புதன், 22 ஜூன், 2011

Singapore.

புதன், 22 ஜூன், 2011கலாச்சார வியப்புகள்-2: சிங்கபுரம் (சிங்கப்பூர்)


அந்தக் காலத்தில் பயணக் கட்டுரைகள் எழுதுவது பலருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். அப்போது வெளிநாடு சென்றோரும் குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு வாழ்க்கை முழுமையையும் அந்நாடுகளில் பணி செய்வதிலேயே அர்ப்பணித்தார்கள். அதனால் அவர்களுக்குப் பயணம் பற்றிய அனுபவங்களை எழுதும் வாய்ப்பெல்லாம் கிட்டியிராது. பெரும்பாலும் அப்போது கூலி வேலைக்குப் போன நம் மக்கள்தாம் - அவர்களுடைய சந்ததியர்தாம் இன்று பல நாடுகளில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். சுற்றிப் பார்க்கப் போவோர் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்திருப்பர். அப்படிப் போனவர்களையும் அங்கு வாழ்ந்த நம்மவர்கள் விழுந்து விழுந்து கவனித்திருப்பார்கள் - நம்ம ஆள் ஒருத்தர் வந்திருக்கிறார் என்கிற மகிழ்ச்சியில். வெளியில் சென்ற முதல்த் தலைமுறை ஆட்களுக்குத்தான் அப்படி ஊரிலிருந்து வருவோரை உபசரிப்பது முக்கியமாக இருக்கும். தகவல்த் தொடர்பு வசதிகள் அதிகம் இல்லாத அந்தக் காலத்தில், அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காக பரிச்சயம் இல்லாத அந்நிய மண்ணில் சென்று வாழும் நம் மக்களின் வாழ்க்கை முறையை விளக்கிச் சொல்லவும் பயணம் சென்றவர்கள் திரும்ப வந்து எழுதிய கட்டுரைகள், அங்கு போக முடியாதோருக்கு வாசிக்க சுவாரசியமாகவும் போக விரும்புவோருக்கு மாற்றுக் கலாச்சாரம் பற்றிய ஒரு நல்ல அறிமுகம் கொடுப்பதாகவும் இருந்திருக்கும்.





அதே கூலி வேலையைக் கூடுதல்ப் பெருமையோடு செய்யும் நம் கணிப்பொறித் தலைமுறை தலையெடுத்த பின்பு, இப்போதெல்லாம் குறைந்த பட்சம் வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார். அப்படிச் சென்றிருப்பவர்கள் வித விதமாகப் படங்கள் எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஊருக்கு வரும்போது வித விதமாகக் கதைகள் சொல்கிறார்கள். அதனால் நம்மில் பலருக்கு அது போன்ற கதைகளைக் கேட்டாலே புளிக்க ஆரம்பித்து விட்டது. அளவிலாத பிதற்றல்கள் மூலம், "ஐயோ, இவன் வந்துட்டானா... வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த லபக்கு தாஸ் போலப் பேசுவானே!" என்று அலறி ஓடும் கூட்டங்களையும் உருவாக்கி விட்டோம். அப்படி இருக்கையில் இப்படியொரு கட்டுரை வரைவது எவ்வளவு வெற்றி பெரும் என்று தெரியவில்லை. எனவே, அந்த நெடி சிறிதும் இல்லாமல் எழுத முயற்சித்திருக்கிறேன். பார்க்கலாம். அதிக பட்சம், "ஏய்! இதெல்லாம் நீ இப்பத்தான் பாக்குறியா? நாங்கெல்லாம் எப்பவோ இதெல்லாம் தாண்டி வந்துட்டோம்." என்று வேண்டுமானால் நிறையப் பேர் நினைக்கலாம். அவர்களுக்கு மட்டும், "இது உங்களுக்கில்லை!" என்றொரு முன் விளக்கம் கொடுத்து விட்டு ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். இதோ கிளம்பி விட்டது விமானம். பெங்களூர் விமான நிலையத்திலிருந்து...





மேற்கு நோக்கிப் பயணிக்கப் போவதாக எழுதி ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது. அதற்கான நான்கு வெவ்வேறு வாய்ப்புகள் வாய்க்கு எட்டி கைக்கு எட்டாமல் போய் விட்டன. சுவிட்சர்லாந்தில் ஆரம்பித்து, அது இங்கிலாந்தாகி, அதுவே பின்னர் அமெரிக்காவாகி, அதுவும் போய் நெதர்லாந்தாகி, கடைசியில் ஒரு லாந்தும் இல்லாமல் மல்லாந்து படுக்க வேண்டிய நிலையாகி விட்டது. மேற்கு நோக்கிப் புறப்படத் தயாராக உட்கார்ந்திருந்தவனுக்கு மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டு படுக்க வேண்டிய நிலை. திடீரென்று எழுப்பி, கிழக்கு நோக்கிக் கிளம்பச் சொல்லி ஒலித்தது ஒரு மணி. அடித்துப் பிடித்துத் தயாரானேன். வாராது வந்த மாமணியாய் வந்தது சிங்கபுர வாய்ப்பு. அதுவும் "இப்போது போ. எப்போது திரும்புவது என்பதை அப்புறம் முடிவு பண்ணிக் கொள்வோம். அது இரண்டு வாரங்களாகவும் இருக்கலாம். இரண்டு வருடங்களாகவும் மாறலாம்!" என்பது போலச் சொல்லி அனுப்பினார்கள். அதனால், இரண்டு வாரங்கள் என்று வெளியில் சொன்னாலும், கண்டிப்பாக இரண்டு வருடங்கள் ஆகிவிடும் என்ற அதீத நம்பிக்கையில் புறப்பட்டேன். நமக்கு எது வேண்டுமோ அதுதான் நடக்கும் என்று நம்புவதுதானே நம் பயக்கம். கடைசியில் இரண்டு வாரங்கள் கூட இருக்க வேலையில்லாமல் பத்து நாட்களுக்குள் திரும்ப நேர்ந்தது.





எது எப்படியோ, வெளிநாடு செல்வதற்கான கோடு கையில் இல்லையோ - கட்டத்தில் இல்லையோ என்றெல்லாம் பட்ட கவலைக்கு ஒரு முடிவு பிறந்து விட்ட திருப்தி கிடைத்து விட்டது. இதுதான் ஆரம்பம் என்று ஒருபுறம் நல்லவர்கள் சிலர் நம்பிக்கை கொடுக்கிறார்கள். "இதற்கெதற்கு இவ்வளவு மோகம்?" என்று ஒருபுறம் வேறு சிலர் கேள்வி கேட்கிறார்கள். "நல்ல காரியம் எதையுமே நடக்கிற வரை சொல்லக் கூடாது" என்று ஒருபுறம் நலம் விரும்பிகள் பலர் நல்லது சொல்கிறார்கள். இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் நான்கு முறை வந்ததெல்லாம் கண்ணு பட்டே மண்ணாப் போனது என்பது அவர்கள் சொல்லும் நல்லது. அதுவும் சரியோ என்று தோன்றும் மாதிரித்தான் இருந்தது நடந்த பல நிகழ்வுகள். எல்லாம் நன்றாகப் போவது போல இருக்கும். அடுத்த வாரம்... அதற்கடுத்த வாரம்... என்பது போல நெருங்கி வரும். திடீரென்று ஏதாவது ஆகிவிடும். அதனால்தானோ என்னவோ நிறையப் பேர் போய்ச் சேர்ந்தபின்தான் சொல்கிறார்கள் - "ஐயோ, திடு திப்புன்னு கிளம்பச் சொல்லிட்டாங்க. யாருக்குமே சொல்ல முடியல. இப்பத்தான் எல்லாருக்கும் கூப்பிட்டுச் சொல்லிக்கிட்டிருக்கேன்!" என்று. "வெளிநாடு போவது இவ்வளவு பெரிய விஷயமா? அதெல்லாம் ஒரு பெரிய விஷயம் போல இப்படி எல்லாம் கூடப் பேசுவார்களா?" என்றெல்லாம் தோன்றுகிறதல்லவா? :)





அத்தனையையும் மீறி, வண்டியேறி உட்கார்ந்து, பறக்க ஆரம்பித்த பின்பு கூட முழுசாக நம்பிக்கை வரவில்லை. சென்று இறங்கிய பின்புதான் "அப்பாடா! கையிலும் கோளாறு இல்லை; கட்டத்திலும் கோளாறு இல்லை!" என்றொரு நிம்மதிப் பெருமூச்சு. முதன் முதலில் கிடைக்கிற எல்லா வாய்ப்புகளிலும் - நடக்கிற எல்லா நிகழ்வுகளிலும் இது போன்றதொரு நம்பிக்கையின்மை வரும் என நினைக்கிறேன். முதன் முதலில் மதுரை போனபோதும், முதன் முதலில் சென்னை போனபோதும், பின்னர் முதல் வேலை கிடைத்த போதும், திருமணம் ஆனபோதும் (ஒருமுறைதான்!) இதை உணர்ந்திருக்கிறேன். முழுசாக நடந்து முடியும்வரை ஒருவிதப் பதற்றம். நல்லவேளை, காதல் திருமணமில்லை. அது கூடுதல்ப் பதற்றமாகி விடும். இப்போது அடுத்த கவலை ஆரம்பித்து விட்டது. வாழ்க்கைக்கும் இது ஒன்றுதான் வெளியில் செல்லக் கிடைத்த ஒரே வாய்ப்பு என்றாகி விடக் கூடாதே என்கிற பயம். மனம் குரங்கு என்று சொல்வதெல்லாம் மிக நாகரீகமான விமர்சனம். அதை விடக் கேவலமானதப்பா அது (குரங்கு கேவலம் என்று சொல்லவில்லை; அதற்காக யாரும் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்!).





சிங்கப்பூர் பல காரணங்களுக்காக சின்ன வயதில் இருந்து சென்று பார்க்க விரும்பிய நாடு. மற்ற எல்லா நாட்டையும் விட நமக்குக் கூடுதல் உரிமை உள்ள நாடு. இங்குள்ள டாலர் நோட்டுகளில் தமிழும் இருக்கும். விமான நிலையத்தில் இறங்கியவுடனேயே ஏகப் பட்ட தமிழ் வரவேற்புகள் கிடைக்கும். தமிழ் இங்கோர் அலுவல் மொழி. உலகில் தமிழையும் அலுவல் மொழியாகக் கொண்ட மூன்று நாடுகளில் இதுவும் ஒன்று. அம்மூன்று நாடுகளில், மற்ற இரண்டைப் போலல்லாமல் தமிழர்களின் உயிரையும் மற்ற உயிர்களைப் போலவே சமமாக மதிக்கும் ஒரே நாடு. நம் மக்கள் நிறையக் குவிந்து கிடக்கும் நாடு. இந்த நாட்டின் கட்டுமானத்தில் நம் மக்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. சோழர் ஆட்சிக் காலத்தில் நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல கீழை நாடுகளுள் ஒன்று. இங்கே நீண்ட காலமாக தமிழர் ஒருவர் குடியரசுத் தலைவராக இருந்து வருகிறார். இதெல்லாமே முன்பே கேள்விப்பட்ட சேதிகள்தாம். ஆனாலும் அவற்றையெல்லாம் இங்கு வந்து இறங்கியபின் நேரடியாகப் பார்க்கிறபோது ஒருவிதப் பெருமையுணர்வு மேற்கொள்வதை நன்கு உணர முடிகிறது.



சிங்கப்பூருக்கு மேலேயிருந்து விமானம் கீழிறங்கிய பொழுதில் எல்லோருமே அவ்வூரின் ராட்சத வெளிச்சத்தை சன்னல் வழியாக வேடிக்கை பார்த்தார்கள். உட்பகுதியில் உட்கார்ந்திருந்ததால் நான் அவ்வளவு நன்றாகப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் அதன் பிரம்மாண்டத்தை ஓரளவு காண முடிந்தது. இப்போதெல்லாம் நம்ம ஊர்களே இரவில் வந்து இறங்கிய நேரங்களில் இப்படி இருக்கின்றனவே என்றும் உள்ளுக்குள் ஒரு விவாத ஒலி கேட்டது. வந்து விமானம் நின்றதும், பெங்களூரில் இருந்தே பின்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டே வந்த சிறுவன் தன் தாயைக் கன்னடத்தில் கேட்டான் - "அம்மா, சிங்கப்பூர் ஆந்திரப் பிரதேசில்தானே இருக்கிறது?!". 'அடப்பாவி, தமிழ் நாட்டிலா என்றாவது கேட்டிருக்கலாம். அதில் ஒரு பொருள் பொதிந்திருக்கிறது!' என்றெண்ணிக் கொண்டேன். ஏதோவொரு வகையில் அது இந்தியாவில் ஓர் இடம் போல அவனுக்குத் தோன்றியிருக்கிறது. முதல்க்காரணம் பயண நேரமாக இருக்கக் கூடும். சென்ற முறை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றபோது இதைவிட அதிக நேரம் ஆகியிருந்திருக்கலாம்.



வந்து இறங்கியதும் "நல்வரவு" சொன்னது சாங்கி விமான நிலையம். 'ஆமாம். இது உண்மையிலேயே எனக்கு ஒரு பெரும் நல்வரவு!' என்று நினைத்துக் கொண்டேன். சிங்கப்பூருக்கும் அது ஒரு நல்வரவாக இருந்தால் நல்லதாக இருக்கும் என்று முடிந்தால் நினைத்திருக்கும் வந்தாரை வாழ வைக்கும் அந்த அழகூர். விமான நிலையத்து உள்ளே பெரிதாக எதுவும் வேறுபாடு காணவில்லை. இப்போதுதான் நம்ம ஊர்களும் பன்னாட்டுத் தரத்தில் விமான நிலையங்களைக் கட்டி விட்டனவே. ஏற்கனவே கேள்விப் பட்டதுபோல், நிறையத் தமிழர்கள் இருக்கிறார்களா என்று தேடினேன். ஓரளவு அங்கிங்கெனாதபடி எங்கும் தென்பட்டனர். உள்ளே இருக்கும் வரை குளு குளு என இருந்தது. வெளியில் காலெடுத்து வைத்தபோது, சிங்கப்பூர் வெக்கை சென்னைக்குச் சொந்தக்காரி போல அடிக்கும் என்று சொன்னார்களே அதை உணர முடிந்தது. கிட்டத்தட்ட நள்ளிரவாகி விட்டதால், 'உன் உண்மைக் கொடூரத்தை நாளை பார்த்துக் கொள்கிறேன்' என்று விட்டு விட்டேன்.



வாடகை வண்டிகளின் பகுதிக்கு வந்தபோது, 'எதையும் மிக முறையாகச் செய்கிற ஆட்கள் நாங்கள்' என்று சொல்லுகிற விதமாக அங்கே ஒருவர் நின்று முறைப்படி வரிசையாக ஆட்களை வண்டியில் ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார். அந்த அர்த்த சாமத்திலும். வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். பெங்களூரில் தமிழ் ஆட்டோக்காரர்கள் போல அங்கும் நிறைய நம்ம ஓட்டுனர்கள் இருப்பார்கள்; நான் ஏறப்போகும் முதல் வண்டியின் ஓட்டுனரும் நம்மவராகவே இருப்பார் என்று எண்ணியவனுக்குச் சின்னதாய் ஓர் ஏமாற்றம். வந்தவர் சீன முகம் கொண்ட சீமான். அன்று மட்டும் இல்லை. அதன் பின்பு நான் சென்ற எல்லா வண்டிகளின் ஓட்டுனர்களும் சீனர் அல்லது மலாயரே. ஒரு தமிழ் ஓட்டுனர் கூடச் சிக்க வில்லை அந்தப் பத்துப் பன்னிரண்டு நாட்களில்.



அந்த நள்ளிரவில் சிங்கப்பூரில் என் முதல் சாலைப் பயணம் ஆரம்பித்தது. ஓட்டுனர் நன்றாக ஆங்கிலம் பேசினார். ஆனால் அது புரிகிற மாதிரி இல்லை. அதன் பின்பு வந்த எல்லா ஓட்டுனர்களுமே ஆங்கிலம் அருமையாகப் பேசினார்கள். அவர்கள் யார் பேசியதுமே அவ்வளவு எளிதில் புரியத் தக்கதாய் இல்லை. இரவு என்றபோதும், சாலையின் இரு பக்கங்களையும் ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்தேன். நான் ஆசைப் பட்டபடி, ஒரு முறை கூட அவர் வாகனத்தின் ஒலிப்பானைப் பயன் படுத்தவில்லை. அதுவும் அந்தப் பத்துப் பதினைந்து நாட்களில் ஒரே ஒரு முறைதான் ஒரே ஒருத்தன்தான் தேவைக்கு அதிகமாக வாகன ஒலிப்பான் அடித்ததைப் பார்த்தேன். அந்த மொகரையைக் கண்டிப்பாகப் பார்த்து விட வேண்டும் என்று திரும்பிப் பார்த்தால் இந்தியன் (கண்டிப்பாகத் தமிழ் மொகரை அல்ல!) போலத் தெரிந்தது. பட்டி மன்றத்தில் பேசுகிறவர்களைப் போல, "எங்க ஆள் காட்டிட்டான்ல!" என்று பெருமைப் படத் தோன்றவில்லை. இந்தியாவிலேயே ஒலிப்பானைத் தொடாத எனக்குக் கிடைக்காத வாய்ப்பு, இங்கிதம் தெரியாத உனக்கு இந்த ஊரில் கிடைத்திருக்கிறதே என்று வயிற்றெரிச்சல் மட்டுமே வந்தது.



கட்டடங்கள் எல்லாமே பெரிதாக இருந்தன. நம்மூரிலும் அங்கிருக்கும் கட்டடங்கள் போல வர ஆரம்பித்து விட்டன. ஆனால், இங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது, அங்கே எங்குமே அப்படித்தான் இருக்கிறது. இது அது என்றில்லை. எல்லாமே விண்ணை முட்டும் கட்டடங்களே. நமக்குத்தான் வானம் எப்போதும் பட்டம் விடும் தொலைவில்தானே இருக்கிறது. கொடிக் கம்பங்களையே விண்ணை முட்டுவதாகச் சொல்வோர் நாங்கள். அம்மாம் பெரிய கட்டடங்களையா விடுவோம். அடுத்ததாக, சாலைகள் மிக அகலமாக இருந்தன. அளவுக்கு மிஞ்சி சுத்தமாக இருந்தன. 'இதற்கெலாம் ஏன் உங்கள் அரசாங்கம் துட்டைப் போட்டு வீணாக்குகிறதோ?!' என்று வேதனைப் பட்டுக் கொண்டேன். இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் இவையெல்லாம் பெரும் மிரட்சியை உண்டு பண்ணியிருக்கலாம். இப்போது நாமும் தங்க நாற்கரச் சாலைகளை எல்லாம் பார்த்து - பயணித்து - பழக்கப் பட்டு விட்டதால், மிரட்சி கொஞ்சம் குறைவே.



