் ஒரு பரம்பரைக் கதை சிறுவர் மத்தியில் உலவுகிறது. ஏழை விறகுவெட்டியின் கோடரி ஒருநாள் ஆற்றில் விழுந்துவிட்டது. ஒரு தேவதூதன் தோன்றி, ஆற்றில் குதித்து ஒரு தங்கக் கோடரியைக் கொண்டுவந்தான். விறகுவெட்டி, அது தன்னுடையது இல்லை என்றதும் இன்னொரு முறை மூழ்கி ஒரு வெள்ளிக் கோடரியைக் கொண்டு வந்தான். விறகுவெட்டி அதையும் மறுக்க, கடைசியில் தேவ தூதன் அவன் உண்மையாகத் தொலைத்த இரும்புக் கோடரியைக் கொண்டுவந்து கொடுத்தான். விறகுவெட்டி, அதுதான் தன்னுடையது என்று ஏற்றுக்கொண்டான். கதை இங்கே முடிந்திருக்க வேண்டும். ஆனால், தேவதூதன் என்ன செய்தான்? விறகுவெட்டியின் நேர்மையை மெச்சி தங்கக் கோடரி, வெள்ளிக் கோடரி இரண்டையும் பரிசாகக் கொடுத்தானாம்.



இது போதிக்கும் பாடம் என்ன? நேர்மையைக் கடைப்பிடித்தால், இறுதியில் செல்வம் இருக்கும். இதுவும் ஒரு தப்பான போதனைதான்! நேர்மைக்கும் செல்வத்துக்கும் ஒருவிதத் தொடர்பும் இல்லை. உண்மையில் பார்த்தால், நேர்மையாக இருப்பவர்கள் செல்வம் சேர்ப்பது அரிதான காரியம்.



திருக்குறிப்பு நாயனார் என்று ஒருவர். இவருக்கு வேலை, அடியார்களின் ஆடைகளை இலவசமாகச் சலவை செய்து தருவது. அப்படி ஒருநாள் ஒரு தொண்டரின் கந்தையைத் துவைத்து, உலர்த்தித் தருவதாக வாக்கு கொடுக்கிறார். தோய்த்துவிட்டார். உலர்த்துவதற்கு இடையில் மழை வந்துவிட்டது. வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. என்ன செய்திருக்க வேண்டும்? 'போய்யா... உலர்த்து வதற்கு இடையில் மழை வந்து விட்டது. என்னை என்ன பண்ணச் சொல்லுகிறாய்?’ என்று கேட்டிருக்க வேண்டாமோ? மாறாக, மன்னிப்புக் கேட்டு தண்டனையாகக் கல்லில் தன் தலையை முட்டிக்கொண்டாராம். மனசாட்சி என்பது இதுதான்!

நம்மில் பலர் நேர்மையாக இருப்பதற்குப் பின்விளைவுகளின் பயம்தான் காரணம். பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் நேர்மையாக இருப்பது, அப்பா பார்த்துவிடுவாரோ என்ற பயத்தில் சிகரெட் பிடிக்காமல் விடுவது, ஆசிரியரிடம் அகப் பட்டுவிடுவோம் என்ற பயத்தில் மாணவன் பரீட்சை பேப்பரை யோக்கியமாக எழுதுவது, மனைவியிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கணவன் ஒழுக்கமாக நடந்துகொள்வது... இவை எல்லாம் உண்மையில் 'நேர்மை’ என்ற பதத்தில் அடங்கும் என்று கூற முடியாது.



அந்த ஆப்பிரிக்கன் எழுத்தறிவு இல்லாத கடைநிலை ஊழியன். எப்போது பார்த்தாலும் அவனுக்கு பணக் கஷ்டம். ஒரு வெள்ளைத் தாளில், சம்பள முன் பணம் கேட்டு, யாரையாவது பிடித்து விண்ணப்பம் எழுதியபடியே இருப்பான். இவனுக்கு ஆறு குழந்தைகள். கடைசியில் பிறந்தது இரட்டைக் குழந்தைகள். நிறுவனத்தில், குழந்தைகளுக்கான படிப் பணம் உண்டு. மாதா மாதம் ஆறு குழந்தைகளுக்கான படிப் பணத்தையும் பெற்றுவிடுவான்.



ஒருநாள் இவனுடைய இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன. ஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்தவன் செய்த முதல் காரியம், இறந்த குழந்தைகளுக்கான படியை வெட்டச் சொல்லி எழுதத் தெரிந்த ஒருவரைக்கொண்டு கடிதம் எழுதியதுதான்!

என்னுடைய 20 வருட சேவகத்தில் குழந்தைப் படியை வெட்டச் சொல்லிக் கோரும் விண்ணப்பத்தை நான் கண்டது இல்லை. இந்த ஊழியன் இருக்கும் கிராமம் 200 மைல் தூரத்தில் இருந்தது. இவனுடைய குழந்தைகள் இறந்த விவரம் நிர்வாகத்தின் காதுகளை எட்டும் சாத்தியக்கூறே கிடையாது. எப்போதும் கஷ்டத் தில் உழலும் இவன், இப்படித் தானாகவே சம்பளப் படியை வெட்டும்படி சொன்னது ஏன்?

நிர்வாகம் கண்டுபிடித்துவிடும் என்ற பயமாக இருக்கலாம். உரிமை இல்லாத பணத்தைப் பெறுவதில் உள்ள குற்ற உணர்வாக இருக்கலாம். இல்லாவிடில், இறந்துபோன அருமைக் குழந்தைகளின் சம்பாத்தியத்தில் சீவிப்பது அவனுக்கு மன வருத்தத்தைத் தந்திருக்கலாம்.

எதுவோ, படிப்பறிவு சொட்டும் இல்லாத இந்த ஏழைத் தொழிலாளி, வேதங்கள், வியாக்கியானங்கள் ஒன்றுமே படிக்காதவன், இந்தச் செயலைச் செய்தான். இவனுடைய நடத்தைக்கான காரணத்தை நான் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.



நேர்மையின் தரம்... தேசத்துக்குத் தேசம், மக்களுக்கு மக்கள் மாறுபடும். உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு வைத்தியரிடம் சோதனைக்கு நாளும் நேரமும் குறித்துவிட்டுப் போகாமல்விட்டால், உங்களைத் தேடி பில் கட்டணம் வந்துவிடும். நீங்கள் அந்த வைத்தியரின் அரை மணி நேரத்தைக் களவாடிவிட்டீர்கள் என்று அதற்கு அர்த்தம். மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் உங்களுடைய தோட்டத்துக்குள் ஒருவர் வந்து மாங்காய் பறித்துக்கொண்டு போகலாம். ஒருவரும் கேட்க முடியாது. அங்கே இயற்கை தானாகக் கொடுக்கும் செல்வம் பொதுவானது. அப்படி என்றால், உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் நேர்மையின் இலக்கணம் என்ன?



எல்லாக் கேள்விகளுக்கும் விடை திருவள்ளுவரிடத்தில் இருக்கும். அவர் என்ன சொல்கிறார்? மனிதனுடைய நற்பண்புகளுக்கு எல்லாம் ஆதாரம்... வாய்மை. அதாவது உண்மைத் தன்மை. நேர்மைக்கு வேர் வாய்மை. அது இல்லாமல் நேர்மையாக இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Transparency துலாம்பரத் தன்மை அல்லது ஒளிவு மறைவற்ற தன்மை என்றும், Accountability கணக்கு காட்டும் அல்லது பதில் கூறும் தன்மை என்று சொல்வதும் இதைத்தான். உதாரணத்துக்கு, ஒரு பெரிய டெண்டரைப் பகிரங்கமாக, ஒளிவுமறைவின்றிச் செயல்படுத்தும்போது, அங்கே பொய்க்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. கள்ளம் கரைந்து போகிறது!

அன்று முதல் இன்று வரை நேர்மையானவர்களால்தான் உலகம் இயங்குகிறது. அயோக்கியர்களோடு ஒப்பிடும்போது இந்த உலகத்தில் நேர்மையானவர்கள் மிகச் சிலரே. ஒரு கோலியாத்துக்கு ஒரு சிறுவன் டேவிட் போதும். நூறு கௌரவர்களை ஐந்து பாண்டவர்கள் சமன் செய்துவிடுவார்கள்.



'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லோர்க்கும் பெய்யும் மழை.’

ஒரு சிலரின் உழைப்பில்தான் உலகம் உய்க்கிறது. சாரதி சிலர், பயணிகள் பலர். மூன்று போக விதை நெல்லைக் கண்டுபிடித்தவர் சிலர், அனுபவிக்கும் விவசாயிகள் அநேகர். கம்ப்யூட்டரையும் இணையத்தையும் உண்டாக்கியவர் சிலர். அதன் பயனை அனுபவிப்போரோ கோடிக்கணக்கில்!

பாராட்டையோ, புகழையோ, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ எதிர்பாராமல் கடைப்பிடிப்பதுதான் நேர்மை. பின்விளைவுகளின் பயத்தினால் செய்யாமல், தார்மீக சம்மதத்துக்காகச் செய்வது. அதுதான் உண்மையான நேர்மை!



மிஸ் சென்னை 99 மிகவும் சரியாகச் சொன்னதுபோல், மனிதனுக்கு அவசியமான, உன்னதமான பண்பு இது. நம் குழந்தைகளுக்கு நரியும் காகமும் கதை சொல்வதை இனிமேல் நிறுத்திவிடுவோம். விறகுவெட்டிக் கதையையும் ஆற்றிலேயே விட்டுவிடுவோம். நேர்மையாக நடப்பதால் ஏற்படும் மன சாந்திக்காக, நம் சந்ததியிரை அப்படி இருக்கத் தூண்டுவோம். படிப்பறிவு இல்லாத ஓர் ஏழை ஆப்பிரிக்க ஊழியனுக்கு இது சாத்தியமாக இருந்தது. நமக்கும் சாத்தியமாகும்!



அ.முத்துலிங்கம்

A muthulingam.

த்ரிஷாவும் திருக்குறிப்பு நாயனாரும் — ராமானுஜம்




தமிழ் இலக்கிய வட்டாரத்தில் ‘வாசிப்பு இன்பம்‘ என்ற சொல் அடிக்கடி புழங்கும்.எந்த சூழ்நிலையிலும் வாசிக்கத் தக்க ,ஆரம்பத்திலிருந்து இறுதி வரை வாசிப்பைச் சுவாரஸ்யம் ஆக்கும் படைப்புக்களை உருவாக்குவது அருங்கலை.கச்சேரிகளைக் குறிப்பிடும் போது ‘களைகட்டி விட்டது என்று கூறுவோம்.அது போல் எப்போதும் சோடை போகாத எழுத்துக்கள் சிலருக்குத்தான் வாய்க்கும். ஆங்கிலத்தில் வுட் ஹௌஸ், ஜெஃப்ரி ஆர்ச்சர் போன்றவர்கள் எழுத்து அவ்வகையானது. தமிழில் கல்கிக்குப் பின் அந்த இடத்தை வெகுகாலம் ஆக்கிரமித்தவர் சுஜாதா என்று தயங்காமல் கூறலாம்.எந்த விஷயத்தையும் அவரது அபார நடைமூலம் சுவாரஸ்யமாகச் சொல்லிவிடுவார்.ஒரு முறை ஜெட் லாக் பற்றிக் குறிப்பிடும் சுஜாதா ‘நாளை கிளம்பி நேற்று வந்து சேர்ந்தோம்‘ என்று குறிப்பிடுகிறார்.அவரது எழுத்துக்கள் கனமானவை அல்ல மேலோட்டமானவை என்ற விமர்சனங்கள் இருக்கின்றன.இருப்பினும் அந்த எழுத்துக்களை வாசிப்பு இன்பத்திற்காக இன்றும் வாசிக்கலாம்.





அது போல் வாசிப்பை ஒரு இனிய அனுபவமாக்குபவை அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்.எந்த ஒரு சொல்லும் அலுப்பூட்டாமல் இருக்கும் எழுத்து அவருடையது.அவர் பெயரை நான் கவனிக்க ஆரம்பித்தது 2004 வாக்கில் உயிர்மை, தீராநதி போன்ற இதழ்களில் வெளிவந்த அங்கதம் நிறைந்த கட்டுரைகளை வாசித்த பின்புதான்.





