வியாழன், 21 ஜூலை, 2011

Elloraa.

.முகப்புபுத்தகங்கள்.எல்லோரா My Photo


இளங்கோ கல்லானை
பயணம்

வேலையை விடுவது என்பது இப்பொழுது அடுத்த வேலையைத் தேடுவதற்கு என்பதற்கு மாறாக, அடுத்த இடத்தைத் தேடுவது என்றாகி விட்டது. வேலையைப் பெறுவது எவ்வளவு இன்பமோ அதைவிடப் பல மடங்கு இன்பம் வேலையை விடுவது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். சத்தீஸ்கர் மாநிலம் கொடுத்த அனுபவம் தந்த தைரியத்தில் எங்கு வேலை கிடைத்தாலும் சுற்றிப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை. அதுவும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சக குமாஸ்தாக்களின் பாவனைகளையும், அவர்கள் அமெரிக்கா செல்ல நகர்த்தும் காய்களையும் கடந்த ஆறு வருடங்களாகப் பார்த்துப் பார்த்துச் சலித்தாகிவிட்டது. அமெரிக்கா அமெரிக்கா என்று மூச்சு விடும் கூட்டத்திற்கு மத்தியில் வாழ்வது பெரும் வேதனை. அப்படி மூச்சு விடுவதன் பலன்களைப் பற்றி பதஞ்சலி யோக சூத்திரத்திலோ அல்லது திருமூலரின் மந்திரத்திலோ என்ன சொல்லப்பட்டிக்கிறது என்று வாழும் கலையறிந்த யாராவது சொன்னால் நல்லது.



எனக்கு இருப்புக் கொள்ள முடியாத கொழுப்பு வேறு. ரொம்ப நாள் தாங்கக்கூடிய வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. இரண்டே இரண்டு டப்பாக்கள் தான் எல்லா இந்திய தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களையும் நகர்த்துகிறது. ஒன்று அடுக்குமாடி வீடுகளில் ஒரு வீடு எனும் டப்பா, இன்னொன்று சொகுசு கார் எனும் டப்பா. வட்டிக் கணக்கை பற்றியே பேசும் பள்ளிக்கூட வாத்தியார்கள் இவர்களை விட மேல் என்ற எண்ணம் உருவாகி விட்டது. Eat shop and be happy என்று நகரெங்கும் விளம்பரங்களைப் பார்க்கும் போது, ஆகா என்னே ஒரு உன்னத அறிவு நிலையை அடைந்து விட்டோம் என்று ஆனந்தக் கூத்து ஆடாமல், கிடைத்த வேலையில் நிலைக்கத் தெரியாமல் ஓடத் தயாரான நிலையிலேயே இருந்தேன். எங்களூரில் சித்திரை மாதம் பிறந்தால் பண்ணைகளை மாற்றி வேறு வேலைக்குச் செல்வார்கள் பண்ணை வேலைக்காரர்கள் .அப்பொழுது கணக்கு முடிக்கப்படும். வேலையை விடுவதை சித்திரை விடுவது என்று சொல்லுவார்கள். தகவல் தொழிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அதாவது சித்திரை திறன்களை மதிப்பிடும் காலமும் கூட. எனக்கு சித்திரை மாதம் தலைக்குள் வழக்கம் போல மின்னலடித்தது. நமக்கு என்ன ஒரு ஐந்து சதவீதம் சம்பள உயர்வோ அல்லது அடுத்த மேலாளர் பதவியோ தருவார்கள். வேறு ஒன்றும் நடக்காது. நானும் சித்திரை விடலாம் என்று முடிவெடுத்தேன். அலுவலகத்தில் சொல்லிவிட்டு ஒரு மாதக் காலக்கெடுவையும் கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன். அடுத்து எந்த இடம் என்று யோசிக்கக்கூட இல்லை. ஆனால் எனக்கு ஒரு சங்கடம் அதில் இருந்தது.



பூனாவில் நாங்கள் சென்ற ஆண்டு குடியேறிய பொழுது ஒரு பெண் வேலை கேட்டு வந்தார். வீட்டு வேலைக்கு ஆள் தேவை இல்லை என்றாலும், சில வேலைச்சுமைகள் குறைவது என்னவோ சரிதான் என்று பட்டது . சரி என்று ஒப்புக் கொண்டு அவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டோம். எனது மனைவிக்கு சுற்றத்துடன் சமூகஉறவு உருவாவதில் உற்ற துணைவியாக மாறினார் அந்தப் பெண். என் மனைவியை பாபி என்றும் என்னை பையா என்றும் அழைத்தார். எனது மகன் அவரை அத்தை என்று அழைத்தான். மராத்தியிலும் அத்தை தான். அவருடைய தம்பியின் திருமணத்திற்கு எங்களைத் தயங்கித் தயங்கி அழைத்தார். என்ன காரணம் என்று இந்தியாவில் பிறந்த எவரும் யூகிக்கக் கூடியதுதான். அவர் ஒரு தலித். மகாராஷ்டிரம் வந்த பின்பு எங்களுக்குக் கிடைத்த முதல் அழைப்பு. எனக்கும் திருமணங்கள் எப்படி நிகழ்கின்றன என்று பார்க்க ஆர்வம். நாங்கள் திருமணத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்ற பொழுது ஒரு வெள்ளைப் புடவை வாங்கித்தரச் சொன்னார். நமது மங்களகர நிறக் கருத்துக்களுக்கு இப்படி ஒரு சோதனையா என்று கொஞ்சம் நெருடலாக இருந்தது உண்மைதான். அப்புறம் ஒருவழியாக விளக்கினார். தாங்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், போதி சத்துவர், அம்பேத்கர் உருவப் படங்களின் முன்னிலையில் அனைவரும் வெள்ளுடை அணிந்து திருமண உறுதி ஏற்றுக் கொள்வோம் என்றார். நாங்கள் திருமணத்திற்குச் சென்றோம்.



அப்பொழுதுதான் மகாராஷ்டிர மாநில தலித்துக்களை ஓரளவு பௌத்த மதத்தின் வழியாக ஒருங்கிணைக்க முயன்றிருக்கிறார் அம்பேத்கர் என்று புரிந்தது. திருமணம் முடிந்த பின்பு எல்லோரா கோவில்களுக்கு புனிதப் பயணம் செய்வது வழக்கம் என்று சொன்னார்கள். புத்த மதக் கலாசாரம் வேரூன்றிய மண்ணாக மராட்டியம் இருந்தது என்பதைத் தொடர்புபடுத்தியும் அம்பேத்கர் யோசித்திருக்கலாம் என்று பட்டது.புத்த மதம் வழியாக சாதியைக் கடக்க முயன்றிருக்கிறார் அம்பேத்கர். ஆனால் என்ன, உலகின் முக்கிய கலைச் சின்னங்களாக அஜிந்தா (இப்படித்தான் மராட்டியில் சொல்ல வேண்டும்) மற்றும் எல்லோரவை கருத மக்களுக்கு உரிமை இருக்கிறது. கலையைக் கண்டவருக்கு அவர் இன்பம், கடவுளைக் கண்டவருக்கும் அவ்வாறே.



இந்தப் பெண்ணும் நாம் சித்திரை விட்டதால் வேலையை விட வேண்டியதிருக்குமே என்று கொஞ்சம் வருத்தம் இருந்தது. பெரிய முடிவுகளைச் சிறிய முடிவுகள் பாதிக்கத் தானே செய்யும் என்றாலும் ஒரு மாற்று ஏற்பாட்டைச் செய்து விடலாம் என்று முடிவெடுத்து வேறு வேலை வாங்கித் தந்து விட்டேன்.



நண்பர்களை அழைத்து வேலையே விட்ட விஷயத்தை தெரிவித்தேன். மகாராஷ்டிரத்தை சுற்றலாம் என்ற யோசனையைத் தெரிவித்தேன். அழகேச பாண்டியனும், வசந்தகுமாரும் பயணம் என்றால் சளைக்காதவர்கள். நெடு நாட்களாக நான் பார்க்க நினைத்த இடங்கள் அஜிந்தாவும் எல்லோராவும். 1997 இல் ஒரு முறை சைக்கிள் பயணமாகச் செல்ல முடிவெடுத்து அது தோல்வியில் முடிவுற்றது. இப்பொழுது வாய்ப்பு. அழகேசன் தனது வாகனத்தை தயார் செய்தார். வசந்தகுமார் நண்பர்களைத் தயார் செய்தார். பயணத்திட்டம் இனிதே தொடங்கியது. வசந்தகுமார், அழகேசன், சு.வேணுகோபால், செல்வ புவியரசன் புனே வந்து சேர்ந்தனர். ஆடு வளர்ப்பு தொடர்பாக ஒரு பண்ணையில் சில கேள்விகள் கேட்க விரும்பி பாராமதி மாவட்டம் போய் அங்கிருந்து ஔரங்கபாத் சென்று சேர்வதாகத் திட்டம். காலையில் கிளம்பினோம்.



அதிகாலை கிளம்ப நினைத்து ஒன்பது மணி ஆகிவிட்டது. ஐந்து பேர் என்பது நல்ல கையடக்கமான எண்ணிக்கை தான். காலையில் பூனாவில் இருந்து சாஸ்வத் மலை வழியாகக் கிளம்பினோம். சாஸ்வத் எனும் ஊர் பூனாவைச் சுற்றி இருக்கும் மலைகளில் ஒன்றின் மேல் அமைந்திருக்கும் சிறு ஊர். நீரா வழியாகச் சென்றடைய வேண்டிய ஊர் வட்ஜல். அங்கு ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் உள்ளது. நானும் அழகேசனும் ஆடு வளர்ப்பு பற்றி இரண்டு வருடமாக திட்ட அளவில் முயன்று வந்துள்ளோம். அதைப் பற்றிய முறையான தகவல்கள் ஆவணகளையும் சேகரித்து வருகிறோம். ஒருங்கினைந்த பண்ணை அமைப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களில் ஆட்டு உரமும் ஒன்று.



கோடை தொடங்கி இருந்ததால் சாஸ்வத் மலைகளில் மலைகளில் உள்ள புற்புதர்களுக்கு தீ வைத்து கருக விட்டிருந்தனர். இது ஒரு நவீன விவசாய முறை. குறிப்பிட்ட அளவு ஏறியவுடன் சமதரை வரக் கூடிய உயரமான மலைகள். பச்சையாகவும் இல்லாமல் பாறையாகவும் இல்லாமல் தூரத்தில் இருந்து மணல் மேடு போல் தோற்றமளிக்கும் மலைகள். இன்னும் கூட அதிகமாக மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தக்கூடிய குறுகலான சாலைகள் தான். ஆனால் பூனாவில் இருந்து வட்ஜல் செல்லும் வழியில் பெரிய நெரிசல் ஒன்றும் இருக்காது. ஜெஜூரி என்ற ஊர் வரும் வரை கொஞ்சம் பசுமையான விவசாயம் தென்பட்டது. பச்சைக் காய்கறிகள் அதிகம் கிடைக்காது. எங்கும் மாதுளைச் செடிகள். மாதுளம் பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். இங்கே உள்ள மாதுளை இனிப்பாக இருக்கக் காரணம் ஒன்றைச் சொன்னார் தோட்டக்கலை நிபுணர் ஒருவர். அதாவது பகலில் அதிகமான வெயிலும் இரவில் நேர்மாறான குளிரும் இருக்கும் பகுதியில் பழங்களும் அதிக இனிப்புடன் இருக்கும் என்பது ஒரு மரபியல் விதி. நிலம் மேடும் பள்ளமாக ஏறி இறங்கிச் செல்வதை இரு சக்கர வாகனத்தில் உணருவதைப் போல காரில் உணர முடியாது. இதே மலைகள் ஆனி மழைக் காலத்துக்குப் பின்பு அப்படியே பசுமையாக மாறிவிடும். பச்சைப் புல் ஆறடி வரை உயர்ந்து விடும். இடையிடயே சோளம் கரும்பு, தக்காளி, கீரை விவசாயம் தென்பட்டது. வசந்தகுமார் மகாராஷ்டிர கிராமப்புறங்கள் எதிர்பார்த்திருந்ததை விட ஏமாற்றம் அளிப்பதாகச் சொன்னார். பொட்டல்களும் விளைநிலமாகத் தகுதியில்லாத மேடுபள்ளங்களும் நிறைய. இங்கே மாற்றுத்தொழில் பாலைவன மிருகம் என்றழைக்கப்படும் ஆடு வளர்ப்புதான்.



நீரா என்ற ஊர் சென்றடையும் வரை எங்கும் பச்சையைக் காண முடியவில்லை. நீராவில் ஒரு கால்வாய் நிறைந்து ஓடியது. அருகில் அரை உயிருடன் ஓடும் ஆறும் உண்டு. எனக்குத் தெரிந்த இந்தியிலும் மராத்தியிலும் வழி கேட்டு வட்ஜல் சென்றடைந்தோம். அரசியல் கேலிகளுடன் மகாராஷ்ட்ராவின் சமூக அமைப்பைப் பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். வழி கேட்கும் நாம் பதிலளிப்பவரின் பரிவைக் கண்டு உள்ளூரில் இருப்பதாகவே உணரலாம். மக்கள் தனித்து நம்மிடம் உரையாடுவதைப் போன்ற உணர்வுதான் எல்லோருக்கும் கிடைக்கும். ஆப்கானிஸ்தானிலோ, பாலஸ்தீனிலோ அமெரிக்கர் ஒருவர் வழி கேட்டாலும் ஒரு சாதாரண மனிதர் இப்படித்தான் பரிவுடன் பதில் சொல்வார் என்று பட்டது. மராட்டியம் மிகவும் இணக்கமான ஒரு இடமாகவே எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு. அண்டை மாநில நீர், நிலத் தாவாக்களில் கூட பெரிதாக அரசியல் கோஷங்கள் கிடையாது. இப்படிப்பட்ட மாநிலத்தில் செல்வாக்கைச் செலுத்தும் சரத் பவார் போன்றவர்களுக்கு உலக ஊழல் வரைபடத்தில் மிக முக்கியமான இடம் உண்டு. விவசாயிகளின் தற்கொலைக்கு புதிது புதிதாக பொய்களைக் கண்டுபிடித்து உலகுக்குச் சொல்வார்கள். இவர்களின் பேராசையால் மக்கள் என்ன கஷ்டப்பட்டாலும் இவர்களுக்குக் கவலை இல்லை. இவற்றைப் பேசுவது இந்த நிலத்தைப் பற்றி பேசுவதுதான். மக்கள் மிகுந்த பேராசைக்காரர்கள் என்று கூட அரசியல்வாதிகள் சொல்லிச் சமாளிக்கிறார்கள்.



வட்ஜல் செல்லும் முன்பாக ஒரு இடத்தில் சுங்க வரி செலுத்தினோம். இவற்றைப் பற்றிய பேச்சுகளில் எனக்கும் அழகேசனுக்கும் கடுமையான வாதங்கள் நடந்தது. காரில் வந்த அழகேசன் கர்நாடகத்துக்கும் மகாராஷ்டிரத்துக்கும் இடையில் மட்டும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் toll வரி கட்டியிருந்தார். ஒரு பெரிய ஊரில் நுழையும் போது வரி, பின்பு வெளியேறும் போது வரி என்று எங்கெங்கும் வரி. toll என்பது தொல்லை என்ற தமிழ்ச் சொல்தான். இந்தோ ஐரோப்பிய மொழிகளில் எங்கும் இல்லாது தமிழில் மட்டுமே உள்ளது. திராவிட வேர்ச்சொல் அகராதியில் உள்ளது இந்தச் சொல். தொல்லை வரி தான். வாகனம் வாங்கும் போது ஆயுள் சாலை வரி, பின்பு ஒவ்வொரு லிட்டர் எரிஎண்ணை நிரப்பும் போதும் சாலை வரி. இவ்வளவு வரியையும் வாங்கி சாலை அமைக்காதவர்கள், பராமரிப்புக்கும் ஆக்கத்துக்கும் உபரியாக வரி வாங்குகிறார்களே என்ற கோபம் எனக்கு.