எதிர் பார்த்தது போலவே, ஓட்டுனர் சாலை விதிகளை மிகவும் பயத்தோடு கடை பிடித்தார். அந்த ஒழுங்கையும் நான் இருந்த காலம் முழுக்கக் காண முடிந்தது. சாலையைக் கடப்போர் மட்டும் முதலில் சில நாட்கள் நிரம்ப ஒழுங்காக இருப்பது போல்த் தெரிந்தார்கள். அதன் பின்பு, அந்த வகையில் கெடுபிடி கொஞ்சம் குறைவு போலத் தெரிந்தது. யாரும் குண்டக்க மண்டக்கக் கடப்பது கிடையாது. சிவப்பு விளக்கு எரிந்தாலும், வண்டி எதுவும் வராவிட்டால் மிகக் கவனமாகவே கடக்கிறார்கள். விதி விளக்குகளை மதியாமை விதி விலக்குகளே ஒழிய வாழ்க்கை முறை அல்ல. வண்டிகள் அனைத்தும் நம்ம ஊரில் போலவே இருந்தன. நம்ம ஊரில் காண முடியும் அதே வண்டிகள் நிறையக் காணவும் முடிந்தது வியப்பாக இருந்தது. இரு சக்கர வாகனங்கள் மிக மிகச் சொற்பம். நம்ம ஊரில் போவதை விட வேகமாகச் சென்றது வண்டி. ஆனால், வியப்படையும் படியான வேகம் ஒன்றும் இல்லை. ஒருவேளை, அதெல்லாம் அமெரிக்காவில் மட்டும் இருக்கலாம் என நினைக்கிறேன்.



சாங்கியில் இருந்து கடற்கரையோரமாகவே பயணித்து ஊருக்குள் வந்தேன். அது கடற்கரையோரம் என்பது அடுத்த பத்து நாட்கள் தினமும் பயணித்த போதுதான் புரிந்தது. வந்து இறங்கிய இடத்துக்குப் (விமான நிலையத்துக்குப்) பக்கத்தில்தான் பணியிடம். தங்குமிடம் மட்டும் தள்ளி இருந்தது. நடமாட்டம் நிறைந்த அந்தப் பகுதிகளை நெருங்கியதும், "சிங்கப்பூரில் ஆணும் பெண்ணும் அதுக இஷ்டத்துக்கு அலையுதாம்ல!" என்று பதி மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்ட ஒரு வசனத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் படி ஆணும் பெண்ணும் அந்த நடு நிசியில் அலைந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அதிலும் புலம்புவதற்கு ஒன்றுமில்லை. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்பு நிறைந்த ஊர் சிங்கப்பூர் என்று கேள்விப் பட்டபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. காந்தி சிங்கப்பூரில் பிறந்திருந்தால், நடு இரவில் அங்கே பெண்கள் தனியாக நடந்து போவதைக் கண்டு பூரித்திருப்பார். விஜயகாந்த் அங்கே பிறந்திருந்தால், அதை ஒரு வசனமாகப் பேச வாய்ப்பில்லாமல் சங்கடப் பட்டிருப்பார்.



ஊரின் முக்கியப் பகுதியான பூகிஸ் அருகில் விக்டோரியா சாலையில் ஓட்டல். ஓட்டலில் வந்து இறங்கியதும் மகிழ்ச்சி காத்திருந்தது. 'பார்த்திபன்' என்று பெயர்ப்பட்டை அணிந்து கொண்டிருந்த ஒருவர் ஆங்கிலத்தில் வரவேற்றார். பெட்டிகளைக் கொண்டு போய், அறையில் போட்டு விட்டு, கீழே வந்து பார்த்திபனிடம் தொலைபேசி வசதிகள் பற்றி விசாரித்தேன். பக்கத்திலேயே இருக்கும் ஒரு கடையில் சிம் கார்ட் கிடைக்குமென்றார். போகிற வழியில் சாலையோரத்தில் அழகாகப் போட்டிருக்கும் கல் இருக்கைகளில் அமர்ந்து நம் உறவுக்கார இளைஞர்கள் சிலர் மது அருந்திக் கொண்டும் புகை பிடித்துக் கொண்டும் தமிழில் கதைத்துக் கொண்டிருந்தார்கள். பெருமையோ பெருமை எனக்கு. இதைப் பார்க்க என் தாய்த் தமிழகத்தில் இருக்கும் ஆறு கோடிப் பேருக்கும் வாய்ப்பு வசதியில்லையே என்று! அவ்வளவு தொலைவு கடந்து வந்து ஓர் வெளியூரில் தன் ஊர் போலவே வாழ முடிகிற நம் முன்னோர்களின் சந்ததிகளை நேரில் காண முடிகிற போது வரத்தானே செய்யும் பீறிட்டுக் கொண்டு! அதுவும் வந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே!



போன இடத்தில் ஏதோ காரணத்தால் சிம் கார்ட் கிடைக்க வில்லை. அழைப்பு அட்டை என்று ஒன்று கிடைத்தது. அத்தோடு அங்கே வேலை செய்த இளைஞனும் தமிழனே என்று அடையாளம் கண்டு கொண்டு மகிழ ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அந்தத் தம்பி பேசிய ஆங்கிலமும் புரிய வில்லை. அதை வாங்கிக் கொண்டு அண்ணன் பார்த்திபனிடம் வந்தேன் மீண்டும். அவருடைய உதவி நாடினேன். ஆங்கிலத்தில் ஓரிரு சொற்கள் உரையாடி விட்டுத் தமிழுக்குத் தாவினார். "தமிழ் பேசுவிங்களா?" என்றார். 'ம்ம்ம்.. நான் பேசாம யார் பேசுவா???' என்றெண்ணிக் கொண்டு நானும் தமிழ்க் கடலில் தாவிக் குதித்தேன் என் தனயனோடு. "இந்தியாவிலிருந்து வருவோர் நிறையப் பேர் தமிழ் பேச மாட்டார்கள். அதான் கொஞ்சம் யோசித்தேன்..." என்று மிகச் சிறிதளவு (லெமன் ஜூஸில் லெமன் அளவு என்று சொல்லலாம்) வருத்தத்தோடு சொல்லி விட்டு எனக்கு வேண்டிய உதவி செய்தார். சிறிது நேரம் அவர் பேசுவதைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது (தமிழைத்தான்!). சிங்கப்பூருக்கென்று ஒரு ஆங்கிலம். சிங்கப்பூருக்கென்று ஒரு தமிழா? அதுவும் ஒருவித இனிமையாகத்தான் இருந்தது. அப்படியே பேசுங்கள். தப்பில்லை.





அறைக்குத் திரும்பி, இருந்த பவர் காலியாகும் வரை கணினியில் பணி செய்து விட்டுப் படுக்க வேண்டியதாயிற்று. நம்ம ஊர் ப்ளக்குகளை அங்கே உள்ள பிளாக் பாயிண்ட்டுகளில் பயன் படுத்த முடியவில்லை. உலகம் முழுக்க ஒரு முறை என்றால் நம்மூரில் மட்டும் ஒரு முறை. அதற்கு ஏதோ அடாப்டர் வாங்கிப் பயன் படுத்த வேண்டுமாம். அடுத்து, பேச வேண்டியவர்களிடம் பேசி விட்டு, அன்றைய தினம் அடைந்து விட்ட மாபெரும் வெற்றிக்குரிய மகிழ்ச்சியோடு தூங்கச் சென்றேன். கைக்கோடுகளையும் கட்டங்களையும் அல்லவா தோற்கடித்திருக்கிறேன்?! கடல் கடக்கும் பாக்கியம் இல்லை என்று இனிமேல் எவர் சொன்னாலும் நம்ப வேண்டியதில்லையே. நாளை கிளம்பச் சொன்னாலும் பரவாயில்லை. இன்று வந்து இறங்கி விட்டேனே. அந்தக் கோட்டை எப்படி அழிப்பீர்கள்?



காலை எழுந்து ஊர் சுற்றத் தயாரானேன். தம்பிமார் பிரபாகரும் கல்யாண் குமாரும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார்கள். வேறு எந்த ஊரிலும் இந்த அளவுக்குத் தெரிந்தவர்கள் சிக்குவார்களா தெரியவில்லை. பகலில் பார்க்க இன்னும் அழகாக இருந்தது ஊர். எம்.ஆர்.டி. இரயில் நிலையம் சென்று பாஸ் வாங்கினோம். அதே பாஸை வைத்துக் கொண்டு பஸ்ஸிலும் ஏறலாமாம். அலுவலகத்தில் தேய்ப்பது போல, ஏறும் போதும் இறங்கும் போதும் தேய்த்து விட்டால் போதும். அதுவே கணக்குப் பார்த்துக் கழித்துக் கொள்ளும். ஆகா, என்னவோர் அருமையான முறை. இந்த முறை கண்டிப்பாக நம்ம ஊரில் அறிமுகப் படுத்த வேண்டியது. இரயில் நிலையத்தில் சீட்டு வாங்க வரிசையில் நிற்க வேண்டியதில்லை. பஸ்ஸில் மண்டையாய்ப் பேசும் நடத்துனர்கள் வேண்டியதில்லை. எல்லோருக்கும் ஏகப் பட்ட நேர மிச்சம்.





அப்படியே சில பல இடங்களுக்குச் சென்றோம். அதில் முக்கியமான இடம் லிட்டில் இந்தியா. லிட்டில் தமிழ்நாடு என்று இட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். முழுக்க முழுக்கத் தமிழ் வாசம் எங்கும். கடைகள் எங்கும் தமிழ்ப் பாடல்கள். சிம் கார்ட் வாங்கப் போனோம். வாங்கிப் பார்த்தால், அட்டையில் 'சிங்டெல் தான் சிறந்த டெல்' என்கிற மாதிரி ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார் தமன்னா. அடப்பாவி, இங்கேயுமா! அடுத்து, அடாப்டர் வாங்க முஸ்தபா கடைக்குப் போனோம். பெரிய கடை. பல சரவணா ஸ்டோர்கள் போல இருந்தது. உள்ளே பெரும்பாலும் தமிழர்களே. நான்கு அலுவல் மொழிகள் கொண்ட அந்த நாட்டில், "திருடுவது குற்றம்" என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் மட்டும் எழுதிப் போட்டிருந்தார்கள். "குறைவான குற்றம் குற்றமே இல்லை என்றாகாது" ("LESS CRIME DOESN'T MEAN NO CRIME") என்று ஆங்கிலத்தில் மட்டும் எழுதிப் போட்டிருந்தார்கள் இன்னோர் இடத்தில். அதுவே அந்த ஊர் எவ்வளவு குறைவாகக் குற்றங்கள் நடக்கும் ஊர் என்பதைச் சொல்லி விட்டது.



அஞ்சப்பர், தலப்பாக்கட்டு, சரவண பவன், முருகன் இட்லிக் கடை போன்ற கேள்விப் பட்ட எல்லா உணவகப் பெயர்களையும் காண முடிந்தது. அஞ்சப்பர் சென்று கூட்டம் அதிகம் இருந்ததால் வேறொரு தமிழ்க் கடைக்குப் போனோம். அந்தக் கடையில் செக்கச் செவேரென்று ஒரு சீனப் பெண்மணியுடன் (சீனர்கள் வெள்ளையர்களை விட வெள்ளையோ என்று தோன்றுகிறது) நம்ம ஊரில் காட்டு வேலைகள் செய்கிற நம் உறவினர்கள் போன்ற தோற்றத்துடன் ஒருவர் வந்திருந்தார். அதைப் பார்த்ததும் அந்த ஊரில் மற்றவர்களுடன் நம்மவர்களின் உறவு எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமானது. விசாரித்தேன். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஒட்டிக் கொண்டு இருக்கிறார்களாம். அந்தக் காலத்தில் நிறைய கலப்புக் கல்யாணங்கள் நடந்தனவாம். இப்போது அதெல்லாம் குறைந்து விட்டதாம். லிட்டில் இந்தியாவில் வீரமாகாளி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. கொட்டெழுத்தில் தமிழில் 'வீரமாகாளி அம்மன் கோவில்' என்று எழுதிப் போட்டிருந்ததைக் கண்டு அருளே வந்து விட்டது எனக்கு.



போக்குவரத்து நெருக்கடி என்று ஒன்றை எங்குமே பார்க்க வில்லை. அந்தச் சின்ன ஊருக்குள் (சிங்கப்பூர் ஒரு தீவு என்பது அங்கு சென்ற பின்தான் தெரிய வந்தது!) இன்னும் எவ்வளவோ இடங்கள் பயன் படுத்தாமல் மிச்சம் இருக்கின்றனவாம். இன்னும் பாதிக்கும் மேலான இடங்கள் அப்படியே மிச்சம் வைத்திருக்கிறார்களாம். ஒரு வீட்டைக் கட்டுவது போல அனுபவித்து - திட்டமிட்டுக் கட்டி வருகிறார்கள் மனிதர்கள். ஆனால், சற்றும் எதிர் பாராத ஒன்று - சென்ற இடமெல்லாம் இருந்த கூட்டம். வெளிநாடு என்றாலே நமக்கு மனதில் பதிந்து விட்டது - ஆள் நடமாட்டம் இல்லாத அமைதி. அது மேற்கு நாடுகளில் மட்டுமே என்று என் நம்பிக்கையைத் திருத்திக் கொண்டேன். பேருந்துகளில் கூட்டம் அதிகம் இல்லை. போதுமான அளவு பேருந்துகள் ஓடுகின்றன என நினைக்கிறேன். இரயிலிலும் மற்ற இடங்களிலும் கடுப்படிக்கும் அளவுக்குக் கூட்டம் (கூட்டம் பிடிப்போருக்கு அது கூடுதல் பலன்!).





ஊர் முழுக்கவும் (நாடு முழுக்கவும் என்றும் சொல்லலாம்! ஊர்தானே நாடு மாநிலம் எல்லாம் அவர்களுக்கு!!) உள்ளடக்கும் விதத்தில் எட்டு எம்.ஆர்.டி. இரயில் பாதைகள் உள்ளன. சில இடங்களில் ஒன்றை ஒன்று குறுக்கு நெடுக்காக சந்திக்கும் விதத்திலும் அமைத்திருக்கிறார்கள். இதன் மூலம் ஒருவர் முழுக்க முழுக்க இரயிலேயே பயணம் செய்து சமாளிக்க முடிகிற மாதிரி உள்ளது. ஒவ்வொரு பாதிக்கும் ஒரு நிறம் ஒதுக்கப் பட்டுள்ளது. சிவப்புப் பாதை, ஊதாப் பாதை, நீலப் பாதை, பச்சைப் பாதை, மஞ்சள் பாதை, ஆரஞ்சுப் பாதை, கறுப்புப் பாதை, கடல்நீலப் பாதை என்று. இடங்களைக் கூட பச்சைப் பாதையில் இருக்கிறதே அதுவா? சிவப்புப் பாதையில் இருக்கிறதே அதுவா? என்று அடையாளம் காண்கிறார்கள். சில பாதைகள் நேர் கோடுகளாகவும் சில சதுரமாகவும் சில வட்டமாகவும் பல தினுசுகளில் ஊரை உள்ளடக்கி இருக்கிறார்கள். இதனால் இரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு மட்டும் வாடகை அதிகம்.





இரயில் சில இடங்களில் தரைக்கடியிலும் சில இடங்களில் பாலத்திலும் போகிறது. ஊர் சமதளமாக இல்லாமல் மேடும் பள்ளமுமாக இருப்பதையே அது காட்டுகிறது. இன்னோர் அழகான அம்சம் (வசதியான அம்சம் என்று சொல்ல வேண்டும்!) என்னவென்றால், இரயிலில் ஏறவோ இறங்கவோ வேண்டியதில்லை. உள்நுழைதல் அல்லது வெளியேறுதல். அவ்வளவுதான். ஏனென்றால், நடை மேடையும் இரயிலின் தளமும் ஒரே உயரத்தில் இருக்கின்றன. நடை மேடைக்கும் இரயிலுக்கும் இடையில் விழுந்து நசுங்கிச் செத்த செய்திகள் எல்லாம் அங்கே படிக்க முடியாது. ஏனென்றால், அப்படிக் கொஞ்சம் கூட இடம் இல்லை. சில இடங்களில் மட்டும் அந்த வேலைகள் முடிவடையாமல் உள்ளன. அங்கு மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. அவ்வளவுதான். நான் ஆசைப்பட்ட படி, முதல் முறையாகத் தமிழ் அறிவிப்பைக் காதால் கேட்க முடிந்தது இரயிலில்தான். சந்தேகப் படும் படி யாராவது தென்பட்டால் இறங்கும் இடத்துக்குப் பக்கத்தில் இருக்கும் பொத்தானை அழுத்தச் சொன்னார்கள்.



எல்லா அறிவிப்புகளும் நான்கு மொழிகளில் இருக்கின்றன. ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ். பெரும்பாலும் சீனர்கள் கொண்ட நாடு. ஆனால் அவர்களுமே வீட்டில் நிறைய ஆங்கிலம்தான் பேசுகிறார்களாம். இந்த அளவுக்கு சீனர்கள் ஆங்கிலம் பேசும் ஒரே நாடு அதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். தமிழர்கள் ஏதோ பெங்களூர் போலக் குவிந்து கிடப்பார்கள் என நினைத்தேன். பார்த்தால் அப்படித் தான் தெரிந்தது. ஆனால் புள்ளிவிபரப் படி தமிழர்களின் எண்ணிக்கை பத்து விழுக்காட்டுக்கும் கீழ்தானாம். பெங்களூரில் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதனாலும் நிறையப் பேர் பயந்து போய் மறைத்துக் கொள்வதாலும் அது சரியாகத் தெரிய வருவதில்லை. சிங்கப்பூரில் தனியாகத் தெரிவதாலும் கூச்சம் இல்லாமல் காட்டிக் கொள்வதாலும் குறைவாக இருந்தும் அதிகம் போல்த் தெரிகிறது. அதற்கொரு காரணம் - மொழிக்குக் கிடைத்த அங்கீகாரம்.



அவர்கள் ஏன் நம் மொழியை அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும்? கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் பயன் படுத்தி விட்டு பின்னர் கழட்டி விட்டிருக்கலாமே. அவர்கள் அப்படிக் கருதவில்லை. அந்த ஊரைக் கட்டி எழுப்பியதில் நமக்கும் பங்கு இருக்கிறது என்று நம்புகிறார்கள். அதன் விளைவாக நம்மையும் அந்த மண்ணின் மைந்தராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். சீன-இந்தியக் கலப்பின் பூரணமான எடுத்துக் காட்டு சிங்கப்பூர்தான். மலாயர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். மலாய் தமிழ் போல ஒலிக்கும் பல சொற்கள் கொண்டிருக்கிறது. அவர்களுடைய மொழி ஆங்கிலத்தில்தான் எழுதப் படுகிறது. அவர்களுக்கென்று எழுத்து இல்லை என்பது வியப்பூட்டுகிறது. மதம் என்று சொன்னால், அது மும்மதங்களின் சங்கமம். சீன பௌத்தம், மலாய இஸ்லாம் மற்றும் இந்திய இந்து மதம்.



நான் போய் இறங்கிய நேரத்தில்தான் அவர்களுடைய பொதுத் தேர்தல் முடிந்திருந்தது. வழக்கம் போல், புதிய அமைச்சரவையிலும் தமிழர்கள் நிறைய இருந்தார்கள். பதினைந்து பேர் கொண்ட அவையில் நால்வர் தமிழர். துணைப் பிரதமர்களில் ஒருவர் தமிழர். அன்றுதான் சிங்கப்பூரின் தந்தை எனப்படும் - ஏற்கனவே நீண்ட காலம் பிரதமராக இருந்த - லீ க்வான் யூ, முழு சுதந்திரத்தையும் புதிய அணிக்குக் கொடுக்க விரும்புவதாகச் சொல்லி, தனக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் அமைச்சருக்கிணையான மரியாதைப் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். யார் சொல்வார் இப்படி நம்ம ஊரில்? இதெல்லாம் சேர்ந்து சிங்கப்பூர் அரசியலிலும் ஓர் ஈடுபாட்டை ஏற்படுத்தியது எனக்கு. அடுத்தடுத்துப் பத்திரிகைகள் படித்த போது புரிந்து கொண்டது - அவர்களுடைய அரசியல் நம்முடையது போலன்றி, மிகவும் தரமானது.