ஆனால் நான் அவரது பெயரைக் கவனிக்காமல் இருந்திருக்கிறேன் என்று இன்று தெரிந்து என்னையே நொந்து கொண்டேன்.இன்று வெளிவந்த ஆனந்த விகடனின் ‘பொக்கிஷம்‘ பகுதியில் அவர் 1999 இல் எழுதிய ‘எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை‘ என்ற கட்டுரை மீண்டும் வந்துள்ளது.அதில் நடிகை த்ரிஷா மிஸ் சென்னையாகத் தேர்வு செய்யப்படக் காரணமாக இருந்த கேள்வியான ‘மனிதனுக்குத் தேவையான முக்கிய குணம் என்ன? என்பதற்கு அவர் ‘நேர்மை‘ என்று பதிலளித்த செய்தியிலிருந்து தொடங்குகிறது கட்டுரை.







எல்லோருக்கும் தெரிந்த காக்காய் வடைக் கதையின் நீதி (moral) யையே கேள்விக்குரித்தாக்குகிறார் அ.மு. ஒரு அமெரிக்கச் சிறுமி ‘வாயிலே உணவை வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்பதே இக்கதையின் நீதி’ என்று கூறும் இடம் நல்ல நகைச்சுவை. ஏமாற்றினால் பிழைக்கலாம் என்ற நீதியைப் போதிக்கிறது அக்கதை என்கிறார்.

அதே போல் விறகுவெட்டி கோடாரியைத் தொலைத்த கதையும் நேர்மையாக இருந்தால் செல்வம் சேர்க்கலாம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.ஆனால் நேர்மைக்கும் செல்வம் சேர்ப்பதற்கும் ஒருவிதத் தொடர்பும் இல்லை என்கிறார் .வேறு எதற்காகவும் இல்லாமல் நேர்மையாக இருப்பது ஒரு அறம் .அதற்காக நேர்மையாக இருக்க வேண்டும் என்பது அ.மு வின் கருத்து.







அறம் என்று ஒரு பிரமாதமான சிறுகதை ஒன்றை ஜெயமோகன் எழுதியிருப்பது நினைவு இங்கு கூரத்தக்கது.







அதன்பின் திருக்குறிப்பு நாயனார் கதை இக்கட்டுரையில் வருகிறது.அடியார்களின் துணிகளைச் சலவை செய்துதரும் பணியில் ஒரு நாள் மழை பெய்து துணியை உணர்த்த முடியாமல் போய்விடுகிறது. அது அவர் பிழை அன்று என்றாலும் மனசாட்சி உறுத்தத் தன் தலையைக் கல்லில் முட்டிக் கொண்டது அவரது நேர்மையைக் காட்டுகிறது.

பின்னர் அ.மு. விற்கு ஆப்பிரிக்காவில் ஏற்படும் அனுபவத்தைக் கூறுகிறார்.தன்னுடைய இரு குழந்தைகள் இறந்ததும் அவர்களுக்காகக் கொடுக்கப்படும் குழந்தைப் படி இனி வேண்டாம் என்று கூறும் ஒரு படிப்பறிவில்லாத தொழிலாளியின் நேர்மை நெகிழ வைக்கிறது.நம் ஊரிலும் சுனாமியால் இறந்ததாகக் கருதப்பட்ட தன் மகன் உயிருடன் வந்த பின் அவர் இறந்து விட்டதாக எண்ணி வழங்கப் பட்ட நஷ்ட ஈட்டை அரசாங்கத்திடமே திருப்பிக் கொடுத்த தந்தையின் கதை செய்திகளில் வெளிவந்தது.

த்ரிஷா, காக்காய் வடை கதை, திருக்குறிப்பு நாயனார் என்று பலவிதமான சம்பவங்களைத் தொகுத்து சுவாரஸ்யமாகத் தந்திருக்கும் அ.முத்துலிங்கத்தின் எழுத்து அன்று போல் இன்றும் வசீகரமாகவே உள்ளன.





அவரது கதைகள் தன்மை(first person) யிலேயே பெரிதும் எழுதப்படுகின்றன. அதுவே கட்டுரைக்கும் புனைகதைக்கும் உள்ள இடைவெளியை வெகுவாகக் குறைகின்றன.கட்டுரைகள் புனைகதை போல் சுவாரஸ்யமாகவும் கதைகள் வரலாற்று, புவியியல் தகவல்களோடு கட்டுரை போல் செறிவாகவும் தோன்றும் எழுத்துக்கள் அவருடையது.அவரது ஒரு நூலின் தலைப்பே ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்‘ தான்.

உலக உருண்டையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்த அனுபவமும், உலக இலக்கியத்தின் ஆழ்ந்த வாசிப்பும் இவரது எழுத்தில் காணலாம். உலக எழுத்தாளர்களை இவர் பேட்டி கண்டு எழுதிய நூலான ‘வியத்தலும் இலமே‘ நம்மை வியக்க வைக்கும்.

திருநெல்வேலி பகுதியில் ‘தன்மையாகப் ‘ பேசுகிறான் என்றால் இனிமையாகப் பேசுகிறான் என்று பொருள்.அ.மு.தன்மையாக எழுதுகிறார்.

குறிப்பு: என்ன செய்வது !அ.மு வின் பெயரை விட த்ரிஷாவின் பெயரைத் தலைப்பில் வைப்பதுதான் கவர்ச்சிகரமாக இருக்கிறது!த்ரிஷாவின் படத்தைக் கூடப் போட்டிருக்கலாம்.ஆனால் நமக்கும் நேர்மை என்று ஒன்றிருக்கிறதல்லவா?



–ராமானுஜம்



பிறந்ததும் படித்ததும் திருநெல்வேலி . MD psychiatry

செவ்வாய், 5 ஜூலை, 2011

Veerappan.

My Photo

Apr 27, 2010


இறந்த பூதத்தின் தொடரும் நிழல் - கவிதா


தொழில்ரீதியாக, நான் கதைகளைச் சேகரிப்பவள். கதைகளைச் சேகரித்துப் பத்திரிகைகளில் பதிவுசெய்வது என் பணி. மிகச் சில கதைகள் என்னுடனேயே தங்கிவிடுகின்றன.

சித்தியினுடையதும் செல்வியினுடையதும் சின்னப் பொண்ணுவினுடையதும் அப்படிப்பட்ட கதைகள்தாம். அதிலும் சித்தியைச் சந்தித்தது மிகவும் தற்செயலான விஷயம். வீரப்பன் இறந்து ஐந்து வருடங்கள் முடிந்ததையொட்டி அந்தப் பகுதி மக்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை எனது பத்திரிகைக்குக் கட்டுரையாக எழுதும் நோக்கத்தில் அந்தப் பகுதிகளுக்குச் சென்றபோது, சோளகர் தொட்டிக்குச் செல்லும் திட்டம் எதுவும் இருக்கவில்லை. அங்கே கட்டாயம் சென்று பார்க்க வேண்டுமென ச. பாலமுருகன் வற்புறுத்தி அனுப்பிவைத்தார்.

சுமார் நான்கு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு நாங்கள் சோளகர் தொட்டியைச் சென்றடைந்தபோது சூரியன் மறையத் தொடங்கியிருந்தது. நாங்கள் ஒரு பத்திரிகையிலிருந்து வந்ததையும் பாலமுருகன் அனுப்பி வைத்த விவரத்தையும் எங்களுடன் வந்த சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த ஜீவா சொல்லி முடித்தபோது அந்தச் சூழலில் சின்னதாக ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. சாலையில் நாற்காலிகள் போட்டு அமரவைத்தார்கள். மக்கள் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். சித்தி அழைத்து வரப்பட்டார். தன்னைத் தலையிலிருந்து கால்வரை அவர் புடவையால் மூடியிருந்ததற்குக் காரணம், வெறும் குளிர்தானா? ‘உன் கதையச் சொல்லு’, என்று யாரோ சித்தியிடம் சொன்னார்கள். “எத்தனதடவதான் சொல்லுவா, என்ன பிரயோஜனம்” என்று யாரோ பதில் சொன்னார்கள். சித்தி அமைதியாகவே இருந்தார். அந்த உரையாடலை எப்படித் தொடங்குவது என்று நான் தயங்கியபோது சித்தி வெகு இயல்பாக எனது கைகளைப் பிடித்துக்கொண்டு “காபி சாப்பிடறீங்களா” என்று கேட்டார். “உங்களுக்கு எதாவது சொல்லணும்னு தோணுதா?” என்று கேட்டேன். “இந்த உடம்புல ஒரு ஓட்டையைக்கூட விடாம அவங்க மின் கம்பி பாய்ச்சியிருக்காங்க. இப்போகூட வலிக்குது” என்று மட்டும் சொன்னார். கதைகளைச் சேகரிப்பதில் எனக்கிருக்கும் பத்து வருட அனுபவம் சித்தி சொன்ன அந்தச் சில வரிகளுக்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கவில்லை. அதற்கு மேல் சித்தியிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை. அவரும் எதுவும் சொல்லவில்லை. இழப்பீடாகச் சித்திக்குக் கிடைத்திருக்கும் இரண்டு லட்சம் ரூபாய் அவரது வலிகளை நீக்கிவிடவில்லை என்பது மட்டும் புரிந்தது.

வீரப்பன் இறந்த பிறகு தடதடக்கும் காவல் துறை வாகனங்கள் அதிர அதிர வந்து அவர்களை அலறவைப்பதில்லை என்பதைத் தவிர சோளகர் தொட்டியில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை. மிக அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டுமென்றாலும் பிள்ளைகள் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரம் நடக்க வேண்டும். அங்கிருக்கும் நாற்பது பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் அப்படி நடந்து சென்றுதான் படிக்கிறார்கள். “அதுவும் பத்தாவது வரைக்கும்தான். அதன் பிறகு படிக்க வேண்டுமானால் வேறு எங்கேயாவது தான் போக வேண்டும்” என்றாள் ஏழாவது படிக்கும் ஜோதிகா. “நான் சென்னையைப் பார்த்ததில்லை, அங்கே கூட்டிக்கிட்டுப் போறீங்களா? நான் மேலே படிக்கணும்.” சோளகர் தொட்டி உள்பட சத்தியமங்கலம் பகுதியிலுள்ள எந்த அரசுப் பள்ளிக்கும் அனேகமாக ஆசிரியர்கள் வருவதில்லை. வீரப்பன் இருந்தபோது பயம் காரணமாக வராமல் இருந்த ஆசிரியர்கள் அதன் தொடர்ச்சியாக இப்போதும் வராமல் இருக்கிறார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். அனேகமான இடங்களில், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுமாராகப் படித்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏதோ பணம் கொடுத்துப் பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள் சில ஆசிரியர்கள்.

சோளகர் தொட்டிக்குச் சவாலாக விளங்கும் இன்னொரு பிரச்சினை, நில ஆக்கிரமிப்பு. வீரப்பன் பயம் இல்லாத காரணத்தால் பல பணக்காரர்கள் இந்த வளமான பகுதியில் நிலம் வாங்குகிறார்கள். ஆண்டாண்டு காலமாகக் காடு, மலைகளில் புழங்கிவந்த சோளகர் குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுவது இந்தப் பிரச்சினையால்தான். “நாங்கள் வளர்ந்து திரிந்த நிலங்களுக்கு வேலிகளைப் போட்டு நாய்களைப் போல விரட்டுகிறார்கள்” என்கிறார் ஊர்த் தலைவராக அறியப்படும் ஜவுனா. வாழ்நிலங்களிலிருந்து துரத்தப்படும் பழங்குடியினரின் எதிர்வினைகள் நமக்கான படிப்பினைகளாக இப்போதும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. அந்த நிலை சோளகர் தொட்டிக்கும் ஏற்படுவதைத் தடுக்க முடியுமா எனத் தெரியவில்லை.


மலைகளில் மட்டுமல்ல, சமவெளிகளிலும் வீரப்பன் தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை ஐந்து வருடங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. குறிப்பாகப் பெண்களின் நிலை. பாலமுருகன் சொல்லும் வள்ளியின் கதை, யாரையும் நிலைகுலையவைக்கும். வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாலியல்ரீதியாகப் பாதிக்கப்பட்ட பல பெண்களில் வள்ளியும் ஒருவர். சேத்துக்குளியைச் சேர்ந்த வள்ளியைப் பல பெண்களைப் போல அவரது கிராமமும் தள்ளிவைத்திருக்கிறது. காரணம், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது. அப்படித் தள்ளிவைக்கப்பட்ட வள்ளியை அவரது உறவினர்களே மீண்டும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திக் கொலைசெய்திருக்கிறார்கள்.