பாராமதிக்கு சென்று, அங்கிருந்து அஹமத் நகர் சென்று இரவு ஔரங்காபாத் செல்வதாகத் திட்டம். ஆனால் அதிக நேரமாகிவிட்டால் அஹமத் நகரிலேயே தங்கிவிடலாம் என்று எண்ணிக் கொண்டோம். பாராமதி சரத் பவாரின் மாவட்டம். கரும்பு வட்டம் என்றழைக்கப்படுகிறது. உழவு கடிகட்டியாக கரிசல் மண்ணைப் பெயர்த்துப் போட்டிருந்தார்கள். காளைகள் ஓங்குதாங்காக வண்டிகளில் கரும்பு ஏற்றிச் சென்றன. இது தவிர டிராக்டர்களும் லாரிகளும் கரும்பைச் சுமந்து செல்கின்றன.தரமில்லாத கரும்புக்கு அதிக விலை வாங்கித் தரும் ஒரு தரகராகவே அரசியலில் சரத் பவாரை நியமித்து விட்டார்கள் மராட்டியர்கள். கரும்பு வெட்டுக்கு வந்த கூலிகள் ஆங்காங்கே கூடாரம் அமைத்திருந்தார்கள். குழந்தைகள் வைக்கோல் பிரியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வைக்கோல் பிரியில் தான் முழுக் கூடாரமும். சில இடங்களை பச்சையாகவும், சில இடங்களில் நீலமாகவும் கால்வாய்களில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு ஆசைகள் பற்றிப் பேசிக் கொண்டோம். ஒன்று கால்வாயில் நீந்திக் குளிப்பது, இன்னொன்று சாலையோரக் கடைகளில் கரும்புச் சாறு வயிறும் முட்டக் குடிப்பது என்று. முதல் ஆசை நிறைவேற வில்லை, காரணம், கால்வாய்களில் இறங்குவதற்கான படித்துறைகள் இல்லை. இருக்கும் இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம். கரும்புச்சாறு குடித்தோம். அதன் பின்பு வேணுகோபால் அவ்வளவு போதை நிலையை அடைவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அஹமத் நகர் வரும் வரை படப் பாடல்களை பாவனையுடன் பாடிக்கொண்டு வந்தார். துணைக்கு செல்வ புவியரசனும் சேர்ந்து கொண்டார். அவரின் பாவனைகள் மாணவிகள் மத்தியில் பிரபலம் என்று சொன்னபோது ஒப்புக்கொள்ளத் தோன்றியது. கலைஞனுக்கு பாவனைதான் முக்கியம் போல. வேணுகோபாலின் கதைகளில் வரும் சோகம் முற்றிலுமல்லாத உற்சாகமான வேணுவைப் பார்த்தோம். இவ்வளவு சுதந்திரம் இல்லாத ஒரு மனிதனுக்குள் கலை எதுவும் நுழைய முடியாது என்பதற்கு அவர் நல்ல உதாரணம்.



மாலை முழுவதும் அதிகமான தொல்லை வரியைச் செலுத்தியும் மோசமான சாலைகளிலேயே பயணித்தோம். அஹமத் நகரில் ஒரு விடுதியில் அடைந்து கொள்ளலாம் என்று தேடி ஒரு மட்டமான இடத்துக்கு அதிகமான வாடகை கொடுத்தோம். மராட்டியத்தில் விடுதி வாடகை பகல்கொள்ளை. அறைகளைச் சுத்தம் செய்யும் பழக்கமில்லை என்பது கூடுதல் கொடுப்பினை.



காலைப் பயணம் கொஞ்சம் இதமாக இருந்தது. மிசால் பாவ், வடை பாவ் பற்றி பேசிக்கொண்டே வந்தேன். வசந்தகுமார் மிளகாயை எப்படி மராட்டிய பாணியில் இடது கையில் வைத்துக் கடித்துச் சாப்பிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு வந்தார். புத்தர் பத்மபாணி. மக்கள் மிளகாய் பாணியர். செல்வ புவியோ எந்த இடத்திலும் எதற்கும் தயார் என்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொள்வார். அவருக்கு இனிப்பு மிட்டாய்களைக் கண்டடைவதில் தான் ஆனந்தம். சாரதி அழகேசன் எங்கும் அரிசிச் சோறு என்று தேடி அலைந்தார். மகாராஷ்டிரத்தில் அரிசி உணவு மிகவும் குறைவு. இதற்கு நேர்மாறாக உத்தரபிரதேசத்திலும் பீகாரிலும் வங்கத்திலும் சத்திஸ்கரிலும் அரிசி உணவே அதிகம். காலை உணவாக காரமான மசாலுடன்(பாசிப் பயறு கூட்டு) பாவ் ( பண் ரொட்டி) உண்டோம். இந்தப் பகுதிகளில் உணவு காரம் அதிகம் என்றாலும் ருசி நன்றாக இருக்கும், ஆந்திரத்தைப் போலவே. இதற்குப் பின் சாப்பிட்ட எல்லா இடங்களுமே மிகுந்த சோதனையைத் தந்தது. நான் எச்சரித்தும் கேட்காமல் தாளி (அரை வேக்காட்டு அரிசியும் (சோறு அல்ல) சப்பாத்தியும் காய்கறிகளும்) உணவு வேண்டும் என்று சொல்லிப் பல இடங்களில் மாட்டிக் கொண்டோம்.



காலையில் தௌலதாபாத் கடந்து எல்லோராவை அடைந்தோம். தெலைதாபாத் இந்தியாவிலேயே மிகப் பாதுகாப்பான மலைக் கோட்டை இதுதான் முன்னாள் தேவகிரி. யாதவ அரசின் தலைநகர். யாதவர்களை வென்று இதைக் கைப்பற்றிய பின் இந்நகரால் கவரப்பட்ட துக்ளக் தனது தலைநகரை டெல்லியிருந்து இங்கு மாற்றினார். வேனில் வியாதிகளில் சிக்கி பயணத்திலேயெ பல்லாயிரம் பேர் மாண்டனர். கோடை நீர் வறட்சி காரணமாக உயிர் சேதத்துடன் துக்ளக் மீண்டும் டெல்லியையே தலைநகராக்கினார். தௌலதாபாத்தை மாலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று மேலேறிச் சென்றோம். அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டரில் எல்லோராவிற்கு (வேருள் என்று மராத்தியில் அழைக்கப்படுகிறது) குன்றுச் சாலையில் ஏறிச் செல்ல வேண்டும். காலையிலேயே வெய்யில் ஏறி விட்டிருந்தது. சாலையின் இரு புறங்களிலும் சிறிது பச்சை இருந்தாலும் வெயில் பட்டுத் தெறிக்கத்தான் செய்தது. சென்று சேர்ந்தவுடன் உணர்ந்தது, அவ்வளவாக வியாபாரிகள் தொல்லை இல்லை என்பது. ஆம் கோவில், சுற்றலாத் தளங்களில் நம்மைப் பணிய வைக்கும் தோரணையில் வந்து கெஞ்சி தொல்லை செய்வார்கள். இது பெரிய தர்ம சங்கடம். வியாபாரம் என்றால் வெறி இருக்க வேண்டும் போலிருக்கிறது. இந்தக் குகைகளில் நுழைய கோவில் நுழைவுப் போராட்டமெல்லாம் நடத்த வேண்டிய அவசியம் எப்பொழுதும் இருந்ததில்லை. காலமெல்லாம் திறந்தே கிடந்திருக்கிறது. எல்லோருக்கும் குறைந்த கட்டணம் தான் என்றாலும் கோடை விடுமுறையில் அதுவும் ஞாயிற்றுக் கிழமைக்கான கூட்டம் அங்கு இல்லை. உலக வரைபடத்தில் ஒரு முக்கியமான இடத்தில நிற்கிறோம் என்ற எண்ணம் உள்ளே நுழையும் வரையில் ஏற்பட வில்லை. முதலில் வலமிருந்து பார்க்கலாம் என்று திட்டம். குறிப்பாக எங்களில் யாரும் வலதுசாரியே கிடையாது. மொத்தம் முப்பத்தி நாலு குகைகள். இதில் பன்னிரண்டு புத்த குகைகள், பதினேழு இந்துக் குகைகள், ஐந்து சமணக் குகைகள்.



முதலில் புத்த குகைகளைக் காணச் செல்லலாம் என்று கிளம்பினோம். ஒவ்வொரு குகையின் வாசலிலும் குகையின் எண்ணை வெள்ளை பெயிண்டில் எழுதி இருந்தார்கள். முதல் குகை வலது ஓரத்தில் இருந்தது. முதலில் நீர் தொட்டியைப் பார்த்தோம். உள்ளே இருந்த எட்டு அறைகளைப் பார்க்கும் பொழுது எவற்றையோ சேமித்து வைக்கும் அறைகளைப் போல் இருந்தன. அவற்றின் குளுமையும் சாந்தமும் குடைவரைக் கோவில்கள், சமணப் படுகைகளில் மட்டுமே உணரக் கூடியது.



இரண்டாவது குகையில் பன்னிரண்டு தூண்கள் புத்தர் சிலைகளுடன் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குகையின் நுழைவாயிலிலேயே பத்மபாணி பெரிதாகக் காட்சி தருகிறார். அதுவும் தவிர, மைத்ரேயனைச் (எதிர்கால புத்தன் ) சுமந்து சிம்மாசனத்தில் காட்சி தருகிறார். மூன்றாம் நான்காம் குகைகளும், இரண்டாம் குகையின் வடிவிலேயே உள்ளன, ஆனாலும் கொஞ்சம் சேதம் அதிகம். இங்குதான் வசந்தகுமார் சொன்னார், பயலுகளுக்கு கல் அமையவில்லையே; தமிழகத்தைப் போல கல் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று. ஆம், கொஞ்சம் கருங்கல்லும் மாக்கல்லும் கூடியது போன்ற கற்சிலைகள் உடைய ஆரம்பித்து விட்டன. இதில் அரசியல் சதி ஏதும் இல்லை.அபூர்வமாக முஸ்லிம் படைகளின் கைங்கர்யம் ஏதுமில்லை. எல்லோராவின் சிலைகளில் வண்ணப் பூச்சு இருந்திருந்ததற்கான அடையாளங்களும் தென்பட்டன. அதிலும், அதிகமாக வெள்ளை, நீலம், சிவப்பு வண்ணங்கள். உதிர ஆராம்பித்து பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கலாம்.



காலத்தால் எந்தக் குகை முன்னது என்பதில் சில சர்ச்சைகள் இருந்தாலும் பௌத்தக் குகைகளில் ஆறாம் எண் குகை தான் முதலாவது என்று அறியப்படுகிறது. கால வரிசைப்படி அடுக்கப்பட்டிருக்கிறது என்பதில் அறிஞர்களிடையே சர்ச்சை உள்ளது. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து எட்டாம் நூற்றாண்டு வரை பௌத்தக் குகைகள் குடையப் பட்டிருக்கின்றன. பத்து விஹாரங்களை அதாவது தங்கிப் படிக்கும் அறைகளை, படிப்பதற்கும், தியானம் செய்வதற்கும், உண்ணவும் உறங்கவும் அமைத்திருந்தார்கள். இதில் உள்ள புத்தர் தாமரை மலர்களுடன் காட்சி தருகிறார். புத்தர் பாதம் என்பதே பரவசமான சொற்றொடராக மாறிய உணர்வு ஏற்பட்டது. மராட்டியர்கள் சிலர் கோவில் வழிபாடு போல புத்தரின் சிலையை வணங்கினர். அந்தக் குகை எதிரொலியில் புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி கேட்டுக் கொண்டிருப்பது போல காலம் தாண்டிய மனப் பிரமை வந்து போனது. பத்தாம் எண் குகை தான் பௌத்தக் குகைக் கோவில்களிலேயே மிகவும் பிரமாண்டமானது. அங்கிருந்த யாரோ என்னிடம் சேப்பல் என்ற கிறிஸ்தவ தேவாலயத்தின் வார்த்தையை உபயோகித்தார்கள்.புவியரசன் வஜ்ரபாணி, பத்மபாணி என்பதைப் பற்றி தகவலறிவோடு சிலாகித்துக் கொண்டிருந்தார்.



தம்மம் என்ற சொல் எதிரொலிக்கும் என்று எதிர் பார்ப்பு கூட எழுந்தது. பத்தாம் எண் குகையை விஸ்வகர்மா குகை என்று அழைக்கிறார்கள். அப்படியே புத்தரின் தலைக்கு பின்னே போதி மரத்தை வடித்திருந்தார்கள். கல்லிலே மர வேலைப்பாடு போல வரி வரியாக வளைவுகள் செய்திருந்தார்கள். வளைத்து நிறுத்திய உத்திரங்கள், மரச்சட்டங்கள் போல பாறைகளில் வடிவமைத்துள்ளார்கள். அரங்கு போல மேல் மாடம் அமைத்து இருந்தார்கள். அங்கிருந்து கீழ் உள்ளவற்றைப் பார்ப்பதும் ஒருவிதமான அனுபவம். இசை அரங்கம் என்று அழைத்தார்கள். ஆனால் இசையை பௌத்தம் போஷித்ததா என்ற சந்தேகத்துடன் வெளியே வந்தோம். பதினோராவது குகை இரண்டு தளங்கள் கொண்டது. தோ தள் என்று அழைக்கிறார்கள். பன்னிரெண்டாவது குகையை தீன் தள் அதாவது மூன்று தளங்கள் உள்ள குகை என்று சொல்கிறார்கள். சுவர்களில் ஐந்து, ஏழு போதிசத்வர்களின் உருவங்களை செதுக்கியிருந்தார்கள்.



குகைகள் உள்ளே அமர்ந்தும் படுத்தும் நகர்ந்தும் ஒவ்வொரு குகையாக பயணித்தோம்.வசந்தகுமாரிடம் சொன்னேன், இந்த குகைகளைக் குடைந்து சிலை செய்வதற்கு முன்பு புத்தரிடம் சென்று அந்தக் கலைஞன் என்ன கேட்டிருப்பான்? அதற்கு புத்தர் என்ன சொல்லியிருக்கக் கூடும் என்று ஒரு காலத் தொடர்புகளற்ற கற்பனையை எண்ணிப் பார்த்தால் ஒன்று சொல்லலாம் என்றேன். ஆம் தர்மம் எவ்வளவு பெரிது என்று அந்தக் கலைஞன் கேட்டிருக்கக் கூடும். அதற்கு புத்தர் நீ எவ்வளவு செயல் செய்கிறாயோ அவ்வளவு பெரிது என்று சொல்லியிருக்கலாம். அதன் விளைவு தான் இந்தக் குகைக் கலை. கலைஞனின் தர்மம் அவன் ஆயுளை விடப் பெரிதாக காலத்தை வென்று அங்கேயே நின்று கொண்டிருப்பதைத்தான் புத்தர் தம் சொல்லில் தர்மம் என்று சொல்லியிருக்கக் கூடும் என்றேன். நண்பர்கள் உற்சாகமாக ஆமோதித்தனர். செல்வ புவியரசனோ வைதீக எதிர்ப்பாளி, சமூகப் புரட்சியாளன் என்ற புத்தரின் அம்சம்தான் தன்னைக் கவர்ந்துள்ளதாகச் சொன்னார். வேணுகோபாலோ இங்கும் அங்கும் சென்று ஒளியைக் குகைக்குள் எவ்வாறு செலுத்தி காட்சியாக்க யூகித்துள்ளான் கலைஞன் என்று வியந்து கொண்டிருந்தார். அழகேசன் தன்னுடைய காமிராவில் குகைச் சிலைகளை மட்டும் கணக்கிடாமல், அதனூடாக மக்களின் நகர்வையும் சேர்த்துப் படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு மனிதர்களின் பங்கு இல்லாமல் தூய இடமாகவோ பொருளாகவோ காண்பிப்பதில் நம்பிக்கை இல்லை போல.



