பரமானந்த குருவும், ஆங்கில சிஷ்யையும்!
by Bharati Mani on Friday, July 13, 2012 at 10:19am ·
முந்தாநேற்று,
டைரக்டர் ஷங்கர் ஆபீசிலிருந்து அழைப்பு வந்தது, உடனே ஆபீஸ் வரும்படி.
நான்கு விருதுப்படங்களில் என்னோடு பணிபுரிந்த சூட்டிகை ஜெயராம் தான்
இப்போது ஷங்கரின் வலதுகை. அன்று மாலையே மும்பை போய் புதுப்படம் “ஐ”
கதாநாயகி ஆங்கில நடிகை எமி ஜாக்ஸனுக்கு -- மதராச பட்டணம் கதாநாயகி -- தமிழ்
வசனங்களும், தமிழக உடல்மொழியும் கற்றுத்தரவேண்டுமென்று
சொல்லிக்கொண்டிருக்கும்போதே மும்பைக்கான விமான டிக்கெட் வந்துவிட்டது
’பாரதி’யில் அப்பாவாக நடித்ததை விட, நான் முக்கியமாக்க்கருதுவது ‘பாரதி யார்?’ என்று கேட்ட மராத்திய நடிகர் சாயாஜி ஷிண்டேயை படத்தில் ’பாரதி’யாக மாற்றியது…..நடிப்பிலும், உதடசைவுகளிலும். இது ஜெயராமுக்கு நன்றாகவே தெரியும்.
மாலையே மும்பை போய் எமி ஜாக்ஸனை சந்தித்து இரு நாட்கள் கூட இருந்து என்னால் இயன்றதை சொல்லிக்கொடுத்தேன். எனக்கு வாய்த்த நடிகை கர்ப்பூரம் மாதிரி…..அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. பலரும் என்னை நல்லவன் என்கிறார்கள். அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஏமியும். ”Mani Sir! Hug me…and bless me! You are a great person!’ என்று ஒரு சர்ட்டிபிகேட்டும் கொடுத்து, அணைத்துக்கொண்டு விடை பெற்றார்.
ஷங்கரின் புதுப்படம் “ஐ” மிக மிக பிரும்மாண்டமான படம்! வரும் ஜூலை 15-ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பம். மற்ற விவரங்கள்…..மூச்…..நான் சொல்லக்கூடாது!
பாரதி மணி

குருவும் சிஷ்யையும்.
கர்ப்பூரம் போல....
'Mani Sir! Hug me...and bless me!'
'See you in Chennai..!'
- 13 people like this.
- Chandramowleeswaran Viswanthan தியேட்டரிக்கல் சமாச்சாரங்கள் பற்றி உங்களிடம் நிறைய பேசணும்
- Ks Suka ஐயா, இதை ஒத்துக்கிறதுக்கு முன்னாடி, யாரோ ‘நாலும் தெரிந்த ஒரு பெரியவரிடம்’ டிஸ்கஸ் பண்ணினீங்களாமே! அப்படியா? அது உண்மைன்னா, அந்த அண்ணாச்சிக்கு என் நமஸ்காரங்கள்.
- Bharati Mani சுல்தான்! ஏன்.....கும்பமுனிக்கும் இந்த வயத்தெரிச்சல் இருக்கக்கூடாதா என்ன?Yesterday at 3:04pm · · 1
- Sisulthan Eruvadi கும்பமுனி சீச்சி இந்த பழம் புளிக்கும் என்றும் , கிடைக்காது கிடைக்காதுண்னும் எழுதி மட்டும் புகழடைந்ததை எல்லாம் இப்ப போதும் போதும்ண்ணு சொல்லுற அளவு வாரிக் குமிக்கிறார்...ம்ம்ம்...Yesterday at 3:23pm · · 1
- Bharati Mani சினிமா ஒரு மாயலோகம் தான்! இன்னிக்குப்பாருங்க.... எத்தனை கமெண்ட்....எத்தனை லைக்ஸ்! நானும் நாடகத்திலெ அறுபது வருசமா கத்திக்கிட்டிருக்கேன். எவனாவது கண்டுக்கிறானா....ம்ம்... அது தாண்டே சினிமா!Yesterday at 3:24pm · · 5
- Madhumitha Raja எல்லா படமும் அழகு. ஆமா. இத்தனை பேரு ஏன் பொறாமையும் வயித்தெரிச்சலும் படறாங்க. குருவே சரணம் நல்லா இருக்கு.21 hours ago · · 1
- Sisulthan Eruvadi ////ஆமா. இத்தனை பேரு ஏன் பொறாமையும் வயித்தெரிச்சலும் படறாங்க. //// என்ன கேலியா? நக்கலா?????18 hours ago · Edited ·
- Sisulthan Eruvadi ////சுல்தான்! ஏன்.....கும்பமுனிக்கும் இந்த வயத்தெரிச்சல் இருக்கக்கூடாதா என்ன?//// நான் சொன்னது கும்பமுனியின் ........தாசனைப் பற்றி...
உங்களுக்கு மனசு இன்னும் கொஞ்சம் விசாலமாகணும்னு பிராத்திக்கிறேன். :)