வீரப்பன் தேடுதல் வேட்டை விட்டுச் சென்ற பாதிப்புகளின் பல்வேறு வடிவங்களால் இன்னும் அச்சத்தில் வாழ்கிறார்கள் பல பெண்கள். 30 வயது சின்னப் பொண்ணுவைப்போல. மேட்டூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நாங்கள் அவரைச் சந்தித்தபோது அவர் சித்தாள் வேலை செய்துகொண்டிருந்தார். வீரப்பன் தேடுதல் வேட்டையில் அவரது முதல் கணவர் கொல்லப்பட்டார். “அப்போ நான் பாலியல்ரீதியாப் பாதிக்கப்பட்டவன்னு தெரிஞ்சதும் எங்க வீட்டிலேயே என்னை ஒதுக்கிவச்சுட்டாங்க. எனக்கு இழப்பீடு வாங்கித்தந்த மனித உரிமை ஆர்வலர்கள் அக்கறையாச் சொன்னதால இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று சொல்லும் சின்னப் பொண்ணு, தன் அம்மா தன்னை ஏசியதுபோல வேறு யாரும் தன்னைக் குற்றம் சொல்லக் கூடாது என்பதாலேயே காது கேளாத வாய் பேச முடியாத ஒருவரைத் திருமணம் முடித்திருக்கிறார். ஆனால் சின்னப் பொண்ணுவின் கணவர் முருகன், அவருடைய ‘களங்கப்பட்ட’ மனைவி பற்றி எழுதி எழுதிச் சித்ரவதை செய்வாராம். “இப்போதுகூட அவரைத் தெய்வமாத்தான் நினைக்கிறேன், பாலியல்ரீதியாப் பாதிக்கப்பட்டவ, ஏற்கனவே கல்யாணமானவ, என்ன யார் மறுமணம் செய்ய முன்வருவாங்க?! அவருக்கு நல்ல மனைவியாதான் இருக்கணும்னு நினைக்கிறேன். வீரப்பன் தொந்தரவெல்லாம் முடிஞ்சு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சுன்னு நினைக்கறப்ப வேறவிதமான தொந்தரவுகள் இருந்துகிட்டுதான் இருக்கு. ரொம்பக் கொடுமையான வார்த்தைகள எழுதிக் காட்டுவாரு. படிக்கறப்ப செத்துடலாம்னு தோணும்” என்கிறார்.

செல்வியின் நிலையும் கிட்டத்தட்ட அதேதான். “தினம் தினம் சாகறேன், பேச்சுவாக்குலகூட யாராவது எனக்கு இப்படியொரு கொடுமை நிகழ்ந்திருக்குன்னு சொன்னாங்கனா அன்னிக்கு முழுவதும் நரகத்தில இருக்கறது மாதிரி இருக்கும்” என்கிறார் செல்வி.

செல்வி, சின்னப் பொண்ணு, சித்தி போன்று பல பெண்கள். இவர்கள் எல்லோருக்கும் இழப்பீடு கிடைத்திருக்கிறது. சமயங்களில் இவர்களது மறுமணத்துக்குத் தூண்டுதலாய் இருந்தது இந்த இழப்பீட்டுத் தொகைதான் எனச் சொல்லப்படுகிறது. பணத்துக்காக மணந்துகொள்பவர்கள் பிறகு வீரப்பன் தேடுதல் வேட்டை என்னும் இறந்துபோன பூதத்தின் நிழலாக மாறிவிடுகிறார்கள். வீரப்பனின் தேடுதல் வேட்டை புரட்டிப்போட்ட பாதையிலிருந்து இவர்களது வாழ்க்கை இன்னும் விலகவில்லை என்பதுதான் உண்மை. இனியும் விலகுமா எனத் தெரியவில்லை. சின்னப் பொண்ணு சொல்வதுபோல அந்தப் பெருவேட்டையின் தடயங்களை அவர்கள் தங்கள் உடல்களில் சுமந்துகொண்டிருக்கிறார்கள். பாலியல்ரீதியாக இன்னும் இறுக்கமாகவே இருக்கும் ஒரு சமூகத்தில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் இழப்பீடோ மறுமணமோ அந்தத் தடயங்களை முழுவதுமாக நீக்கிவிடப்போவதில்லை.

அதனாலேயோ என்னவோ, அதிகார எதிர்ப்பைத் தனது கூறுகளில் ஒன்றாகக் கொண்டிருந்த வீரப்பன் இன்னமும் இங்கு ஒரு கதாநாயகன். வீரப்பனின் வீரம் பற்றிப் பல புனைவுகள் இந்தப் பகுதிகளில் இன்னமும் காற்றில் அலைந்துகொண்டிருக்கின்றன. மூலக்காட்டில் வீரப்பன் புதைக்கப்பட்ட இடத்தில் “இங்கே வீரம் விதைக்கப்பட்டிருக்கிறது” என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

செல்வியின் நான்கு வயது மகன் பார்த்தனுக்கு எதிர்காலத்தில் ‘வீரப்பனாக வேண்டும்’ என்பதுதான் ஆசை. செல்வி அதிர்கிறார். “ஒரு வீரப்பனால பட்டததான் இன்னிக்கு வரைக்கும் அனுபவச்சிட்டிருக்கிறோம். பேச்சுக்குக்கூட அப்படிச் சொல்லாத” என்று அவனை அணைக்கிறார்.

சித்தியின் மீதும் செல்வியின் மீதும் சின்னப் பொண்ணுவின் மீதும் பிரமிப்பை ஏற்படுத்தும் விஷயம், வாழ்வு அவர்கள்மீது செலுத்திய வன்முறையை அவர்கள் எதிர்கொண்ட விதமும், வாழ்வின் மீது அவர்கள் இன்னமும் வைத்திருக்கும் தகர்க்க முடியாத எளிய நம்பிக்கைகளும்தான். ஜோதிகா உள்பட நாற்பது பிள்ளைகளும் ஆறு கிலோ மீட்டர் நடந்தாவது படித்தால்தான் தனக்கு நேர்ந்த கதி அவர்களுக்கு ஏற்படாது எனத் திடமாக நம்புகிறார் சித்தி. பார்த்தனையும் தன்னுடைய பிற குழந்தைகளையும் எப்படியாவது படிக்கவைத்து, பெரிய இடத்தில் வேலைக்குச் சேர்த்துவிட வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறார் செல்வி. அவர்கள் எல்லோருமே மிச்சமிருக்கும் வாழ்வை வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

Penniyam...

My Photo

கீப் என்பதை வைத்துக்கொள்ளலாமா ? - ரவிக்குமார்


திருமண பந்தத்துக்கு உட்படாமல், சேர்ந்து வாழும் ஆணும் பெண்ணும் பிரியும்போது, அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டுமா என்ற வழக்கை இந்திய உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரித்தது.அப்போது, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் டி.எஸ். தாகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டது.அதில், திருமணம் செய்துகொள்ளாமல், ஆண் ஒருவர் பெண் ஒருவருடன் உறவு வைத்திருக்கும் நிலையில், அந்த பெண்ணை '" கீப் " என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தி நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந் நிலையில், வெள்ளிக்கிழமை அதே நீதிபதிகள் முன்பு வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக, மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் ஆஜரானார். அப்போது, வியாழக்கிழமை தீர்ப்பின்போது, திருமணமாகாமல், ஓர் ஆணுடன் உறவு வைத்திருக்கும் பெண்ணை, வைப்பாட்டி என்று பொருள்படக்கூடிய, 'கீப்' என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியது கடும் ஆட்சேபத்துக்குரியது என்று இந்திரா ஜெய்சிங் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்தியாவின் உச்சநீதிமன்றம், 21-வது நூற்றாண்டில், பெண்களுக்கு எதிராக இப்படி ஒரு வார்த்தையை எப்படிப் பயன்படுத்த முடியும்? தான் ஒரு ஆணை வைத்திருப்பதாக ஒரு பெண் கூற முடியுமா என்று கேட்டார் இந்திரா ஜெய்சிங்.அந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்புவதாகக் கூறிய அவர், அந்த நீதிமன்றத்தின் முன் தான் ஆஜராக விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.ஆனால், தற்போது நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்குத் தொடர்பாக மட்டும் பேசுமாறு கூடுதல் சொலிடர் ஜெனரலை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அறிவுறுத்தினார்.

அப்போது நீதிபதி தாகூர் குறுக்கிட்டு, 'கீப்' என்ற வார்த்தைக்குப் பதிலாக, ஆசைநாயகி என்ற பொருள்படும் கான்குபைன் என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தலாமா என்று இந்திரா ஜெய்சிங்கிடம் கேட்டார்.தனது ஆட்சேபம், வியாழக்கிழமை தீர்ப்பில் 'கீப்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு மட்டும்தான் என்று தெரிவித்த இந்திரா ஜெய்சிங் ஆசைநாயகி என்ற வார்த்தை கீப் என்பதைக்காட்டிலும் மோசமானது என்று பின்னர் தெரிவித்தார்.

பள்ளி ஆசிரியர் ஒருவர் குடும்ப நீதிமன்றம் ஒன்று அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட் செய்திருந்தார். அதை விசாரித்தபோதே உச்சநீதிமன்றம் இப்படி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டது. அந்த ஆசிரியர் தன்னைத் திருமணம் செய்துகொண்டார் எனவும் இப்போது தன்னைக் கைவிட்டுவிட்டார் எனவும் பெண் ஒருவர் குடும்ப நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அதை விசாரித்த குடும்ப நீதிமன்றம் அந்தப் பெண்ணுக்கு மாதம் ஐநூறு ரூபாய் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தது. தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது எனவும் எனவே தன்னால அந்த ஜீவனாம்சத் தொகையைக் கொடுக்க முடியாது என்றும் அந்த ஆசிரியர் கூறிவிட்டார்.

திருமண பந்தத்துக்கு உட்படாத ஆணும் பெண்ணும் பிரியும்போது, அவர்கள் இருவரும் குறிப்பிட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாழ்ந்திருந்தால்தான், அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது. '" ஒரு ஆண் ஒரு பெண்ணை '"கீப் " ஆக வைத்துக்கொண்டு பாலியல் தேவைகளுக்காகவோ அல்லது வேலைக்காரியாகவோ அவரை பொருளாதார ரீதியில் பராமரித்துவந்தால் அதைத் திருமண உறவுக்கு இணையாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது " என்று நீதிபதிகள் கூறினர்.

இந்த ஆண்டுத் துவக்கத்தில் வேறொரு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் தவறொன்றுமில்லை எனக் கூறியிருந்தது. திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை உச்ச நீதிமன்றம் பரிவோடு அணுகத் தொடங்கியிருப்பது இந்திய நீதித்துறையின் மனப்பாங்கில் ஏற்பட்டுவரும் மாற்றத்தையே வெளிப்படுத்துகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அணுகுமுறையை விமர்சித்திருக்கும் இந்திரா ஜெய்சிங் வழக்கறிஞர் மட்டுமின்றி புகழ்பெற்ற பெண்ணியவாதியும் ஆவார். சிரியன் கிறித்தவ பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்களைப்போலவே சொத்தில் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பை புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் அம்மா மேரி ராயின் வழக்கில் வாங்கித் தந்தவர் இவரே. குடும்ப வன்முறைச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்தவரும் இவர்தான்.

Sugirtharani.


எதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மை - விகடன் நேர்காணல்
0 Comments - 01 Jul 2011
இரு நாடுகளின் துப்பாக்கிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தினம்தினம் உயிர் பறிக்கப்படும் ராமேஸ்வரம் மீனவனின் வாழ்க்கையை அவர்களின் மொழியில் பேசுகிறது லீனா மணிமேகலையின் ‘செங்கடல்’ திரைப்படம். அதற்கு தரச் சான்றிதழ் தரமறுத்த சென்சார் போர்டுடன் போராடி டிரிப்புனலுக்கு போய் ஒரு ‘கட்’டும் இல்லாமல் வெற்றியோடு திரும்பி வந்திருக்கிறார் ல

ஆதியில் தொப்புள்கொடி இருந்தது- சுகிர்தராணி

பின்னிப் படர்ந்திருந்த விருட்சங்களின்கீழ் காமத்தின் ஒற்றைச் சுடரென சிந்தியிருந்தது ஒளி. முகட்டுச்சியில் கொத்தாய் நகரும் பனிப்பொதியின் குளிர்ச்சியுடைய அவ்விடத்தின் பரப்பு முழுவதும் செழுமையான புற்கள். இரைச்சலின் ஓசையின்றி நழுவிய நதியின் கிளைகள் அவ்வனம் முழுவதும் வேர்விட்டிருந்தன. காணக்கிடைக்காத பழமரங்களும், உதிரா இதழ்கொண்ட பூக்களின் செடிகளும் மங்கிய வெளிச்சத்தில் சித்திரங்களாய் நின்றிருந்தன. பட்சிகளின் சிறகடிப்புகள் வழக்கொழிந்த இசைக்கருவியொன்றின் மீட்டலை நினைவுபடுத்தின. விலங்குகளின் முகங்கள் அவற்றின் சாயலற்றுக் காணப்பட்டன.