பாறைகளை களிமண்ணைப் போல வெட்டியும் வளைத்தும் செய்திருக்கும் விளையாட்டு ஒருபுறம் பிரமிப்பைத் தந்தது என்றால், இன்னொரு புறம் புத்தன் என்ற புரட்சியாளனின் ஆன்ம ஞானம் காலங்களினூடாக எப்படியெல்லாம் மதம் கலைகள் இலக்கியம் என்று மனித முயல்வில் விரித்துக் கொண்டே போகிறது என்று மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. பசிக்கக் கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டேன். தொடர்ந்து ஒவ்வொரு பௌத்த குகையிலும், மாடத்தில் ஏறியும் குறுகலான பாறைப் பாதைகளில் நுழைந்தும் வெளியே வந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் மேலும் மேலும் என்று சவால் விடும் வண்ணம் குகை பிரம்மாண்டமாக வந்து கொண்டிருந்தது. சில குகைகளில் வௌவால் பறந்ததும் அவற்றின் எச்ச வீச்சமும் எங்களுக்கு எந்த சோர்வையும் தரவில்லை. நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த பாறைத் தொட்டிகளும் நீர் நிழலின் குளுமையான உணர்வே போதும் பருகத் தேவையில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. நிச்சயமாக இப்படிப்பட்ட பள்ளியறைகளில் கல்வி கற்றிருந்தால் யாரும் இந்த அளவுக்குக் கல்வியைக் கசப்பானதாக உணர்ந்திருக்க மாட்டார்கள். தர்மம் என்ற பேரியக்கத்தை காலத்தால் அளக்கும் உணர்வு நிறைவாக இருந்தது. பௌத்தக் குகைகள் பொதுவாக வகுப்பறைகள் அல்லது சங்கம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதற்குக் காரணம், புத்தர் என்ற மகா குருவின் சிலைகள்தான் என்று தோன்றுகிறது. நியாயம் சரியாகவே வழி நடத்துகிறது என்று எண்ணிக் கொண்டேன். செயல்கள் வழியாகவே கலைஞன் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து இருந்தான். ஐந்து நூற்றாண்டுகள் தொடர்ச்சியான செயல்பாட்டில் இவ்வளவு பெரிய கலைப் பாரம்பரியம் உருவாகியுள்ளது என்று அறிய முடிகிறது. அவன் என்ன உண்டான், என்ன சம்பளம் பெற்றுக் கொண்டான், அவனை யார் ஆதரித்தார், நல்லவர்களா, கெட்டவர்களா என்பதெல்லாம் பொருள் இழந்து ஒரு பெருநிகழ்வை நிகழ்த்தி சென்றிருக்கும் கலைஞன்தான் எத்தனை மகத்தான செயல்களை கனவு கண்டிருப்பான். எத்தனை நூற்றாண்டுகளை கற்பனை செய்திருப்பான். இல்லை அவன் மரணமின்மையை மட்டுமே நம்பி வாழ்ந்திருப்பான்.



எங்கே தொடங்கி எங்கே முடியும் என்று வேணுகோபால் பாடிக் கொண்டிருந்தார். ஒளி வரும் திசையைப் பற்றிய கணிப்புகள், ஒலியைக் கட்டுப்படுத்தும் தந்திரங்கள் என்று பலவற்றிலும் மூளையும் ஆன்மாவும் சரிவிகிதத்தில் கலந்து விளையாடியிருக்கிறது. அவற்றுடன் முழு உடல் பலமும் இசைந்திருக்க வேண்டும். பனை மரத்தை வேரோடு பிடுங்க முடியுமா என்று அந்தக் கலைஞனிடம் கேட்டால் முடியும் என்று செயலால் நிரூபித்திருப்பான்.







கி பி அறுநூறிலிருந்து எண்ணூறு வரை குடையப்பட்ட சைவ வைணவக் குகைகளுக்குச் செல்வதற்கு தயாரானோம். பதிமூன்றாம் எண் குகை எங்களைக் கவராததற்குக் காரணம் பெரும்பாலும் வெற்று கட்டிடங்கள் போல் அரங்கமும் ஆங்காங்கே சிலைகளும் இருந்தது தான் என்று நினைக்கிறேன். இது தவிர அடுத்து என்ன இருக்கப் போகிறது என்று கொஞ்சம் மந்தமாக இருந்து விட்டோம். பதினாலாம் குகையில் என்ன இருக்கிறது என்று ஆரம்பித்த போது தான் விஷயம் இனிமேல்தான் துவங்குகிறது என்று தெரிந்து கொண்டோம். கங்கை யமுனையின் பெண் உருவச் சிலைகள் நுழைவாயிலில் வரவேற்கும் விதமாக இருந்தன. உள்ளே சப்த கன்னிகளின் உருவங்களும் அவர்களின் மடிகளில் தவழும் மழலைகளும் உயிரோட்டம் என்றால் என்ன என்பதை காட்ட ஆரம்பித்தன. வளமான முலைகளும் நலமிக்க குழந்தைகளும் வரலாற்றின் மறுபக்கம் என்று தோன்றியது. பதினைந்தாவது குகைத் தாழ்தளம் வெறும் தளமாக இருந்தாலும் மேல் அடுக்கில் உள்ள தசாவதாரச் சிலைகள் மிகப் பிரமாண்டமாக இருந்தன. இந்தக் குகைகள் பெரும்பாலும் சிவனுக்கு என்றாலும், பதினைந்தாவது குகை மட்டும் முழுவதுமாக விஷ்ணுவுக்கு என்று தனியாக இருக்கிறது. இந்தக் குகை முடிக்கப்படாத பௌத்த குகைகளில் இருந்து ஆரம்பித்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இதில் நடராஜரின் பெரிய நாட்டியச் சிலையும் உண்டு.



பதினாறாவது குகை என்பது குகையே அல்ல. மலையைக் குடைந்து ஒரு கோவில் வளாகம் அமைத்திருக்கிறார்கள். கைலாசநாதர் ஆலயம் என்றழைக்கப்படும் இந்தக் கோவில் உலக அதிசயம் என்றுதான் சொல்வேண்டும். இது போன்ற ஒரு கற்பனையை எவ்வாறு தொடங்கியிருக்கக் கூடும் என்று கூட யோசிக்க முடியவில்லை. ராஸ்திரகூட மன்னன் கிருஷ்ணன் 756-773 இல் துவங்கியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். 250,000 டன் பாறையை குடைந்தெடுத்து நூறு வருட உழைப்பைச் செலுத்தியுள்ளார்கள். இடது புற முதல் தளத்தில் அதிகக் கூட்டம் வந்து சென்றது. பாறை கொஞ்சம் வழுக்கலாக இருந்ததால் கீழே விழுந்தேன். அழகேசன் கிழவிகளை விரட்டி விரட்டி படம் எடுத்துக் கொண்டிருந்தார். பெரும்பாலும் ஆந்திரத்தில் இருந்து மக்கள் வந்திருந்தார்கள். இது தவிர, சீரடி சென்று திரும்பும் கூட்டமும் ஒரு மோது மோதிச் செல்கின்றனர். கோவிலன் பின் புற மலை உச்சியில் ஏறி நின்று சில இளைஞர்கள் எட்டிப் பார்த்தார்கள். அந்த உயரம் அச்சம் தருவதாகவும் ஆபத்தானதாகவும் பட்டது. இஸ்லாமியர்கள் சிலர் இயல்பாக உள்ளே சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். தௌலதாபாத் அவுரங்கபாத் இஸ்லாமிய நகரங்கள் என்பதே காரணம். வெள்ளைப் பூச்சு எல்லாச் சிலைகளிலும் உதிர்ந்து விட்டன. ஆனாலும் கற்களில் உள்ள விவரணையே முழுமையாக இருந்தது. இது ஒன்றே உச்சம் என்று சொல்லலாம். வளாகத்தின் தென் பகுதியில் நிறைய சேதாரம். யானைகள் தும்பிக்கை இழைந்து நிற்கும் காட்சி கொஞ்சம் வலிக்கத் தான் செய்கிறது.



இருபத்தி ஒன்றாம் எண் குகை தான் கி பி ஐநூறின் இறுதி பகுதில் செய்யப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடுகிறார்கள். நதிப் பெண் தெய்வங்களும் மிதுன உருவங்களும் பொறிக்கப்பட்ட வாயில்களும் உள்ள இந்தக் குகை கொஞ்சம் பழமையாகத் தான் தோன்றியது.



குகை இருபத்தி ஆறும் இருபத்தி ஏழும் அடைக்கப் பட்டு விட்டன. இருபத்தி எட்டு, இருபத்தி ஒன்பதாம் குகையில் தான் இதற்கு வழி அமைத்திருந்தார்கள். அங்கு செல்வது ஆபத்தானது என்று சொன்னார்கள். பாறைகளில் பெரிய தேனீக் கூடுகள் கரும்பந்து போல இருந்தன. ஆனால் என்ன, குகை இருபத்தி ஒன்பது வந்த பின்பு சிவனாதிக்கம் என்பதைக் கண்டு கொண்டோம். சிவ பார்வதி விளையாட்டு, சூரர் வதம், காளை அடக்குதல் என்று முழுவதும் தென்னிந்தியாவின் சிற்பப் பாணிகளே இருந்தன. ஒரு விசேசத்தை வசந்தகுமார் சொன்னார். எலும்புக்கூடு உடலுடன் வயோதிகத் தலையுடன் காதில் சவுடித் தோடு அணிந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்துச் சொன்னார், இது காரைக்கால் அம்மையார் என்று. உறைந்து விட்டோம். ஆம், கலாரசிகரும் தமிழ் எழுத்தாளருமான கி.அ. சச்சிதானந்தம் இதை முதன் முதலில் கண்டு சொன்னதாகவும் இப்பொழுதும் எல்லோராவின் கலை விமர்சகர்களுக்கு இது தெரியவில்லை என்றும் சொன்னார். காரைக்கால் அம்மையாரைப் பார்த்த இன்பம் மேலும் மேலும் என்று ஆவலைத் தூண்டியது. மாலை வெயில் சிலைகளின் மார்புகளில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது.



பின்பு சமணக் குகைகளுக்குச் சென்றோம். இந்திரசபை மற்றும் மகாவீரரின் சிலைகள் அற்புதமாக இருந்தன. இந்தக் குகைகள் சிறிதாக இருந்தாலும் சிலைகளில் உள்ள தெளிவு மற்றும் ஒளியூட்டம் விசேசம்.



திரும்பி வந்து என் மனைவியிடம் புகைப் படங்களைக் காட்டிய போது சொன்னாள், இந்தியாவில் இஸ்லாமியர் வருகைக்குப் பின்பு முக்காடு போடும் வழக்கம் வந்து இந்தியப் பெண்களின் அழகு குறைந்து விட்டது என்று. அதைவிட, இப்பொழுது வந்திருக்கும் மேற்கு மோகம் என்பதில் ஆண் தன்மையுடையவர்களாக செயற்கையாக பெண்ணை மாறுவது பற்றி மிகவும் வருத்தப் பட்டாள்.



வகைகள்

அரசியல் கலைச் சொற்கள் கானியல் கிளிவாதில் சமச்சீர் கல்வி சமூகவியல் சிறுகதை சுற்றுச்சூழல் சொற் பிறப்பியல் தமிழக வேளாளர்களின் வரலாறு தமிழறிஞர் வரிசை தலையங்கம் திரையாளுமைகள் நகுதற் பொருட்றன்று பசுமைப் புரட்சி பயணம் மனநிழல் முகப்பு மொழியியல் மொழியும் முன் வணிகம் Uncategorized

எழுத்தாளர்கள்

அ.கா. பெருமாள்அபராஜிதன்அழகேச பாண்டியன்ஆசிரியர்இராசேந்திர சோழன்இராம கிஇளங்கோ கல்லானைஇளவேனில்எம்.கோபாலகிருஷ்ணன்எஸ்.ஆனந்த்எஸ்.இராமச்சந்திரன்கரு.ஆறுமுகத் தமிழன்கே.ஜெயராம்செல்வ புவியரசன்ஜெயமோகன்பாதசாரிபாமயன்மகுடேசுவரன்.© 2011 தமிழினி

Log in . 60 queries. 0.221 seconds.

புதன், 20 ஜூலை, 2011

Kazhumaram.

கழுமரம் My Photo




கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாக செதுக்கபட்ட மரம் ஒன்றினில் குற்றாவளியின் ஆசனவாயை சொருகி விடுவார்கள்; அவன் கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி இறந்து போவான். வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போடுவதும் செத்த உடலை பறவைகள் கிழித்து உண்பதையும் பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன்.









இது போன்ற தண்டனை முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கிறது. இதை Impalement என்று சொல்வார்கள். கவுண்ட் விளாட் நிறைய ஆட்களை கழுவேற்றியதால் அவர் விளாட் தி இம்பேளர் (Vlad the Impaler ) என்று அழைக்கபட்டார். அவர் தான் பின்னாளில் டிராகுலாவாக உருமாறினார்.









கழுவில் ஏற்றுதல் என்ற தண்டனையை பற்றிய சிறுவயதில் நிறைய கதை சொல்வார்கள். கழுமரம் பூத்தது என்றும் கழுமரத்தில் நெருப்பு பற்றிக் கொண்டது என்றெல்லாம் விந்தையான செய்திகள் கூட அறிந்திருக்கிறேன்

திருடர்கள் பிடிபட்டால் அவர்களை கழுவில் ஏற்றுவார்கள் . அப்படி பிடிபட்டு செத்து திருடனின் உடலை தின்ன கழுகுகள் வந்து சேரும் என்றும் அவன் உடலை யாரும் எடுக்கவே முடியாது என்ற கிராமிய கதைகள் சொல்கின்றன.









கழுகுமலை கோவிலில் சேவலை கழுவில் ஏற்றுவதை சடங்காக செய்வதை கண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் எட்டாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றி கொல்லப்பட்டார்கள் என்று சரித்திர குறிப்புகள் கூறுகின்றன. ஆவுடையார் கோவில் ஒவியம் ஒன்றில் கழுவேற்றம் சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது. கழுமரத்தை பற்றி கி.ராஜநாராயணன் தனது கதையில் மிக விரிவாக எழுதியிருக்கிறார்.









இப்படி அங்கும் இங்கும் கழுமரம் பற்றி அறிந்த ஆசையில் ஒருமுறையாவது கழுமரத்தை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றிக் கொண்டேயிருந்தது. ஆனால் எங்கேயும் கழுமரம் இருப்பதாக எவரும் சொல்லியதேயில்லை. மதுரை திருமங்கலத்தில் ஒரு கழுமரம் முன்பு இருந்ததை கண்டிருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். இன்னொருவர் சிவகரியில் ஒரு கழுமரம் இருந்து முறிந்துபோய்விட்டது என்றார்.









சமீபத்தில் ஈரோடு சென்றிருந்த போது வரலாற்று அறிஞர் புலவர் இராசுவை தேடிச்சென்று நண்பர்களுடன் சந்தித்தேன். கொங்குமண்டலத்தின் நூற்றாண்டுகால வரலாற்றை துல்லியமாக அறிந்தவர். சிறந்த கல்வெட்டு ஆய்வாளர். அவரிடம் உள்ள சரித்திர சான்றுகளும் ஆவணங்களும் கொங்கு வரலாற்றினை ஆய்வதில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. கொங்கு மண்டலம் குறித்த அவரது ஆய்வேடுகள், புத்தகங்கள் சிறப்பானவை. அவரை நேரில் சந்தித்து பேசுவது மிகுந்த சுவாரஸ்யமானது. எண்ணிக்கையற்ற தகவல்கள், வியப்பூட்டும் செய்திகள், உண்மைகள் அறிந்தவர். எளிமையான மனிதர்.