துணைப் பிரதமரான தர்மன் சண்முகரத்னம் இலங்கைத் தமிழராம். சாதாரணப் பட்ட ஆள் இல்லை. பெரும் பொருளியல் மேதையாம். காலியாக உள்ள பன்னாட்டு நாணய நிதிய இயக்குனர் பதவிக்குக் கூட அவருடைய பெயர் பரிசீலிக்கப் பட்டுக் கொண்டு இருந்தது. அவ்வளவு பெரிய ஆள். அங்கு சென்றிரா விட்டால் அவர் பற்றி இவ்வளவு தெரிந்திராது. அவர் பேசுவதையும் சில நேரங்கள் கவனித்தேன். அருமையாகப் பேசுகிறார். நாகரிகமாகவும்! அவரும் அங்குள்ள நிறையப் பெரிய ஆட்கள் போல சீனப் பெண்ணை மணந்து விட்டாராம். அவருடைய பிள்ளைகளை நாம் அவரளவுக்கு முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. அவரெல்லாம் நம்ம ஊரில் தேர்தலில் நின்றால் என்ன ஆகும் என்று எண்ணிப் பார்த்தேன். கண்ணைக் கட்டுதுப்பா... கண்ணைக் கட்டுது... பெரிய ஆளாக விரும்பும் நம்மவர்களுக்கு இதில் இருந்து கிடைக்கும் பாடம் என்ன? முதலில், இடத்தைக் காலி பண்ணு!



ஓர் ஊரே நாடாக இருப்பதால் நிர்வாகம் அவர்களுக்கு எளிதாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் கேமரா வைத்திருக்கிறார்களாம். எந்தத் தவறு செய்தாலும் உடனே பிடித்து விடுவார்களாம். அதனால்தான் அங்கே பாதுகாப்பு உணர்வு அதிகமாக இருக்கிறது. குற்றங்கள் குறைவாக இருக்கிறது. சிகரெட் துண்டை சாலையில் போட்டால் கூட பெரும் அபராதங்கள் போடுவார்களாம். அதுவும் தீவாக வேறு இருப்பதால் தப்புச் செய்தோர் தப்பவே முடியாது. கடலில்தான் குதிக்க வேண்டும்.



லிட்டில் இந்தியா மட்டும் அல்ல. எல்லா இடங்களிலுமே உணவு நமக்கு ஒரு பிரச்சினை இல்லை. எல்லா உணவகங்களும் இந்திய உணவு முறைக்கு நெருங்கிய உணவுகள் கொண்டிருக்கின்றன. சிங்கப்பூரின் உணவு முறையும் கூட சீன-இந்திய உணவு முறைகளின் பூரணக் கலப்பு எனலாம். எங்கு சென்றாலும் கோழிக்கறிதான். சைவமும் கிடைக்கிறது. போதாக்குறைக்கு அஞ்சப்பர்கள், சரவண பவன்கள், தலப்பாக்கட்டுகள், முருகன் இட்லிக் கடைகள்... இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் இந்தியர்களுக்கு வாழ எளிதான வெளிநாடு எதுவென்றால் அது சிங்கப்பூர்தான் என்று சொல்ல வேண்டும்.



ஓரிரு நண்பர்களை அழைத்துப் பேசினேன்; ஆனால் சந்திக்க முடியவில்லை. சிலரைச் சந்தித்து அளவளாவவும் முடிந்தது. பெங்களூரில் நடப்பது போல, எதிரே பார்க்காத ஒரு ஆள் எதிரில் வந்த அனுபவமும் கிடைத்தது. அது போதாதா நமக்கு - சிங்கப்பூர் நம்ம ஊர் என்று நிரூபிக்க? இது போக, பழக்கப் பட்ட முகம் போலப் பல முகங்கள் கண்ணில் படுகின்றன. நண்பர்களில் நிறையப் பேர் மிக எளிதாக நிரந்தர வசிப்புரிமையும் குடியுரிமையும் பெற்றிருக்கிறார்கள். கொஞ்ச காலம் முன்பு வரை கூவிக் கூவிச் சேர்த்துக் கொண்டார்களாம். எட்டரை விழுக்காட்டு இந்தியர் இப்போது ஒன்பதரை விழுக்காடு ஆனதும் பயம் வந்து விட்டதாம் அவர்களுக்கு. இப்போது சட்டங்கள் மூலம் உள்வருகையை இறுக்கச் சொல்லி நெருக்கடி கொதிக்கிறார்களாம். இதெல்லாம் என் காலத்தில்தான் நடக்க வேண்டுமா?!



அடுத்த இரண்டு நாட்களில் அமெரிக்காவில் இருந்து ஓர் ஆள் வந்து சேர்ந்தான் உடன் பணி புரிய. அமெரிக்காவை விட சிங்கப்பூரில் விலைவாசி அதிகம் என்று சொல்லி ஓர் ஆச்சர்யத்தைக் கொடுத்தான். இருவருமாக ஒரு மாலை வேளை நடை நடையென நடந்து ஊரைச் சுற்றினோம். அழகான ஊர். அழகான கட்டடங்கள். அழகான ஆட்கள் என்று சொல்ல முடியாது. அவர்களுடைய அழகுக்கு நம் கண்கள் பழக்கப் படக் கொஞ்சம் நாளாகும் போல்த் தெரிகிறது. அங்குள்ள பெண்கள் எல்லோரும் அரைக்கால்ச் சட்டைதான் (சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், அதைக் கால்க்கால்ச் சட்டை என்றுதான் சொல்ல வேண்டும்!) அணிகிறார்கள். அலுவலகத்துக்கும் அதே உடைதான். ஆனாலும் அது அசிங்கமாகத் தெரியவில்லை. பழகி விட்டால் எல்லாம் சரிதான். ஆண்களும் பெண்களும் கூச்சமில்லாமல் பொது இடங்களில் தம் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அதை நம் தமிழ்ப் பையன்களும் பெண்களும் கூடக் காப்பி அடிக்க முயல்வது எடுபடவில்லை. அதுதான் கொஞ்சம் கண்ணை உறுத்துகிறது.



கடற்கரைக்கு மிக அருகில் போய்ப் பார்க்க வில்லை. ஆனால், தினமும் கடற்கரைச் சாலையில் பயணித்ததால் அதன் அழகைத் தினமும் அனுபவிக்க முடிந்தது. கடற்கரையோரம் மணலே இல்லை எனும் அளவுக்குப் பூங்காக்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். சிறிதுதான் மணல். கடற்கரையோரம் பூங்காக்கள் அமைப்பது சாத்தியம் என்றே எண்ணியதில்லை இதற்கு முன்பு. இவ்வளவு அழகாகக் கடற்கரையை வைத்திருக்கும் இவர்களை சுனாமி எப்படி நடத்தியது என்று தெரிந்து கொள்ள ஆசை ஏற்பட்டது. விசாரித்தேன். சுனாமி சிங்கப்பூரை ஒன்றுமே செய்ய வில்லையாம். அதன் அமைவு அப்படி இருக்கிறது. சுற்றிலும் கடல் என்றபோதும், அதனை அடுத்து சுற்றிலும் நாடுகளாலும் (மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து) சூழப்பட்டு இருப்பதால், அந்நாடுகள் சிங்கப்பூரைக் காப்பாற்றி விட்டனவாம். ஒருவேளை, இவர்களுக்கு அருகில் கடலில் பூகம்பம் வந்தால் நாடு முழுமையும் காலி ஆகிவிடும்.



எல்லாமே இவ்வளவு முறையாக நடக்கும் ஊரில் விபத்துகளே நடக்காது என்று எண்ணினேன். அதைப் பொய்ப்பிக்கும் விதமாக இரண்டு மூன்று இடங்களில் ஒரு காட்சி. இன்னின்ன நாளில் இந்த இடத்தில் ஒருவர் விபத்தில் செத்தார் என்று ஆங்காங்கே சிறிய பலகை வைத்திருக்கிறார்கள். "ஒழுங்காக ஓட்டாவிட்டால் உனக்கும் இதே கதிதான்" என்று நினைவு படுத்துவதற்காக. நல்ல சிந்தனை. இதையும் நம்ம ஊரில் அறிமுகப் படுத்தலாம். அத்தகைய பெரும் விபத்துகள் நிகழ்வது பெரும்பாலும் அதிகாலை வேளைகளிலேயே. மகிழ்ச்சிக்குரிய இன்னொன்று - எவ்வளவுதான் கையைக் காட்டினாலும், விளக்குப் போட்டு உணர்த்தினாலும், அதை மதியாமல் வம்புக்கென்றே இடிக்கிற மாதிரி வந்து நிறுத்தி, முறைக்கிற மற்றும் கெட்ட வார்த்தையில் திட்டுகிற பன்றி மூஞ்சிக் காரர்களைப் பன்னிரண்டு நாட்களாகப் பார்க்கவே முடியவில்லை.



அங்கு சென்று விட்டால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைத்து விடும் என்று எண்ணியவனுக்கு அலுவலகம் நிறையப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்தது. இந்தியாவில் கூட இப்போதெல்லாம் எந்த இடத்தில் நின்றாலும் செல்போன் சரியாக எடுக்கிறது. அங்கே அலுவலகத்துக்கு உள்ளே போய் விட்டால் பல இடங்களில் சிக்னல் கிடைப்பது குதிரைக் கொம்பு. அது ஒன்றே எனக்கு உறுதிப் படுத்தி விட்டது - இதற்கு முன்பு சென்று வந்தவர்கள் எல்லோரும் சொன்னது போல, வெளிநாடு என்பது நாம் நினைப்பதை விட சூப்பராகவும் இருக்கும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குச் சில பிரச்சினைகளும் கொண்டிருக்கும் என்று. பணியிடத்தில் இங்குள்ள ஆட்களை விடக் கேவலமாக நடந்து கொள்ளும் ஆட்களும் இருந்தார்கள் (இந்தியர்தாம்!). கூடிய சீக்கிரம் ஊர் திரும்பினால் சரி எனக் கூட நினைக்க வைத்து விட்டார்கள் ஒரு நேரத்தில். பார்க்க விரும்பியதைப் பார்த்தாயிற்று. பெரிதாக ஒன்றும் வாழ்க்கை பல்டி அடித்து விடாது என்பதும் புரிந்து விட்டது. ஊர் போய், பேசாமல் உள்ள வேலையைப் பார்த்துக் கொண்டு அங்கேயே இருப்பதாக இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கும் வந்து விட்டேன்.



சிங்கப்பூர் என்றாலே சிங்கத்தின் வாயிலிருந்து தண்ணீர் பாயும் அந்தப் படம்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஊர் திரும்பும் போது அதற்கு முன்பு நின்று ஒரு படம் எடுத்துச் செல்லாவிட்டால் சிங்கப்பூர்தான் வந்தேன் என்பதை யாரும் நம்ப மாட்டார்களே என்று கூட ஒரு பயம். ஆனால் அதற்கு வாய்ப்பே கிடைக்க வில்லை. என்ன செய்ய! 'வாய்ப்பு வாசல் தேடி வராது; நான்தான் அதை உருவாக்கியிருக்க வேண்டும்' என்கிற தத்துவமெல்லாம் என் சோம்பலுக்குப் புரியாது. அதை விடக் கொடுமை - இந்த ஓடி ஓடிப் படம் எடுக்கும் வேலைகளில் எனக்கில்லாத ஈடுபாடு. அதற்கும் காரணம் சோம்பல்தான். ஊர்ப்பக்கம் போனால், படித்து முடித்து இரண்டாவது வருடமே வெளிநாடு சென்று வந்த சின்னப் பையன்களின் வீடுகளில், பதிமூன்று வருடங்கள் கழித்தும் போக முடியாமல் இருந்தமையைச் சந்தேகித்ததை விட படங்கள் எடுக்காமல் வந்ததை அதிகம் சந்தேகிப்பார்கள். உண்மையா என்று உறுதி செய்து கொள்ளப் பாஸ்போர்ட்டைக் கூட வாங்கிப் பார்க்க விரும்புவார்கள்.





இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றெண்ணி, ஒருநாள் அமெரிக்காவில் இருந்து வந்த அன்பரோடு சேர்ந்து கையில் கேமராவோடு சேர்ந்து, மெரீனா பே சாண்ட்சில் இருநூறு அடி உயரத்தில் உள்ள ஸ்கைபார்க் போனேன். 57 மாடிகள் தாண்டிப் போய், ஊருக்காகக் கொஞ்சம் புகைப் படங்கள் எடுத்துக் கொண்டு, அங்கே உட்கார்ந்து உணவருந்தி விட்டு வீடு (ஓட்டல்தான்) திரும்பினேன். பிரம்மாண்டமாக இருந்தது. கட்டடத்துக்குள் கடற்கழி வருவது போலக் கட்டியிருப்பது அழகாக இருந்தது. அதில் படகுகள் வேறு வைத்திருக்கிறார்கள். சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் இராட்டினம் போன்ற அமைப்பில் ஏற முடியவில்லை. அங்கு செல்ல இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் பார்த்துக் கொள்ளலாம்.





சரி, சிங்கப்பூருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று இணையத்தில் தேடினேன். கண்டிப்பாக வாயிலிருந்து தண்ணீர் அடிக்கும் சிங்கத்தின் சிலையால் அது வரவில்லை என்பது உறுதியாகி விட்டது. அப்புறம் எதனால் வந்தது? அந்தப் பெயரும் சிலையும் வந்ததன் காரணம், முதன் முதலில் இந்த ஊர்ப்பக்கம் வந்த நம் மன்னன் ஒருவன் அன்றைய அத்துவானக் காட்டுக்குள் ஒரு சிங்கத்தை பார்த்தானாம். அப்போது சிங்கபுரம் என்று இட்டதுதான் சிங்கப்பூர் என்று ஆனதாம். இது தமிழர்கள் சொல்லும் வரலாறு. அவன் வடநாட்டு மன்னன் என்பதால் வடமொழியில் சிங்கப்பூர் என்றே இட்டு விட்டான் என்பது வடநாட்டு நண்பன் ஒருவன் எழுதியிருந்த கதை. மலாய் மொழியிலும் சிங்கத்தை சிங்கா என்றுதான் சொல்வார்களாம்; புரத்தைப் புரா என்றுதான் சொல்வார்களாம். அதனால் அது மலாய்ப் பெயர்தான் என்றும் மலாய் மக்கள் நம்புகிறார்கள். அவர்கள் சிங்கப்புரா என்று அழைக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இணையத்தில் வந்து இது போன்ற நிரூபிக்கும் வேலைகளில் அதிகம் ஈடுபட்ட மாதிரித் தெரியவில்லை. ஒருவேளை அவர்களுக்கு வேலை நிறைய இருக்கலாம் என்றெண்ணுகிறேன்.





பொறுங்கள். கதையின் திருப்பம் இன்னும் வரவில்லை. அது என்னவென்றால், இதெல்லாம் நடந்து முடிந்து, பெயர் வைத்து, சிலை வைத்து, தண்ணீர் பீச்சி அடித்து, அத்தனையும் ஆன பின்பு கண்டு பிடித்திருக்கிறார்கள் - அந்த மன்னன் கண்டது சிங்கமே அல்ல; அது புலி என்று. அந்தத் தீவில் சிங்கம் எந்தக் காலத்திலும் வாழ்ந்ததில்லை என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நம்ம ஊராக இருந்தால், "அதனால் என்ன? நல்லது நடக்க எதுவும் தடையில்லை - தாமதமில்லை" என்றொரு தத்துவம் சொல்லி, அதற்கொரு தனிக் குழு அமைத்து, பல கோடி ரூபாய் செலவில் விழா எடுத்து, புலியூர் என்று பெயர் மாற்றிப் புரட்சி செய்திருப்பார்கள்; சிங்கபுரத்துச் சிங்கம் என்று அழைக்கப் பட்ட தலைவனை அன்றிலிருந்து புலியூர்ப் புலி என்றே அழைக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பார்கள். வடமொழியிலும் மலாய் மொழியிலும் புலியை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. புலி என்றே சொன்னால்தான் பிரச்சினை இல்லை. இல்லையென்றால், ஒரே ஊருக்கு நான்கு வெவ்வேறு பெயர்கள் இட வேண்டியிருந்திருக்கும். ஒருவேளை அதனால்கூட மாற்றாமல் விட்டிருக்கக் கூடும். எல்லோருமே தன் மொழி என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் வாய்ப்பை ஒரு தவறான பெயர் கொடுக்க முடியும் என்றால் அது அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டிருக்கக் கூடும். நாமாக இருந்தால் அந்தக் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகவே உடனடியாகப் பெயரை மாற்றியிருப்போம்.





போய் இறங்கியதுமே சொன்னார்கள் - "முதல் வேலையாகக் குடை ஒன்று வாங்கி விடு; வெயில் அடிப்பது போல்த்தான் இருக்கும்; ஆனால், எப்போது மழை பிடிக்கும் என்று தெரியாது; பிடித்தால், உங்க வீட்டு மழை எங்க வீட்டு மழையாக இராது; பெரும் மழையாக - கொடும் மழையாக இருக்கும்!" என்று. அதையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சனிக் கிழமை, வெளியில் சென்றபோது, பிடித்தது. கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் கொட்டு கொட்டெனக் கொட்டியது. அதை விடக் கொடுமை என்னவென்றால், அரை மணி நேரத்தில் எல்லா நீரும் வழிந்து எங்கோ போய் விட்டது. வெயில் அடித்தது. எல்லாம் காய்ந்து அதற்கான அறிகுறியே இல்லாமல் போய் விட்டது. மனிதர்கள் எண்ணமாக வடிவமைத்திருக்கிறார்கள் ஊரை. வாய்ப்பே இல்லையப்பா!





வேலைகள் முடிந்து, அமெரிக்காக்காரனை வழியனுப்பி விட்டு, இன்னொரு நாள் இருந்து விட்டு, இந்தியா வருவதற்கு முந்தைய நாளான அன்றிரவு லிட்டில் இந்தியா போய், முஸ்தபா கடைக்குப் போய், ஊருக்கு வந்தால் "என்ன வாங்கி வந்தாய்?" என்று கேட்போருக்காக சாக்லேட்டுகள் வாங்கிக் கொண்டு, இதுவரை சென்னையில் பல முறை பார்த்திருந்தும் ஒரு முறை கூட உள் நுழைந்து சாப்பிட்டிராத தலப்பாக்கட்டு கடைக்குப் போய் பிரியாணி சாப்பிட்டு விட்டு, அறைக்கு வந்து, பெட்டியைக் கட்டி விட்டு, நிம்மதியில்லாமல் தூங்கினேன். காலை எழுந்து, பூகிஸ் பக்கம் போய், நான்கைந்து கடிகாரங்கள் வாங்கிக் கொண்டு வந்தேன் (சிங்கப்பூரில் அவை விலை மலிவு என்று கேள்வி). விமான நிலையம் கிளம்பி வந்து, மதியம் போல், மீண்டும் பெங்களூர் நோக்கி வண்டியேறினேன். டாட்டா சிங்கபூர்! கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம். அடுத்த முறை வரும்போது இவ்வளவு சீக்கிரம் திரும்பிக் கிளம்ப மாட்டேன்.

Meetchi..