அவர்கள் இருவராக இருந்தனர். அவர்களின் மொழி இசைக்குறிப்புகளாக மிதந்துவந்தன. குழந்தைப் பருவத்தைத் தீண்டாது பருவமடைந்த உடல்களில் குழந்தைமைப் பண்புகளோடு திரிந்தனர். வார்த்தெடுக்கப்பட்டு பிசிறு நீக்கிய சிலையின் மேல்பூச்சினைப் போல அவர்களது மேனி பளபளப்புற்றிருந்தன. நதியின் நீரைப் பருகுகையில் உருவங்களைப் பார்த்துக் கொண்டனர். அபூர்வமாய் ஒருபுறம் அச்சடிக்கப்படாத ரூபாய்தாளைப் போல மகிழ்ச்சியின் பக்கத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டிருந்தனர். தரைமீதே தவழ்ந்து தொங்கிய பழங்களில் பசியாறினர். சிந்தனையின் திரை அவர்களை மூடியிருந்தது.

பேசிக் கொண்டிருக்காத பொழுதொன்றில் அவளை நெருங்கியது பேசும் பாம்பொன்று. இயல்பாக உரையாடத் தொடங்கியிருந்த அதன் நெருக்கமும் நெகிழ்வும் அவளை கிளர்வூட்டியிருக்க வேண்டும். இரகசியத்தை அவளுக்கு முன்அறிவித்ததும் அது அவ்விடத்தை விட்டு அகன்று சென்றது. தயக்கம் ஏதுமின்றி அவள் பார்வை செந்நிறப் பழங்கள் தொங்கிய மரத்தை வருடத் தொடங்கியிருந்தது. பழத்தின் சுவை நாவின் அரும்புகளைத் தின்னத் தொடங்கியது. எச்சில் கனியை அவனும் சுவைத்தான். காமத்தின் ஏடு அவர்களின் உடலைப் போர்த்த ஆரம்பித்தது. அவளது கைகள் அவனுடலில் விரகத்தின் அத்தியாயத்தை எழுதியது. நீண்ட நாட்கள் கழிந்தொரு நாளின் காலையில் அவள் அலறினாள். புற்கள் தலைகவிழப் புரண்டாள். அவன், அவள் உடலின் அசைவுகளை திகைப்புடன் கவனித்தான். தொடையின் குறுகிய இடத்தில் குபுக்கென்று வெளிப்பட்ட இரத்தப்பையில் வீறிட்டழுதது சிசுவொன்று. அதன் வயிற்றில் பிணைந்திருந்தது கரும்பச்சை நிற தொப்புள்கொடி.

சமீபத்தில் படிக்க நேர்ந்தது செய்தியொன்றை. ஊரின் மையத்திலுள்ள குப்பைத்தொட்டியில் பிறந்து ஓரிரு நாட்களே ஆனநிலையில், தொப்புள்கொடியின் காயாத ஈரத்தோடு குழந்தையொன்று வீசப்பட்டிருந்தது. இவை போன்ற பல செய்திகளை வாசிக்கையில் குழந்தையின் மீது பரிதாபப்படுவதும் முகம் தெரியாத அப்பெண்ணைத் திட்டுவதும் பின் மறந்து போவதும் வழக்கமான நிகழ்வு. எனில் இவற்றிற்கான காரணத்தைத் தெளிதல் கடினமான முயற்சி. என்றாலும் குப்பைத் தொட்டிகளிலும், கழிவுநீர்க் கால்வாய்களிலும், முட்புதர்களிலும், விலங்குகள் கடித்தெஞ்சிய குழந்தைகள் கிடப்பதற்கான காரணங்களில் சமூக, உளவியல் பிரச்சினைகள் பிணைந்து காணப்படுகின்றன.

காமம் என்பது அவசியமான, அதிசயமான உணர்ச்சி. திருமணத்திற்கு முன்னர், நெருக்கமான உணர்வுநிலைக்கு இருவரும் செல்லும்போது, அதன் தொடர்நிகழ்வு குறித்தான பிரக்ஞை ஏற்படுவதில்லை. அங்கு காமஉணர்ச்சி மிக்கு ஏற்படுகிறது. பின்னர் அவள் தாய்மையுறும்போது, தொடர்பில்லாதது போல அவன் விலகிச்செல்வதை நியாயப்படுத்தும் விதமாக நடந்துகொள்வது சமூகத்தின் மோசமான ஆணாதிக்க கட்டமைப்பு. தனித்து விடப்படும் அவள், ஒழுக்கம் குறித்தான சமூகத்தின் வரையறைக்குள் தன்னை இறுத்திக் கொள்வதின் நிகழ்வே, திருமண உறவற்றுப் பிறந்தக் குழந்தையை குப்பையில் வீசுவது.

பாலியல் வன்புணர்வில் பிறந்த குழந்தையும் வீசப்படுவது அதனையொட்டியே நிகழ்கிறது. முறையான உறவில் பிறக்கும் பெண் சிசுக்களும் விதிவிலக்கல்ல. கள்ளிப்பாலும், நெல்மணியும் பல உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றன. காரணம் வறுமையும் விழிப்புணர்வின்மையும், எய்ட்ஸ் பரவுவது பெண்களால்தான் என்னும் உண்மையற்ற பொதுக்கருத்து உலவிக் கொண்டிருப்பதைப் போல, முறையற்ற உறவுகள், கருச்சிதைவுகள், பச்சிளம் குழந்தைகள் வீசப்படுதல், சிசுக்கொலை போன்றவற்றிற்கு பெண்களும், பெண்களின் ஒழுக்கக் கேடுகளுமே முடிவான காரணங்கள் எனக் கைகாட்டிவிட்டு, ஆண்கள் எல்லாரும் சமூகத்தின் பாதுகாப்பான மரபுகளில் நின்றுகொள்கிறார்கள்.

பெண்ணினத்திற்கு மட்டும் ஒழுக்கத்தை குளத்தின் கரையைப் போல நிர்மாணிக்கும் சமூகம், திருமணத்திற்கு முன்னரும் ஏன் பின்னரும்கூட பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆண்களின் ஒழுக்கத்தை காட்டாற்று வெள்ளமாக ஏன் விட்டுவைத்திருக்கிறது என்பதை சுயபரிசோதனை செய்து பார்க்கட்டும்.

ஏவாளின் தாய்மையிலிருந்து ஆரம்பித்ததுதான் என்றாலும் ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது தொப்புள்கொடி.

நன்றி: உன்னதம்


Thamizhachi..

My Photo
jump to navigation

எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது அக்டோபர் 13, 2008

Posted by தமிழ் in நேர்காணல்.
add a comment

குமுதத்தில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி.
கவிஞர் தமிழச்சி. தமிழிலக்கியத் துக்கு தெரிந்தமுகம். தி.மு.க.வு.க்கு புதிய முகம். நெல்லை மாநாட்டில் தி.மு.க. கொடியேற்றியதன் மூலம் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

‘எஞ்சோட்டுப் பெண்’, ‘வனப்பேச்சி’ கவிதைத் தொகுதிகள் மூலம் கவிஞராக அறிமுகமான தமிழச்சியை சந்தித்தோம்.

இதுவரை இலக்கிய மேடைகளிலும், கல்லூரி வகுப்பறையிலும் பேசிக்கொண்டிருந்துவிட்டு திடீரென்று ஒரு அரசியல் மேடையில் தோன்றியது பற்றிச் சொல்லுங்கள்?

‘‘என்னுடைய தந்தை தங்கபாண்டியன் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகாலம் தி.மு.க.வில் இருந்தவர். முதல்முறையா அறிஞர் அண்ணாவால் எம்.எல்.சி.யாக நியமனம் செய்யப்பட்டவர். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். நாங்க பிறந்ததே தி.மு.க. குடும்பம். என்னோட பள்ளிக் காலத்திலேயே கலைஞரின் நெஞ்சுக்கு நீதியைப் படிச்சுட்டேன். அதனால நான் இப்ப திடீரென்று அரசியலுக்கு வந்துட்டதா சொல்லக்கூடாது.’’

கல்லூரிப் பேராசிரியராக இருந்துகொண்டு மேடை நாடகங்களில் பங்கேற்று நடிக்கிறீர்கள், நடிப்பு ஆர்வம் எப்படி வந்தது?

‘‘கல்லூரிப் படிப்பு முடியுற வரைக்கும் நான் பரதநாட்டிய நடனக் கலைஞராகத்தான் இருந்தேன்.

பள்ளியில் படிக்கும்போதே மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கிவிட்டேன். எப்படி நடிக்கவேண்டும் என்பதையும் பாடிலாங்வேஜ், குரல் இதெல்லாம் எப்படி அமையவேண்டும் என்பதையெல்லாம் என் தந்தைதான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். முதலில் நடனம், பிறகு நாடகம். எப்போதும் என்னோடு இருப்பது கவிதைதான்.’’

ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு தமிழ்க் கவிதை பக்கம் ஈடுபாடு வந்தது எப்படி? கவிதை எழுத உங்களை உந்துதல் படுத்தியது எது?

‘‘நான் பிறந்து வளர்ந்தது விருதுநகர் பக்கத்தில் இருக்கிற மல்லாங்கிணறு என்கிற ஊர். இது வானம் பார்த்த பூமி. மழை பெய்தால்தான் விவசாயம் என்று வாழ்ந்து வந்த என் கிராமத்து மனிதர்களைப் பற்றி எழுதவேண்டும் என்கிற உந்துதல் வந்துதான் ‘மாரி பொய்த்தது’ என்ற முதல் கவிதையை எழுதினேன். ஆங்கில இலக்கியம் படித்தாலும் நான் பிறந்தது கிராமத்தில்தானே. ரெண்டாவது, தி.மு.க.வையும் தமிழையும் பிரிக்க முடியாது. கவிதையை என் மண் சார்ந்த விஷயங்களைப் பற்றி எழுத பயன்படுத்திக்கொண்டேன். ‘எஞ்சோட்டுப் பெண்’ என் முதல் கவிதைத் தொகுதி. அடுத்து ‘வனப்பேச்சி’. ‘வனப்பேச்சி’ கிராமத்து சிறுதெய்வங்கள்ல ஒன்று.’’
 திராவிட பகுத்தறிவுச் சிந்தனையில் இருந்துகொண்டு கடவுள் பெயரை வைத்து கவிதை எழுதுகிறீர்களே?
‘‘எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது. இது ஆன்மிகமும் கிடையாது. காவல் தெய்வங்களாக அந்த ஊரில் ஏதாவது ஒரு பங்களிப்பு செய்திருப்பவர்கள்தான் பின்னாளில் தெய்வங்களாக வணங்கக்கூடிய ஒரு குறியீடாக வணங்கப்பட்டு வந்தது. அதேபோல் வனப்பேச்சி என்கிற பெண் உருவம் என் கூட்டுக்காரியாக என் கனவுகளின் குறியீடாகத்தான் கவிதைகளில் வருகிறாள்.’’
பாராளுமன்றத்தில் கவிஞர் கனிமொழிக்கு உறுதுணையாக இருப்பதற்காக தங்களைத் தேர்வு செய்து தி.மு.க. தலைமை தயார் செய்து வருவதாக ஒரு பேச்சு எழுந்திருக்கிறதே..?
‘‘அந்த மாதிரி எதுவுமே கிடையாது. கவிஞர் கனிமொழி பாராளுமன்ற உறுப்பினராக பணியைச் சிறப்பாகச் செய்கிறார்.
கவிதை என்கிற தளத்துல இயங்குவதால் நாங்க நெருக்கமான தோழிகளாயிட்டோம். அவங்கள மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாகப் பார்க்கிறேன். உண்மையாகவே விளிம்பு நிலை ஆட்களைப் பற்றிக் கவலைப்படக் கூடியவங்க. இன்னும் சொல்லப்போனா எனக்கு மட்டுமல்ல பெண்களுக்கே கனிமொழி ஒரு ரோல்மாடல்னு சொல்லலாம். எந்தச் சூழலிலும் தன்னுடைய அதிகாரத்தை மற்றவர்கள் மீது காட்டமாட்டார். தோழியாக நல்ல ஆலோசனைகளைச் சொல்ல எப்பவும் தயாராக இருப்பார்.’’
ஒரு சக பெண்மணியாக பெரிய இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிற ஜெயலலிதாவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்..?
‘‘தனிப்பட்ட முறையில் ஆளுமை என்று ஒன்று இருந்து ஒரு இயக்கத்தை வழி நடத்துவது என்பது வேறு. அவங்க சமூகத்துக்கு என்ன பங்களிப்பு பண்றாங்க, ஆளுமை என்ன என்பதை வெச்சுதான் அவங்களப்பத்தி நாம எதுவும் சொல்ல முடியும். அப்படிப்பார்க்கிறப்ப என்னைப் பொறுத்தவரை எந்தவித சிறப்பு அம்சமும் இல்லாத ஒரு பெண்மணி ஜெயலலிதா.’’
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப் போறதாக செய்தி அடிபடுகிறதே?
‘‘நோ… கமெண்ட்ஸ்’’ என்று சிரித்தபடியே கை கூப்புகிறார், அப்படியே வேட்பாளர் ஸ்டைல்.
( நன்றி: குமுதம் )

வனப்பேச்சியிலிருந்து…. April 28, 2008

Posted by தமிழ் in கவிதை.
4 comments

“சுடு சோறு கொதி கஞ்சி
வேப்பம் பழம்
பொசுக்கியதே இல்லை
ஊர் வெயில்.
குளிரூட்டப்பட்ட
நகரத்து அறைகளில் வசிக்கும்
என் மகள் கேட்கிறாள்”
………….
சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைக்கான ஒரு தூளிச்சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப்பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்
என்ற அடம் வனப்பேச்சிக்கு…

எஞ்சோட்டுப்பெண் மார்ச் 30, 2008

Posted by தமிழ் in எஞ்சோட்டுப்பெண்.
3 comments
‘எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மௌனம்
மிக வலிமையானது
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்
உரத்த குரலெழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாய்ப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.