அவரோடு பேசிக் கொண்டிருந்த போது விஜயமங்கலத்தில் உள்ள சமண கோவில் பற்றி விரிவாக எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார். பேச்சின் ஊடாக அவர் தன் சேமிப்பில் இருந்த ஒரு பழைய புகைப்படம் ஒன்றை காட்டி கழுமரம் பாத்திருக்கிறீர்களா என்று கேட்டார். எங்கேயிருக்கிறது என்று ஆர்வத்துடன் கேட்டேன். இங்கே ஈரோட்டில் தான் உள்ளது. அநேகமாக நான் அறிந்தவரை தமிழ்நாட்டில் இங்கே மட்டுமே கழுமரம் இருக்கிறது என்று சொன்னார்









உடனே காணவேண்டும் போலிருந்தது. இரண்டு மணி நேரம் புலவர் ராசுவோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பி காளியங்கராயன் கால்வாயின் அருகில் வளையல்கார தெருவில் உள்ள அய்யனாராப்பன் கோவிலில் இருந்த கழுமரத்தை காண்பதற்காக சென்றோம்.









நாங்கள் சென்ற நேரம் அந்த பகுதியில் ஒரு வீட்டில் வயதானவர் இறந்து போயிருந்ததால் கோவிலை மூடியிருந்தார்கள். இவ்வளவு தூரம் வந்து கழுமரத்தை பார்க்காமல் போகக் கூடாது என்று வெயிலில் நின்றபடியே இருந்தோம். நண்பர் பாபுவும் கிருஷ்ணனும் யாரிடமோ போனில் பேசினார்கள். அரை மணி நேரத்தில் எங்கிருந்தோ சாவியுடன் ஒருவர் வந்து கோவிலை திறந்து காட்டினார்.









ஒரு பீடத்தில் இருந்த அந்த கழுமரம் பனைமரத்தால் ஆனது. ஆறடிக்கும் குறைவான உயரம். பனஞ்செதில்கள் தேய்ந்து போயிருக்கின்றன. சிலுவை போன்ற வடிவில் குறுக்கு சட்டம் போடப்பட்ட அந்த கழுமரத்தில் இரண்டு இரும்பு சங்கிலிகள் இணைக்கபட்டிருந்தன. கழுமரத்தை இப்போது காத்தவராயன் என்று வணங்குகிறார்கள்.









நாங்கள் உச்சி வெயிலில் கழுமரத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்ததை கண்டு கோவில் நிர்வாகி இது உங்க குலசாமியா என்று கேட்டார். இல்லை இதை பார்க்க வந்திருக்கிறோம் என்று சொல்லி அதன் அருகில் நெருங்கி சென்று வியப்போடு பார்த்தபடி இருந்தோம்









கைகளால் கழுமரத்தை தொட்டு பார்த்தேன். பனைமரம் செதுக்கபட்டு அப்படியாக்கபட்டிருப்பது புரிந்தது. எந்த மனிதன் அதில் கழுவேற்றப்பட்டான். இதன் முன்பு எங்கேயிருந்தது. எத்தனை ஆண்டுகளாக இந்த மரம் இருக்கிறது என்று ஏதேதோ யோசனைகள் பீறிட்டபடியே இருந்தன









சந்தனம் குங்குமம் வைக்கபட்ட போது அந்த கழுமரத்தில் படிந்த கண்ணுக்கு தெரியாத குருதிக்கறையை உணர முடிந்தது.









தண்டனைகளுக்கும் குற்றங்களுக்கும் உள்ள தொடர்பை கவனிக்கும் போது உடலை ஒடுக்குவது அல்லது உடலை வதைப்பது தான் தண்டனைகளின் ஆதாரம். குற்றங்களுக்கும் தண்டனைக்கும் நேரடியான தொடர்பு எதுவுமில்லை. பலநேரம் தண்டனை குற்றத்தை விடவும் கொடூரமானது. மனித உடல் எப்படி போகத்திற்கான கருவியாக இருக்கிறதோ அது போலவே வதைக்கான நிகழ்வெளியாகவும் உள்ளது. எந்த இடத்தில் எப்படி அடித்தால் மனிதன் உச்சபட்ச வலி கொள்வான் என்பதை தண்டனை முறைகள் அறிந்திருக்கின்றன.









கொலைக்கருவிகளின் வரலாற்றை வாசிக்கையில் மனிதமனதின் புரிந்து கொள்ள முடியாத குருரங்களையும் விசித்திரங்களையும் காண முடிகிறது.









புலவர் ராசு 800 வருடங்களுக்கு முன்பாக உள்ள கழுமரம் அது என்றார். கொலைக்கருவிகள் கடவுளாவது உலகெங்கும் நடைபெற்று வரும் தொடர் நிகழ்வு. கழுமரமும் அப்படிதான் கடவுளாகியிருக்கிறது.









நாங்கள் பார்த்து கொண்டிருந்த போது ஒருவர் அந்த கழுமரத்தை வணங்கியபடியே அடுத்த சாமியை தேடிச் சென்றார்.









ஆயுதங்களை சொல்லி என்ன செய்வது தண்டனையை முடிவு செய்வதும் செயல்படுத்துவதும் மனிதன் தானே.

A Great meeting...

மகத்தான சந்திப்பு My Photo






ஆறு மாதங்களுக்கு முன்பாக சேலம் சென்றிருந்த போது திருவண்ணாமலையில் இருந்து நண்பர் பவா செல்லதுரை தொலைபேசியில் என்னை அழைத்து சேலத்தில் உங்களை காண வேண்டும் என்று இரண்டு வாசகர்கள் விரும்புகிறார்கள், அவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார், அவசியம் சந்திக்கிறேன், என் அறைக்கு வரச்சொல்லுங்கள் என்றேன்,



அவர்களால் வீட்டிலிருந்து வெளியே வர இயலாது, உங்களுக்கு நேரமிருந்தால் அவர்கள் வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என்றார், அதற்கென்ன அவசியம் பார்க்கிறேன் எனறேன்,



வாசகர்களை வீடு தேடிப்போய் சந்திப்பது எனக்கு மிகவும் இயல்பானது, புத்தகங்களை நேசிக்க கூடிய ஒருவரை எழுத்தாளர் தேடிச் சென்று பார்ப்பதே சரி என நினைக்கிறவன் நான், அதனால் அன்று காலை அவர்கள் வீடு உள்ள எழில் நகருக்கு போகும் வரை அந்த வாசகர்களைப் பற்றி எந்த்த் தகவலும் தெரிந்து கொள்ளவில்லை



நகரை விட்டு விலகிய சாலைகளில் கார் பயணம் செய்து மண்சாலையில் இறங்கிச் சென்றது, முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து போய் சேர்ந்தேன், என்னோடு கவிஞர் சிபிச்செல்வன் வந்திருந்தார், வாழையும் மரங்களும் கொண்ட அழகான சிறிய வீடு, வீட்டின் உள்ளே முகம் எல்லாம் சிரிப்பும் சந்தோஷமாக என்னை இருவர் வரவேற்றார்கள், அப்போது தான் முதன்முறையாக வானவன் மாதேவியையும் வல்லபியையும் சந்திதேன்,



இருவருமே சகோதரிகள், Muscular Dystrophy எனும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். முப்பது வயது என்றார்கள், ஆனால் ரெக்கையடிக்கப் பழகும் புறாக்குஞசுகளைப் போல இருந்தார்கள்,



அவர்களுக்காக நான் கொண்டுபோயிருந்த புத்தகங்களைக் கையில் கொடுத்த போது அந்த கரங்களைப் பற்றிக் கொண்டேன், என் கையில் இருந்த நடுக்கத்தை என்னால் மறைக்க இயலவில்லை, அதை அவர்களும் உணர்ந்திருக்க கூடும், மனம் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் கனத்துப் போயிருந்த்து, பேச முடியாத தவிப்பேறிய தொண்டையுடன் அவர்களையே பார்த்துக் கொண்டேயிருந்தேன்,



நடக்கமுடியாமல் ஒடுங்கிப்போன உடல், ஆனால் பேச்சில், முகத்தில் உற்சாகம் பீறிடுகிறது, ஆர்வம் கொப்பளிக்க அங்கிருந்த அத்தனை பேரிடமும் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள், துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, நெடுங்குருதி, யாமம் என்று பேச்சு வளர்ந்து கொண்டேயிருந்த்து, நான் அவர்கள் மீதிருந்த கவனித்திலிருந்து விலகவேயில்லை



எல்லா மனிதர்களுக்கும் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது. அதன் காரணமாக உடலில் உள்ள தசைகள், மெள்ள மெள்ளத் தனது செயல்பாட்டை இழக்கத் தொடங்கும்.



அதாவது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத்துவங்கி அவர்கள் உடல் முடங்கிவிடும், முடிவில் ஒரு நாள் இதயம் கூட செயல் இழந்து விடும்,



வலியும் சோர்வும் பயமும் அவர்களை முடக்க முயலும் போதெல்லாம் நோயிற்கு எதிராக உறுதியான மனவலிமையுடன் வாழ்வின் மீது தீராத பற்றும், சக மனிதர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையுமாக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாகவே உணர முடிந்தது,



உடல் நலிவுற்று நடமாட இயலாத சூழலிலும் கூட அவர்கள் புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்திருக்கிறார்கள். தங்கள் வீட்டில் உள்ள சிறிய நூலகத்தை எனக்குக் காட்டினார்கள்,



பிரபஞசன், வண்ணதாசன். அசோகமித்ரன். சுந்தர ராமசாமி, கிரா. ஜெயமோகன் நான் என அத்தனை முக்கிய தமிழ் படைப்பாளிகளையும் வாசித்து, ஆழமாகப் புரிந்து கொண்டு விவாதிப்பதோடு அந்த எழுத்தைப் பற்றி தன்னைத் தேடி வருபவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.



படித்த நல்ல பதவியில் உள்ள, பல ஆயிரம் பணம் சம்பாதிக்கும் பலருக்கும் இல்லாத இந்த மனநிலையும் அக்கறையும் என்னை நெகிழ்ச்சியுறச் செய்தது,



பெரிய புத்தகங்களை அவர்களால் கைகளில் வைத்துப் படிக்க முடியாது, கைவலியாகிவிடும், ஆனாலும் வலியைப் பற்றிய கவலையின்றி விரும்பிய புத்தகங்களை வாசிக்கிறார்கள், இவ்வளவு தீவிரமான இலக்கிய வாசிப்பு கொண்ட இருவரை நான் கண்டதேயில்லை, என் வாழ்வில் நான் சந்தித்த மகத்தான வாசகர்கள் இவர்களே,



இவர்களை ஒருவேளைச் சந்திக்காமல் போயிருந்தால் அந்த இழப்பு எனக்குத் தீராத ஒன்றாகவே இருந்திருக்கும்



சிறிய அகல் விளக்கின் வெளிச்சம் மொத்த அறையையும் ஒளிரச்செய்வது போல அவர்கள் சிரிப்பும் சந்தோஷமும் அங்கிருந்த அத்தனை பேரிடமும் தொற்றிக் கொண்டிருந்தது, தங்கள் மீது எவரும் பரிதாபம் கொள்ளவோ. வேதனை கொள்ளவோ வேண்டியதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள், அது எனக்கு மிகவும் பிடித்திருந்த்து, தனது நோயைப் பற்றி சொல்லும் போது கூட உணர்ச்சிவசப்படாமல் இயல்பாகவே பேசினார்கள்



இருபது வருசங்களுக்கும் மேலாக மாதேவியும் வல்லபியும் தசை சிதைவு நோயோடு வாழ்கிறார்கள், அவர்கள் அப்பா இளங்கோ மின்சார வாரியத்தில் கடைநிலை ஊழியர், சிறியகுடும்பம்,



வானவன் மாதேவிக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நோய் துவங்கியிருக்கிறது, கெண்டைக்கால் சதைகள் வலுவிழந்து போயின, நடக்க முடியாமல் சிரமமானது, பள்ளிக்கூடம் போய்வருவதற்குள் பத்து இடத்தில் விழுந்து விடுவாள். தனியே டாய்லெட் கூட போக முடியாது, மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு தசைச் சிதைவு நோய் அதிக நாள் வாழமுடியாது என்று சொன்னார்கள்



.இரண்டாவது வருசமே இதே நோய் அவரது தங்கைக்கும் ஏற்பட்டது, குடும்பமே கலங்கிப்போனது, நோயோடு போராடியபடியே இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள், பிறகு வீட்டில் இருந்து கொண்டு பிளஸ் டு அதன் பிறகு அஞச்ல் வழிடியல் டிசிஏ படித்திருக்கிறார்கள்,



வானவன் மாதேவி யாருக்கோ நடந்தைதைப் பேசுவது போல இயல்பாகத் தன் உடலின் வலி வேதனைகளைப் பற்றி சொல்லிக கொண்டிருந்தார்

எங்களால் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாது, எங்களை ஒருவர் தூக்கி உட்கார வைக்க வேண்டும், போன் பேச வேண்டும் என்றால் கூட யாராவது காதருகே போனை வைக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கும் போது கழுத்து சாய்ந்து பின்பக்க்மாக போய்விடும், உடம்பு எங்களுடையது, ஆனால் அதன் கட்டுபாடு எங்களிடமில்லை,



ஆனால் மனம் வலிமையாக இருக்கிறது, புத்தகங்களின் வழியே நாங்கள் நிறைய நம்பிக்கை பெற்றிருக்கிறோம், வாழ்நாளில் நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்பதைப் புத்தகங்களே அறிமுகம் செய்து வைத்தன, இன்று எங்களை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நாங்கள் ஒரு அறக்கட்டளை உருவாக்கி, மருத்துவ நிலையம் அமைக்க முயன்று வருகிறோம், எங்களை போல நூற்றுகணக்கானோர் இதே நோயில் பாதிக்கபட்டு உரிய மருத்துவ வசதியின்மையால் அவதிப்படுகிறார்கள்



இந்த நோய் உருவாக முக்கியக் காரணங்களில் ஒன்று சுற்றுச்சூழல் சீர்கேடு, ஆகவே அதற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்கிறோம் பி.டி. கத்தரிக் காய்க்கு எதிராக, எங்கள் பகுதிக் கிராமங்களில் கையெழுத்துக்கள் வாங்கினோம். மேல்வன்னியனூர் என்ற இடத்தில் மலைக் குன்றின் பாறைகளை வெட்டிக் கடத்துவதற்கு எதிரான போராட்டங்களில் கலந்துக் கிட்டோம். என்கிறார்



அவரைத்தொடர்ந்து வல்லபி சொன்னார்



அதிகபட்சம் 10 வருஷங்கள்தான் உயிரோடு இருக்க முடியும்னு டாக்டர்கள் சொன்னாங்க ஆனால் நாங்கள் மனஉறுதியால் இன்றும் நோயை எதிர்த்துப் போராடி வருகிறோம், ஒருவேளை எங்கள் இதயம் கூட செயல் இழந்து போய்விடலாம், அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, நோயின் மொத்த வலியை நாங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டோம் அடுத்த தலைமுறைக்கு இந்த நோய் இருக்காது, என்று தீர்க்கமாகச் சொன்னார்



அவர்களது நோயிற்குப் புதிய மருந்து கண்டுபிடிக்கபட்டிருக்கிறது, அதன் விலை அதிகம், உங்களுக்கு மட்டும் இலவசமாக தருகிறோம் என்று ஒரு மருத்துவமனை முன்வந்த போது எங்களைப் போன்று தசைச் சிதைவு நோயால் பாதிக்கபட்ட அத்தனை பேருக்கும் இலவசமாக மருந்து கொடுங்கள் கடைசியாக நாங்கள் வருகிறோம் என்று வானவன் தேவியும் வல்லபியும் மறுத்திருக்கிறார்கள் என்பது சமீபத்திய செய்தி



அதை விடவும் ஒரு அமெரிக்க தன்னார்வ நிறுவனம் அவர்களது அறக்கட்டளை வழியாக மருத்துவமனை உருவாக்க பெரிய தொகையை தர முன்வந்த போது அவர்களை போன்ற பன்னாட்டு கம்பெனிகளால் தான் இந்தியா சீரழிக்கபடுகிறது என்று அந்த்த் தொகையை வாங்க மறுத்துவிட்டார்கள், அந்த தார்மீக நெறி மகத்தானது



தனது நோயைப் பற்றி பொருட்படுத்தால் சமூக போராட்டங்களில் கலந்து கொள்வதுடன் தீவிரமான புத்தக வாசிப்பு. விவாதம். சூழலியல் செயல்பாடு என்று துடிப்போடு இயங்கும் அவர்களைக் காணும் போது பரவசமாக இருந்த்து



நான் எழுதிய கட்டுரைகளில் விவாதிக்கபட்ட செகாவை பற்றியும் டால்ஸ்டாய் பற்றியும் நெடுங்குருதி நாவலின் கதாபாத்திரங்களைப் பற்றியும் விரிவாகப் பேசினார்கள், அன்று அவர்களின் பிறந்த தினம் என்று பிறகு தான் தெரிய வந்த்து, அதை அனைவரும் சேர்ந்து கொண்டாடினோம், அவர்கள் வீட்டின் பின்புறம் ஒரு மரக்கன்று நட்டேன்,



அந்த மரம் வளரும் போது அதன் இலைகளின் வழியே அவர்களை அருகிலிருந்து நான் பார்த்துக் கொண்டேயிருப்பேன் என்ற நம்பிக்கை உருவானது



அவர்கள்’ஆதவ் அறக்கட்டளை என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். தசைசிதைவு நோயால் வட இந்தியாவில் ‘ஆதவ்’ என்ற சிறுவன் இறந்து போயிருக்கிறான் அவனது நினைவாக இந்த பெயரை வைத்திருக்கிறார்கள்



மஸ்குலர் டிஸ்ட்ரோபி வியாதியால் பாதிக்கப் பட்டவர்களைப் பாதுகாத்துப்�

பராமரிக்க ஒரு மருத்துவமனை உருவாக்க வேண்டும் என்ற கனவு அவர்கள் கண்களில் மின்னுகிறது.