 


சுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள்

Friday, October 15th, 2010 10:52 am Sai Ram 12 Comments
சிலி சுரங்க மீட்புலகத்தில் எந்த ஒரு சினிமாவிற்கும் இவ்வளவு கண்ணீர் மழை கிடைத்திருக்காது. ஆனால் அது சினிமா அல்ல. கண் எதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவம். உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் அந்த நம்ப முடியாத நிகழ்வை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தார்கள் நூறு கோடி மக்கள்.
கடவுள் மீண்டும் ஒரு முறை அதிசயத்தை நிகழ்த்தி காட்டி விட்டார்,” என்றார் ஒரு கிருஸ்துவ போதகர்.
“ஒரு சைக்கிள் சக்கரத்தின் வட்டம் போல தான் இருக்கிறது,” என்றார் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர். அவர் சொன்னது அங்கு நிலத்தில் இருந்த சிறு குழியை தான். அது குழி அல்ல. நிலத்திற்கு அடியில் செங்குத்தாய் பாதாளத்தை நோக்கி நீண்டிருக்கும் உதவித்தடம் அது. அந்த பாதாள குழியில் இருந்து ஒரு சிறு ராக்கெட் போன்ற கூண்டு ஒன்று கொஞ்சம் கொஞ்சமாய் நிலத்திலிருந்து மேல் எழுகிறது. காத்திருக்கும் மக்களிடம் இருந்து கைத்தட்டல் சத்தம்.
“சிலி, சிலி,” என அவர்கள் பாடுகிறார்கள். லிப்ட் போல தோற்றமளிக்கும் அந்த கூண்டில் இருந்து ஒரு மனிதன் வெளிபடுகிறான். இது வரை வாயடைத்து போய் அங்கு நிகழ்பவற்றை பார்த்து கொண்டிருந்த ஓர் ஏழு வயது சிறுவன் ஓடி போய் அந்த மனிதனை, தனது தந்தையை அணைத்து கொள்கிறான்.
அவர்களை காப்பாற்றி விட்டோம்,” என முழங்குகிறார்கள் குழுமியிருந்த தொழிலாளர்கள். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கேமராக்கள் எல்லாவற்றையும் படம் பிடித்து கொண்டிருக்கின்றன.
சிலி நாடு
சிலி நாடு
இடம்
தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் நீண்ட கடற்கரையை கொண்ட நாடு தான் சிலி. 1990-ம் ஆண்டு முடிவுற்ற ராணுவ சர்வதிகார ஆட்சிக்கு பிறகு இன்று பொருளாதாரத்திலும் அரசியலிலும் நிலையான நிலைக்கு உயர்ந்திருக்கிறது இந்நாடு. உலக சந்தைக்கு கதவை திறந்து விட்டதும் அரசாங்க நிறுவனங்களை படிப்படியாக தனியார்மயமாக்குதலும் தான் நாட்டின் வளர்ச்சிக்கு காரணம் என்கிறார்கள் வலதுசாரிகள். ஆனால் இடதுசாரிகளோ உலகமயமாக்கலின் தாக்கத்தால் சிலியில் வறுமை அதிகரித்து விட்டது, அதை அரசாங்கம் மறைத்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
சிலியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது அங்கு இருக்கும் சுரங்கங்கள். செம்பும் தங்கமும் நாட்டை செழிப்புற வைத்து கொண்டிருக்கின்றன. நாடெங்கும் 500, 700 மீட்டர்களுக்கு கூட ஆழமாய் சுரங்கங்கள் உருவாகி இருக்கின்றன.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிலியை தாக்கியது ஒரு உக்கிரமான நிலநடுக்கம். ஐநூறு பேர் இறந்து போனார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தார்கள். மோசமானதை பார்த்து விட்டோம் என சமாதானமான சிலி நாட்டு மக்களை ஏழு மாதங்களில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம் பரபரப்படைய வைத்தது. அது அட்டகாமா பாலைவனத்தில் இருந்த சான் ஜோஸ் சுரங்கத்தில் நடந்த விபத்து. விபத்து நடந்த போது முப்பத்தி மூன்று சுரங்க தொழிலாளர்கள் உள்ளே இருந்தார்கள்.
செம்பு மற்றும் தங்கத்திற்கான சான் ஜோஸ் சுரங்கம் நிலத்தில் இருந்து 720 மீட்டர் ஆழமானது. அதன் அடிமட்டத்திற்கு செல்ல ஒன்பது கிலோமீட்டர் வட்ட சறுக்கு பாதை அமைக்கபட்டிருந்தது.
சிலி சுரங்கத்தின் உட்புறம்
சிலி சுரங்கத்தின் உட்புறம்
நாள் – ஒன்று – ஆகஸ்ட் ஐந்தாம் தேதி
மதியம் இரண்டு மணிக்கு சுரங்கத்தினுள் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. விபத்தின் போது தூசி படலம் எங்கும் படர்ந்தது. தொழிலாளர்களில் பலர் கண் எரிச்சலில் அவதிபட்டார்கள். அவர்களால் ஆறு மணி நேரத்திற்கு எதையுமே பார்க்க முடியவில்லை.
நிலச்சரிவு நடந்த போது சுரங்கத்தினுள் இரண்டு பிரிவாக தொழிலாளர்கள் இருந்தார்கள். முதல் பிரிவினர் சுரங்கத்தின் வாயிலில் அதாவது நிலத்தின் மேற்புறத்திலே இருந்த காரணத்தினால் அவர்கள் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தப்பிக்க முடிந்தது. ஆனால் சுரங்கத்தின் கீழ் மட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் வெளிவர முடியாமல் மாட்டி கொண்டார்கள்.
சான் ஜோஸ் சுரங்கத்தின் உரிமையாளர்களான எம்பரசா மின்னரா நிறுவனம் அரசாங்கத்தின் உதவியை நாடியது. சுரங்கத்தினுள் இருந்த முப்பத்து மூன்று பேரும் என்ன ஆனார்கள் என யாருக்கும் தெரியவில்லை. அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் கூட மறைமுகமாக தொடங்கி விட்டன.
சிலி சுரங்க விபத்து
சிலி சுரங்க விபத்து
தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்?
விபத்து நடந்த அடுத்த நாள், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியது.
சிலி நாட்டில் சுரங்கம் என்பது நூற்றாண்டு தாண்டிய ஒரு தொழிலாகும். உலகிலே அதிகமாய் செம்பு தயாரிப்பது சிலி நாடு தான். தென் அமெரிக்காவிலே சுரங்க தொழிலாளர்களுக்கு அதிக கூலி கிடைப்பது சிலி நாட்டில் தான். இருந்தாலும் சுரங்கங்களில் நடக்கும் விபத்து என்பது அங்கு அடிக்கடி நிகழும் சம்பவங்களாகி விட்டன. 2000-ம் ஆண்டில் இருந்து வருடத்திற்கு சராசரியாக 34 பேர் சுரங்கங்களில் விபத்திற்கு உள்ளாகி இறக்கிறார்கள் என சொல்கிறது அரசுதரப்பு புள்ளி விவரம்.
விபத்து நடந்த சான் ஜோஸ் சுரங்கத்திலே ஏற்கெனவே விபத்துகள் நடந்திருக்கின்றன. 2004-ம் ஆண்டில் இருந்து 2010 வரை 42 முறை இந்த சுரங்கத்தின் மீது பாதுகாப்பு குறைபாடுகள் காரணம் காட்டி அபராதம் வசூலிக்கபட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டு நடந்த ஒரு விபத்திற்கு பிறகு இந்த சுரங்கம் மூடப்பட்டது. எனினும் 2008-ம் ஆண்டு மீண்டும் சுரங்கம் திறக்கபட்டது. பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்ற சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களை விட 20 சதவீதம் அதிக ஊதியம் வாங்கி கொண்டிருந்தார்கள்.
சுரங்கத்தினுள் மாட்டி கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணி மிக கடினமானதாக இருந்தது. மீட்பு குழுவினர் சுரங்கத்தில் உள்ள அத்தனை பாதைகளும் மூடப்பட்டதை கண்டுபிடித்தனர். அதோடு உள்ளே கற்கள் ஆபத்தான வகையில் இன்னும் நகர்ந்து கொண்டிருந்தன. விபத்து நடந்து இரண்டாம் நாள், ஆகஸ்ட் ஏழாம் தேதியன்று மீட்பு குழுவினர் அதிக சக்தி வாய்ந்த இயந்திரங்களை பயன்படுத்த தொடங்கினர். ஆனால் இதன் காரணமாக மீண்டும் சுரங்கத்தினுள் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு பணிகள் நிறுத்தபட்டன. சுரங்கத்தினுள் உள்ள பாதைகள், ஏற்கெனவே உருவாக்கபட்ட தடங்கள் எதையும் பயன்படுத்தாமல் முற்றிலும் புதிய மார்க்கத்தில் தான் மீட்பு பணி இனி நடந்தாக வேண்டும்.
பதினைந்து சென்டிமீட்டர் அகலமான துளைகள் நிலத்தில் ஏற்படுத்தபட்டு சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் எங்கு சிக்கி இருக்கிறார்கள் என அறியும் பணி தொடங்கியது. முதல் சிக்கல் அந்த சுரங்கம் தொடர்பான அனைத்து வலைப்படங்களும் தவறானவையாக அல்லது பழையவையாக இருந்தன. இரண்டாவது சிக்கல் நிலத்திற்கு கீழே இருந்த பாறைகள் வலுவானவையாக இருந்தன. இதன் காரணமாக துளைகள் போடும் பணி சரியான வகையில் அமையாமல் போனது.
ஊடங்கள் அனைத்தும் சுரங்கத்தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்பதை பற்றி முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட தொடங்கி விட்டன. தொழிலாளர்களின் குடும்பங்களின் நெஞ்சை உருக்கும் சோகம் சிலி நாடு முழுவதும் பரிதாபத்தை உருவாக்கியது.
ஏற்கெனவே நிலநடுக்கமும் சுனாமியும் நிகழ்ந்து அதன்பிறகான மீட்பு பணிகளும் சரியான முறையில் செயல்படுத்தபடவில்லை என்கிற குற்றச்சாட்டு சிலி நாட்டு அதிபர் பினேரா குறித்து சொல்லபட்ட வந்தது. இச்சுழலில் கொலம்பியா நாட்டில் இருந்த அதிபர் பினேரா உடனே நாடு திரும்பினார். தலையில் ஹலிமெட்டும் சுரங்க தொழிலாளர்களுக்கான ஜாக்கெட்டும் அணிந்து அவரே முன் நின்று மீட்பு பணியை கவனிக்க தொடங்கினார்.
விபத்து நடந்து பதினான்கு நாட்கள் கழித்து 19 ஆகஸ்ட் அன்று சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் இருப்பதாக நம்பப்பட்ட இடம் வரை துளைகள் அமைக்கபட்டு விட்டன. ஆனால் அங்கு யாரும் உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மீட்பு பணியை சிலி நாடே உற்று கவனித்து கொண்டிருந்த சூழலில் எங்கும் இறுக்கமான அமைதி நிலவியது.
மூன்று நாட்கள் கழித்து 21 ஆகஸ்ட் அன்று நிலத்தில் இருந்து 688 மீட்டர் கீழே சென்று வந்த ஒரு போர் பம்ப் மீது ஒரு துண்டு காகிதம் ஒட்டபட்டிருப்பதை மீட்பு குழுவினர் கண்டெடுத்தனர்.
மதியம் 3:17-க்கு அதிபர் பினாரா ஊடகங்களுக்கு முன்பு தோன்றினார். மகிழ்ச்சியில் பூரித்திருந்த முகத்தோடு அவர் ஒரு துண்டு காகிதத்தினை உலகத்திற்கு காட்டினார். அது ஒரு சிறு காகித துண்டு.
பாதுகாப்பு அறையில் நாங்கள் 33 பேரும் பாதுகாப்பாக இருக்கிறோம்,” என்று சிறிய தகவல் அதில் எழுதபட்டிருந்தது. பதினேழு நாட்கள் சுரங்கத்தினுள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் வெளியுலக உதவியின்றி அதிசயமாக உயிர் தப்பி விட்டார்கள்.
கண்டெடுக்கபட்ட காகிதம்
கண்டெடுக்கபட்ட காகிதம்
பாதாளத்தில் நரக நாட்கள்
விபத்து நடந்தால் ஓடி பதுங்கி கொள்ள பாதுகாப்பு அறை ஒன்று சுரங்கத்தின் கீழே உருவாக்கபட்டிருந்தது. அங்கு தான் 33 பேரும் தஞ்சமடைந்து இருந்தார்கள்.
ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று விபத்து நடந்தவுடன் சுரங்கத்தின் கீழ்மட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் ஏணிகள் மூலமாக வேறு பாதையில் தப்பிக்க முயன்றார்கள். ஆனால் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக ஏணிகள் அங்கு காணோம். அதோடு தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக விரைவிலே அந்த பாதையும் மூடப்பட்டு விட்டது.
லூயிஸ் உர்சூவா என்பவர் தான் விபத்து நடந்த போது கீழ்மட்டத்தில் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து கொண்டிருந்தார். விபத்து நடந்தவுடன் நிலைமையின் தீவிரத்தினை முதன்முதலில் உணர்ந்தவர் அவர் தான். சுரங்கத்தின் பாதுகாப்பு அறையில் தங்கியிருந்த 33 பேரில் அனுபவமுள்ள சில தொழிலாளர்கள் மட்டும் சுரங்கத்தின் ஏதேனும் ஒரு பாதை திறந்து இருக்காதா, பாதாளத்தில் இருந்து நாம் தப்பி விட மாட்டோமா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் வெளியுலகத்திலிருந்து எல்லா தொடர்பும் பாதைகளும் மூடப்பட்டு விட்டன.
சுரங்கத்திற்கு உள்ளே வெப்பமும் வெக்கையும் மிக அதிகமாக இருந்தது. தொழிலாளர்கள் தங்கியிருந்த பாதுகாப்பு அறை ஐம்பது சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதோடு சுரங்கத்தின் துண்டிக்கபட்ட இரண்டு கிலோமீட்டர் சுரங்கப்பாதை அவர்கள் வசமிருந்தது. அங்கே சிறு சிறு குழிகள் தோண்டி நீர் எடுத்தார்கள். அதோடு சுரங்கத்தினுள் இருந்த வாகனங்களின் ரேடியேட்டர்களில் இருந்தும் தண்ணீர் கிடைத்தது. வாகனங்களில் இருந்த பாட்டரிகள் மூலம் தங்களது ஹலிமெட்டுகளின் விளக்குகளுக்கு சார்ஜ் செய்து கொண்டார்கள். பாதுகாப்பு அறையில் உணவு மிக குறைவாக தான் இருந்தது. சாதாரண பயன்பாட்டில் மூன்று நாட்களுக்கு மேல் காலியாகி இருக்க கூடிய உணவினை தொழிலாளர்கள் மிக சிக்கனமாக பயன்படுத்தி கொண்டிருந்தனர். இதன் காரணமாக சில நாட்களிலே ஒவ்வொருவரும் பத்து கிலோ எடை குறைந்து போய் விட்டார்கள்.
மீட்பு குழுவினர் துளைகளை ஏற்படுத்தி போர் பம்புகளை நிலத்திற்கு கீழே அனுப்பி கொண்டிருந்த போது அந்த சத்தத்தினை சுரங்கத்தினுள் சிக்கி கொண்ட தொழிலாளர்களும் கேட்டார்கள். ஆனால் அந்த சத்தம் அவர்கள் இருக்கும் பக்கம் நெருங்கி வர நாட்கள் ஆயின. தங்கள் பகுதிக்குள் அந்த பம்புகள் நுழைந்தவுடன் அதில் காகிதத்தினை ஒட்டுவதற்கு ஆயுத்தமாக இருந்தனர். அது நிலத்தின் மேற்பரப்பு செல்லும் வரை கிழியாமல் இருக்க அதன் மேல் ஒட்டுவதற்கு டேப்புகளையும் கைவசம் தயார் செய்து வைத்திருந்தனர்.