‘தீராதவள்’ மார்ச் 16, 2008

Posted by தமிழ் in கவிதை.
7 comments
‘எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மௌனம்
மிக வலிமையானது
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்
உரத்த குரலெழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாய்ப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.

சிறந்த புரட்சியாளர்கள் எல்லாருமே படைப்பாளிகளாக இருந்தவர்கள்தான்! பெப்ரவரி 28, 2008

Posted by தமிழ் in நேர்காணல்.
3 comments

.
தமிழ்ச் சூழலை இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகப் பிரிப்பார்கள். இந்த மூன்றிலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் “தமிழச்சி’. கவிதை எழுதுகிறார். பரதநாட்டியம் முறையாகக் கற்றிருக்கிறார். நவீன நாடகங்களிலும் நடிக்கிறார். இப்படி பன்முகத்தன்மையுடன் இயங்கும் இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரை யாளராகப் பணியாற்றுகிறார். மிகப்பெரிய திராவிடப் பாரம் பரியத்திலிருந்து வந்தவர். விருதுநகர் மாவட்டம், மல்லாங் கிணறு எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அந்த கிராமத்தின் மண்வாசனையை இவரது பேச்சி லும், எழுத்திலும் லிஏன் தற்போது சென்னையில் வசிக்கும் இவரது வீட்டிலும் காண முடிகிறது.
இவரது “எஞ்சோட்டுப்பெண்’ எனும் முதல் கவிதைத் தொகுப்பு “தமிழ் இலக்கியம் 2004′ என்கிற இலக்கிய விழாவில் வெளியிடப் பட்டது. இந்தத் தொகுப்பிற்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருதும், மகாகவி பாரதியார் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்ப் பட்டப்படிப்பிற்கான பாடத் திட்டத்திலும் இணைக்கப்பட்டுள் ளது. இலக்கிய விமர்சனக் கட்டுரை களை த. சுமதி என்ற இயற்பெயரில் எழுதுகின்ற இவர், மொழிபெயர்ப்பு இலக்கியத்திலும் முனைப்பு கொண்டு புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களது சிறுகதைகள் சிலவற்றை மொழி பெயர்த்து, சென்னை பல்கலைக் கழகத்திலும், பன்னாட்டு தேசிய கருத்தரங்கங்களிலும் அவை குறித்த ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித் துள்ளார். தமிழ் நாடகச் சூழலில் இன்குலாப் அவர்களது “குறிஞ்சிப் பாட்டு’ எனும் நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக பழம்பெரும் எழுத்தாளர் கு.ப.ரா.வின் “அகலிகை’ நாடகத்தில் அகலிகைப் பாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர். இதுமட்டுமல்லாது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களது வாழ்வு குறித்து ஆய்வு செய்து வருகிறார். தற்போது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வரவுள்ளது. இவரை இனிய உதயத்திற்காக ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடி னோம். அதிலிருந்து…
எந்தச் சூழலில் எழுத்தைத் தேர்வு செய்தீர்கள்?
“”எனக்கான என் சுயம், அகம், இதற்கான வெளிப்பாடு என்ன என்று ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள ணும். அதாவது பதினேழு, பதினெட்டு வயதில் கொஞ்சம் அறிவு முதிர்ச்சி வரும்போது. அப்படி நான் எனக்கான சுயலி அக வெளிப் பாடாகக் கவிதையைத் தேர்வு செய்தேன். பரதநாட்டியத்தை நான் முறையாகக் கற்றுக் கொண்டவள். அப்பவே மேடை நாடகத்தில் நடித்தவள். திராவிடப் பாரம் பரியத்தைச் சேர்ந்த குடும்பத்தில் முற்போக் குச் சிந்தனையுடன் வளர்ந்தேன். இதோடு ஒரு கிராமம் சார்ந்த நிலப்பரப்பைச் சார்ந்த வள். எனக்கான அடை யாளமாகக் கவிதை என்ற ஊடகத்தைத் தேர்வு செய்தேன்.”
புனைகதைகளில் வட்டார எழுத்து இருப்பதுபோல் கவிதை யிலும் வட்டாரக் கவிதைகள் எழுத விரும்புவதுபோல் உங்கள் கவிதைகள் அமைந்திருக்கின்றன. உதாரணமாக எஞ்சோட்டுப்பெண். இதற்கு என்ன காரணம் என்பதை விளக்குவீர்களா?
“”விரும்பி எந்தவிதமான கூறுகளை யும் கவிதையில் கொண்டு வரமுடி யாது. அப்படிக் கொண்டுவந்தால் அது கவிதை செய்வது போல்தான் இருக்கும். “எஞ்சோட்டுப் பெண்’ணுல நீங்கள் சொல்வது போன்ற கூறுகள் நிறைய கவிதையில் இருக்கிறது. நான் கிராமச்சூழலில் வளர்ந்தவள். என்னைச் செதுக்கியவர்கள் ஒரு குழந்தைவேல் ஆசாரியோ, வெடிவால் கருப்பையாவோ, என் அப்பத்தாவோ, கொத்தனார் பாக்யமோதான். என் அனுபவங் களை நான் எனக்கான மொழியில் சொல்லுகிறேன். மண் சார்ந்த கவிதையை எழுதணும் என்ற எண் ணத்தில் எழுதவில்லை. இயல்பிலேயே வந்தது. வலிந்து செய்வது கவிதையில்லை.”
கவிதையும் எழுது கிறீர்கள். நவீன நாட கத்திலும் நடிக்கி றீர்கள். உங்களுக்கான அடையாளம் கவிதை யிலா, நடிப்பிலா?
“”கவிதை எனக்கான அகத் தேடலின் வெளிப்பாடு. நாடகம் எனக்கான புறவெளிப்பாடு. இரண்டுமே எனக்கு முக்கியமானது. நாடகத்தில் நான் ரொம்ப உணர்வது அந்த நாடகவெளி எனக்குக் கொடுக் கிற சுதந்திரம். ஒரு பெண்ணாக எனக்கு அந்த அரங்கம் கொடுக்கிற வெளி முக்கியமானது. என் உணர்வுகளைலி சமூகம் எனக்குக் கொடுக்கும் பாதிப்புகளை எப்படி நான் கவிதையில் வடிக்கிறேனோ, அதேபோல நாடகத்திலும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்துகிறேன். பெண் என்பதை மறந்து ஒரு பொதுமைக்குள் போகமுடிகிறது. இரண்டுமே என் அடையாளம்தான்.”
அரசியல் பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்திருக்கி றீர்கள். உங்களுக்கு அரசியல் ஈடுபாடு உண்டா?
“”எனக்குன்னு இல்ல… சாதாரண மனிதனுக்கும் அரசியல் ஈடுபாடு இருக்கும். பக்கத்து வீட்டுக்காரர் குப்பைகளை நம் வீட்டுப் பக்கம் போடுவதை நாம் ஏனென்று கேட்கும்போதே அரசியல் ஆரம்பம் ஆகிவிடும். என் தந்தையார் பெரியாரின் தொண்டர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். எப்படி எனக்கு “அனா ஆவன்னா’ கத்துக்கொடுத்தார் களோ, அதேபோல அரசியலும் கத்துத் தந்தார்கள். அருப்புக் கோட்டை தொகுதியில் என் தந்தையார் மூன்று தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தார். அப்போது ஊர் மக்கள் எல்லாரும் எங்கள் வீட்டில் கூடுவார்கள். என் திருமணத் திற்கே சுற்று வட்டாரத்திலுள்ள ஐம்பது கிராமத்திலிருந்து மக்கள் வந்தார்கள். எங்கள் குடும்பம் என்பதே தமிழக முதல்வர் கலைஞர் அவர்களோடு சேர்ந்ததுதான். அப்படி இருக்கும்போது எனக்கு அரசியல் ஈடுபாடு இருக்காதா?”
நவீன நாடகங்களில் நடிக்கிறீர் கள். பொதுவாக “கூத்துப்பட்டறை’ போன்ற தீவிர கலை இயக்கங்களில் நடிப்பவர்கள் தற்போது திரைப் படங்களிலும் நடித்துப் புகழ் பெற்று வருகிறார்கள். உங்களுக்குத் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?
“”திரைப்படத்துறை ஒரு வலிமையான ஊடகம். அதில் கூத்துப் பட்டறை பசுபதி, சந்திரா, கலை ராணி போன்ற சிறந்த கலைஞர்கள் பங்கேற்பது அத்துறைக்கு மேலும் செழுமை சேர்க்கும். சந்திரா ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் வந்தாலும் மிகச் சிறப்பாகச் செய்வார். பொதுவா நாடகங்கள் மூலம் பெரிய வருமானத்தைச் சம்பாதிக்க முடி யாது. ஆதலால் இவர்கள் திரைப் படத்தில் அதிக வருமானத்தைப் பெற முடியும். அதன் மூலம் அவர் களுடைய வறுமையைப் போக்க முடியும். என்னைப் பொறுத்த மட்டில் தமிழ்த் திரைப்படச் சூழ லில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அவர்கள் கொடுப்பதில்லை. அதனால் நான் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. ஷப்னா ஆஸ்மி, ஸ்மிதா பட்டேல், நந்திதாதாஸ் போன்ற சிறந்த கலைஞர்கள்கூட ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் நடித்த பிறகுதான் மாற்று சினிமாவுக்குள் வந்திருக்கிறார்கள். தமிழ்த் திரைப் படச் சூழலில் அப்படியொரு நிலை வருமா என்பது எனக்குத் தெரிய வில்லை.” உரைநடையை மொழிபெயர்ப் பது சற்று எளிது. ஆனால் கவிதையை மொழிபெயர்ப்பது கடினம். இந்தச் சவாலை உங்களுடைய மொழி பெயர்ப்பில் எவ்வாறு எதிர் கொள்கிறீர்கள்?
“”மொழிபெயர்ப்பாளர்கள் தினம் தினம் சந்திக்கக் கூடிய சிக்கல் இது. மொழிபெயர்ப்பே மூலத்துக்குச் செய்கிற துரோகம் என்பார்கள். டிரான்ஸ்லேட்டர் என்பதை இப்போ நாங்கள் டிரான்ஸ் கிரி யேட்டர் என்று மாற்றி இருக்கி றோம். உரைநடையை மொழி பெயர்க்கும்போதே அதன் மூலத்தைக் கொண்டுவருவது கஷ்டம். கவிதையில் அதன் உணர்வுகளை அப்படியே கொண்டுவருவதும் சிரமமான ஒரு செயல்பாடு. என்னு டைய கவிதையை வேற்றுமொழியில் மொழிபெயர்க்கும்போது அதில் உள்ள பண்பாட்டுச் சொற்கள், வட்டாரச் சொற்கள், கலாச்சாரச் சொற்களுக்குத் தனியாக அடிக் குறிப்போடுதான் மொழிபெயர்க்க முடியும். உதாரணமாக என் அப்பத்தாவைப் பற்றிய கவிதையில் பாம்படம் என்ற சொல் வருகிறது. இன்றைய தமிழ் இளம் தலைமுறை களுக்கோ பாம்படம் தெரியாது. அப்படியிருக்க அதை மொழி பெயர்க்கும்போது பாம்படம் படமே போட வேண்டியிருக்கும். இதெல் லாம் தாண்டி மொழிபெயர்ப்பாளர் களாகிய நாங்கள் முடிந்தவரை மூலத்தைச் சிதைக்காமல் கொண்டு வரவே முயற்சிக்கிறோம்.”
“”இது தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவரும் மிக முக்கியமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கேள்வி. நவீன தமிழ் இலக்கியச் சூழலில் எந்த மாதிரியான படைப்புகள் வருகின்றன? அவற்றின் கருத்தாக்கம் என்ன? எதிர்வினைகள் என்ன? சமூகத் தாக்கம் என்ன என்பன போன்றவற்றை இளைய தலைமுறை வாசகர்களுக்குலி குறிப் பாக மாணவர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய பொறுப்பு பேராசிரியர்களுக்கு உண்டு. சமீபத்தில் அழகிய பெரியவனின் “வெட்கப்படுகிறது இந்தியா’ என்ற மிக முக்கியமான அந்தக் கட்டுரைத் தொகுப்பு வெகுசிலரே அறிந்திருக்கக் கூடும். கவிதைப் பரப்பில் பார்த்தால் லஷ்மி மணிவண்ணனின் “எதிர்ப்பு கள் தோன்றி மறையும் இடம்’ என்ற தொகுப்பையும் வெகுசில மாணவர் களே அறிவார்கள். ஆக ஒரு மாணவன் இதைப் படிக்கலாம், படிக்க வேண்டாம் என்று சொல்லுகிற பொறுப்பில் இருக்கிற பேராசிரியர் கள் பாட வரைத் திட்டத்தில் அக நானூறு, புறநானூறு, சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், புதுக்கவிதை ஆகியவற்றிற்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை நவீனத்துவ, பின்நவீனத்துவப் படைப்புகளுக்கு இவர்கள் கொடுப் பதில்லை. ஆனால் மலையாள இலக்கிய உலகில் அழகிய பெரிய வன், ரமேஷ்லி பிரேம் போன்ற மிக முக்கியமான தமிழ்ப் படைப்பாளி களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு மலையாள வாசகர்களுக்கு அறி முகப்படுத்தி வைக்கிறார்கள். இப்ப டிச் சிறிதளவு நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன. இவ்வாறான புதிய போக்குகள்கூட பல் கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் கல்வி சார் நிகழ்வுகளாகக் குறுக்கப்பட்டு விடு கின்றன. மக்களைச் சென்று சேர்கின்ற வணிகப் பத்திரிகை கள் இதைக் கவனத் தில் எடுத்துக்கொண்டு, வாசகர்களுக்கான வாசிப்புத் தளத்தை மேம்படுத்தலி அதிகப் படுத்த வேண்டும்.” உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யார்?
“”எனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர் ஜான்டன்(Meta physicial Poet). ஜான்டன் தன்னுடைய கவிதைகளில் “ஈர்ய்ங்ண்ற்’ என்கிற புதுமையான படிம வகையை முதன்முறையாகப் புகுத்தியவர். ஷேக்ஸ்பியரோட குறுங்கவிதை களைவிடச் சிறந்தவையாகக் கருதப்பட்டவை.
ஜான்டனுடைய “ஈர்ஹ்ம்ண்ள்ற்ழ்ங்ள்ள்’ என்னும் கவிதைகள், மலையாளத்தில் ஆற்றூர் ரவிவர்மாவின் கவிதை களும், பிரமிள், ஆத்மநாம், சுகுமாரன், லஷ்மிமணிவண்ணன், இரா.மீனாட்சி, கலாப்ரியா, பச்சையப்பன், சங்கர ராமசுப்பிரமணியன், உமாமகேஸ்வரி, மாலதிமைத்ரி, இலங்கைப் பெண் கவிஞர்களில் சிவரமணி, ஆழியாள், ஊர்வசி, சேரன் ஆகியோரது கவிதை கள் எனக்குப் பிடிக்கும். பொதுவாக கவிதைகளில் ஒரு எளிமையையும், அனுபவத்தின் உண்மை யையும் தேடுகின்ற எனக்கு, இவர்களு டைய படைப்புகளில் இந்தக் கூறுகள் இருப் பதால் எனக்குப் பிடித் தவையாகவும், பாதித் தவையாகவும் இருக் கின்றன.” திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதும் உத்தேசம் ஏதாவது உண்டா?
“”திரைப்படத்திற்கு இலக்கியவாதிகள் பாடல் எழுதுவது என்பது இங்கு பெரிய குற்றமாகவும், பாவமாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி அல்ல அது. எங்கேயிருந் தாலும் நீங்கள் எதைச் சொல்கிறீர் கள், என்ன எழுதுகிறீர்கள் என்பது தான் முக்கியம். ஆனால் எப்படி ஒரு தலைப்பைக் கொடுத்து அதற்கான கவிதையை என்னால் எழுத முடியாதோ, அதேபோல மெட்டு களுக்கான பாடல் எழுதுவதும் எனக்குச் சாத்தியம் இல்லை. தற்போது திரைப்படப் பாடலா சிரியர்கள் அறிவுமதி, நா.முத்துக் குமார், யுகபாரதி ஆகியோர் எழுதும் பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.” கவிதையில் பெண் மொழி என்று தனியாக உண்டா? “”உண்டு. எனக்குக் கவிதையைப் பொறுத்தவரையில் பால் கிடையாது. கவிதையைப் படித்தவுடன் இது ஆண் எழுதிய கவிதை, பெண் எழுதிய கவிதை என்று தெரிய வேண்டிய அவசிய மில்லை. ஆனால் இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு பெண் குடும்பம், சமூகம், திருமணம், மதம், பாலியல் பாகுபாடு போன்ற நிறுவனங்களால் ஒடுக்கப்படுகிறாள். அதிலிருந்து மீண்டு அவளுக்கான அடை யாளத்தைக் கண்ட டைந்து அதனை வெளிப்படுத்த முனைகையில் ஒரு தனித்துவமான மொழியும், வேட்கை மிகுந்த ஒரு வெளிப்பாடும் பெண் படைப் பாளிக்குத் தேவையாக இருக்கிறது. அந்த வகையில் பெண்மொழி என்ற ஒன்றை பெண்ணியச் சிந்தனை யாளர்களும், பெண் படைப்பாளி களும் பெண்களுக்கான பிரத்தியேக மொழி ஒன்றைக் கையாளுகிறார்கள். இதுதான் அவசியமானலி ஆரோக்கிய மான போக்கு.”
தற்போது தமிழில் தீவிரமாக இயங்கும் படைப்பாளிகள் அரசியலில் பங்கெடுக்கிறார்கள். இவர்களால் அரசியலில் ஒரு ஆரோக்கியமான சூழலைக் கொண்டு வரமுடியுமா?
“”முடியுமா என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்லு வேன். ஏனென்றால் அரசியல் சமரசங்கள் அதிகம் தேவைப்படுகிற ஒரு துறை. ஆனால் நுட்பமான மனஉணர்வுகளும், மனிதநேயமும் அடிப்படையிலேயே அதிகமாக இருக்கும் படைப்பாளிகள் அதிகமாக அரசியலில் பங்கெடுத்தால் கண்டிப்பாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று நான் நம்புகிறேன். உலகில் சிறந்த புரட்சியாளர் கள், சிறந்த சிந்தனை யாளர்கள் அனைவருமே படைப்பாளிகளும் தானே.”
பாராளுமன்றத்தில் பெண்களுக் கான 33 சதவிகித இடஒதுக்கீடு நிறைவேறாமலே இருக்கிறது. இது சம்பந்தமாகப் பெண் படைப் பாளிகள் யாருமே குரல் கொடுக்க வில்லை. என்ன காரணம்?
“”பெண் படைப்பாளிகள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேட்டால் மறுபடியும் அரசியல் தான் அங்கு வருகிறது. படைப் பிலக்கியவாதிகளோ, எழுத்தாளர் களோ இணைந்து ஒரு சிறிய போராட்டத்தின் மூலம் கவனத்தை ஈர்க்கலாமே ஒழிய, முடிவு எடுக்க வேண்டியவர்கள் அரசியல்வாதி களாக இருக்கின்ற நிலைமையில் பெரிய மாறுதல்களை நாம் எதிர்பார்க்க முடியாது. சமீபத்தில் நர்மதா அணைக்காக மேத்தா பட்கருடைய உண்ணாவிரதப் போராட்டத்தைச் சொல்லலாம்.”