ஆறு மாதங்களுக்கு முன்பாகவே சென்னை திரும்பியதும் அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று மனதில் தோன்றியது, ஆனால் கணிப்பொறியின் முன்பு உட்கார்நது அவர்களைப் பற்றி நினைக்க துவங்கியதும் மனதில் இனம்புரியாத வலியும் வேதனையும் சேர்ந்து கொண்டுவிடும், சொல்லற்று போன நிலையில் அவர்கள் புகைப்படங்களையே பார்த்துக் கொண்டிருப்பேன்



நேற்று கோவையில் அவர்கள் இருவரும் உயிர்கொல்லி எதிர்ப்பு கருத்தரங்கின் மேடையில் அமர்ந்து ஆவேசமாக தங்கள் எதிர்ப்புணர்வைப் பகிர்ந்து கொண்ட போது மனதில் அவர்களது நோய் சார்ந்து உருவாகியிருந்த பிம்பம் உடைந்து போய் அந்த ஆவேசம் எனக்குள்ளும் புகுந்து கொண்டது.



புத்தகங்கள் என்ன செய்யும் என்ற உதவாத கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இந்தப் பெண்களின் வாழ்க்கையைப் படித்துப் பாருங்கள், அவர்களுக்கு நம்பிக்கை தரும் மருந்தாக இருந்திருக்கிறது புத்தகங்கள்,



புத்தகங்களைப் படித்துத் தூர எறிந்துவிடாமல் அதிலிருந்து ஒரு வாழ்க்கை நெறியை உருவாக்கி கொண்டு வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள், அந்த துணிச்சல். அக்கறை பலருக்கும் இல்லை என்பதை நிதர்சனம்,



வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில் தானிருக்கிறது, வானவன் மாதேவி வல்லபி இருவரும் வேண்டுவது நமது பரிதாபத்தை அல்ல, அன்பை, அக்கறையை, ஆக்கபூர்வமான செயல்பாடுகளை,



,இவர்களை பற்றி முன்னதாக விகடன் மற்றும் நாளிதழ்களில் கட்டுரைகள் வெளியாகி உள்ளன, அவர்களோடு இணைந்து செயல்படும் இளைஞர்கள் பலர் வீடு தேடி வருகிறார்கள், அன்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அந்த வீட்டில் எப்போதும் சந்தோஷம் ஒளிர்ந்து கொண்டயிருக்கிறது, அதன் கதகதப்பும் நெருக்கமும் வேறு எங்கும் கிடைக்காத்து



வானவன் மாதேவி வல்லபி இருவரும் படிக்க நல்ல புத்தகங்கள் தேவைப்படுகின்றன, விருப்பமான நண்பர்கள் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி கொடுங்கள், மருத்துவசிகிட்சை சார்ந்த அவர்களின் தேவைகளுக்கு உதவி செய்யுங்கள், அவர்கள் முன்னெடுகின்ற சமூக இயக்கங்களில் கைகோர்த்து உறுதுணை செய்யுங்கள்,



எல்லாவற்றையும் விட அவர்களை நேரில் சென்று பாருங்கள், உங்கள் அன்பையும் அக்கறையையும் தெரியப்படுத்துங்கள், எவ்வளவோ பணத்தை விரையும் செய்யும் நாம் தங்கள் நோய்மையோடும் சமூகமேம்பாட்டிற்காக போராடும் அவர்களுக்கு உதவி செய்வது கட்டாயமான ஒன்று.‘

தொடர்புக்கு:�

ஆதவ் அறக்கட்டளை Aadhav Trust�

கடை எண்: 28-1 F, பிளாட் எண் 1,�

எழில் நகர், போடிநாயக்கன்பட்டி,�

சேலம் – 636005,�

அலைபேசி : 99763 99403 .9976399409

Pasumai..

அன்பு ஜெயமோகன்!My Photo




பசுமை வணக்கம்.தங்களைப் பற்றி நான் முதன் முதலில் கேள்விப்பட்டது 15 ஆண்டுகளுக்கு முன்பு. அரைக்கால் சட்டையில் இருந்து, முழுக்கால் சட்டைக்கு மாறிய தருணம் அது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் எனது ஊர். அங்குள்ள கிளை நூலகம் வழியாகத்தான் அறிவுலகில் நுழைந்தேன். அதன் பிறகு காலம் என்னைக் கைப்பிடித்துப் பத்திரிகைத் துறைக்கு அழைத்து வந்தது. ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘பசுமை விகடன்’ இதழில் தலைமை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். இணையத்தில் உலா வரும் எல்லா இளைஞர்கள் போலவே, எங்கோ சுற்றி அலைந்து, கடைசியில் உங்களிடம் வந்து சேர்ந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்களது படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.



ஆன்மீகம் முதல் அரசியல் வரை தாங்கள் தொட்டுக்காட்டும் அத்தனை விஷயங்களும் வாசகனுக்கு ஞானத் தெளிவை ஏற்படுத்துகின்றன. வேளாண் விஞ்ஞானிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குக் கூட மசானோபு ஃபுகோக்காவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ பற்றித் தெரியாது. ஆனால், ஃபுகோக்காவின் இயற்கை வேளாண்மை பற்றிய தங்களின் பதிவு அருமை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.



சரி, விஷயத்திற்கு வருவோம். தங்களின் ‘தேர்வு செய்யப்பட்ட சிலர்’ கட்டுரையை வாசித்த போது, எனக்குப் பெண் தேடும் படலம் நடந்து கொண்டு இருந்தது. வேடந்தாங்கல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும், பெண்ணைப் பார்த்தேன். அழகும், அறிவும்… கொண்டவர். ஆனால், இடது கால் போலியாவல் பாதிக்கப்பட்டதால் தாங்கித் தாங்கி நடக்கிறார். அந்த நேரத்தில் எனக்கு நீங்கள் நித்யா சொன்னதாக எழுதிய வரிகளே நினைவுக்கு வந்தது.(பல வருடங்களுக்கு முன் நித்யாவிடம் ஓர் இளம்பெண் வந்து அவளுக்குக் கண் தெரியாதைச் சொல்லி வருந்தினாள். நித்யா ஆறுதல் ஒன்றும் சொல்லவில்லை. ‘நாட்டிலே பல லட்சம்பேர் மூளையே இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள். கண் தெரியாததைப்போய்ப் பெரிய பிரச்சினையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே’ என்றார்.அந்தப் பெண்ணின் வாழ்க்கையை அந்த வரி மாற்றியது. அந்தப்பெண் இன்று ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். கணிதத்தில் ஆராய்ச்சி செய்கிறார்.)



எங்கள் வீட்டில் பலரும் ஆரம்பத்தில் எதிர்த்தார்கள். அவர்களை எல்லாம் சாந்தப்படுத்த உங்கள் எழுத்துக்களே உதவியது. வரும் செப்டம்பர் 16 -ம் தேதி செங்கல்பட்டு நகரில் திருமணம் நடைபெற உள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் தலைமை தாங்குகிறார். தங்களது வாழ்த்துக்களும் எங்களுக்குத் தேவை.



மேலும், பத்திரிகைத் துறையில் நான் சந்தித்த சுவையான நிகழ்வுகளை எனது http://sannachi.blogspot.com/வலைப்பூவில் எழுதி வருகிறேன். ஒரு முறை அதை எட்டிப் பார்த்தால் மகிழ்வேன்.

நேசத்துடன்,

பொன்.செந்தில்குமார்







அன்புள்ள செந்தில்குமார்



நான் தொடர்ச்சியாகக் காசுகொடுத்து வாங்கிப்படிக்கும் ஒரே இதழின் ஆசிரியராக இருக்கிறீர்கள். மகிழ்ச்சி அளித்த கடிதம். மானசீகமாக எப்போதுமே விவசாயியாக இருக்கிறேன் என்பதனால் இயற்கை விவசாயம் மேல் எப்போதுமே ஆர்வமுண்டு.



உங்கள் இணையதளம் மிக நன்றாக உள்ளது. நம்மாழ்வார், அண்ணாஹசாரே போன்ற மனிதர்களைப் பற்றிய நேரடிப் பழக்கத்தை எழுதியிருப்பதை விரும்பி வாசித்தேன். முக்கியமான பணி. குறிப்பாக வீடுதோறும் தத்துவஞானிகள் என்ற கட்டுரை. நம்முடைய மண்ணில் விவசாயிகள் அவர்களின் வாழ்க்கையினூடாகவே கனிந்து மலர்வதை எப்போதுமே கண்டுகொண்டிருக்கிறேன். அவர்களின் சிந்தனைகளும் அனுபவங்களும் நம்முடைய பெரும் செல்வம்.



உங்கள் மணவாழ்க்கைக்கு என் வாழ்த்துக்கள். சென்னை வரும்போது சந்திப்போம். என் வாழ்த்துக்களை மனைவிக்குத் தெரிவியுங்கள்.



ஜெ

Kuttu..

My Photoஎதிர் துருவ அரசியலும் ஜெயலலிதாவின் மாறாத சர்வாதிகாரமும்: சமச்சீர் கல்வியில் கிடைத்த குட்டுக்குப் பிறகாவது மக்கள் உணர்வுகளுக்கும் சமூக நலனுக்கும் மதிப்பளிக்கப்படுமா?


மாயா





ஒரு ஜனநாயக தேசத்தை மன்னராட்சிப் பாணியில் ஆட்சி செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதற்கு சமீபத்திய தேர்தலில் தி.மு.கவுக்கு கிடைத்த தோல்வியே சாட்சி. அதே போல, ஒரு மக்களாட்சியை சர்வாதிகாரத்துடன் ஆட்சி செய்தால் சில சமயங்களில் அவமானங்களையும் சந்திக்க நேரும் என்பதற்கு சமச்சீர் கல்வி விவகாரமே சாட்சி. இதே போல சர்வாதிகாரியாக ஆட்சி செய்ததன் விளைவாக 1996ஆம் ஆண்டிலும் 2006ஆம் ஆண்டிலும் ஆட்சியை பறி கொடுத்த ஜெயலலிதா எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. தி.மு.க அரசு கொண்டு வந்தது என்பதாலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை குப்பைத் தொட்டியில் வீச நினைக்கும் ஜெயலலிதா நீதித் துறையிடம் வரிசையாக மூன்று முறை தோற்றிருக்கிறார். இந்த வருடம் சமச்சீர் கல்வியையே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கும் தெளிவான தீர்ப்பையும் மீறி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செல்லக்கூடும் என்று பேசப்படும் அளவுக்கு பிடிவாதமிக்கவராக ஒரு தலைவர் இருப்பது ஆபத்தானது. அ.தி.மு.க அரசின் பிடிவாதம் மக்கள் மத்தியில் அக்கட்சியின் ஆட்சிக்கு எவ்வளவு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறது என்ற தகவல் அவரைச் சென்று சேர்கிறதா என்று தெரியவில்லை.



ஒரு வலுவான எதிர்க்கட்சியே இல்லாமல் ஆட்சி செய்து வரும் சமயத்தில் ஜெயலலிதா இவ்வாறு வலியப் போய் பிரச்சனையை சந்திப்பது அவரின் மாறாத இயல்பைக் காட்டுகிறது. அ.தி.மு.க ஆட்சி குறித்து என்னென்ன நல்லெண்ணங்கள் உருவானதோ அவை அனைத்தையும் சமச்சீர் கல்வித் திட்டத்தில் அவரது பிடிவாதம் நாசமாக்குகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2001-06 ஆட்சிக் காலம் போலவே ஜெயலலிதா மக்களால் வெறுக்கப்படும் தலைவியாக மாறிவிடக்கூடும். 1 கோடி மாணவர்களின் கல்வியை நிர்கதியில் வைத்திருப்பது அவரின் முந்தை ஆடு, கோழி பலி தடைச் சட்டத்தைவிட மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.



உண்மையில் ஜெயலலிதா கெட்ட பெயருக்கு பதில் நிறைய நிறைய நல்லெண்ணத்தை உருவாக்க வேண்டிய தருணம் இது. ஏனெனில் ஒரு மிகப் பெரிய கண்டத்தை அடுத்து கடக்கவிருக்கிறார் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா. பெங்களூருவில் நடந்து வரும் ஜெயலலிதாவுக்கு எதிரான 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக் கட்டத்தை எட்டிவிட்டது. அதில் அவர் சிறை செல்வது உறுதி என்று சட்டத் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு தரப்பு வாதங்களை முன்வைப்பதற்காக ஜூலை 27ந் தேதி நேரில் ஆஜராகி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு குற்றவாளிக் கூண்டில் நிற்பதே அவரின் பிம்பத்திற்கு மிகப் பெரிய அடியாக இருக்கும். தி.மு.கவினர் ஏராளமானோர் வரிசையாக சிறை சென்றாலும் ஒரு கட்சியின் தலைவரே சிறை செல்வது என்பது அக்கட்சியின், ஆட்சியின் பிம்பத்திற்கு தீராத களங்கத்தை உண்டாக்கும்; மற்ற அனைத்தையும்விட மோசமான களங்கமாக அது இருக்கும். மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவை உருவாகி வரும் ஒரு காலக் கட்டத்தில், ஜெயலலிதா தனது சர்வாதிகார குணங்களை மாற்றிக்கொள்ளாமலிருப்பது அவரது கட்சிக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தானது.



கருணாநிதியின் எதிர் துருவமாக செயல்படும் ஜெயலலிதா, தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்றோ, சமச்சீர் கல்வியில் உள்ள குளறுபடிகளை வைத்து அதை நிராகரிக்க வேண்டும் என்றோ நினைப்பது ஒரு வழி. மாநில வாரியம், மெட்ரிக் வாரியம் என்ற பிரிவை அகற்றியது மட்டுமே தி.மு.கவின் சமச்சீர் கல்வியின் ஒரே சாதனை என்பதை புரிந்துகொண்டு கல்வியாளர்கள் அனைவரும் விரும்பும் பொதுக் கல்வியை நோக்கி அடியெடுத்து வைப்பது இன்னொரு வழி. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை புதிய முழுமையான காப்பீட்டுத் திட்டம் என்றும், கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை பசுமை வீடுகள் திட்டம் என்று கொண்டு வர முடிந்த ஜெயலலிதாவால், சமச்சீர் கல்வித் திட்டத்தை மேம்படுத்தப்பட்ட பொதுக் கல்வித் திட்டமாக கொண்டு வர முடியாதா? அதைத் தடுப்பது யார்? சோ போன்ற வலதுசாரி, அடித்தட்டு மக்கள் விரோத ஆலோசகர்களா? தங்களின் கல்விக் கொள்ளைக்கு எந்த கடிவாளமும் வர விரும்பாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பண செல்வாக்கா? ஜெயலலிதாவுக்கும் மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அவரின் மனசாட்சிக்குமே வெளிச்சம்.