உலகம் பார்த்த முதல் காட்சி இது தான்
முதல் குரல்
காகிதம் கண்டெடுக்கபட்ட சில மணி நேரங்களில் அதே துளை வழியாக ஒரு கேமரா அனுப்பபட்டது. சுரங்கத்தில் இருந்த 33 பேரும் உயிரோடு இருப்பதை வெளியுலகம் அறிந்து கொண்டது இப்படி தான்.
அடுத்த நாள் தொலைபேசி இணைப்பு கீழ்பகுதியோடு ஏற்படுத்தபட்டது. தொழிலாளர்களின் குடும்பங்கள் அவர்களோடு உரையாட முடிந்தது.
மீட்பு பணிகளில் ஒரு சிக்கலும் நேர்ந்து விடக்கூடாது என்பதால் மிக கவனமாக அடுத்தடுத்த நகர்வுகள் திட்டமிடபட்டன. ஆனால் மீட்பு பணி முழுமையடைய பல மாதங்கள் ஆகலாம் என சொல்லபட்டது. டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் வரை ஆகலாம் என்கிற தகவல் உறுதி செய்யபட்டது.
சூரிய வெளிச்சம் இல்லாத வாழ்க்கை
மனித வரலாற்றில் நிலத்தின் இவ்வளவு ஆழத்தில் தனியே சிக்கி கொண்ட மனிதர்கள் இவ்வளவு நீண்ட காலம் உயிரோடு வாழ்தல் என்பது இது முதல் முறை.
தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் உலகம் முழுவதும் இருந்து கொட்ட துவங்கின. அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து தனி குழு ஒன்று மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்டது. விண்வெளியில் உள்ள விண்கலனில் மாதக்கணக்கில் தனியே தங்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை போல நிலத்திற்கு கீழே சிக்கியுள்ள தொழிலாளர்களும் சிக்கனமாக லாவகமாக தங்களுக்கான வசதிகளை உருவாக்கி கொள்ள திட்டங்கள் வகுக்கபட்டன.
உளவியல் மருத்துவர்கள் தொழிலாளர்களுக்கு இடையே மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு குறித்து அச்சம் தெரிவித்தனர். இதனையடுத்து 33 பேர்களும் மூன்று பிரிவுகளாக பிரிக்கபட்டனர். ஒரு பிரிவு மீட்பு பணிகளுக்கு உதவும். மற்றொன்று பாறைகள் மீண்டும் நகரும் ஆபத்தினை கண்காணித்து பாதுகாப்பினை உறுதி செய்யும். மூன்றாவது பிரிவு 33 பேரின் உடல்நலத்தினை மேற்பார்வையிடும். இவர்கள் எல்லாருக்கும் கண்காணிப்பாளர் லூயிஸ் உர்சூவா தலைமை தாங்குவார். இருப்பதிலே வயது முதிர்ந்தவரான மரியோ கோமஸ் ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்தி தொழிலாளர்களுக்கு மன உறுதி ஏற்படுத்துவார் என முடிவெடுக்கபட்டது. வெளியுலகில் இரவு பகல் என ஏற்படும் மாற்றத்தை போலவே சுரங்கத்திற்குள்ளும் வெளிச்சத்தை கூட்டியும் குறைத்தும் காட்டும் விளக்குகள் அமைக்கபட்டன.
33 பேரில் பலருக்கு கடுமையான தோல் வியாதிகள் உண்டாயின. அவர்களுக்கு தேவையான மருந்துகளும் தடுப்பு ஊசிகளும் அனுப்பப்பட்டன. மருத்துவர்கள் வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொழிலாளர்களோடு உரையாடினார்கள். உறவினர்கள் தொழிலாளர்களுக்கு கடிதங்கள் அனுப்ப அனுமதிக்கபட்டனர். ஆனால் கடிதங்கள் பாஸிட்டிவ்வாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தபட்டது.
சுரங்கத்திலிருந்து வீடியோ கான்பிரன்சிங்
சுரங்கத்திலிருந்து வீடியோ கான்பிரன்சிங்
மீட்பது எப்படி?
உலக ஊடங்களின் பார்வை சான் ஜோஸ் சுரங்கத்தின் மீது படிந்து விட்ட நிலையில், மீட்பு பணிகள் மிக துரிதமாக நடக்க துவங்கின.
1955-ம் ஆண்டு ஜெர்மனியில் சுரங்கத்தினுள் சிக்கி கொண்ட தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தபட்ட டாக்ல்பஸ்ச் பாம் என்கிற லிப்ட் போன்ற கூண்டினை அடிப்படையாக கொண்டு ஒரு கூண்டு தயாரிக்கபட்டது. அந்த கூண்டிற்கு பீனிக்ஸ் என்று பெயரிடப்பட்டது. பீனிக்ஸ் என்கிற பறவை தான் இறந்த பிறகும் தன் சாம்பலில் இருந்து உயிர்த்து எழும் என்பது மேற்கத்திய பழங்கால நம்பிக்கை.
லிப்ட் போன்று பீனிக்ஸ் சுரங்கத்திற்குள் போய் வர 66 சென்டிமீட்டர் அகலமுள்ள துளை உருவாக்கபட்டது. முதலில் முழு நீளத்திற்கும் சிறிய அளவிலான துளை உருவாக்கபட்டது. பிறகு துளையின் அகலம் விரிவாக்கும் பணி நடந்தது. துளையிடும் பணி நடக்கும் போது மிக பெரிய அளவு தூசியும் கற்துண்டுகளும் சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் இருக்கும் பகுதியில் நிரம்பின. ஒவ்வொரு நாளும் இருபத்தி நான்கு மணி நேரமும் ஷிப்ட் போட்டு சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்கள் அந்த குப்பைகளை அகற்றியபடி இருந்தார்கள். மூன்று இடங்களில் மூன்று துளைகள் இப்படி போடப்பட்டன.
பீனிக்ஸ் இயந்திரத்தில் பயணிப்பவர் வயிற்றுபகுதி 35 சென்டிமீட்டருக்கு மேல் இருக்க கூடாது. இதனால் துளையிடும் பணி நடந்து கொண்டிருந்த நேரத்தில் கீழே தொழிலாளர்கள் அனைவருக்கும் கட்டாய உடற்பயிற்சிகளும் சொல்லி கொடுக்கபட்டன.
சிலி நாட்டில் கால்பந்து போட்டி மீது மக்களுக்கு மிக பெரிய காதலுண்டு. முக்கிய கால்பந்து போட்டிகள் நடந்த சமயம் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் தங்களுக்காக அனுப்பப்பட்ட தொலைக்காட்சி பெட்டியில் அதனை ரசித்து பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்கள் போட்டியினை பார்த்து கொண்டிருக்கும் புகைப்படம் அடுத்த நாள் செய்தித்தாள்களில் முதற்பக்கத்தில் இடம் பெற்றன.
33 தொழிலாளர் குடும்பங்களின் சோகம் உலக அளவில் பேசு பொருளானது. ஒரு தொழிலாளரின் மனைவிக்கு இச்சமயத்தில் குழந்தை பிறந்தது. மற்றொரு தொழிலாளரின் மனைவி தன் கர்ப்பமாக இருப்பதாக செய்தி அனுப்பினார். தொழிலாளர்கள் எழுதிய கடிதங்கள் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தன.
மீட்பு பணிகள் துரித வேகத்தில் நடந்தாலும் தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கி 68 நாட்கள் கடந்து போயின. மூன்று இடங்களில் துளையிடும் பணியில் ஓரிடத்தில் மட்டும் வேலை முழுமையாக முடிவடைந்தது. அந்த துளையினுள் பீனிக்ஸ் கூண்டினை இறக்கி தொழிலாளர்களை உடனே மீட்பது என முடிவெடுக்கபட்டது.
மீட்கும் திட்டம்
மீட்கபட்டது எப்படி?
அக்டோபர் 12-ம் தேதி, அறுபத்தி எட்டாவது நாள் சுரங்கத்தில் உள்ள அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பீனிக்ஸ் இயந்திரத்தில் நிலத்திற்கு மேலே கொண்டு வரபடுவார்கள் என அறிவிக்கபட்டது. பல நாடுகளில் இருந்து தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த மீட்பு நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப துவங்கின.
33 பேரில் யார் முதலில் செல்வது என போட்டி ஏற்படவில்லை. ஆனால் அதற்கு பதில் யார் இறுதியில் செல்வது என்று தான் போட்டி ஏற்பட்டது. 33 பேருக்கும் தலைமை தாங்கிய லூயிஸ் உர்சூவா கடைசி நபராக வெளியேறுவார் என முடிவெடுக்கபட்டது. சுரங்கத்தில் இருந்து வெளியேறும் முதல் நான்கு மனிதர்கள் இருப்பவர்களிலே நல்ல ஆரோக்கியத்தில் இருப்பவர்களாக தேர்ந்தெடுக்கபட்டார்கள். ஐந்தாம் நபர் தொடங்கி இருப்பதிலே மோசமான உடல்நிலையில் இருப்பவர்கள் முதலில் அனுப்பப்படுவார்கள் என்றும் முடிவானது.
இரவு ஏழு மணிக்கு மீட்பு குழுவை சேர்ந்த மேனுவல் என்பவர் பீனிக்ஸில் ஏறி கீழ் நோக்கி பயணித்தார். சிலி நாட்டின் அதிபர் பினேரா அவரை வழியனுப்பி வைத்து விட்டு அங்கேயே காத்திருந்தார். சிலி நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்களில் பலரும் நடந்து கொண்டிருப்பவற்றை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தார்கள். சிலி நாட்டில் பள்ளிக்கூடங்கள் அன்றைய தினம் விடுமுறை விடபட்டன.
திட்டமிட்டதை விட மிக தாமதமாக பீனிக்ஸ் இரவு பதினொரு மணி முப்பத்தி ஆறு நிமிடத்திற்கு தொழிலாளர்கள் இருக்குமிடத்திற்கு வந்தடைந்தது. 68 நாட்கள் கழித்து 33 பேரும் புதிய மனிதரை சந்தித்தார்கள். அவர்கள் அனைவரும் மேனுவலை கட்டி அணைப்பதும் உணர்ச்சிவசப்படுவதும் சுரங்கத்தினுள் நடப்பது அனைத்தும் அங்கிருந்த கேமரா மூலம் வெளியுலகிற்கு நேரடியாக ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. பீனிக்ஸ் இயந்திரத்தின் மேற்கூரையில் இருந்த கேமராவும் மீட்பு பணியை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது.
மேனுவல் கீழே சென்று சேர்ந்தவுடன் பீனிக்ஸ் காலியாக மேலே வரும் அதற்கடுத்து மற்றொரு மீட்பு பணியாளர் கீழே போவார். அதற்கு பிறகே தொழிலாளர்களை மேலே அனுப்புவது என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த திட்டம் மேனுவல் சுரங்கத்திற்கு சென்று சேர்ந்தவுடனே கைவிடப்பட்டது. உடனே 33 தொழிலாளர்களில் ஒருவரான பிளாரன்சியோ அவலோஸ் பீனிக்ஸில் ஏறி மேல் நோக்கி பயணிக்க தொடங்கினார். ஏறத்தாழ பதினேழு நிமிடங்கள் பாதாளத்தில் பயமுறுத்தும் பயணத்திற்கு பிறகு பிளாரன்சியோ நில மேற்பரப்பை வந்தடைந்தார். அவருக்காக அங்கே அவரது மனைவி மோனிகாவும் ஏழு வயது மகனும் காத்திருந்தார்கள். கூடவே சிலி நாட்டு அதிபரும் மீட்பு குழுவினரும் மருத்துவர்களும் இருந்தார்கள். பிளாரன்சியோ தனது மகனை தழுவிய போது அங்கிருந்தவர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் இதனை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த நூறு கோடி மக்களில் பலரும் ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்.
68 நாட்கள் கழித்து குடும்பத்தாருடன்
68 நாட்கள் கழித்து குடும்பத்தாருடன்
இப்படியாக மீட்பு படலம் தொடங்கியது. ஒவ்வொரு தொழிலாளியும் வெளியே வருவதும் அவரது குடும்பம் கண்ணீரோடு அவரை அணைத்து கொள்வதும் அதனை நாட்டு அதிபர் அருகில் இருந்து பார்ப்பதுமாக உணர்ச்சிபூர்வமான சந்திப்பு காட்சிகள் அரங்கேறின.
33 பேரில் ஒருவர் மட்டும் அருகில் இருக்கும் பொலிவியா நாட்டினை சேர்ந்தவர். அவரை அழைத்து செல்ல பொலிவியா நாட்டு அதிபரே சான் ஜோஸ் சுரங்கத்திற்கு வருகை தந்திருந்தார்.
மீட்பும் கண்ணீரும்
மீட்பும் கண்ணீரும்
பீனிக்ஸ் முதல் ஆறு கீழ் நோக்கிய பயணத்தில் ஆறு மீட்பு குழு உறுப்பினர்கள் சுரங்கத்தின் கீழ்பகுதிக்கு பயணித்தனர். 33 தொழிலாளர்களும் மீட்கபட்ட பிறகு ஆறு பேரும் ஒருவர் பின் ஒருவராக பீனிக்ஸ் மூலம் மேலே வந்தனர். முதலில் பயணித்த மேனுவல் கடைசி நபராக வெளியே வந்தார். எல்லாரும் நிலத்தின் மேற்புறத்திற்கு சென்று விட்ட பிறகு தனி நபராய் அந்த பாதாள அறையில் தான் இருந்ததை மேனுவல் பிறகு பத்திரிக்கைகளுக்கு பேட்டியாக கொடுக்க கூடும். மேனுவல் மேலே நிலபரப்பிற்கு திரும்பிய பிறகு அதிபர் பினேரா இரும்பு மூடி கொண்டு அந்த பாதாளத்தடத்தினை அடைத்தார். இனி இந்த சுரங்கம் சிலி நாட்டு மக்களின் ஒற்றுமையையும் மன உறுதியையும் குறிக்கும் வகையில் நினைவு இடமாக பாதுகாக்கப்படும் எனவும் அதிபர் அறிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக சுரங்கத்தினுள்ளே இருந்து விட்ட காரணத்தினால் மீட்கபடும் தொழிலாளர்கள் அனைவரும் கருப்பு கண்ணாடி அணிந்தே இருக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டு இருந்தது. ஏனெனில் திடீர் வெளிச்சம் அவர்களது கண்களை பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் கருதினார்கள்.
திட்டமிட்டதை விட மீட்பு பணிகள் விரைந்து முடிந்தன. ஒவ்வொரு ஆளாக மேலே வருவதும் தனது குடும்பத்தை கட்டி அணைப்பதும் தொலைக்காட்சிகளுக்கு நல்ல தீனியாக இருந்தது. நாள் முழுக்க கூடவே இருந்த அதிபர் பினேராவிற்கு பல நாட்டு அதிபர்களிடம் இருந்து பாராட்டு போன்கால்கள் வந்தவண்ணமிருந்தன. அவருக்கு சிலியில் மக்களிடையேயான செல்வாக்கு வெகுவாக உயர்ந்து விட்டதாக உள்ளூர் பத்திரிக்கைகள் சொல்கின்றன. போப் ஆண்டவர் மீட்பு பணி நடக்கும் போது அது வெற்றி பெறுவதற்காக பிராத்தனை செய்யும் வீடியோவும் ஒளிபரப்பானது.
கிடைக்கும் பணம் பகிர்ந்து கொள்ளபடும்
சுரங்கத்தில் இருந்து மீட்கபடுவதற்கு முன்னரே உள்ளே இருந்த தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்க போகும் மிக பெரிய புகழ் வெளிச்சத்தை அறிந்தே இருந்தனர். தொலைக்காட்சிகளில் பங்கேற்பதற்கு கொடுக்கபடும் பணம், புத்தகம் எழுத கொடுக்கபடும் பணம், பத்திரிக்கை பேட்டிகளின் மூலம் கிடைக்கும் வருமானம் இவற்றை யார் சம்பாதித்தாலும் அது 33 பேருக்கும் சரி சமமாக பங்கிட்டு கொள்ளபட வேண்டுமென அனைவரும் ஒருமனதாக தீர்மானித்து இருக்கிறார்கள்.
சுரங்கங்களுக்கு பேர் போன சிலி நாட்டில் இனி விபத்து நடக்காமல் தவிர்க்க எல்லாவித பாதுகாப்பு விதிமுறைகளும் உறுதி செய்யபடும் என அதிபர் அறிவித்து இருக்கிறார். 33 தொழிலாளர்களும் அதிபரோடு கால்பந்து விளையாடுவதற்காக அழைக்கபட்டு இருக்கிறார்கள்.
பார்த்தவர்கள் அனைவரையும் உணர்ச்சிவசப்பட செய்த இரண்டு மாத கால மீட்பு சம்பவம் ஒரு வழியாக சுபமாக முடிந்தது. மனித வரலாற்றில் மறக்க முடியாத கணங்களில் ஒன்றாக இதுவும் இருக்க போகிறது.

திங்கள், 20 ஜூன், 2011

CHITTHIRAM pesuthadi...

காலம் என்பது கழங்கு போற் சுழன்று - தீராக்காதலி கிறுக்கியது கொழந்த On 15 - May - 2011 26 பின்னூட்டம்




காலம் என்பது கழங்கு போற் சுழன்று

மேலது கீழாய் கீழது மேலாய் மாறிடும் தோற்றம்







1940களில் ஒரு நாள்:

My Photo

ஈரோடு ரயில் நிலையம்.அன்று காலை ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருக்கும் அனைத்து ரயில்களும் உள்ளே நுழைய முடியாமல் அரை பர்லாங் தள்ளியே நிறுத்தப்படுகின்றன.பெரும் கூச்சல்,குழப்பம்.ஏன்..சுமார் பத்தாயிரம் பேர் தண்டவாளத்தில் அமர்திருக்கின்றனர், மூன்று மணி நேரமாக.ஏதேனும் மறியலா? இல்லை, சுதந்திர போராட்ட ஊர்வலமா?. ம்ஹும்....கொச்சி எக்ஸ்ப்ரசில் சென்னைக்கு ஈரோடு வழியாகப் போகும் தியாகராஜ பாகவதரைக் காணத் தான் அத்தனை கூட்டம். அவர் வர மேலும் இரண்டு மணி நேரம் தாமதமாகும் என்றாலும் அதே பொறுமையுடன் உட்காந்திருகின்றனர். அவர் வந்தே பிறகே கூட்டம், அவரை பார்த்து விட்டு கலைந்து செல்கிறது.





1944:

ஹரிதாஸ் படம் மெட்ராஸ் பிராட்வே டாக்கிசில் வெளியாகிறது. 100,200,300 நாட்கள் அல்ல – 1000 நாட்களை – மூன்று தீபாவளியைக் கடந்து படம் ஓடியது. படத்தின் கதாநாயகன் – MTB.





1959:

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரகாரம். மன அமைதி வேண்டி ஒரு மொட்டை அடித்த, கண்பார்வை பாதிப்படைந்த ஒருவர் அப்பிரகாரத்தில் அமர்ந்துள்ளர்.கோயிலை விட்டு வெளியே வந்த ஒரு புண்ணியவானுக்கு அன்றைகென்று தர்ம சிந்தனை பெருக்கெடுத்து ஓட, அமர்திருந்த ஆளை பிச்சைக்காரர் என்று நினைத்து காசு போட்டு விட்டுச் செல்கிறார். அமர்ந்திருந்தவர் – தியாகராஜ பாகவதர்.







“ராஜா மாதிரி இருக்கான், ராஜ வாழ்கை” இந்த வாக்கியங்களை ஒரு காகிதத்தில் எழுதி செராக்ஸ் எடுத்தால் வெளியே வரும் பெயர் தியாகராஜா பாகவதாராகத் தான் இருக்கும். கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு 40களில் அவர் புகழ் இருந்துள்ளது (நாடகம் ஒன்றே பொழுதுபோக்காக இருந்த அந்த காலகட்டத்தையும் நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்). ஆனால் 1950களில் அவரது புகழ் சரியத் தொடங்கிது. சிறைச்சாலை சென்று வந்ததும் ஒரு காரணம்.இருக்கும் வரை அள்ளி அள்ளி கொடுத்தவர் கடைசி காலத்தில் மேற்கூறிய நிலையில் தான் இறந்து போனார்.







தியாகராஜா பாகவதர் குறித்து சாரு நிவேதிதா 23 பக்கங்களில் எழுதியுள்ளதை இங்கே எப்படி எழுதுவது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை.வான்கா-தன் காதை தானே அறுத்துக் கொண்ட நிலையில் தன்னையே self-portrait ஆக வரைந்திருப்பார். அதை எவ்வளவுதான் விளக்கிக் கூற முற்பட்டாலும் அதை ஒருவர் பார்த்து உணர்ந்தால் ஒழிய அந்த தாக்கத்தை புரிந்து கொள்ள முடியாது.அது போலத்தான் இந்த கட்டுரையும். படித்தால் மட்டுமே புரியும்.“இதுவரை எத்தனையோ கட்டுரைகள் எழுதியிருந்தாலும் தியாகராஜா பாகவதர் குறித்த இந்த கட்டுரை மனித வாழ்வு பற்றிய என்னுடைய நம்பிக்கைகளையே மாற்றிப் போட்டுவிட்டது” என்று எழுத்தாளரே கூறும் அளவிற்கான வாழ்க்கை பாகவதருடையது.





பி.யூ.சின்னப்பா:





M.T.B - ரஜினி என்றால் , பி.யூ.சின்னப்பா – கமல். அவர் – எம்.ஜி.யார் என்றால் , இவர் – சிவாஜி. இத்தகைய பிரிவுக்கு முன்னோடிகளே இவர்கள்தாம். பாடகராக மட்டுமின்றி குஸ்தி, சிலம்பம், குத்துச்சண்டை, குதிரையேற்றம் என்று நிஜமான சகலகலாவல்லவராகவே சின்னப்பா இருந்துள்ளார். ரொம்ப பெரிய குசும்பர் என்று இவரைப் பற்றி படிக்கும் போதே தெரிகிறது. MTBக்கும் சின்னப்பாவிர்க்கும் இடையே பாடும் முறையில் இருக்கும் வேறுபாடுகள், சின்னப்பாவின் தனித்துவமான பாடும் குணாதிசயங்கள் என்று எழுத்தாளர் சுருங்கச் சொல்லியே அருமையாக விளங்க வைக்கிறார் (எனக்குதான் ஒண்ணும் புரியல). சின்னப்பா குறித்த கட்டுரையில் கடைசியாக வரும் வாக்கியங்கள் இவை



“பி.யூ சின்னப்பாவின் புதுக்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது சமாதி எந்த கதியில் இருக்கிறதென்றே தெரியவில்லை. திருச்சியில் தியாகராஜா பாகவதரின் சமாதி கழுதை,நாய்,பன்றி போன்ற விலங்குகளும் மனிதர்களும் மலம் கழிக்க பயன்படுத்தப்பட்டுவருகிறது”. இந்த இரண்டு பேர் குறித்து கட்டுரையை படித்து முடியுங்கள். அப்பொழுதுதான் மேற்கூறிய வாக்கியங்களின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.