நீங்கள் வட்டாரமொழியில் கவிதைகள் எழுதுகிறீர்கள். சா.கந்தசாமி, “வட்டாரமொழியில் எழுதும் படைப்பாளிகளின் படைப்பு அவர்களுடைய காலத்தி லேயே செத்துவிடுகிறது’ என்கிறார். இதைப் பற்றிய உங்கள் கருத் தென்ன?
“”நான் எழுதுவது என் மொழி. வியர்வையும், சொலவடையும் (பழமொழி), வாழ்வனுபவங்களின் சொல்வழக்கு நிரம்பிய என் மண்ணின் மொழி. எனக்குத் தெரிந்த இயல்பான என் மொழியில் எழுது வது உண்மையின் வீரியத்துடன் நிலைத்து நிற்கும்லி அம்மொழி பேசும் எம்மக்கள் இருக்கும்வரை. இதை விடுத்து ஒரு புனைவு மொழியில் நான் இயங்க வேண்டும்; அதுதான் பின்நவீனத்துவம் என்றால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. கவிதையின் கரு, பண்பாட்டு மூலக்கூறு என்னுடைய மண் சார்ந்து இருக்க வேண்டும். அதில் இருக்கின்ற படிமங்கள், உவமைகள் அறிவு சார்ந்த நவீன மொழியில் இருக்கலாம். நவீனச் சூழலில் நிலம் சார்ந்தும், பண்பாட்டுச் சூழல் சார்ந்தும் உங்களுக்கான ஒரு பிரத்தியேக மொழியில் எழுது வதென்பது, நவீன விமர்சகர்களால் தர்ம்ஹய்ற்ண்ஸ்ரீ சர்ள்ற்ஹப்ஞ்ண்ஹ என்று புறம் தள்ளப்படுகின்றது. இவர்கள் விவரித்து கவிதைகள் எழுதிய ஆங்கிலக் கவிஞர் ரர்ழ்க்ள்ஜ்ர்ழ்ற்ட்லிதை ஏற்றுக்கொள்கிறார்கள். லத்தீன் அமெரிக்கக் கவிதைகளையும், ஆஸ்திரேலியப் பழங்குடியின ருடைய ஆங்கிலக் கவிதைகளையும் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய ஒரே பதில் வித்யா ஷங்கர் எழுதிய “எனது’ கவிதைதான்.
ஆர்தர் கொய்ஸவரும்
ஆல்பர்ட் காம்யூவும்
ஆயிரம்தான் படித்தாலும்
அவை எனக்குச் செய்திகளே
பேர் சொல்லி மிரட்டாதே
வேருண்டு எனக்கு
அறிந்ததும்
அனுபவமும்
கணியான் கூத்து
வரகணி மாரிமுத்து
நையாண்டி மேளம்
கருவநல்லூர் கருப்பசாமி
கரகமாடும்
தச்சநல்லூர் சாரதாவும்தான்.”

தற்போதைய சிறு பத்திரிகை களின் போக்கு எவ்வாறு உள்ளது?
“”சிறு பத்திரிகைச் சூழலில் இன்று பல குழுக்களாக இயங்கிக் கொண் டிருக்கிறார்கள். சார்பு நிலையற்ற நடுநிலையான நுண்ணுணர்வுமிக்க படைப்பாளிகளுக்கு இது மிகவும் கவலையளிக்கக் கூடியது; என்றாலும் அப்படிப்பட்ட படைப்பாளிகள் தங்களுக்கான படைப்புகளை எந்தக் குழுவும் சாராத தளங்களில் வெளிக் கொணர்வதன் மூலம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் இயங்க முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். சுதந்திரத்தின் முதல் ஒளியை எடுத்துச் செல்லும் படைப் பாளிகள் எந்தக் குழுக்களுக்குள் ளேயும் இயங்க முடியாது.”
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் களுடைய வாழ்நிலை பற்றி ஆய்வு செய்து வருகிறீர்கள். அந்த ஆய்வைப் பற்றிச் சொல்லுங்களேன்.
“”ஆய்வுபற்றி சொல்வதற்கு முன்னால் ஈழத்தமிழர்களோடு எனக்கிருக்கின்ற தொப்புள்கொடி உறவைப் பற்றி சொல்ல வேண்டும். ஒடுக்குதலுக்கு ஆளான ஒரு தமிழ் இனம் மிகப்பெரிய அளவில் இடம் பெயர்ந்தது என்பது (யூத இனத்திற்கு அடுத்தபடியாக) ஈழத்தமிழர்கள்தான். அவர்களுடைய அலைந்து உழல்தலையும், அயல் மண்ணிலே எப்படியாவது பதிவு செய்திட வேண்டும் என்கின்ற என் ஆவல்தான் இந்த ஆய்விற்குக் காரணம். குறிப் பாக ஆஸ்திரேலியாவில் அவர்கள் அதிக அளவில் குடிபெயர்ந்ததால், அங்கிருக்கின்ற தமிழர்களுடைய ஆங்கிலப் படைப்புகளை என் ஆய்வுக்காக எடுத்துக்கொண்டேன். தமிழ் அவர்களுக்கு வாழ்வு மொழி யாக இருக்கிறது. ஆங்கிலம் அவர் களுக்குப் பிழைப்பு மொழியாக இருக்கிறது. அந்த மொழியிலேயே அவர்களுடைய ஆவலாதிகளையும், அடையாளம் குறித்த நிலையற்ற தன்மையையும் எழுதும்போது அது உலகளாவிய வாசகத்தளத்திற்குச் செல்கிறது. இப்பரவலான சென்ற டைதலின் மூலம் உலகம் அவர்களை உற்றுக் கவனிக்கும். அதன் மூலம் சற்றேனும் அவர்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. என் ஆய்வுக்கான முனைப்பும் இதுதான்.”