வெள்ளி, 15 ஜூலை, 2011

rvr.

My Photoவாசித்த புத்தகங்களும் வாசிக்கும் வலைத்தளங்களும maduraivaasagan in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

ஒரு மனிதன் எத்தனை புத்தகங்களைப் படித்தான் என்பதை வைத்துத்தான் அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும்.



– ஹென்றி டேவிட் தோரோ

என்னுடைய கவலைகள், தீராத பிரச்சனைகள் எல்லாவற்றையும் புத்தகங்கள்தான் போக்கியது. மேலும் வாசிப்பின் மூலமாகத்தான் சாதி, மதம் எல்லாவற்றையும் கடந்து நல்ல மனிதனாக உணர முடிந்தது. இன்றும் நல்ல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளோடு கண்டதையெல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். புத்தகங்களோடு நான் என்று முன்பு எழுதிய பதிவின் தொடர்ச்சிதான் இப்பதிவு. நான் வாசித்த முக்கியமான புத்தகங்களை எல்லாம் தொகுத்திருக்கிறேன். பின்னாளில் திரும்பிப் பார்க்கும் போது நினைத்தாலே இனிக்கும் என்ற எண்ணம்தான். மேலும், இதில் அவ்வப்போது வாசிப்பவைகளை குறித்து வைத்துக் கொள்வதன் மூலம் மறந்து போனாலும் இப்பதிவு மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கைதான். இது போல ஒரு பதிவை நீங்களும் தொகுத்து வைத்து கொள்ளுங்கள்.







நாவல்கள்



1.துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்

2.கொற்றவை – ஜெயமோகன்

3.விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

4.பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு

5.குறிஞ்சிமலர் – நா.பார்த்தசாரதி

6.ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்

7.வாடிவாசல் – சி.சு.செல்லப்பா

8.நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்

9.கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

10.பார்த்திபன் கனவு – கல்கி

11.பொன்னியின் செல்வன் – கல்கி

12.ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ்

13.நிழல்முற்றம் – பெருமாள்முருகன்

14.கல்மரம் – திலகவதி

15.ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி

16.பொய்த்தேவு- க.நா.சு

17.கானல் நதி – யுவன் சந்திரசேகர்

18.அபிதா – லா.ச.ரா

19.வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம்

20.அலைவாய்கரையில் – ராஜம்கிருஷ்ணன்

21.குறிஞ்சித்தேன் – ராஜம்கிருஷ்ணன்

22.பாத்துமாவினுடைய ஆடும் இளம்பிராயத்து தோழியும் – பஷிர்

23.தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன்

24.இனி நான் உறங்கட்டும் – பாலகிருஷ்ணன்

25.ஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்), ஜமிலா – சிங்கிஸ் ஜத்மதேவ்

26.அந்நியன் – ஆல்பெர் காம்யூ

கட்டுரைத்தொகுப்புகள்



27.பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவன்

28.தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன்

29.தேசாந்திரி– எஸ்.ராமகிருஷ்ணன்

30.விழித்திருப்பவனின் இரவு – எஸ்.ராமகிருஷ்ணன்

31.கோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்

32.வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்

33.காண் என்றது இயற்கை– எஸ்.ராமகிருஷ்ணன்

34.இலைகளை வியக்கும் மரம்– எஸ்.ராமகிருஷ்ணன்

35.காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்

36.சமணமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி

37.தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – மயிலை.சீனி.வேங்கடசாமி

38.கிறிஸ்துவமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி

39.நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – நாஞ்சில் நாடன்

40.தீதும் நன்றும் – நாஞ்சில்நாடன்

41.என் இலக்கிய நண்பர்கள் – ந.முருகேச பாண்டியன்

42.உப்பிட்டவரை – ஆ.சிவசுப்ரமணியன்

43.கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும்- ஆ.சிவசுப்ரமணியன்

44.மணல் மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன்

45.தமிழக பழங்குடிகள் – பக்தவத்சலபாரதி

46.உழவுக்கும் உண்டு வரலாறு – கோ.நம்மாழ்வார்

47.இது சிறகுகளின் நேரம் – அப்துல் ரகுமான்

48.தூங்காமல் தூங்கி – மாணிக்கவாசகன்

49.நகுலன் இலக்கியத்தடம் – தொகுப்பு. காவ்யா சண்முகசுந்தரம்

50.இன்னும் பிறக்காத தலைமுறைக்கு – தியடோர் பாஸ்கரன்

சிறுகதைத்தொகுப்புகள்



51.நடந்து செல்லும் நீருற்று – எஸ்.ராமகிருஷ்ணன்

52.மிதமான காற்றும் இசைவான கடலலையும் – ச. தமிழ்ச்செல்வன்

53.மதினிமார்கள் கதை – கோணங்கி

54.உயரப்பறத்தல் – வண்ணதாசன்

55.ஒளிவிலகல் – யுவன்சந்திரசேகர்

56.திசைகளின் நடுவே – ஜெயமோகன்

57.மாபெரும் சூதாட்டம் – சுரேஷ்குமார் இந்திரஜித்

58.ராஜன் மகள் – பா.வெங்கடேசன்

59.பீக்கதைகள் – பெருமாள் முருகன்

60.வெண்ணிலை – சு.வேணுகோபால்

61.மண்பூதம் – வா.மு.கோமு

62.புலிப்பாணி சோதிடர் – காலபைரவன்

63.அன்பின் ஐந்தினை – சு.மோகனரங்கன்

64.ஓய்ந்திருக்கலாகாது – கல்வி குறித்த சிறுகதைகள்

ஆளுமைகள், நேர்காணல்கள், உரையாடல்கள்



65.மாவீரர் உரைகள், நேர்காணல்கள்

66.சமயம் – தொ.பரமசிவன், சுந்தர்காளி

67.எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன்

68.பாலியல் – சாருநிவேதிதா, நளினிஜமிலா

69.ஆளுமைகள் சந்திப்புகள் நேர்காணல்கள் – தொகுப்பு மணா

மதுரை



70.எனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்

71.அழகர் கோயில் – தொ.பரமசிவன்

72.எண்பெருங்குன்றம் – வெ.வேதாச்சலம்

73.மதுரை அன்றும் இன்றும் – குன்றில் குமார்

74.கிராமத்து தெருக்களின் வழியே – ந.முருகேச பாண்டியன்

கவிதைகள்



75.விக்ரமாதித்தன் கவிதைகள் – விக்ரமாதித்தன் நம்பி

76.என் படுக்கையறையில் யாரோ ஒளிந்து இருக்கிறார்கள்-மனுஷ்யபுத்திரன்

77.மண்ணே மலர்ந்து மணக்கிறது – மகுடேஸ்வரன்

78.நீரின்றி அமையாது – மாலதிமைத்ரி

79.நட்பூக்காலம் – அறிவுமதி

கதைகள்



80.பஞ்சதந்திரகதைகள்

81.தெனாலிராமன் கதைகள்

82.பீர்பால்கதைகள்

83.மரியாதைராமன் கதைகள்

84.விக்ரமாதித்தன் கதைகள்

85.ஜென் கதைகள் – புவியரசு

86.திராவிடநாட்டுப்புறக்கதைகள்

87.மதனகாமராசன் கதைகள்

88.பரமார்த்த குரு கதைகள்

89.மகாபாரதக்கதைகள்

90.சூஃபி கதைகள்

91.முல்லா கதைகள்

92.ஆயிரத்தோரு அராபிய இரவுகள்

93.கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன்

94.நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன்

95.மரகத நாட்டு மந்திரவாதி – எல்.பிராங்க்போம். தமிழில் யூமா வாசுகி

96.மறைவாய்ச் சொன்ன பழங்கதைகள் – கி.ரா, கழனியூரன்

மற்றவை



97.திசைகாட்டிப்பறவை – பேயோன்

98.நவீன ஓவியம் – இந்திரன்

99.கோபுலு ஜோக்ஸ், ராஜூ ஜோக்ஸ், தாணு ஜோக்ஸ் – விகடன்

100.தியானம் பரவசத்தின் கலை – ஓஷோ

101.கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து

இப்பட்டியல் இன்னும் தொடரும். நிறைய புத்தகங்களை இன்னும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. புதுமைப்பித்தன் சிறுகதைகள் மொத்தத் தொகுப்பில் பத்து கதைகள் மட்டும் படிக்காமல் விட்டதால் அதைக்குறிப்பிட முடியவில்லை. சிலநேரம் புத்தகங்களை வாசிக்கவே விடாமல் காலம் கொடுமை செய்துவிடும். மொத்தத் தொகுப்பை வாசிக்கும்போது இப்படி அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது.



வலைத்தளங்கள்



பாரதி சொன்னது போல “நோக்குந் திசையெல்லாம் நாமின்றி வேறில்லை, நோக்க நோக்க களியாட்டம்” என்று இணையத்தில் தமிழை பார்த்து, பார்த்து பேருவகை அடைகிறேன்.



தொகுப்புகள், எழுத்தாளர்கள் & வலைப்பதிவர்கள்



1.மதுரைத்திட்டம் http://www.tamil.net/projectmadurai

2.நூலகம் http://noolaham.net/

3.தமிழ்பல்கலைகழகம் www.tamilvu.org

4.தமிழ்விக்கிபீடியா http://ta.wikipedia.org/

5.கீற்று www.keetru.com

6.தமிழ்த்தொகுப்புகள் http://thoguppukal.wordpress.com/

7.அழியாச்சுடர்கள் http://azhiyasudargal.blogspot.com

8.கூடு www.koodu.thamizhstudio.com

9.உயிர்மை www.uyirmmai.com

10.காலச்சுவடு http://kalachuvadu.com/

11.நட்பூ www.natpu.in

12.முத்தமிழ்மன்றம் http://www.muthamilmantram.com/

13. உலகபுத்தகதினம் http://bookdaytn.blogspot.com/

எழுத்தாளர்கள் & வலைப்பதிவர்கள்



14.எஸ்.ராமகிருஷ்ணன் www.samakrishnan.com

15.பிரபஞ்சன் www.prapanchan.in

16.ஜெயமோகன் http://www.jeyamohan.in

17.வண்ணதாசன் www.vannathasan.wordpress.com

18.நாஞ்சில்நாடன் www.nanjilnadan.wordpress.com

19.சாருநிவேதிதா http://charuonline.com/

20.கலாப்பிரியா http://kalapria.blogspot.com/

21.ச.தமிழ்ச்செல்வன் http://satamilselvan.blogspot.com/

22.கீரனூர்ஜாகிர்ராஜா http://jakirraja.blogspot.com/

23.மகுடேஸ்வரன் www.kavimakudeshwaran.blogspot.com

24.சுகுமாரன் http://vaalnilam.blogspot.com/

25.பவா.செல்லத்துரை http://bavachelladurai.blogspot.com/

26.தி.க.சி http://thikasi.blogspot.com/

27.வாமு.கோமு www.vaamukomu.blogspot.com

28.க.சீ.சிவக்குமார் http://sivakannivadi.blogspot.com

29.நாகர்ஜூணன் http://nagarjunan.blogspot.com/

30.காலபைரவன் http://kalabairavan.blogspot.com/

31.தமிழ்நதி www.tamilnathy.blogspot.com

32.சுப்ரபாரதிமணியன் http://rpsubrabharathimanian.blogspot.com

33.கிழக்கு பதிப்பகம் பத்ரி http://thoughtsintamil.blogspot.com

34.புத்தகம் http://puththakam.blogspot.com/

35.தமிழ்ச்சமணம் www.banukumar_r.blogspot.com

36.ஷாஜி http://musicshaji.blogspot.com/

37.மரபின்மைந்தன் http://marabinmaindanmuthiah.blogspot.com

38.வெயிலான் http://veyilaan.com/

39.பிச்சைப்பாத்திரம் www.pitchaipathiram.blogspot.com

40.தனிமையின் இசை http://ayyanaarv.blogspot.com

41.ஆடுமாடுகாடு http://aadumaadu.blogspot.com/

42.தீராதபக்கங்கள் www.mathavaraj.com

43.மொழிவிளையாட்டு http://jyovramsundar.blogspot.com/

44.தமிழில் http://linguamadarasi.blogspot.com

45.பதியம் http://www.pathiyam.com

46.நிசப்தம் www.nisaptham.com

47.பி.கே.பி. http://pkp.blogspot.com/

48.கூட்டாஞ்சோறு http://koottanchoru.wordpress.com

49.என் காலடி ஓசை http://adhiyaman.blogspot.com/

மதுரைப்பதிவர்கள்



50.மதுரை சரவணன் http://veeluthukal.blogspot.com/

51.தருமி http://dharumi.blogspot.com

52.யாழிசை http://yalisai.blogspot.com

53.ஹைக்கூ அதிர்வுகள் http://ananthi5.blogspot.com

54.ஸ்ரீ http://sridharrangaraj.blogspot.com

55.பொன்னியின் செல்வன் http://ponniyinselvan-mkp.blogspot.com

56.ஆம்பல் www.aambal.wordpress.com

57.கல்வெட்டு http://kalvetu.blogspot.com/

58.மதுரைக்காரன் http://maduraipandi1984.blogspot.com/

59.தீதும்நன்றும் பிறர்தரவாரா http://yaathoramani.blogspot.com/

60.மதுரைவாசகன் http://maduraivaasagan.wordpress.com/

வலைத்தள வாசிப்புக்கு நான் வந்தே இரண்டு ஆண்டுகள்தானிருக்கும். எனவே மேலே உள்ள பட்டியல் நீளும். இதில் உள்ளதைத் தாண்டியும் வாசித்துக் கொண்டுதானிருக்கிறேன். பின்னூட்டமிடும் நண்பர்களின் தளங்கள் மற்றும் கீழேயுள்ள தளங்களில் உள்ள இணைப்புகளில் இருந்து புதிய முகவரிகளுக்கு சென்று வாசித்துக்கொண்டுதானிருக்கிறேன். மதுரைப்பதிவர்களின் தளங்களையோ, மதுரையையோ குறித்து வாசிக்கும்போது அடையும் மனமகிழ்ச்சிக்கு இணையே இல்லை. இன்னும் நிறைய வாசிக்கணும்.



எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தளம்தான் முதலில் வாசித்தது. அவரது தளம்தான் என் இணைய வாசிப்பை அதிகரிக்க காரணம். எனவே, எஸ்.ரா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி. எனக்கு முதன்முதலில் பின்னூட்டம் இட்டு வாழ்த்திய மதுரைசரவணன் அவர்களுக்கும் நன்றி. மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி!

புதன், 13 ஜூலை, 2011

APPAA..!

இன்றைக்கு  yen  அப்பாvin  Ninaivu  தினம். [14.07.2007] I LOVE MY DAD..and I MISS HIM SMy PhotoO MUCH. r.v.rajendiran 14.07.2011.

Jayamohan.

This Blog


This Blog



Loading...

Saturday, September 4, 2010

ஜெயமோகன் பற்றி சுஜாதா
My Photo


சுபமங்களாவில் மார்ச் 1993இல் வந்தது.



---



தற்போது தமிழில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருப்பவர்களில் கவனிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஜெயமோகனின் பெயர் இருக்கிறது. சில ஆண்டுகளாக எழுதிவரும் இவர் கதைகளை நான் அவ்வப்போது கவனித்ததுண்டு. போன வருஷம் இவர் கதையான ‘ஜகன் மித்யை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜனாதிபதி பரிசு பெற்றது சந்தோஷமாக இருந்தது. (இவருடைய வேறு நல்ல கதையை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது வேறு விஷயம்.) சிறு பத்திரிக்கைகளில் எழுதிவரும் ஒரு இளம் எழுத்தாளருக்கு இந்த மாதிரி அடையாளம் கிடைத்திருப்பது சந்தோஷமான விஷயமே.