எஸ்.ஜி.கிட்டப்பா – கே.பி.சுந்தராம்பாள்:





கே.பி.சுந்தராம்பாள் பற்றி சுட்ட பழம் – சுடாத பழம் அளவிற்கே முன்பு எனக்கு தெரிந்திருந்தது. பின்பு நந்தனார் படத்தில் சுந்தராம்பாள் நடித்த போது அக்காலத்தில் அது எத்தகையா சாதிய ரீதியிலான விமர்சனங்களை சந்தித்தது என்று படித்திருக்கிறேன். ஆனால், கிட்டப்பா மேல் இவர் வைத்திருந்த காதல் @ பக்தி @ பித்து குறித்து இக்கட்டுரைகளின் மூலமே தெரிந்து கொண்டேன். இதில் என்ன ஒரு கொடுமையென்றால் கடைசி வரை கிட்டப்பா கசுந்தராம்பாள் தன் மீது வைத்திருந்த அளப்பரிய காதலை புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இருவருரது வாழ்க்கையுமே ஒரு தேர்ந்த திரைக்கதை போலவே இருக்கிறது. தன்னோடு ஏழு ஆண்டுகள் உயிருடன் இருந்த கணவனுக்காக - அந்த ஏழு ஆண்டுகளிலும் மூன்றுஆண்டுகள் மட்டுமே சேர்ந்திருந்தனர் - மீதி 47 ஆண்டுகளும் ஒரு துறவியயைப் போன்றே வாழ்ந்துள்ளார். அவரது நினைவாகவும் அவரது தீராக்காதலின் நினைவாகவுமே இப்புத்தகத்திற்க்கு "தீராக்காதலி" என்று பெயரிட்டுள்ளார் சாரு. நெகிழ வைக்கும் கதை சுந்தராம்பாளினுடையது.

எம்.ஆர்.ராதா – எம்.ஜி.ஆர்:

எம்.ஆர்.ராதா குறித்து நான் கொஞ்சம் படித்திருந்ததனால் (மணா எழுதிய புத்தகம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது௦) இதிலுள்ள விஷயங்கள் சிலபல, பரிச்சயமானவைகளே. ஆனாலும் படிக்க சுவாரசியமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் குறித்து நம் அனைவருக்கும் அவர் திரைப்படங்களில் நடித்து ஒரு சக்தியாக வளர்ந்த பின்னர் உள்ள கதை ஓரளவிற்கு தெரிந்திருக்கும்.ஆனால் அவரது சிறுவயது – இளமைக்காலம் உங்களுக்கு தெரியுமா...எனக்கு தெரியாது. எம்.ஜி.ஆர். பிறந்தது ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்திலேயே.ஆனாலும் சிறுவயதில் தந்தையின் மறைவிற்குப் பிறகு வறுமையில் வாடக் காரணம்–அக்காலத்தில் கேரளாவில் புழக்கத்தில் இருந்த “மருமக்கள் தாயம்" என்ற பழக்கம். மருமக்கள் தாயம் – அப்படியென்றால்?.புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.





காலம் என்பது கழங்கு போற் சுழன்று

மேலது கீழாய் கீழது மேலாய் மாறிடும் தோற்றம்





– மனோன்மணீயம்







இதே போன்று ஜென்னிலும் வட்டம் முன்னிறுத்தப்பட்ட கோட்பாடு - Circle of Zen - உண்டு. திபெத்திய புத்த மதத்திலும் சக்கரங்கள் குறித்த தத்துவம் உண்டு. வெர்னெர் ஹெர்சாக்கின் Wheel of Time பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்(நானும் அதன் மூலமே தெரிந்து கொண்டேன்). இந்த கீழது மேலாய் – மேலது கீழாய் எல்லாருக்கும் பொருந்தும்.எனக்கு-உங்களுக்கு - பாகவதருக்கு – எம்.ஜி.ஆருக்கு – கருணாநிதிக்கு – ஜெயலலிதாவிற்கு. எப்ப – எப்படி என்று தெரியாமல் இருப்பதுதானே இதிலுள்ள சுவாரசியம்.





என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இது போன்ற ஆளுமைகளைப் பற்றி கட்டுரை எழுதுவதென்பது சிரமம்.அதை விட - சுவாரசியமாகவும், அதே சமயம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் எழுதுவதென்பதுதான் உண்மையிலேயே மிகக் கடினம். சில வகை கட்டுரைகள் தினத்தந்தியில் அரசு தேர்விற்கு தயாராகும் ஆட்களுக்கு உதவும் வகையில் இருக்கும். “தியாகராஜா பாகவதர் அவர்கள் 1910 ஆம் ஆண்டு – இந்த நாள் – இந்த கிழமை – இந்த இடம் – இந்த ஆஸ்பத்திரி. தந்தை, தாயார்,தாத்தா,பாட்டி இவர்கள் பெயர். பிறக்கும்போது அவருக்கு அவருக்கு வயது – ஒரு நாள்" இந்த ரீதியிலேயே இருக்கும். மேலும் சில கட்டுரையாளர்கள் – இசை போன்ற விஷயங்களை குறித்து எழுதும் போது கூட(விஜயகாந்த் ஹஸ்கி குரலில் பேசுவது போல) புள்ளிவிவரக் குறிப்புகளாகவே இருக்கும் (இங்கு இசை விமர்சகர் ஷாஜி ஞாபகம் வந்தால் எந்த விதத்திலும் அதற்கு நான் பொறுப்பில்லை). ஆனால் ஒரு சிறந்த இசை ரசிகர் சிறந்த எழுத்தாளராகவும் இருக்கும் போது இசை குறித்தும் – பாடகர்கள் குறித்தும் – இசை அமைப்பாளர்கள் குறித்தும் எழுதும் போது – அதன் வீச்சே தனி.



ஏனென்றால் சாரு அவர்களே, இந்த புத்தகத்தில் மட்டுமல்ல நிறைய கட்டுரைகளில் கூட எழுதுவதை விட இசையே மிகப் பிடித்தமான ஒன்றாக குறிப்பிடுகிறார்.என் சிற்றறிவிற்கு தெரிந்த வரையில் தமிழ்நாட்டில் நான் படித்த – தெரிந்து வைத்திருக்கக் கூடிய ஒரு எழுத்தாளரும் Cradle of Filth குறித்தோ Eminem குறித்தோ - சாரு அவர்களைத் தவிர்த்து - எழுதி நான் படித்ததில்லை. நான்சி அஜ்ரமை நிறைய பேர் இப்பொழுது ரசிக்க சாருவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது என் அனுமானம். அவர் கலகம் - காதல் - இசை போன்று இசை வகைகள் குறித்தும் இன்னபிற நுணுக்கங்கள் குறித்தும் எழுதியிருந்தாலும் இது போன்ற ஆளுமைகள் குறித்து – ஜிம் மோரிசன் குறித்தோ, ஜிம்மி ஹென்றிக்ஸ் குறித்தோ – ஏன் அந்த 27 Club குறித்து கூட இதுபோன்ற கட்டுரைகளாக எழுதினால் ரொம்பவே மகிழ்ச்சி. ஆனாலும் எனக்கு சில சமயம் அவரது எழுத்து ரொம்பவும் பிடிக்காமலும் இருந்திருக்கிறது. இருந்தாலும் அவரைத் தவிர Freddie Mercury போன்ற ஆளுமையைக் குறித்து எழுத இங்கு – இசை விமர்சகர்கள் இருக்கலாம் – எழுத்தாளர்கள் இல்லை. ஏனென்றால் இசை போன்ற உணர்ச்சிபூர்வமான விஷத்தை எழுத்தாளர்கலாலேயே அதன் முழு பரிணாமத்தையும் வெளிப்படுத்த முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.





இந்த புத்தகத்தின் தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்றால் பாகவதரின் பாடல்களை தேடிப் பிடித்து கேட்க ஆரம்பித்து விட்டேன் (இங்கே சொடுக்கி நீங்களும் கேட்டு மகிழுங்கள்). எனக்கு என்ன வருத்தம் என்றால் 1950களின் Blues Legend – Muddy Watersயை தெரிந்து வைத்திருந்த அளவிற்கு ( அதுவே சொற்பம், அத காட்டிலும் இது இன்னும் சொற்பம் ). மேலும் இந்த இசைக் கலைஞர்கள் குறித்து தேடித் பார்த்தல் – இதில் சாரு அவர்கள் கூறியுள்ளதைப் போல–மிக மிக சொற்பமான அளவிற்கே ஆவணங்களும், மிக முக்கியமாக பாடல்களும் உள்ளன.அவரும் கூட மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் இந்தத் தகவல்களைத் திரட்டியுள்ளார்.இதுவே வெளிநாட்டில் என்றால் இந்த நிலை இருந்திருக்குமா. 1930களில் பதியப்பட்ட ப்ளுஸ் பாடல் முதற்கொண்டு அத்தனனையும் பத்திரப்படுத்தியுள்ளனர். நானும் கூட பழைய திரைப்படம் குறித்து எழுதியுள்ளேன் - அது ஜெர்மன். இதுவரை ஒரு பழைய தமிழ்படம் குறித்துக் கூட எழுதியதில்லை. நிறைய படங்கள் எனக்கு பிடித்திருந்தாலும் கூட.இனி சில பழைய படங்கள் குறித்தும் அவ்வப்போது எழுத உத்தேசித்துள்ளேன்.. நண்பர்கள் நமது பழையபடங்கள் குறித்தும் – அதன் ஆளுமைகள் குறித்தும் – அக்காலகட்டதில் திரைப்பட சூழல் எவ்வாறு இருந்து என்பது குறித்தும் தெரிந்து கொள்ள(அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்து)கீழ்க்கண்ட நூல்களை படிக்கலாம் என்று நினைக்கிறேன்.வேறு நூல்கள் குறித்து தாராளமாக நீங்களும் சொல்லலாம்.

•ஆரம்ப கால தமிழ் சினிமா (31-41) பாகம்-1 அறந்தை நாராயணன்

•ஆரம்ப கால தமிழ் சினிமா (42-51) பாகம்-2 அறந்தை நாராயணன்

•ஆரம்ப கால தமிழ் சினிமா (52-56) பாகம்-3 அறந்தை நாராயணன்

•பயாஸ்கோப் - அசோகமித்ரன்

•எம் தமிழர் செய்த படம் - தியடோர் பாஸ்கரன்

•சித்திரம் பேசுதடி - தொகுப்பாசிரியர்: தியடோர் பாஸ்கரன் - காலச்சுவடு

Karunthel kannayiram Kanavugal.

Saturday, June 11, 2011


காலச்சக்கரம்: உலகத்தின் விழிகள் முதல் ஒளியின் நினைவுகள் வரை





எழுதியவர்.....ஜோஸ்ஷான்



காலச் சக்கரம் சுழல்கிறது, யுகங்கள் வந்து செல்கின்றன, நினைவுகள் வரலாறாகின்றன.. வரலாறு தொன்மமாக மாறுகிறது, தொன்மம் பழங்கதைகளாகிறது. பழங்கதைகள் மறைந்து புதிய யுகம் துவங்குகிறது. மூன்றாம் யுகம் என சிலரால் அழைக்கப்பட்ட ஒரு யுகத்தில், வரவிருக்கும் ஒரு யுகத்தில், ஏற்கனவே கடந்து சென்ற ஒரு யுகத்தில் பாண்டிச்சேரியின் பொந்து ஒன்றின் மீதாக ஒரு காற்று எழுந்தது. அந்த காற்று ஆரம்பம் அல்ல. காலச்சக்கரத்தின் சுழற்சிகளிற்கு ஆரம்பம் என்பதோ முடிவென்பதோ கிடையாது. ஆனால் அது ஒரு ஆரம்பமே…..



பாண்டிச்சேரியில் ஒரு பொந்து இருக்கிறது. அதில் என் நண்பர் ஒருவர் வசித்து வருகிறார். பொந்து என்றவுடன் முயல், கிளி, ஹாபிட்டுகள், ஆந்தைகள் வாழும் பொந்தாக அந்தப் பொந்தை கற்பனை செய்து கொள்ளாதீர்கள். என் நண்பர் வாழ்ந்து வரும் பொந்தில் பயங்கரமான வசதிகள் உண்டு. ஹோம் சினிமா, காபரே, காசினோ, காக்டெயில் பார், குளியல் அறை… காவல் துறையில் முறையீடு செய்யாத பணிப்பெண்கள், ஒரு அரிய நூலகம் என அப்பொந்தில் சொகுசிற்கு குறைவில்லை. அங்குள்ள பஞ்சணையின் மென்மை அறியா உலகப் பைங்கிளிகளும் உண்டோ என்பது மூன்றாம் யுகத்தின் முதுமொழி.



நல்லதொரு இளம் மழைநாளில் மழையைப் பார்க்காமலேயே அதை தன் அகக் கண்களால் கண்டவாறு நூல்களை படிப்பது அவரிற்கு பிடித்தமானது. அவ்வேளையில் அவர் புகைக்கும் சுங்கானிலிருந்து வெளியாகும் புகையானது கற்பனையின் மேகக்கூட்டமாக பொந்தின் மேல் உலாச்செல்வதுண்டு. மழைமேகங்களும், புகைமேகங்களும் இணைந்து இழைய உருவாகும் அந்த மங்கிய ஒளியில் அவர் இதழ்கோடிகளில் பூக்கும் சிறு புன்னகை கவர்ச்சியின் இலக்கணமாக கொள்ளப்படலாம். ஆனால் அதை அவர் மென்மையாக மறுத்துவிடுவார். அவரிடம் இருக்கும் சுங்கான் நீண்டது. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்தது. ஆதிமொழியில் அதில் வரிகள் உண்டு.



மழை தெரியும் ஜன்னலின் அருகில் சரா கண்டத்து விந்தை மிருகமொன்றின் தந்தத்தால் உருவாக்கப்பட்ட சாய்வு நாற்காலியில் அமர்ந்து அவர் கற்பனை உலகினுள் வாழ்ந்திருப்பார். அருகில் உள்ள சிறிய மேசையில் நிலாக்கல்லில் உருவாக்கப்பட்டு வண்ணக் கற்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கிண்ணத்தில் வாசனைச் சரக்குகள் கலக்கப்பட்ட இதமான சூடு கொண்ட திராட்சை மது அவர் இதழ்களின் ஸ்பரிசத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். இவ்வாறான அவரின் இனிய வாழ்க்கையில் ஒரு இடையூறு சிதறிய ஒரு எரிமலைக்குழம்புத் துளியாக அவர் மேல் வந்து இறங்கியது.



அரிய நூல்களை, ஓய்வுநாள் சந்தைகளில் தேடிப் பார்த்து வாங்குவதில் அவர் ப்ரியம் கொண்டவர். நூல்களின் பின்னட்டைகளின் இருக்கும் பெண் நாவலாசிரியைகளின் நிழற்படங்கள் அழகாக இருக்கும் பட்சத்தில் அந்நூல்கள் அருமையானவை என்பதை தீர்க்கதரிசனமாக கூறும் திறமை அனுபவத்தால் அவரிடம் கைகூடியிருந்தது. இவ்வாறாக அவர் சேகரித்த அரிய நூல்கள் பொந்து நூலகத்தின் இடப்பரப்பை முழுமையாக பிடித்துக்கொண்டு, பொந்தின் பொதுவெளியில் தன் ஆக்கிரமிப்பை நிகழ்த்த ஆரம்பித்த வேளையில்தான் பொந்தில் நீ அல்லது புத்தகங்கள் எனும் ஒரு எல்லையை அவர் அன்பு அன்னை கொண்டு வந்தார். பின்னட்டை நாவலாசிரியைகளை பிரிய வேண்டிய வேதனை அவரை புதிய விதையொன்றின் நுண்ணிய வேர்களாக துளைபோட ஆரம்பித்த கணமது. பின்னட்டையில் நிழற்படங்கள் இல்லாத அரிய நூல்களை அவர் தானம், விற்பனை, தகனம் செய்ய ஆரம்பித்தார். சந்தைகளிலும், ஆதி நூலகங்களிலும் தேடித் தேடி அவர் சேகரித்து வைத்திருந்த நூல்களை பிரிவதென்பது காதலியைப் பிரிவதை விட வலியை தருவதாகவே அவர் உணர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தில்தான் அவரது சேகரிப்பில் இருந்த The Wheel of Time எனும் பெருந்தொடர் நாவலின் மீது அவர் கவனம் வீழ்ந்தது.



சுவைக்காமல் கனியை எறியாதே, ருசிக்காமல் கன்னியை துரத்தாதே, படிக்காமல் நூலை வீசாதே என முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். கனி என்றால் ஒரு அல்லது இரு கடி, கன்னி என்றால் ஒரு அல்லது இரு….., நூல் என்றால் ஒரு பத்து அல்லது நூறு பக்கம் என்பதை அவர் எல்லையாக கொண்டிருந்தார். காலச்சக்கரத்தை அவர் படிக்க ஆரம்பித்தார். முதல் ஐம்பது பக்கங்களை தாண்டியபின்பாக அவர் மீளாப்பிரமை ஒன்றில் நுழைந்திருந்தார். அதன் சுழற்சியில் இருந்து அவர் இன்னமும் வெளிவரவில்லை. சிட்டு ஆய்வாளாராக மரங்களின் மென்பச்சை பாசி படர்ந்த கிளைகளில் தன் உடலைக் கிடத்தி விழியை அகல விரித்துக் காலத்துடன் காய்ந்து கொண்டிருந்த தன் நண்பரும் இந்த புதிய உலகில் வாழ வேண்டி அவரிடம் காலச்சக்கர சுழலில் சிக்குமாறு அழைப்பு விடுத்தார்.



பங்குனியில் கிளைகளில் சிட்டுக்கள் அமர்வது அரிதான ஒன்றாக மாற ஆரம்பித்திருந்தது. நான் ஒளிந்திருக்கும் கிளைகளை சிட்டுக்கள் ஏனோ தவிர்க்கின்றன எனும் ஒரு உணர்வு இலைகளின் நாடிகளில் ஊர்ந்து செல்லும் எறும்பின் பாதத்தின் குறுகுறுப்பாய் என்னுள் ஊர்ந்தது. இதனால் என் வாசிப்பில் ஒரு வெறுமை உருவாகி இருந்தது. தொடர்சியாக நீளும் ஒரு வரியில் விழும் வெட்டுப்போல. என்ன வாசிக்கலாம் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாத ஒரு நிலை. அப்போது நண்பர் கூறினார், காலச்சக்கரத்தை படியுங்களேன் என்று. இன்றுவரை அதன் சுழற்சியில் இருந்து என்னால் மீண்டு வர இயலவில்லை…..



ஒளிக்கும், இருளிற்குமான போராட்டம் என்பது மிகைபுனைவுகளின் ஒரு முக்கிய கூறாக இருந்து வருகிறது. ஒளி என்பதை நன்மை என்பதாகவும் இருள் என்பதை தீமையாகவும் ஒருவர் உருவம் செய்து கொள்ளக்கூடும். அதுவே சரியாகவும் இருக்கக்கூடும். இப்போராட்டம் பல்வேறு வடிவங்களில் வெவ்வேறு கதைகளாக வடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒளியின் ஆசிபெற்று போராடுபவர்கள், இருளின் ஆக்கிரமிப்பில் போராடுபவர்கள், இவை இரண்டிற்குமிடையில் சிக்கி கொண்டவர்கள், இருள், ஒளி, நன்மை, தீமை என்பதன் கருத்தாக்கத்தால் பாதிக்கப்படாதவர்கள் என பாத்திரங்கள் பல வகைகளாக உருவாக்கப்படுகிறார்கள். எம் ரசனைக்கேற்ப பாத்திரங்களை எம்மால் ரசிக்கவோ அல்லது அப்பாத்திரத்தை சிறப்பான ஒன்றாகவோ நாம் கருதிக்கொள்ள முடிகிறது. இங்கு ஒளியும் இருளும் ஒருவரின் ரசனைக்கும் தேர்விற்கும் தடையாக வருவதில்லை. ஒளியைப் போலவே இருளிலும் உயிர் இருக்கிறது. அதுவும் ஒரு வாழ்க்கைதான். ஆனால் பெரும்பாலான போராட்டங்கள் ஒளியின் பார்வையிலேயே விவரிக்கப்படுகின்றன. ஒரு வாசகனின் ரசனை அவனை ஒளியின் பிரகாசமான வீதிகளிலோ அல்லது இருளின் ரகசிய நிலவறைகளினுள்ளோ அவன் காத்திருந்த சுவையைக் காட்டிடக்கூடும்.