தமிழச்சி என்று புனைபெயர் வைத்திருக்கிறீர்களே என்ன காரணம்?
“”இந்தக் கேள்வியைத்தான் முதல் கேள்வியாகக் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கடைசியில் கேட்டிருக்கிறீர்கள். பொதுவாக என்னைச் சந்திக்கிற எல்லாருமே இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கத் தவறுவதே இல்லை. சுமதி என்ற என் சொந்தப் பெயரிலேயே என் படைப்புகளை வெளியிடத்தான் எனக்கு விருப்பம். ஏற்கெனவே என் பெயரில் இன்னொரு சுமதி படைப் பாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் எனக் கேள்விப்படும்பொழுது, என்னை நான் எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது என யோசித்து, வேறொரு பெயரைத் தேடினேன்.
இந்த “அடையாளம்’ என்பது என்னைப் பிறரிடமிருந்து வித்தி யாசப்படுத்தியோ, வேறுபடுத்தியோ காட்ட வேண்டிய அவசியமில்லை. அது எந்தவிதமான மிகைத்தனங் களுமற்றுலி அதேசமயம் எனது வேர்களின் ஊடோடி இருந்தால் எனக்கு உவப்பானதாகவும், திருப்தி கரமாகவும் இருக்குமே என்பதால் தமிழ்க் கிராமத்திலிருந்து வருகின்ற ஒரு பெண் எனும் பொருள்படும் படியான ஒரு பெயரை யோசித்தேன்.
“”நான் எழுதுவது என் மொழி. வியர்வையும், சொலவடையும் (பழமொழி), வாழ்வனுபவங்களின் சொல்வழக்கு நிரம்பிய என் மண்ணின் மொழி. எனக்குத் தெரிந்த இயல்பான என் மொழியில் எழுது வது உண்மையின் வீரியத்துடன் நிலைத்து நிற்கும்லி அம்மொழி பேசும் எம்மக்கள் இருக்கும்வரை. இதை விடுத்து ஒரு புனைவு மொழியில் நான் இயங்க வேண்டும்; அதுதான் பின்நவீனத்துவம் என்றால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. கவிதையின் கரு, பண்பாட்டு மூலக்கூறு என்னுடைய மண் சார்ந்து இருக்க வேண்டும். அதில் இருக்கின்ற படிமங்கள், உவமைகள் அறிவு சார்ந்த நவீன மொழியில் இருக்கலாம். நவீனச் சூழலில் நிலம் சார்ந்தும், பண்பாட்டுச் சூழல் சார்ந்தும் உங்களுக்கான ஒரு பிரத்தியேக மொழியில் எழுது வதென்பது, நவீன விமர்சகர்களால்’ Romantic Nostalgia என்று புறம் தள்ளப்படுகின்றது. இவர்கள் விவரித்து கவிதைகள் எழுதிய ஆங்கிலக் கவிஞர் Wordsworth -்ழ்க்ள்ஜ்ர்ழ்ற்ட்லிதை ஏற்றுக்கொள்கிறார்கள். லத்தீன் அமெரிக்கக் கவிதைகளையும், ஆஸ்திரேலியப் பழங்குடியின ருடைய ஆங்கிலக் கவிதைகளையும் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய ஒரே பதில் வித்யா ஷங்கர் எழுதிய “எனது’ கவிதைதான்.
சமீபத்தில் தாங்கள் படித்த புத்தகம் எது?
“”சமீபத்தில் நான் படித்த புத்தகம் ஆங்கிலத்தில் தமிழ்ப் பழமொழி களின் மொழிபெயர்ப்பு புத்தகம் (தங்ஸ். ஐங்ழ்ம்ஹய்த்ங்ய்ள்ங்ய் எழுதியது). தென்றல் எழுதிய நீல இறகு ஆகியவை.”
(இப்பேட்டி நக்கீரனில் வெளிவந்தது)

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

Pramil.

My Photo

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

Aanmeegam...!


கம்பீரமாக விடைபெற்ற பிரேமானந்த்….

225px-Basava_PremanandMy Photo
அந்த மனிதர் கம்பீரமாகக் கிடத்தப்பட்டிருந்தார்.
ஒரு ஒப்பாரி…. அழுகை…. ஏன் சின்ன விசும்பல் கூட இல்லை அந்த இடத்தில். வந்திருந்த நண்பர்கள் அந்த மனிதரது கடந்த கால சாதனைகளை….. ஓயாது உழைத்த உழைப்பை… ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டபடி இருந்தனர். முதலில் உடலைப் பார்க்க வேண்டும் என்ற போது ”செருப்பைப் போட்டுக் கொண்டே போங்க” என்றனர் அங்கிருந்த நண்பர்கள். கோயம்புத்தூரின் தெற்குக் கோடியில் இருக்கும் போத்தனூரில் வைக்கப்பட்டிருந்த அந்த மனிதனுக்குத்தான் எத்தனை நண்பர்கள்……  தமிழகம் மட்டுமில்லை….. இந்தியாவில் மட்டுமில்லை…… உலகம் முழுக்க அந்த மனிதனுக்கு நண்பர்கள் பரந்து விரிந்திருந்தனர்.
ஆம் அந்த மனிதனின் பெயர் பிரேமானந்த்.
உலகெங்கிலும் உள்ள பகுத்தறிவாளர்கள் அனைவருக்கும் மிகப் பரிச்சயமான பெயர்.
     நாட்டின் ஏதோ ஒரு மூலையில் உள்ள அந்த கிராமத்திற்கு திடீரென தாடி வைத்த சாமியார் ஒருவர் வருவார். கிராமமக்கள் உடனே சூழ்ந்து கொள்ள ஆரம்பமாகும் அவரது ”பூஜைகள்”. அருகில் உள்ள அந்த ஊர்க்காரரை அழைத்து “வா வந்து இந்தத் தேங்காயை உடை” என்பார். ஊர்க்காரர் ஓங்கி உடைத்த மறுநொடியே ஆச்சர்யத்தால் அதிர்ந்து போவார். உடைந்த தேங்காய்க்குள் இருந்து மல்லிகைப்பூக்கள் சிதறும்.
“சாமி” என்று காலில் விழுவார்கள் மக்கள்.
”சரி….. சரி…. நீ வா…… நீ அதே மாதிரி இந்தத் தேங்காயை ஓங்கி உடை” என்று மற்றொன்றைக் கொடுப்பார். அந்த ஆள் உடைத்த மறுநொடியே அதிர்ச்சியில் உறைந்து போவார். தேங்காய்க்குள் இருந்து ரத்தம் தெறிக்கும்.
மக்கள் மிரண்டுபோய் காலில் விழுந்து கும்பிட ஆரம்பிப்பார்கள்.
“மக்களே பொறுங்கள். நான் சாமியாருமில்லை. எந்த வித அற்புத சக்தியும் கொண்டவனுமில்லை. உங்களைப் போலவே மிகச் சாதாரண மனிதன். நம்புங்கள்” என்பார்.
வியந்து நிற்கும் மக்களிடம் தேங்காயின் குடுமியைப் பிய்த்து அதில் துளை போட்டு உள்ளே இருக்கும் நீரை எடுத்துவிட்டு மல்லிகைப் பூவை சொருகிய விதத்தையும், ரத்தத்தை செலுத்திய விதத்தையும் விளக்கிக் காட்டுவார்.
“நான் செய்ததெல்லாம் வெறும் மேஜிக்தான். இப்படித்தான் நாட்டில் பலபேர் இந்த மேஜிக்கை மந்திரசக்தி என்றும்….. இறைவனிடம் இருந்து பெற்ற அற்புதங்கள் என்றும் கூறி உங்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.” என அறிவுறுத்திவிட்டு அடுத்த கிராமம் நோக்கி நகர்வார் அந்தப் பெரியவர்.
அந்தப் பெரியவர்தான் பிரேமானந்த்.
தான் சந்தித்த மக்களையெல்லாம் விழிப்படைய வைத்துவிட்டு இப்போது மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார்.
அக்டோபர் 4 ஆம் தேதி தனது இறுதிமூச்சை நிறுத்திக் கொண்ட பிரேமானந்துக்கு வயது 79. புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் சொன்னது : ” நான் இறந்த ஒரு மணி நேரத்திற்குள் எனது உடலை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து விடுங்கள். எனது உடல் மருத்துவ மாணவர்களது ஆராய்ச்சிக்காகப் பயன்படட்டும். எனது உடலை வைத்து எந்தவொரு சாதிச் சடங்கோ….மதச் சடங்கோ நடத்த அனுமதித்து விடாதீர்கள். ”
அதன்படியே அரங்கேறியது அந்த எளிய மனிதனது இறுதி ஊர்வலம். இப்போது அவர் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கான மேசையின் மீது கிடத்தப்பட்டிருக்கிறார் வெகு கம்பீரமாக.
பிரேமானந்த் என்றழைக்கப்படும் “பசவ பிரேமானந்த்”  பிறந்தது கோழிக்கோட்டில் என்றாலும் இருந்தது இறந்தது எல்லாமே கோயம்புத்தூரில்தான். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு பள்ளியைத் துறந்தவர் பகுத்தறிவின்பால் நாட்டம் கொண்டு நாற்பத்தி ஒன்பது நாடுகளைச் சுற்றி வந்தார்.
எண்பதுகளில் கோவையில் அவரின் பகுத்தறிவுப் பணிக்கு தோள் கொடுத்தவர்கள் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் கு.ராமகிருஷ்ணனும், தலைமை நிலையச் செயலாளர் வெ. ஆறுச்சாமி போன்றவர்களும்தான்.
அதிலும் விபூதி வரவழைப்பது, லிங்கம் வரவழைப்பது, முதுகில் அலகு குத்தி காரை இழுப்பது, அந்தரத்தில் மிதப்பது, தகதகக்கும் தீ குழிக்குள் நிதானமாக நடந்து செல்வது போன்ற மூட நம்பிக்கை ஒழிப்புப் பணிகளுக்கு கூப்பிட்டதும் தயாராய் நின்றவர்கள் ஆறுச்சாமியும், ”தோழர்” அறக்கட்டளை என்கிற மனித நேய அமைப்பை நடத்தி வரும் சாந்தகுமாரும்தான்,
”படிக்காத மேதை” ஜி.டி.நாயுடுவின் மிக நெருங்கிய நண்பர் பிரேமானந்த். எல்லாவற்றை விடவும் தங்கத்தைத் தயாரிப்பவர்கள் அதற்கான லைசன்சைப் பெற்றிருக்க வேண்டும் என்கிற விதியைச் சுட்டிக்காட்டி லைசன்ஸ் இல்லாமல் தங்கம் எடுத்துக் கொடுக்கும் சாய் பாபாவை தங்கக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என இவர் போட்ட வழக்கு உலகப்பிரசித்தி பெற்ற வழக்கு. பி,பி.சி., டிஸ்கவரி சேனல் என பலவற்றில் இவரது பேட்டிகள் ஒளிபரப்பப் பட்டிருக்கின்றன.
இந்த மக்களின் அறிவியல் அறிவைப் பெருக்குவதற்காக அவர் விட்டு சென்றிருக்கும் சொத்து ஏறக்குறைய ஒன்றரை லட்சம் புத்தகங்களும் ஒரு அறிவியல் விளக்கக் கூடமும்தான்.
”கடவுளின் பெயரால் அற்புதங்கள் நிகழ்த்துபவர்கள் அதனை அறிவியல்பூர்வமாக நிரூபித்துக் காட்டினால் அதற்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு” என பிரேமானந்த் விடுத்த அறைகூவல் அவரைப் போலவே வெல்லப்பட முடியாமல் இன்னமும் சவால் விட்டபடி காத்துக்கொண்டு இருக்கிறது.
**********
நடிகை புவனேஸ்வரி விபச்சாரத் தடுப்புப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதுதான் தமிழகத்தின் லேட்டஸ்ட் சமாச்சாரம். பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும்….. ஆக்கக் கூடாது என்கிற வாதங்களைத் தாண்டி நமக்கு வருகின்ற கோபமெல்லாம் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மீதுதான். ஆடம்பரங்களுக்காக இப்படிப் போனவர்கள் ஒருபுறம் இருந்தாலும் பிழைக்க வேறு வழியே கிடைக்காமல் வயிற்றுப் பிழைப்புக்காக இதைத் தேர்ந்தெடுத்து உயிர்வாழும் பெண்களைப் படம் பிடித்து “பிடிபட்ட விபச்சார அழகி இவள்தான்” என வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் நமது கோபம். அப்படிப் படம் போடும் பத்திரிக்கைகள் அவர்களோடு உறவு கொண்ட பெரிய மனிதர்களைப் படம்பிடித்துப் போட்டிருக்கிறதா? என்பதுதான் நமது கேள்வியே. பல ஆண்களோடு உறவு கொள்ளும் பெண்ணுக்குப் பெயர் விபச்சாரி என்றால்…. பல பெண்களோடு உறவு கொள்ளும் ஆணுக்கு என்ன பெயர்?