”திசைகளின் நடுவே”. ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவல் ஏற்கனவே வெளிவந்து ‘நல்ல கவனிப்பு பெற்றது’ என்று பின்னட்டை சொல்லும் இந்த புத்தகம் - பதினாலு சிறுகதைகளின் தொகுப்பு. அவருடைய சிறுகதை திறமையை கவனிக்க போதுமான கதைகள் உள்ளன.



என்னை பொறுத்த்வரையில் நான் ஒரு சிறுகதையின் உணர்ச்சிபூர்வமான அனுபவத்தில் பங்கேற்கும்போது தான் அது எனக்கு நல்ல கதையாகிறது. இல்லையெனில் நான் அதை உடனே நிராகரித்துவிடுகிறேன். மற்றவன் அனுபவம் எனக்கு முக்கியமில்லை.



இந்த பரீட்சையில் ஜெயமோகனின் “திசைகளின் நடுவே” தொகுப்பில் பதினான்கு கதைகளில் ஐந்து தேர்ந்தன. இதனால் மற்றவை நல்ல கதைகள் இல்லை என்று சொல்லவில்லை. எனக்கு அவை உறைக்கவில்லை.



‘பல்லக்கு’ என்ற அபாரமான கதையில் நான் சொன்ன நல்ல கதைக்குரிய அத்தனை அடையாளங்களும் இருக்கின்றன. முதலில் கதாசிரியன் சிருஷ்டிக்கும் தனிப்பட்ட யதார்த்தம். அந்த மலையாளச் சூழல். “ஓர்மிச்சா எனகு கரிச்சல் வரது, ஏமானே” போன்ற வினோத உரையாடல்கள். அற்புதமான வர்ணனைகள். இந்த வகை வர்ணனைகள் அந்தக் கதை சூழலை முழுவதும் அங்கீகரிக்க வைக்கின்றன்.



இந்தச் சூழலில் சொல்லப்படும் சம்பவங்கள் நமக்கு ஏற்படுத்தும் ‘ரியலைஸேஷன்’ தான் அந்த கதையின் இலக்கியத்தரத்தை உயர்த்துகிறது.



ஜெயமோகன் ஒரு வேற்று மொழிக்காரரின் அசாத்திய தைரியத்துடன் சிறுகதையின் பலவித வடிவங்களை முயற்சிப்பதை பாராட்ட வேண்டும். வேதகாலக் கதைகள், சாமியார் கதைகள், பிலாசபி கதைகள் எல்லாமே தயங்காமல் முயற்சிக்கிறார்.



”திசைகளின் நடுவே”யின் முன்னுரையில் “அறச்சார்பே எனது கடவுள். அறச்சார்பற்ற படைப்பை இலக்கியமாக மதிக்க மாட்டேன். கால் சுண்டு விரலால் எற்றித்தள்ள தயங்க மாட்டேன். அவற்றின் சகல அங்கீகாரங்களுடனும் கூட!” என்கிறார். இந்த ஆரவாரமான அலட்டலான முன்னுரையின் தேவையில்லாமலேயே ‘நதி’, ‘வலை’, ‘போதி’, ‘படுகை’ போன்ற கதைகளை ரசிக்க முடிகிறது.



அறசார்பு என்று எதை சொல்கிறார் என்பது குழப்பமாக இருப்பினும் ஒரு தொகுதிக்கு ஒரு ‘பல்லக்கு’ வந்தாலே போதும்.



.

செவ்வாய், 12 ஜூலை, 2011

gov.servant

சுட்டபின் நெருப்பு என்றும் My Photo


உஷாதீபன்





அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு எத்தனையோ விதிமுறைகள் இருக்கின்றன. அவை அவர்களைக் கட்டுப்படுத்துகின்றன. ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என்று அவை வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பிறழ்ச்சி ஏற்படும்போது சம்பந்தப்பட்ட ஊழியர் அல்லது அதிகாரி மீது இந்த நடவடிக்கைகள் பாய்வது உண்டு. இன்னின்ன மாதிரியெல்லாம் விதிமுறைகள் உள்ளன, இதற்கெல்லாம் கட்டுப்பட்டே நீங்கள் அரசு ஊழியராகப் பணிபுரிகிறீர்கள் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து, நன்கு அறிந்து தங்கள் கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியில் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் (அதாவது ஓராண்டு அல்லது ஈராண்டு) இன்னின்ன தேர்வுகளையெல்லாம் அந்தக் குறிப்பிட்ட அரசுப்பணியாளர் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்றும் அப்படித் தேர்ச்சி பெற்றால்தான் அவருக்கு இரண்டாவது ஆண்டு ஊதிய உயர்வு உண்டு (அதாவது முதல் ஆண்டு முடித்தவுடன் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக எடுத்த எடுப்பிலேயே தடை என்பது கூடாது என்பதன் பொருளாக முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு விடுகிறது) என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.



குறைந்த பட்சம் இந்த விதிமுறைகளெல்லாம் ஒரு அரசுப் பணியாளர் அறிந்திருத்தல் கட்டாயம் என்கிற ரீதியிலேயே மேற்கண்ட தேர்வு முறைகள் ஒரு அரசுப் பணியாளரின் நலன் கருதி, அவரின் கடமையாற்றலின் மீது நம்பிக்கை வைத்து நடைமுறையில் உள்ளன. அதற்கு மேல் இருக்கும் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தல் என்பது அவரவர் விருப்பம் மற்றும் ஆர்வம் சார்ந்ததாகும்.



இவை சட்டமல்ல. விதிமுறைகள். அதாவது ஒழுங்குமுறை நடவடிக்கைகள். அலுவலக நடைமுறை விதிகள். நிர்வாகம் சீராக நடைபெறுவதற்காக வழிவகுக்கப்பட்டவை.



இந்த விதிமுறைகள் மீறப்பட்டாலே ஒருவர் மீது ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மீறல் என்கிற விதி பாயும். அவர் சார்பாகக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு அது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அதற்கு சம்பந்தப்பட்டவரின் தன்னிலை விளக்கம் பெறப்பட்டு, இரண்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இவற்றின் அடிப்படையிலும், இருக்கும் ஆவணங்களின் அடிப்படையிலும், அன்னார் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அந்தக் குறிப்பிட்ட அரசுப் பணியாளருக்கு ஊதிய உயர்வு தற்காலிக நிறுத்தமோ, தொடர் நிறுத்தமோ, தற்காலிகப் பணி நிறுத்தமோ அல்லது கண்டனமோ அல்லது வெறும் எச்சரிக்கையோ போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.



ஆக அரசுப் பணியாளராய் இருப்பதில் நிறையக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஒழுங்கு முறைகள் உள்ளன. என்னவோ போனோம் வந்தோம் என்று இருந்துவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள்தான் கண்டிப்பாக வேலை பார்த்தாக வேண்டும். காலையில் அலுவலகம் வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்தால், மாலை அலுவலக நேரம் முடிந்து வீடு திரும்பும்வரை அவரவருக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் பணிகளில் விதிமுறை தவறாமல், இன்னின்னவகைக்கு இவைதான் விதிமுறைகள் என்பதைச் சரியாகக் குறிப்பிட்டு, தெரியவில்லை என்றால் குறிப்பிட்ட நடத்தை விதிமுறைப் புத்தகங்களை எடுத்துப் படித்துப் பார்த்து, அந்தக் குறிப்பிட்ட பத்திகளையும, விதி எண்களையும் சொல்லி இந்தப் பணி இப்படித்தான் செய்யப்பட வேண்டும் என்பதை வரையறுத்து எழுதுவதில் ஒரு எழுத்தருக்கு மிக முக்கியமான பொறுப்பு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.



இம்மாதிரிக் குறிப்பிட்டு ஆணி அடித்தாற்போல் சொல்லி, என்னை விட்டால் வேறே ஆள் கிடையாதுய்யா இதுக்கு என்கிற பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து பணியாற்றுகிற ஏராளமான, லட்சக்கணக்கான அரசுப் பணியாளர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். 58 வயது வரைக்கும் நான் இதில் இருந்தாக வேண்டும். எனவே இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று இருக்கும் நடைமுறை விதிமுறைகள் அனைத்தையும் கரைத்துக் குடித்து, விரல் நுனியில் வைத்துக் கொண்டு, எதானாலும் அந்தக் குறிப்பிட்ட க்ளார்க்கைக் கூப்பிடு என்று அலுவலரே தாங்கித் தடுக்கி அழைக்கும் இடத்திலும், அவரின்றி ஒன்றும் அசையாது என்கிற இடத்தில் தங்களை வாழ்நாள் பூராவும் நிறுத்திக் கொள்ளும் அரசுப் பணியாளர்கள் ஏராளம்.



ஒரு அலுவலகத்தில் பியூன் முதல் அலுவலர் வரை அரசுப்பணி நடைமுறை விதிகள், ஒழுங்குமுறை விதிகள் என்பது பொது. யார் தவறு செய்தாலும், செய்கின்ற தவறுக்கேற்றமாதிரி அவருக்குத் தண்டனை என்பது உறுதி. இதற்கு பயந்துதான், கட்டுப்பட்டுத்தான் வேலை செய்தாக வேண்டும். அன்றாட வேலைகளைச் செய்வதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். நேரம் காலம் மாறலாம். அலுவலக நேரம் கடந்து வேலை பார்க்கலாம். விடுமுறை நாட்களில் பணியாற்றி முடிக்கலாம். எல்லாமும் உண்டுதான். ஆனால் பொறுப்பு என்கிற கட்டுப்பாட்டு வளையத்திற்குள்தான் வலம் வந்தாக வேண்டும். இதை யாரும் மறுக்க முடியாது. இது மீறப்படும்போதுதான் என்றாவது எக்கச்சக்கமாக விஷயம் மாட்டிக் கொள்கிறது.



ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஒரே வரி. வேறு எதுவொன்றாலும் இதை வரையறுக்க முடியாது. இன்றைய விலைவாசி ஏற்றத்திற்கும், கல்வி வியாபாரத்திற்கும், வாழ்நிலை உச்சங்களுக்கும் ஒரு சாதாரண அரசு ஊழியர் தன் ஒரே சம்பளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? என்றெல்லாம் கேள்விகள் கேட்கக் கூடாது. ஆகையினால் சமயத்திற்குத் தகுந்தாற்போல் நான் என்னை மாற்றிக் கொள்ளத்தான் செய்வேன் என்று சொல்லிக் கொண்டு இந்த வேலைக்கு வரவில்லை. இந்த நன்னடத்தை விதிகளுக்குக் கட்டுப்பட்டு வேலை செய்கிறேன் என்றுதான் வேலையில் சேர்ந்தோம். அப்படியென்றால் அதற்கு என்ன பொருள்? என் சுய ஆசைகள் அதில் குறுக்கிடாது, சுய நலன்கள் உள்ளே வராது, பொறுப்பின்மை தலையிடாது என்பதெல்லாம்தான். சொந்த வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களுக்கு நான் பார்க்கும் உத்தியோகம்தான் ஈடு கொடுத்தாக வேண்டும் என்று தவறுகள் செய்ய முனைந்தால் பிறகு கஷ்டப்பட வேண்டியதுதான். அதற்கான தண்டனைகள் வருகையில் எதிர்கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை.



இப்படியான தவறுகளைச் செய்து, மாட்டிக் கொண்ட அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் உண்டு. அரசுப் பணியில் இருந்த ஆண்டுகளில் தொடர்ந்து தவறுகளே செய்துகொண்டு, அதையே நடைமுறையாய் ஆக்கிக் கொண்டு, கடைசியில் ஓய்வு பெறுகையில் ஓய்வு பெற முடியாமல் கண்டனப் பணி நீக்கம் செய்யப்பட்டு, ஓய்வுப் பலன்கள் எதையுமே பெற முடியாமல் போனவர்கள் இருக்கிறார்கள். பிறகு பத்தாண்டுகள் கூடக் கடந்து, அவர் பெயரிலான குற்றச்சாட்டுக்கு இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டு, பிறகு தனது ஓய்வூதியப்பலன்களைப் பெற்று, வீட்டில் பெண்டு பிள்ளைகளுக்குக் கல்யாணம் பார்த்தவர்கள், தண்டனையில் இருக்கையிலேயே மண்டையைப் போட்டவர்கள், வரும்போது வரட்டும் என்று அத்தனை காலம் விதிகளுக்குப் புறம்பாகச் சம்பாதித்த காசை வைத்துக்கொண்டு கொடிகட்டிப் பறந்தவர்கள், என்ன சம்பாரிச்சு என்ன செய்ய (இங்கே சம்பாத்தியம் என்பது உண்மையான சம்பளம் அல்ல என்பதைப் புரிந்து கொள்க) என்று வியாதியில் விழுந்து இருதய ஆபரேஷன், பக்கவாதம், கிட்னி ஃபெயிலியர், நோய் நொடி என்று விழுந்து நசிந்து போய் காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.



எல்லாமும் உண்டுதான். ஆனால் அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் என்பது எல்லாருக்கும் பொது. அதை நாம் எவ்வளவு மரியாதையோடு கடந்து செல்கிறோம் என்பதைப் பொறுத்து அவை நம்மை வாழ வைக்கிறது. அல்லது வீழ்த்தி விடுகிறது.



லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது. பிறந்த நாள் சான்று வழங்க லஞ்சம்பெற்ற எழுத்தர் கைது. மின் இணைப்பு வழங்க கையூட்டுப் பெற்ற பொறியாளர் கைது.வண்டி லைசன்ஸ் வழங்க லஞ்சம். ஓட்டுநர் தகுதிக்கு லஞ்சம். இப்படி எத்தனை எத்தனையோ லஞ்ச லாவண்யச் செய்திகளை அவ்வப்போது நாளிதழ்களில் நாம் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.



கையும் களவுமாகப் பிடிபட்டார் என்ற செய்தியை வெறும் செய்தியாகத்தான் பலர் அறிந்திருக்கக் கூடும். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் மறைந்து நின்று பவுடர் தடவிய அந்த ரூபாய் நோட்டுத் தாள்களைக் குறிப்பிட்ட அந்த அரசு ஊழியர் அல்லது அலுவலர் பெறும்போது பாய்ந்து சென்று மறைவிலிருந்து திடீரென வெளிப்பட்டுப் பட்டென்று முன்னே தோன்றிப் பிடிக்கிறார்களே அந்தக் காட்சியைக் கண்ணாரக் கண்டவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் அந்தத் தவறைச் செய்யத் துணியவே மாட்டார்கள். பவுடர் பட்ட கை விரல்களை டம்ளரில் நனைக்கச் சொல்வதும், அதில் அந்தப் பவுடர் கலந்து சாட்சியாவதும், உடனடியாகப் பிடிபட்டவரைப் பழகிய அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையில் சட்டையைக் கழற்றி அமர்த்துவதும், சட்டென்று மாறிய சூழலில், மானக்கேடில் அவர் வியர்த்து விறுவிறுத்து தொப்பென்று நனைந்து கிடப்பதும், கைகளும் உடம்பும் நடுக்கம் கொள்வதும், வாய் குழறுவதும், கண்கொள்ளாக் காட்சிகள். அய்யோ பாவமே! என்று எப்படிப்பட்ட மனிதனுக்கும் சற்று ஈரம் சுரக்கத்தான் செய்யும். இவையெல்லாம் எதுவுமே இல்லாமல் என்ன பெரிய இது என்று இருக்கும் கடுவன்களும் உண்டுதான்.