நகரங்களின் சுவடு படாத ஒரு மலையோர கிராமத்தில் வாழ்ந்து வரும் சாதாரணமான மூன்று இளைஞர்கள், இரு இள நங்கைகள் ஆகியோரின் வாழ்க்கையானது விதி இழைக்கும் கோலத்தால் எவ்வாறு மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது என்பதும் அந்த விதிக்கோலத்தில் இழைக்கப்படும் நெய்தல்களால், அது உருவாக்கும் வடிவங்களால் அவர்களை சுற்றியுள்ள உலகம் எவ்வாறு உருமாற்றம் கொள்கிறது என்பதும் The wheel of Time எனும் மிகைபுனைவு நாவல் வரிசையின் மையமான அம்சமாக உள்ளது என்பது என் புரிதல். ராண்ட் அல்தோர், மாத்ரிம் கோதன், பெரின் அய்பேரா எனும் இளைஞர்கள், எக்வின் அல்வெர், நிய்னெவ் அல்மெய்ரா எனும் நங்கைகள், இவர்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்டே எமொன்ட்ஸ் ஃபீல்ட் எனும் கிராமத்தில் கதையை தன் மாய வரிகளில் ஆரம்பிக்கிறார் கதாசிரியர் Robert Jordan.



பனிக்காலம் முடிவடையாமல் நீண்டு சென்று முன்வசந்தத்தை உறைய வைத்துக் கொண்டிருக்கும் காலம். தங்கள் பண்ணையில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் மதுவை எமொண்ட்ஸ் ஃபீல்டில் கொண்டாடப்படவிருக்கும் முன்வசந்த வருகை விழாவிற்காக ராண்டும் அவன் தந்தையும் குதிரைகளில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆளரவமற்ற மலைப்பாதையில் வீசும் குளிர்காற்றானது அவர்கள் இருவரும் அணிந்திருக்கும் மேலங்கிகளினுள் தம் உறைந்த கரங்களை செலுத்தி அவற்றைக் களைந்துவிட முயன்று கொண்டிருக்கிறது. ராண்டின் உள்ளுணர்வில் தான் கண்கானிக்கப்படும் உணர்வானது அந்தக் குளிரையும் தாண்டிய நுண்ணிய வருடலாக உணரப்படுகிறது. தான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் ராண்ட், நள்ளிரவை அங்கியாக அணிந்து கரும்புரவி ஒன்றன் மீது அமர்ந்திருக்கும் ஒரு உருவத்தைக் காண்கிறான். தன் தந்தைக்கும் அவ்வுருவத்தை அவன் காட்ட முயற்சிக்கும்போது அந்த உருவம் காணாமல் போய்விடுகிறது. அந்த உருவமானது அவன் கண்களிற்கு மட்டுமே புலனாகக்கூடிய ஒன்றாகவே வாசகனிற்கு அறிமுகமாகிறது. ஆனால் காலச்சக்கரத்தின் ஆரம்பம் இதுவல்ல ஏனெனில் அதற்கு ஆரம்பமோ முடிவுகளோ கிடையாது…..



இருளிற்கும் ஒளிக்குமான போராட்டம் ஒன்றில் மனம் பிறழ்ந்த நிலையில் லுஸ் தெரென் தான் வாழும் உலகை சிதைத்துப் போடும் நிகழ்வுடனேயே காலச்சக்கரத்தின் அந்த ஆரம்பம் தொடங்குகிறது. அந்த ஆரம்பத்தை படிக்கும்போது இது என்ன குழப்ப வலையாக இருக்கிறதே எனும் எண்ணங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். ஆனால் அதை சில பக்கங்களில் ஆசிரியர் முடித்துவிட, விதியின் கோலத்தினுள் வாசகன் அப்பாவியாக காலடி எடுத்து வைக்கிறான்.



தர்க்கமோ, வாதமோ இப்பெருந்தொடரை அனுபவிக்க உதவப்போவதில்லை. ஏனெனில் சறுக்கல்கள் கொண்ட தொடர்தான் இது. மாறாக ஆசிரியர் தன் வரிகளில் வடிக்கும் உலகத்தை அதில் வாழும் மனிதர்களை, விந்தையான ஜீவன்களை எம்மால் கற்பனையில் உயிர்கொடுக்க முடிந்தால் இத்தொடரின் சுவை சிறப்பான ஒன்றாக இருக்கும்.



வேகக்கதைப் பிரியர்களிற்கானதல்ல இக்கதை. இக்கதையின் வேகம் வாசகனின் கற்பனையின் வேகவீச்சாலேயே தீர்மானிக்கப் படக்கூடிய ஒன்றாக அமைந்து விடுகிறது. அந்த உலகின் அழகும் கவர்ச்சியும் அதில் பொதிந்திருக்கும் இருளும் சாகசங்களும் அவனால் உருவாக்கப்படுவதே. ராபார்ட் ஜோர்டானின் வரிகள் அவன் கற்பனையில் அந்த உலகை சிருஷ்டிப்பதை இலகுவாக்கின்றன. அவன் தன் மனத்திரையில் தீட்டும் கற்பனைக் காட்சிகளின் எழிலை ஜோர்டானின் வரிகள் மெருகூட்டி தருகின்றன. வசியம் நிரம்பிய புதை மணலில் சிக்குபவனை போல ஒரு மாய உலகிற்குள் வாசகன் அனுவனுவாகச் சிக்குகிறான். அம்மாயவுலகத்தின் அறிமுகத்தில் சற்றே மூச்சுத் திணறும் அவன் பின் முழுமையாக அதை உள்வாங்க ஆரம்பிக்கிறான். அம்மாயவுலகத்தில் அவனும் ஒரு பிரஜையாகிப் போகிறான்.



ஜோர்டான் சிருஷ்டித்திருக்கும் அம்மாயவுலகம் மூன்று திசைகளில் கடலை எல்லையாகக் கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பாக விரிகிறது. அவ்வுலகில் கடவுள் என்ற சொல்லை ஜோர்டான் உபயோகப்படுத்துவதில்லை. தெய்வங்களோ, தெய்வ வழிபாடுகளோ, ஆலயங்களோ அப்பெரு நிலத்தின் அடையாளங்களாக காணக்கிடைப்பதில்லை. ஆனால் சாத்தான் அவ்வுலகில் இருக்கிறான். உலகை படைத்தவர் எவரோ அவரே காலச் சக்கரத்தையும் இயக்குபவர் என ஒருவரை குறிப்பிடுகிறார் ஜோர்டான். அவரை சிருஷ்டிகர்த்தா என அவ்வுலகம் குறிப்பிடுகிறது.



சிருஷ்டிகர்த்தாவினால் அவன் சீடர்களுடன் சிறைவைக்கப்படுகிறான் இருளன். அவன் சிறையின் கதவுகள் பல பாதுகாப்பு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்கின்றன. அவன் கரங்கள் உலகை தீண்டாது யுகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் யுகங்களின் கடப்புடன் இருளனின் சிறையின் முத்திரைகள் தம் வலிமையை இழக்க ஆரம்பிக்கின்றன. இருளனின் கரங்கள் வலிமை இழந்த முத்திரைகளை தாண்டி உலகினை தொட்டுப் பார்க்க தொடங்குகின்றன. காலச்சக்கரத்தை உடைத்து யுகத்தினை நிறுத்தி இருள் யுகத்தினை தனதாக்கும் தருணம் நெருங்கிவிட்டதை உணர ஆரம்பிக்கும் இருளன், தன் சீடர்களையும், அழிவை விரும்பும் இருளுயிரிகளையும், கொடூர பிறப்புக்களையும் தன் கனவின் ஆரம்ப கோலங்களை வரைபவர்களாக உலகில் உலாவரக் கட்டளையிடுகிறான். தன் திட்டத்திற்கு தடையாக இருக்கக்கூடிய மூன்று இளைஞர்களை தன் பக்கம் இழுத்துக் கொள்வதே அவன் நோக்கம். இருளன் எவ்வாறு அந்த மூன்று இளைஞர்களையும் தன் பக்கம் இழுக்க விரும்புகிறானோ அதேபோல் அந்த இளைஞர்களை ஒளியின் பாதையில் இட்டுச் செல்ல போராட தயாராகிறார்கள் ஒளியின் போராளிகள். ஒளியின் ஆசி பெற்ற போராளிகளிற்கும், இருளனின் ஏவலர்களிற்குமிடையிலான இப்போராட்டம் ஆரம்பிக்கும் இடம்தான் எமொண்ட்ஸ் ஃபீல்ட் கிராமம்.



காலசக்கரத்தின் ஒவ்வொரு பாகமும் அதன் முக்கிய நாயகர்களான ராண்ட், மாத், பெரின், எக்வின், நிய்னெவ் ஆகியோரின் வியக்கதகு ஆளுமை மாற்றங்களையும், அவை உருவாக்கும் விளைவுளையும் சுவையுடன் எடுத்து வருகிறது. இந்தக் கதையின் முக்கிய பாத்திரமாக ராண்டையே ஜார்டான் முன்னிறுத்துகிறார். முன்னொரு யுகத்தில் தன் சொந்தங்களை அழித்து, உலகைச் சிதைத்தவனான லுஸ் தெரெனின் புதிய பிறப்பாக ராண்ட் கதையில் சித்தரிக்கப்படுகிறான். நாவல் தொடரின் மூன்றாம் பாகத்தில் அவன் குறித்த தீர்க்கதரிசனங்கள் சிலவற்றை நிகழ்திக்காட்டும் ராண்ட், த ட்ராகண் ரீபார்ன் ஆகவே பின்பு அழைக்கப்படுகிறான். அந்த பெயரைப் பெறவும் அதனை தக்க வைத்துக் கொள்ளவும் ராண்ட் நிகழ்த்தும் சாகசங்கள் சிறிதல்ல.



காலச்சக்கரத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று முழுமுதற்சக்தி. சிருஷ்டியின் இயங்கு சக்தியாக இது கொள்ளப்படுகிறது. இந்த முழுமுதற் சக்தியானது எப்போதுமே இருவகையாக பிரிந்திருக்கிறது. ஆண்களால் கையாளப்படும் ஒரு பங்கு, பெண்களால் கையாளப்படும் ஒரு பங்கு என்பதாக அது பிரிக்கப்படுகிறது. ஆண்களினால் கையாளப்படும் சக்தியின் பங்கானது சைடின் எனவும், பெண்களால் கையாளப்படும் சக்தியின் பங்கானது சைடார் எனவும் பெயர்கொள்ளப்படும். பாதாளத்தில் புதையும் முன்பு இருளன் ஆண்கள் கையாளும் சக்தியில் தீமையை கலந்து விடுகிறான்.



ஆண்கள், பெண்கள் சிலரில் மட்டுமே இச்சக்தியை பயன்படுத்தி அதன் ஆற்றலை உபயோகப்படுத்தும் இயல்பு காணக்கிடைக்கும். ஆண்களால் கையாளப்படும் சக்தியின் பகுதியில் இருளனின் கறை படிந்திருப்பதால் அதன் தொடர்சியான உபயோகமானது ஒருவனை மனப்பிறழ்வு கொள்ளச் செய்து, விபரீதமான செயல்களிற்கு அது வழி வகுக்கும். லுஸ் தெரெனினால் நடாத்தப்பட்ட உலக சிதைப்புக்கு இதுவே காரணமாக கொள்ளப்படுகிறது. ராண்ட் அவனின் புதிய பிறப்பாக இருக்கும் பட்சத்தில் அவனை இருள் வழி இழுத்து தன் பக்கத்தை உறுதிப்படுத்த இருளன் முயல்கிறான் அதேபோலவே ராண்டிற்கு மனப்பிறழ்வு ஏற்படாத வகையில் அவன் முழுமுதற்சக்தியை உபயோகிக்க அவனை வழிநடத்தி இருளனை எதிர்த்துப் போராட வருபவர்கள் தான் ஏஸ் செடாய்க்கள். அதற்காக எவ்வித வழிமுறைகளையும் உபயோகிக்க தயங்காதவர்கள் அவர்கள். ஏஸ் செடாய்க்கள் முழுமுதற் சக்தியின் பெண்பங்கு சக்தியை உபயோகப்படுத்தி நீர் நிலம் நெருப்பு காற்று ஜீவஆவி என்பவற்றை தமக்கு சாதகமாக வளைத்து பயன்படுத்தும் திறமை படைத்தவர்கள். இவர்களின் பகடையாட்டத்தில் சிக்கிய ராண்ட் என்னவாகிறான், அவன் பால்யகால சிநேகிதங்கள் என்னவாகிறார்கள் என்பதை ஒரு வாசகன் மனக்கண்களில் உணரும் அளவிற்கு ஜார்டானின் வரிகள் அமைகின்றன.



ஒரு மலையோர கிராமத்தில் ஆரம்பிக்கும் இக்கதையானது அக்கிராமத்தை விட்டு வெளியேறிய பின்பாக அதன் எல்லைகளை விரித்துக் கொண்டே செல்கிறது. புதிய நிலங்கள், ராஜ்யங்கள், மனிதர்கள், தொன்மங்கள் அவர்களின் வேறுபட்ட பண்பாடுகள் என பரந்த வாசிப்பை இக்கதையின் வாசகர்களிற்கு ஜார்டான் அளித்துக் கொண்டேயிருக்கிறார். நீர் என்பது அரிதான ஒன்றாக இருக்கும் அய்ல் தேச மக்கள், எந்த இடத்திலும் நிரந்தரமாக தங்காத டிங்கர்கள் எனப்படும் ஜிப்சிகள், விருட்சங்களை பாடல் பாடியே குணப்படுத்தும் கட்டிடக் கலை வல்லுனர்களான ராட்சத ஓகியர்கள், கடல் மீதே தம் வாழ்வின் பெரும்பகுதியை நிகழ்த்தும் ஆழிசனங்கள், இருளனின் அடிபொடிகளை எல்லையை மீற விடாது போராடும் பிலைத் எல்லை கோட்டை நாடுகளை சேர்ந்த வீர இனங்கள், தமக்குரிய மண்ணை உரிமைகோரியபடியே கடல்கடந்து வரும் சீன்சான் ராஜ்யத்தினர் என பலதேச மக்களின் பண்பாடு மிகவும் விரிவாக கதையில் விபரிக்கப்படும்.



ஒரு நாட்டு மக்களின் பண்பாடுகள் குறித்து, அவர்கள் வாழ்வியல் குறித்து விபரமான தகவல்களை தருவதன் மூலம் அம்மக்களை மிக ஆழமாக வாசகன் மனதில் பதித்து விடுகிறார் ஜார்டான். ஒருதேசத்தின் நிலவியல் மீதான அவரின் வரிகள் அம்மண்ணின் சுவாசத்தை படிப்பவர்கள் மேல் படர வைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. திருமணமான பெண்கள் பொட்டு வைத்துக் கொள்ளும் பண்பாடு மல்கிய்ர் எனும் பிரதேசத்தில் இருந்ததாக கதையில் ஒரு பகுதி இருக்கிறது. கருணா நாச்சிமான் எனும் ஏய்ஸ் செடாய் ஒரு பாத்திரமாக இடம் பெறுவார். பிலைத் எல்லை நாடொன்றின் மன்னனின் சகோதரி இவர். இவ்வாறாக பலவின மக்கள் மீதான கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் முறை ஒப்பீடுகளை நிகழ் உலகத்துடன் வாசகர்கள் நிகழ்த்தி மகிழலாம்.



அய்ல் தேசத்தில் ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வது சாதாரணமான ஒன்று, நிர்வாணம் என்பது அய்ல்களிற்கு சங்கடம் தராதது. அய்ல் இனத்தவர் நிர்வாணத்தையும் உடையாகவே கருதுகிறார்கள். சீய்யெனார் தேசத்தில் குளியல் தொட்டியில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே நீராடலாம், நிர்வாணமாக. இவ்வகையான உயரிய பண்பாடுகள் படைத்த பல தேசங்கள் எம்முலகில் இல்லாமல் போய்விட்டதே என நல்ல மனம் கொண்ட வாசகர்களை விம்மச்செய்துவிடுகிறார் கதாசிரியர் ஜோர்டான்.



அய்ல் தேசத்தை சேர்ந்தவர்களின் கவுரவம் மற்றும் கடமை குறித்த பண்பாடுகள் தலையை கிறுகிறுக்க வைப்பவை. கதைத்தொடரில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. பெண்கள் அதிகாரம் கொண்டவர்களாக, சக்தி படைத்தவர்களாக, வீரத்துடன் எதிர்த்துப் போராடுபவர்களாக, புத்தியும் தந்திரமும் கொண்டவர்களாகாவே பெரிதும் சித்தரிகப்படுகிறார்கள். பெண்களை பெருமைப்படுத்தும் ஒரு கதைத்தொடராக இது இருக்கிறது என்றால் அது மிகையான ஒன்றல்ல. ஏய்ஸ் செடாய்களின் சதிகளும், திட்டங்களும் வியக்க வைப்பவை. ஏறக்குறைய சிஐஏ போல் இயங்கும் தன்மையை ஏஸ் செடாய்களின் தலைமையகமான வெள்ளைக்கோபுரம் கொண்டிருக்கிறது. மன்னர்களிற்கு, ராணிகளிற்கு ஆலோசனை, ஒப்பந்தங்களை இயற்றல், வேவு, ஆள்கடத்தல், கொலை என நல்லவர்களா தீயவர்களா என முடிவெடுக்க இயலாத பண்புகளை கொண்டவர்களாக அவர்கள் பாத்திரப்படுத்தப்பட்டிருப்பார்கள். இவ்வகையில் எதிர்பாராத பல திருப்பங்களை கதைக்கு தருபவர்களாக ஏய்ஸ் செடாய்க்கள் இருக்கிறார்கள். எமொண்ட் ஃபீல்டில் இருந்து வெளியேறும் இரு இளநங்கைகளும் பலமான சக்தி கொண்ட ஏய்ஸ் செடாய்களாக பின் உருப்பெறுவார்கள். அவர்கள் நிகழ்த்தும் சாகசங்கள் சில சமயங்களில் கதை நாயகர்களின் சாகசங்களை விட சிறப்பாக இருக்கும்.



கதையின் முக்கிய நாயகனாக ராண்ட் காட்டப்பட்டாலும், அவன் விதியிழையுடன் பின்னிப் பிணைந்த தோழர்களான பெரின் மற்றும் மாத் அவனைவிட சில பாகங்களில் வாசகர்களை கவர்ந்து விடுவார்கள். பெரின், ஓநாய்களுடன் உரையாடும் சக்தி கொண்டவன். அவன் உரையாடல்கள் எண்ணப் பரிமாற்றம் மூலமே நிகழும். மனிதத் தன்மை அதிகம் கொண்ட ஒருவனாகவே பெரின் சித்தரிக்கப்படுகிறான். அவனில் உள்ளிருக்கும் மிருகத்தை அவன் கட்டுப்படுத்த முயன்று கொண்டே இருப்பான். அவன் காதலி பின் மனைவியாக வரும் பைய்லுடனான அவன் ஊடல்கள் ரசிக்கப்படக்கூடியவை. அவன் முரட்டு ஆகிருதிக்கு எதிரானதாக அவன் உள்ளம் அமைந்திருக்கும்.