”பிடிபட்ட அப்பெண்ணுக்கும் ஒரு குடும்பம் இருக்கும்…அவருக்கு பள்ளிக்குச் செல்லும் மகனோ அல்லது மகளோ இருக்கக்கூடும்….. புகைப்படம் போட்டால் அவரது குடும்பமே துயரத்துக்கு உள்ளாகும்” என்கிற குறைந்தபட்ச மனிதநேயம் கூட இந்த நான்காவது தூணுக்கு இல்லாமல் போனது வெட்ககரமான விஷயம்.
நடிகர் ஜெமினி கணேசன் பலதார மணம்  செய்தால் அவருக்குப் பெயர் காதல் மன்னன்.  அதே வேலையை ஜெயலட்சுமி செய்தால் வேறு பெயரா?
ஜெமினி செய்தால் தொலைக்காட்சியில் “ஸ்டாருடன் ஒரு நாள்” என ஒளிபரப்பாகும்……
அதையே ஜெயலட்சுமி செய்தால் “குற்றம் நடந்தது என்ன?” என்று ஒளிபரப்பாகும்……..
என்ன நீதி இது?
யோசிக்கட்டும் ஊடகங்கள்.

Yuvan shankar RAAJA..!

யுவன்-ன் "ஆரவாரக் கானகம்" My Photo
சின்னப்பயல்

திரைப்படத்தின் பின்னணி இசையெனும் இளையராஜாவின் கோட்டையில் தானும் ஜெயித்துக் கொடி நாட்டியிருக்கிறார் யுவன் " ஆரண்ய காண்டத்தில்", யுவனின் பின்னணி இசைக்கெனவே படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தோணுமளவுக்கு.
சண்டைக்காட்சிகள் , மற்றும் ஆக்‌ஷன் த்ரில்லர் வரிசையில் இளையராஜாவுக்கு ஒரு "உதயம்" படத்தில் ரகுவரன் தோன்றும் காட்சிகளில் வந்த பின்னணி இசை என்றும் மறக்க இயலாதது ,மற்றும் 'பழஸிராஜா'வில் மம்மூட்டி கைகளில் இரும்புப்பட்டாவைச் சுற்றிக்கொண்டு சண்டை போடும் காட்சியில் சுழலும்போது மட்டும் காற்றைக் கிழிக்கும் இடம், பின் அந்த அடியை/வெட்டை வாங்கியவர்களின் இயல்பான சப்தம் என வேறொரு பின்னணி இசையுமின்றி அமைத்திருக்கும் காட்சிகள் என குறிப்பாக சொல்லிகாட்டக்கூடிய இடங்கள் என்றால் யுவனுக்கு இந்த 'ஆரண்ய காண்டம்'. அவர் முன்னர் செய்த விஷயங்களைத்தாண்டி வெகு தூரம் பயணித்திருக்கிறார்.க்ரைம் த்ரில்லர் 'பில்லா'விலும் இது போன்ற பின்னணி இசை அமையவில்லை.பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டபடியால் அங்கு பின்னணி பற்றி அதிகம் சிலாகிக்க முடியவில்லை. '16' படத்திலும் யுவனின் அந்த மலைப்பாங்கான கிராமியப்பின்னணி இசை இன்னும் மனதிற்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.
.கா.வில் அவசியமான இடங்களில் அமைதியும் , தேவையான இடங்களில் பின்னணியில் பாத்திரங்களைச்சுற்றி நிகழும் இயல்பான சத்தங்களும், பின்னர் கதைக்கும் , பாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கவுமாக இசைக்கோவைகளாகப் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் யுவன் என்னும் புதிய 'இளைய' ராஜா.
படத்தின் நெடுகிலும் ஓங்கி ஒலிக்கும் மாதா கோயிலின் மணியோசை நடு நெஞ்சை அதிரவைத்து வலுவாக காயப்படுத்துகிறது.படத்தில் இசை மௌனித்துப்போய் அமைதியான இடங்கள் ஏதோ நடக்கப்போகிறது என வெகுவாக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.எங்கு இசை அவசியமில்லை
என்று தீர்மானிப்பவனே நல்ல இசைக்கலைஞன்.!
பசுபதி,கொடுக்காப்புளி,அவனது அப்பா, சிங்கப்பெருமாள்,சப்பை மற்றும் அந்தப்பெண் சுப்பு எனப்பல கதாபாத்திரங்கள் இருந்தபோதும் , அவற்றுக்கென தனி இசைக்கோவைகள் என வைத்துக்கொள்ளாமல் , கதை ஓட்டத்துக்கேற்றவாறு இசை நகர்ந்து செல்கிறது , மேலும் இவ்வாறான இசைப்பயணம் நமக்குப் புதிது,தீம் ம்யூஸிக் என்ற கட்டுப்பாட்டிலிருந்து வெகு தூரம் பயணிக்கும், யாராலும் அருகில் கூட நெருங்க முடியாத ,புதிய இசை.
கொடுக்காப்புளி மற்றும் அவனது அப்பாவின் காட்சிகளில் பியானோவின் தாள கதியில் தொடர்ந்து ஒலிக்கும் வயலின் இசைக்கோவை , ராஜாவின் "ஹவ் டு நேம் இட்"டை சிறிது ஞாபகப்படுத்தியபோதும் நம்மை ஒன்றிப்போகச்செய்கிறது,சேவல் சண்டைக்கான இசைக்கோவை , சில நாட்களுக்கு முன் அதே கருத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தின் இசையை வெகு எளிதாகக் கடந்து செல்கிறது.
மேலும் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் வந்த இசைக்கோவைகள் இங்கே..!
ஐ வில் ஹைட் இட் ( I will hide it) அந்த சிறுவன் கஞ்சாவை ஒளித்துவைக்கச் செல்லும் காட்சிப்பின்னணியில் ஒலிக்கும் இசைக்கோவை அற்புதமான புல்லாங்குழலுடன் , ஜமைக்கா பீட்ஸும் பேங்கோஸுமாக தொடர்ந்து ஒலிக்க கேட்பதற்கு கோலாகலமாயிருக்கிறது நமக்கு.சிறு பிள்ளைத்தனமான துள்ளலும் நம்மையறியாமல் ஏற்படும் வாய் நிறைய மகிழ்ச்சியுமாகக் கொண்டாட வைக்கும் இசைக்கோவை அது.மால்குடி டேஸுக்குப்பின் மறந்து போன புல்லாங்குழல் இசை வெகு நாளுக்கு மறக்காது மனதிற்குள்ளேயே சுற்றிச்சுழன்று கொண்டேதானிருக்கும்
தி வார் ( The War ) கஜேந்திரன் கேங்குக்கும் பசுபதிக்குமிடையேயான இறுதிச் சண்டைக்காட்சியில் ஒலிக்கும் , கத்திகளின் விஷ்க் ஒலி,ரத்தம் பீரிடும் சத்தம் என காட்சிக்கு உரித்தான இசைமட்டுமே ஒலிக்க , இது நாள் வரை பிற திரைப்படங்களில் நாம் கேட்ட சண்டைக்காட்சி இசை எங்கு போனது என வியப்புக்குள்ளாக்குவது சகஜம்.அதன் பின்னணியில் காட்சி நகர நகர, பியானோவின் அமுத்தலான சப்தமும், கிட்டாரின் அதிர்வுமான இசைக்கோவை நம்மைக் காட்சியோடு ஒன்ற வைக்கின்றது, நாம் இதுவரை கேட்டிராத அலைவரிசையில்.
ஃப்ளெமெங்கோ ஃபைட் ( Flamenco Fight ) பசுபதியும் , கஜபதியும் , கஞ்சாப்பொட்டலத்தை கை மாற்றிக்கொள்ள வரும் இடத்தில் ஒலிக்கும் ஃப்ளெமெங்கோ இசைக்கோவை நமக்கு பரிச்சயமானது தான்.ஸ்பானிஷ் பின்னணியில் , அவர்களின் இசைப்பாணியுடன் கூடிய நடனத்திற்கான இசைத்தொகுப்பு.சற்றேறக்குறைய டேப் டான்ஸ் போன்றதொரு வகையை சார்ந்தது எனலாம் (கேட்பதற்கு). 'டைட்டானிக்' படத்தில் லியோ'வும் , கேத்'தும் கப்பலின் கீழ்த்தளத்தில் ஆடும் இசை நினைவிருந்தால் இது நமக்குப் பரிச்சயமானதே. ஸ்பானிஷ் கிட்டாருடன் , அக்கார்டியனும் சேர்ந்து ஒலிக்க கேட்பவரை நடனமாட வைக்கும் இசைக்கோவை.பின்னர் நடக்கப்போகும் சண்டைக்கு அடித்தளம் ஏற்படுத்திக்கொடுக்கும் இசை. சண்டையும் நடனம்தானா.?!
திங்ஸ் ஆர் செட் இன் மோஷன் ( Things are set in motion ) பசுபதி போலீஸில் பிடிபட்டு ஜீப்பில் ஏறிச்செல்லும் காட்சிக்கென உள்ள இசைக்கோவை.கிட்டாரின் விள்ளலுடன் ஆரம்பிக்கும் இசை.பியானோவிற்கு இத்தனை வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி உள்ளதென நிரூபிக்கப்பட்ட இசைக்கோவை.பியானோ தொடர்ந்து மணி போல ஒலிக்க, பின் வயலினும் , ட்ரம்ஸுமாக ஒலிக்கும் இசைக்கோவை ஐயா, யுவன் இவ்வளவு நாளாக எங்கு வைத்திருந்தீர் எனக்கேட்க வைக்கும் இசை அது !!!
இப்படி பல காட்சிகளுக்கு ,தனிப்பட்ட ,நாம் இதுவரை தமிழ்ப்படங்களில் கேட்டிராத , மனதை லயிக்க வைக்கும் இசைக்கோவைகளுடன் நம்மையும் சேர்த்து நகர்கிறது படம்.தனியாகப் பாடல்கள் என எதற்கும்
கதையில் வாய்ப்பில்லாததால் இப்படி சிறு சிறு இடங்களில் தமக்கென உள்ள இடங்களை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு உலகத்தரத்தை நமக்கென கொண்டு வந்திருக்கிறார் யுவன், 'பருத்தி வீர'னில் விட்டதை ஆ.கா.வில் கண்டிப்பாகப் பிடிக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன் ...!
திரைப்படத்தின் பின்னணி இசை ஒலிப்பேழையாக வெளியிடப்பட்டது தமிழ்த்திரையுகில் இளையராஜாவுக்கென மட்டுமே,,,அதன் பிறகு யுவனுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது.இந்த ஆ.கா, படத்தின் பின்னணி இசை ஒலிப்பேழையாக வெளிவரப்போகிறது !!
படத்தின் மையக்கருவை முழுதும் உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப இசையமைப்பது என்பது இளையராஜாவுக்கு மட்டுமே வாயத்த ஒன்று நானறிந்தவரை.எனினும் இசையில் பல படிகளை வெகு சுலபமாக ஏறிக்கொண்டிருக்கும் யுவனுக்கு இது ஒரு மணிமகுடம்.