தொடரில் என் அபிமான பாத்திரமாக மாறிப்போனவர் மாத். சூதாட்டம், மது , மங்கை , மோதல் என பின்னி எடுக்கும் பாத்திரம் இது. மாத்தின் பாத்திரம் இப்படி ரசிக்கப்படும் ஒன்றாக மாறும் என்பது எதிர்பார்க்கவியலாத ஒன்று. கூடவே மாத் வரும் பகுதிகளில் நகைச்சுவையும் சிறப்பாக இருக்கும். இக்கதை வரிசையில் மாத்தை விட சிறப்பான நாயகனாக யாரும் எனக்கு தோன்றவில்லை. பகடையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாயகன், தன் வாழ்க்கையையே சூதாட்டமாக எண்ணி விளையாடுவதை ஜோர்டான் தன் மாய வரிகளால் எழுதி செல்கிறார். அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் பகடைக் காயைப் போல மாத்தை உருட்டி விளையாடிக் கொண்டே இருக்கும், இவ்விளையாட்டில் இருந்து மாத் வெற்றி வீரனாக வெளிவரும் காட்சிகள் அதிரடியானவை, விசிலடிக்க வைப்பவை. அல்ட்டாராவின் ராணியான டைலின் மாத்துடன் கொள்ளும் காதல் அபாரமான ஒன்றாக இருக்கும். மாத் பாத்திரத்திற்கு இப்படியான ஒரு வரவேற்பு கிடைக்கும் என ஜார்டானே எதிர்பார்த்திருக்க மாட்டார்.



நாயகர்கள் இப்படி எனில் அவர்களை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வில்லன்கள் இருக்க வேண்டுமே. வெள்ளையங்கியிணர், ட்ரொலொக்குகள் [மனித விலங்கு கலப்பினம்], இவர்களை வழி நாடாத்தும் மிர்ட்ரெய்ல்கள் எனும் விழிகளற்ற பிறப்புக்கள், ரத்தக்காட்டேரிகளை ஒத்த டிராக்ஹார்கள், கொல்லவே இயலாத கொலம் எனும் பிறவி, சாம்பல் மனிதர் எனும் உயிரற்ற கொலைஞர்கள், பாதாள நாய்கள் என பலர் நாயகர்களை கலங்க அடிப்பார்கள். இதில் ஆரம்ப நாவல்களில் கலக்கி எடுத்த ட்ரொலொக்குகள் பின்னையவற்றில் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்பது ஒரு குறை. ட்ரொலொக்குகள் முதல் பாகத்தில் அறிமுகமாகும் காட்சிதான் கதையையே ஒரு திருப்பத்திற்கும் வேகத்திற்கும் இட்டுச் செல்லும். அவர்களின் ரசிகனான எனக்கு இது திருப்தியை அளிக்காவிடிலும் பலவகையான சக்திகளை கொண்ட இருளனின் சீடர்கள், மொரிடின், சைதார் கெரான், படான் ஃபெய்ன் எனும் பாத்திரங்களினால் ஜார்டான் வாசகர்களை வியக்க வைக்க தவறுவதேயில்லை. அதேபோல் கதையில் இடம்பெறும் சிறிய பாத்திரங்களைக்கூட எதிர்பாராத விதத்தில் மறக்கமுடியாத பாத்திரங்களாக்கி விடுவதும், அவர்களை பிரதானமான பாத்திரங்களாக மாற்றிவிடுவதிலும் ஜார்டானிற்கு நிகர் ஜார்டான்தான். 1880 பாத்திரங்கள் இத்தொடரில் உண்டு என்கிறது ஒரு தகவல். ஆனால் அந்த உலகில் வாழ்பவர்களுக்கு அந்த எண்ணிக்கை ஒரு பொருட்டேயில்லை. எதிர்பாராத சந்தர்பங்களில் படு அதிரடியான திருப்பங்களை மிகவும் எளிதாக தந்து விடும் வல்லமையும் ஜார்டானிற்கு உண்டு. அது அவர் கதைகூறலின் தனித்தன்மை. அதேபோல் பல சமயங்களில் அவரின் வரிகள் அடடா போடப் படக்கூடிய அர்த்தங்களை தரக்கூடியவையாக இருக்கும்.



ஜார்டானின் கதையுலகில் அரூப உலகம் அல்லது கனவு உலகம் என அழைப்படக்கூடிய தெல்லொரென்ரெய்ட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கனவுகளில் பயணித்தல், கனவுகளில் சந்தித்தல், தேடுதல் வேட்டை நடாத்தல், வேவு பார்த்தல் என அது ஒரு மயங்கவைக்கும் பகுதியாக அமையும். ஸ்தூல உடலுடன் கனவுலகில் நுழையும் வித்தைகூட இருக்கிறது. தர்க்கங்களில் இறங்காது படித்து செல்ல வேண்டிய பகுதியிது. மிகைபுனைவில் தர்கம் என்ன தர்க்கம்!! மாற்றுலகில் நுழையக்கூடிய வாயிற்கதவுகள், ஒரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு தனியாக அல்லது ஒரு சேனையுடன் பயணிக்ககூடிய பயணவாயில்கள், வாளில்லாத வாள், காலநிலையை மாற்றியமைக்ககூடிய பாத்திரம் இப்படியாக எத்தனையோ எத்தனையோ. எழுதித் தீராது. அது என்னால் இயலாத காரியம்.



மொத்தத்தில் இன்று நான் மூன்றாம் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றுகூட சொல்லலாம். ஜார்டானின் வர்ணனைகள் என்னை அந்த உலகில் ஒரு பிரஜையாக்கி விட்டன. அவரின் வர்ணனைகள் நீண்டவை. இது அவரின் பலம் அதேபோல் சில சமயங்களில் பலவீனம். ஆனால் அவரின் எழுத்தை சுவைத்தவர்கள் அச்சுவையை வேறெங்கும் காண்பது என்பது சிரமமான ஒன்று. மொழியை அழகாக்கி, ருசியூட்டி அதில் வாசகனை கரைத்துவிடும் மந்திரவாதம் ஜோர்டானின் எழுத்துக்களில் இருக்கிறது. அவரின் இழப்பு மாயபுனைவுகளின் பேரிழப்பு. இக்கதைதொடரில் இதுவரை வெளியாகிய பகுதிகளை படித்து முடித்துவிட்டுத்தான் வேறு படைப்புக்களை படிப்பது என்பது என் தீர்மானம். அத்தீர்மானத்திலிருந்து நான் நழுவிச் செல்லாதவாறு கதை என்னைக் கட்டிப்போட்டிருக்கிறது. இக்கதை தொடரின் பதினொரு பகுதிகளை எழுதி முடித்தபோது ஜார்டான் இயற்கை எய்தி விட்டார். முழுமுதற்சக்தியில் அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அன்னார் விட்டுச் சென்ற குறிப்புக்களுடன் இத்தொடரை தற்போது எழுதி வருபவர் பிராண்டான் சாண்டர்சன் எனும் மிகைபுனைவு எழுத்தாளர் ஆவார். மொத்தம் 14 பாகங்கள் கொண்ட இத்தொடரின் சுழற்சி அதன் பின்பாக நின்று விடுமா என என்னைக் கேட்டால் இப்பதிவின் முதல் பராவை பதிலாக நான் உங்களிற்கு வழங்குவேன். ஜார்டானின் வரிகளை தழுவியவை அவை. காலச்சக்கரம் வாசிப்பில் ஒரு புதிய அனுபவத்தின் சுவையை எனக்கு அளித்து வருகிறது. இது என் அனுபவம். வாசகர்களின் சுவைகளும் அனுபவங்களும் வேறுபடக்கூடியவையே. The Wheel weaves as the Wheel wills



Charu.

டென்.டௌனிங்கும் நிர்பீஜ ஸமாதியும்…


June 13th, 2011

உங்களுடைய பிரதான எதிரியே நீங்கள்தான் என்று அடிக்கடி என்னிடம் சொல்லுவார் நண்பர் ஒருவர். என்னைப் பற்றி எப்போதும் உருவாகிக் கொண்டிருக்கும் கட்டுக்கதைகள் பெரும்பாலும் என்னுடைய எழுத்தையே பிறப்பிடமாகக் கொண்டுள்ளன. என்னுடைய ஹீரோ தற்கொலை செய்து கொண்டால் ‘சாரு தற்கொலை முயற்சி’ என்று இணையத்தில் தலைப்புச் செய்தி வருகிறது. அதைப் போலவேதான் நான் எப்போதும் குடியும் குட்டியுமாகவே இருப்பேன் என்பதாகவும் ஒரு வதந்தி. ஆனால் நிஜத்தில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது. என் கூடவே வாழும் என் மனைவிக்குக் கூடத் தெரியாது. சேலத்தில் ஆர். குப்புசாமி என்ற ஒரு அறிஞர் உண்டு. இந்தியத் தத்துவத்தை அலசி ஆராய்ந்தவர். கருணாநிதி திருவள்ளுவரை ஏதோ திமுகவின் உறுப்பினர் என்பது போல் ஒரு பில்ட் அப் கொடுத்து வைத்திருப்பது போல் குப்புசாமியை ஜெயமோகன் தன்னுடைய நட்பு வட்டத்தைச் சேர்ந்தவராகக் காட்டிக் கொள்வதில் பிரியம் கொண்டவர். குப்புசாமியிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஷயத்தில் சந்தேகம் கேட்டு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர் எழுதியிருந்த பதில் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் குப்புசாமி என் கடிதத்தையும் அதற்கு அவர் எழுதிய பதிலையும் அவருடைய இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார் போலிருக்கிறது. அதுவும் எனக்குத் தெரியாது. நேற்று தான் தற்செயலாக ஒரு வாசகர் அதை எனக்கு அனுப்பி ”அந்த சாரு நீங்கள்தானா?” என்று கேட்டு எழுதியிருந்தார்.



30 ஆண்டுகளுக்கு முன்பே நான் விவேகானந்தர் எழுதிய ஞான தீபம் தொகுதிகள் 12-ஐயும் படித்திருக்கிறேன். ஓரளவுக்கு இந்தியத் தத்துவ மரபிலும் எனக்குப் பரிச்சயம் உண்டு. என் எழுத்தை ஊன்றிப் படிப்பவர்களுக்கு அது புரியும். ஸீரோ டிகிரியை இந்துத்துவ நாவல் என்று தாக்கி ரமேஷ் பிரேதன் 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது நினைவு வருகிறது. இதற்குக் காரணம், இந்தியத் தத்துவ மரபையே இந்துத்துவமாகப் பார்க்கும் குறுகிய மனோபாவம்தான். இந்து மதத்தில் பல தத்துவப் பிரிவுகள் உண்டு. அதில் ஒன்று, சூன்ய வாதம். இதற்கும் ஜென் பௌத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஸீரோ டிகிரி அந்தப் புள்ளியிலிருந்துதான் துவங்குகிறது. மேலும், அந்த நாவல் பல்வேறு கிளைவழிகளையும் புதிர்ப்பாதைகளையும் கொண்டது என்பதால் ஒரே ஒரு தத்துவ மையப் புள்ளியோடு அதைப் பொருத்திப் பார்க்க முடியாது.



நான் எழுதும் டென்.டௌனிங் மேட்டரைப் பற்றி மட்டுமே வாசகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் நான் தொடர்ந்து 30 ஆண்டுகளாக மேலை மற்றும் கீழைத் தேசங்களின் தத்துவங்களை விவாதித்து வருகிறேன். நிறப்பிரிகையில் எஸ்.என். நாகராசன் என்பவரின் ஆசார இந்துத்துவம், ஆசார மார்க்சீயம் ஆகியவற்றைக் கடுமையாகச் சாடி நான் எழுதிய ஜென் பௌத்தம் குறித்த கட்டுரைகளையும் ழான் பால் சார்த்தர், ஃபூக்கோ போன்றவர்கள் பற்றிய என்னுடைய கட்டுரைத் தொடர்களையும் வாசகர்கள் படித்துப் பார்க்க வேண்டும். பின்வருவது ஆர். குப்புசாமிக்கு நான் எழுதிய கடிதமும் அதற்கு அவருடைய பதிலும்.

dear mr kuppusamy



how are you. hope you remember me. i am charu nivedita.



now i have a doubt in patanjali’s yoga chutra. in pada one (samadhi pada) in the last sloka, he says tasyapi nirodhe sarvanirodhan nirbija samadhi.



then in the second pada (sadhana pada) he talks about ashtanga yoga. 8 limbs. here, samadhi comes as the eighth one. the ultimate state. what is the difference between these two?



would you please explain.



regards and lov

charu



september 10, 2009.



Dear Mr,Charu



I am glad to hear from you.



Patanjali’s ashtanga yoga has 8 limbs:



1.yama,

2.niyama.

3.asana.

4.pranayama,

5.pratyahara,

6.dharana,

7.dhyana ,and

8.samadhi.



Samadhi is the general term.In samadhi there are many types.The last one is callednirbijasamadhi.Bija means seed.Nirbija means seedless.Only in this type of samadhi seeds or vasanas are totally destroyed.Only in this samadhi, a yogi goes beyond the boundary of prakriti and enters for the first time into the region of the Purusha.

Thanking you,



Love



- R.Kuppusamy



mail id : r.kuppusamy@gmail.com



வெள்ளி, 17 ஜூன், 2011

Pattinathar

உடல்கூறு வண்ணம்


உடல்கூறு வண்ணம் பட்டினத்தார் எழுதிய பாடல்,


My Photo


பிறப்பு முதல் இறப்பு வரையான மனிதனின் அத்தனை செயல்களும் ஒரே பாடலில் உள்ளது,



உன்னதமான இந்தப் பாடல் வாழ்வின் நிலையாமையை ஒரே பாடலில் புரிய வைத்துவிடுகிறது



•••





உடல்கூறு வண்ணம்



பட்டினத்தார்



ஒரு மடமாது ஒருவனும் ஆகி, இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி,



உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணிதம் மீது கலந்து, 2



பனியில் ஓர்பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்து புகுந்து, திரண்டு,



‘பதுமவரும்பு கமடம்இது’ என்று பார்வை, மெய், வாய், செவி, கால், கைகள் என்ற 4



உருவமும் ஆகி, உயிர் வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து, மடந்தை



உதரம் அகன்று, புவியில் விழுந்து, யோகமும் வாரமும் நாளும் அறிந்து, 6



மகளிர்கள் சேணை தர, அணையாடை மண்பட உந்தி உதைந்து, கவிழ்ந்து,



மடமயில் கொங்கை அமுதம் அருந்தி, ஓரறிவு ஈரறிவு ஆகி வளர்ந்து, 8



ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும் உவந்து முகந்திட வந்து தவழ்ந்து,



மடியில் இருந்து மழலை மொழிந்து, “வா, இரு, போ,” என நாமம் விளம்ப, 10



உடைமணி ஆடை அரைவடம் ஆட, உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு,



தெருவில் இருந்து புழுதி அளைந்து, தேடிய பாலரொடு ஓடி நடந்து



அஞ்சு வயதாகி விளையாடியே . . . , 12



உயர்தரு ஞான குரு உபதேசமும், தமிழின் கலையும் கரை கண்டு,



“வளர்பிறை,” என்று பலரும் விளம்ப, வாழ் பதினாறு பிராயமும் வந்து, 14



மயிர்முடி கோதி, அறுபத நீல வண்டிமிர் தண்டொடை கொண்டை புனைந்து,



மணி பொன் இலங்கு பணிகள் அணிந்து, மாகதர் பூகதர் கூடி வணங்க, 16



“மதன சொரூபன், இவன்!” என மோக மங்கையர் கண்டு, மருண்டு, திரண்டு,



வரிவிழி கொண்டு சுழிய எறிந்து மாமயில் போல் அவர் போவது கண்டு, 18



மனது பொறாமல் அவர்பிறகு ஓடி, மங்கல செங்கலசம் திகழ் கொங்கை



மருவ, மயங்கி, இதழ் அமுது உண்டு, தேடிய மாமுதல் சேர வழங்கி, 20



ஒருமுதலாகி முதுபொருளாகி இருந்த தனங்களும் வம்பில் இழந்து,



“மதன சுகந்த விதனம் இது,” என்று, வாலிப கோலமும்வேறு பிரிந்து, 22



வளமையும் மாறி, இளமையும் மாறி, வன்பல் விழுந்து, −இரு கண்கள் −இருண்டு,



வயது முதிர்ந்து, நரைதிரை வந்து, வாத விரோத குரோதம் அடைந்து,



செங்கையினில் ஓர் தடியுமாகியே 24



வருவதும், போவதும், ஒருமுது கூனும் மந்தி எனும்படி குந்தி நடந்து,



மதியும் அழிந்து, செவிதிமிர் வந்து, வாயறியாமல் விடாமல் மொழிந்து, 26



துயில் வரும் நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சும் உலர்ந்து, வரண்டு,



துகிலும் இழந்து, சுணையும் அழிந்து, தோகையர் பாலர்கள் கோறணி கொண்டு, 28



“கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும்!” என்பவர் சஞ்சலம் மிஞ்ச,



கலகல என்று மலசலம் வந்து, கால்வழி மேல்வழி சார நடந்து, 30



தெளிவும் இராமல், உரையும் தடுமாறிச், சிந்தையும் நெஞ்சும் உலைந்து, மருண்டு,



திடமும் அலைந்து, மிகவும் மலைந்து, “தேறினால் ஆதரவு ஏது?” என நொந்து, 32



“மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்!” என்று தெளிந்து,



“இனியென கண்டம்! இனியென தொந்தம்! மேதினி வாழ்வும் இலாது இனி நின்ற 34



கடன்முறை பேசும்!” என உரை நா உறங்கி விழுந்து, கைகொண்டு மருந்து



கடைவிழி கஞ்சி ஒழுகிட வந்து, பூதமும் நாலும் சுவாசமும் நின்று,



நெஞ்சு தடுமாறி வரும் நேரமே . . . , 36



வளர்பிறை போல எயிறும், உரோமமும், சடையும், சிறுகுஞ்சியும், விஞ்சு



மனதும் இருண்ட வடியும் இலங்க, மாமலை போல எம தூதர்கள் வந்து 38



வலைகொடு வீசி, உயிர்கொடு போக, மைந்தரும் வந்து குனிந்து அழ, நொந்து



மடியில் விழுந்து மனைவி புலம்ப, “மாழ்கினரே இவர்; காலம் அறிந்து 40



பழையவர் காணும்!” எனும் அயலோர்கள் பஞ்சு பறந்திட, நின்றவர் “பந்தர்



இடும்!” என வந்து பறையிட முந்தவே, “பிணம் வேக விசாரியும்!” என்று 42



பலரையும் ஏவி முதியவர் தாமும்,இருந்த “சவம் கழுவும் சிலர்!” என்று,



பணி துகில் தொங்கல் களபம் அணிந்து, பாவகமே செய்து, நாறும் உடம்பை 44



“வரிசை கெடாமல் எடும்!” என, ஓடிவந்து இளமைந்தர் குனிந்து சுமந்து,



கடுகி நடந்து, சுடலை அடைந்து, ‘மானிட வாழ்’வென ‘வாழ்’வென நொந்து, 46



விறகிடை மூடி, அழல்கொடு போட, வெந்து விழுந்து, முறிந்து, நிணங்கள்



உருகி, எலும்பு கருகி, அடங்கி ஒருபிடி நீறும் இராத உடம்பை



நம்பும் அடியேனை இனி ஆளுமே!