வாழ்க்கை பூராவும் படு நேர்மையாக இருந்து, கடமையே கண்ணாகக் கழித்து, அலுவலருக்குக் கொடுத்த சொந்தப் பணம் திரும்ப வரவில்லையே என்கிற ஆதங்கத்தில் அதை இப்படித்தான் நேர் செய்தாக வேண்டும் என்கிற முடிவில் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தவறு செய்து மாட்டிக் கொண்டு சிறையில் அடைபட்ட பரிதாபமான அரசு ஊழியரைக் கூட பலர் அறிவர். குறைந்தது ஐந்தாண்டு, பத்தாண்டு என்று கூட வழக்குகள் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கின்றன.



அரசன் முதல் ஆண்டிவரை என்று சொல்வதைப்போல் ஒரு சாதாரண பியூன் முதல் மேலதிகாரி வரை விதிமுறைகள் ஒன்றுதான். யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். தண்டனை தண்டனைதான்.



இதெல்லாம் இப்படியிருக்கையில் வெறும் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே என்று பொது ஜனத்தால் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, எம்.எல்.ஏ. ஆகி, எம்.பி. ஆகி, அமைச்சரும் ஆனவர்கள் அரசியல் சட்டத்தின் மீது விருப்பு வெறுப்பில்லாமல் செயல்படுவேன், சுயநல மனமாச்சரியங்களுக்கு இடம் கொடேன் என்று கூறிப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு விட்டு, எப்படியெல்லாம் மாறிப் போகிறார்கள்.எப்படியெல்லாம் இஷ்டப்படி செயல்படுகிறார்கள். இந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்தான் எப்படி எப்படியெல்லாம் செய்திகள் அவ்வப்போது நம்மை வந்து தாக்குகின்றன. புதிது புதிதாக வரும் செய்திகள், இது இன்னும் எங்கெங்கு நீளுமோ, யார் யார் மீது பாயுமோ என்றெல்லாம் நாளும் எதிர்பார்க்க வைக்கின்றனவே?



மக்களுக்கு என்ன தெரியும், ஓட்டுப் போடுவதோடு அவர்களின் வேலை முடிந்து போனது என்கிற கதையாகவல்லவா இருக்கிறது இவர்களின் இந்தத் துணிந்த செயல்பாடு.



பதவிப் பிரமாணம் செய்து கொண்டபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழிகள் என்னவாயிற்று? அவற்றில் ஒன்று கூடக் கடைப்பிடிக்கப்படவில்லையா? யார் நம்மைக் கேட்பதற்கிருக்கிறது இனி எல்லாமே நம்மளதுதான் என்பதுபோலும், இனி என்றும் எப்பொழுதும், நாம்தான் என்பதுபோலவும் அல்லவா செயல்பட்டிருக்கிறார்கள். வாய் நீண்டு, கை நீண்டு, செயல் நீண்டு அதல பாதாளம்வரையல்லவா பாய்ந்திருக்கிறது.



மக்கள் வியந்து, விக்கித்துப் போய்த்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாததா? அவர்களால் அறியப்படாததா? வெறும் ஓட்டுப் போடுறதோட உதறிட்டுப் போயிடறது இல்ல மச்சான்....எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோம்...



அதெல்லாம் எதுவும் பேசக் கூடாது. இதோ நான் சொல்கிறேன் எழுதிக் கொள்ளுங்கள்.



இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும், எவரையும் இழிவுபடுத்திவிட முடியும். எந்தப் பொய்களையும் உண்மையென்பதுபோல் சித்தரிக்கமுடியும். நடக்காததையெல்லாம் நடந்ததுபோல் காட்டிவிட முடியும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.... இதுதான் இன்றைய உண்மை.



ஆக, எந்தத் தப்பையும் மனம் திறந்து ஒத்துக்கிற மாதிரி இல்ல....



அதெப்படிங்க முடியும்...சுத்த பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு...



மனசாட்சின்னு ஒண்ணு உண்டா இல்லையா?



மனமாவது சாட்சியாவது...யார் சொன்னா அப்டி? கிலோ என்ன விலை?



ஆஉறாஉறா...இந்தப் பாமர அப்பாவி மக்களின் மீதுதான் எவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு...! இல்லையென்றால் இப்படியெல்லாம் பேச முடியுமா? ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், விடாமல் சொன்னால், காலம் பூராவும் சொல்லிக்கொண்டிருந்தால், ஓ! அதுதான் உண்மை போலும்? என்று என்றாவது சந்தேகம் வர ஆரம்பிக்காதா? கண்டிப்பாக வருமய்யா...வரும். அப்படித்தானே இத்தனை ஆண்டு கால அரசியல் நகர்ந்திருக்கிறது. அரசியல் என்றாலே இதுதான் என்கிற அளவுக்குக் கொண்டு வந்தாயிற்றே? மக்களின் நம்பிக்கைதான் ஆதாரம். ஆனால் எதை நம்புவது? எப்படி நம்ப வைப்பது? இப்படித்தான். பாடப் பாட ராகம். பொய் சொல்லச் சொல்ல உண்மை!



திருவாளர் பொதுஜனம் அவர்களே...



இந்தளவுக்கு, இத்தனை ஆண்டு காலமாக வளர்த்து விட்டது யார்? நன்றாக யோசித்துப் பாருங்கள் நீங்கள்தானே...படுங்கள்...!! நன்றாகப் படுங்கள்

சனி, 9 ஜூலை, 2011

Stella Broose..

எழுத்து / வகை : ஸ்டெல்லா புரூஸ் My Photo







short story









அவள் எனக்கு மஹாராணிதான். என்னுடைய நினைவுகளையும், கனவுகளையும் அரசோச்சும் அழகு ராணி. என்னுடைய ராணி ஓர் மயிலும் கூட - நடனத்தில்.







எனது மயில்....ஸாரி, மயிலின் பெயரைச் சொல்லாமலே....பெயரென்றால்? காலேஜ் ரிஜிஸ்டரில் அவள் - ஸில்வியா ஆன்டர்ஸன். காலேஜ் கேம்பஸிற்குள், தோளுடன் தோள் உராயும் தோழியருக்கு - அவள் ஸில்லி. எனக்கு, என்னுடைய சுகமான நினைவுகளுக்கு, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கனவுகளுக்கு - அவள் பெப்பி பெப்பி பெப்பி........







பெப்பி - என் நினைவே, என் கனவே.......ப்ரு காப்பியின் முறுகல் நுரை போலிருக்கும் என் மயிலின் சிரிப்பு. அவளுக்குத் தொடைகள் என்ன மயிலின் பட்டுத் தொகைகளா? - இந்த புஷ்கி அரைக் கண்ணைத் திறந்து கொண்டு; அரை வாயைத் திறந்து கொண்டு அத்தனை சுகமாகத் தூங்குகிறதே மயிலின் மடியில். சொல்லவே சுகம். மீண்டும் சொல்கிறேன். 'என் மயிலின் மடியில்.' ஏய் புஷ்கி. எனக்கு உன்மேல் பொறாமை. யார் இந்த புஷ்கி? யாருமில்லை. மயில் வீட்டுப் பொமரேனியன். மயிலுக்குக் குழந்தை மாதிரி. இரவிலும் கூட இந்த புஷ்கி என் மயிலுடன் பஞ்சு மெத்தைக்குள்; போர்வைக்குள்..போகட்டும்.







ஸில்வியாவை நான் மட்டும் ஏன் பெப்பி என்கிறேன்? சொல்கிறேன். உங்கள் வீட்டில் பியானோ இருக்கிறதா? பெப்பி ஆரோமெல்லோ என்ற இளைஞனின் பியானோ இசையில் உங்களுக்குப் பைத்தியம் உண்டா? மயிலிடம் இரண்டும். எனது மயிலும் பிரமாதமாக பியானோ வாசிக்கும். அதனால்தான் பெப்பியென்று என் மயிலை நான் மட்டும்...







லைட் ப்ளு வர்ண சுவர்கள். மூலையில் ரெட் கார்ப்பெட்..பியானோ. மயில் பியானோ வாசிக்கிறது. மயிலின் டிரஸ் குரு ரெட்டில். மயிலின் பொன் வர்ணக் கூந்தல் - தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு அருவி அமைதியாக வழிவதைப் போல. மயிலின் அருவியை மெதுவாக ஸ்பரிக்க ஒரு மலராத ரோஜாவை அந்தப் பொன் வர்ணக் கூந்தலில் சூட்ட நான் - பைத்தியமாக...







பெப்பி எனக்கு இன்ஸ்பிரேஸன். எனக்கு அவள் அடுத்த வீட்டுப் பெண். அதனாலா மயிலை நான் 'படோசன்' பார்க்க அழைத்துப் போனேன். மயிலுக்கு இந்திப் படம் பிடிக்கவில்லை. ஆனால் நஸீம் பானுவின் பெண்ணைப் பிடித்தது. 'ஸி ஹர் அய்ஸ்' என்றாள். பார்த்தேன். மயிலின் கண்களை; நீல நிற விழிகளில் நான்.







எனக்கு மயிலின் வீட்டில் மிகவும் சுதந்திரம். அந்த சுதந்திரம். அந்த சுதந்திரத்தின் ஆரம்பம் - புத்தகம். மயிலின் அப்பா - அவருக்கு எல்லா இடங்களிலும் ஒரே பெயர்தான். மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன். 50 வயது ஜென்டில் மேன். பார்த்தால் 30 வயது. மிஸ்டர் தாமஸ் ஒரு புத்தகப் பூனை. நான் சொல்லவில்லை. எல்லாம் என் மயில்தான். தூங்குவதும்கூட மயிலின் அப்பாவிற்குப் புத்தகத்தில்தான். புத்தகத்தில் தூங்கினால் பூனையா? அப்படியானால் நானும்தான்.







மகளை மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன் சொல்வார் : "மகளே நீ கூட நமது புஸ்ஸி போல," புஸ்ஸி? யெஸ், மயில் வீட்டுப் பூனைக்குட்டி.







"பரிஹரின் டெரிடோபைட்டைப் படிக்கும்போது தான் நினைத்தேன். உன் அம்மாதான் சொன்னாள் - ஜெனிடிக்ஸ் படிக்கும்போதுதானாம்.. பரீட்சையிலும் போய் தூங்காதே மகளே..."







நானும் மனதிற்குள் சொல்கிறேன்.. "பரீட்சையிலும் போய் தூங்காதே மயிலே..." என்னுடைய மயில் பாட்டனி ஸ்டூடண்ட்..எனக்கென்ன தெரியும் பாட்டனியில்? ஆங்கிலம் தெரியாதவனுக்கும் எ பி ஸி டி என நான்கு எழுத்துக்கள் தெரியும்போது. எனக்கும் பாட்டனியில் தேலோபைட்டா, பிரையோபைட்டா என இரண்டு பெயர் சொல்லத் தெரியும். பூக்கும் தாவரம் பூக்காத தாவரம் என்று மயில் பெரிய லெக்சரை ஆரம்பிப்பாள். பாதியில் நிறுத்தி, 'போரடிக்கிறேனா,' என்பாள். நான் என்ன சொல்வேன்? பேசாமல் இருப்பேன்.







நான் இல்லாமல் மயிலின் வீட்டில் கிறிஸ்துமஸ் இல்லை. மயிலின் பிறந்த நாள் இல்லை. எப்படி இவ்வளவு நெருக்கமானேன்? சொல்கிறேன். எனக்கு முதலில் அறிமுகம் மயில் இல்லை. மயிலின் அப்பாதான்.







ஒருநாள் தலைமைச் செயலகம் பக்கம். சிகப்பு வர்ண பஸ் நின்றுவிட்டது. பஸ் போகாதுயென்று சொல்லி விட்டார்கள். அப்போதுதான் அந்த மஞ்சள் வர்ண ஹில்மன் கேம்பிரிட்ஜி. நிலைமை புரிந்து, என்னைப் பக்கத்து வீட்டுக்காரனாகத் தெரிந்து கொண்டார் மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன். 'கெட் இன்' சொல்லிக் கதவைத் திறந்தார். முன் ஸீட்டில், அவருக்கு வலது பக்கம் நன்றி சொல்லி உட்கார்ந்தேன். அறிமுகப் பரிமாற்றம், கார் போகிறது என்பதை 'வார் மெமோரியலைப் பார்த்துத்தான் தெரிந்தேன்.







"என்ன அது புத்தகம்?" - தாமஸ் கேட்டார்.







"சாத்தர் - ட்ரபிள்ட் ஸ்லீப்..." தாமஸ் ஆச்சர்யப்படவில்லை. சந்தோஷப்பட்டார்.







"சாத்தரில் வேறு என்ன படித்திருக்கிறீர்கள்?"







"த ஏஜ் ஆஃப் ரீஸன்."







"வேர்ட்ஸ்?"







"படித்ததில்லை."







"அவசியம் படியுங்கள்."







"வேர்ட்ஸ் எனக்குக் கிடைக்கவில்லை."







"நான் தருகிறேன்..." சாந்தோம் வந்தது. க்ரீன் வேஸ் ரோட் வந்தது.







'பொகைன் வில்லா' மயிலின் வீட்டிற்குப் பொருத்தமான பெயர்தான். சுற்றுச்சுவர் பூராவும் வெள்ளையாய், ஆரஞ்சாய். இரண்டும் கலந்ததாய் - பொகைன்விலா பூக்கள் - இலைகளே இல்லாமல.







தாமஸ் ஆண்டர்ஸன் என்னை வீட்டிற்குள் அழைத்தார். போனேன். மயிலையும் மயிலின் அம்மாவையும் அறிமுகம் செய்தார். வெளிச்சமான ஃப்ரிஜ்ஜிலிருந்து புகை நெளியும் கொக்காகோலா.







மயிலின் அப்பாவிடம் எவ்வளவு புத்தகங்கள்......ஒரு புத்தகம் வாங்கப் போனவன் இரண்டு கைகளிலும் அள்ளிக் கொண்டு வந்தேன். ஆஸ்கர் வயில்டின் - தாஸ்தாவ்ஸ்கியின் - இன்னும் நிறைய...







மயிலின் அறையிலும் நிறைய புத்தகங்கள்.. என்ன புத்தகங்கள்? கார்ட்டூன்ஸ். நாய் வளர்ப்பு. பூனை வளர்ப்பு. மீன் வளர்ப்பு. வீட்டை அலங்கரிப்பது. தோட்டக் கலை. இவைகளைத் தவிர்த்து பெரிய பெரிய உறை போட்ட வால்யூம்கள் - இசையைப் பற்றி... இசை விற்பன்னர்களைப் பற்றி; அவர்களுடைய சாதனைகள் பற்றி...போகட்டும்.







மயிலைப் பற்றிய பிற விஷயங்கள் - ஸ்டெல்லா மேரீஸில் பி எஸ்ஸி இறுதி ஆண்டு. பாட்டனி மெயினில் முன் வரிசையில். கல்லூரி முழுவதுக்குமே கனவுக் கன்னியாக.







என்னைப் பற்றி - ப்ரசிடென்ஸியில் எம்.ஏ இறுதியாண்டு - ஆங்கில இலக்கியத்தில் அடுத்து என்ன செய்வதாக உத்தேசம். புரபஸர் உறுதி சொல்லி இருக்கிறார். ஆராய்ச்சி செய்யப் போகிறேன். அப்புறம்? பான் அமெரிக்கனில், பாரிஸ் வழியாக, சுதந்திரச் சிலை வரவேற்க - யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா. ஹார்வர்ட் யுனிவாஸிட்டியில் மஞ்சள் நிறப் பூக்கள் உதிர்ந்த விரிப்பாய் விரிந்திருக்கிற மைதானத்தில், மூடுபனியில், பக்கத்தில் மயில். மயிலின் அருவி என்னுடைய தோளில்..சபையரில் மீசை வைத்த மஹாராஜாவைப் பார்க்கும்போதெல்லாம் என் மஹாராணியுடன் சுதந்திர சிலையைப் பார்த்து வருவேன்.







என் மயிலை, என் பெப்பியை நான் காதலிக்கிறேன். ஆனால் என்னுடைய காதலை அவளிடம் நான் வெளிப்படுத்தவில்லை. காரணம்? காதலுக்கு அர்த்தம் காதல் இல்லையாம். பின்? காதலுக்கு அர்த்தம் செக்ஸôம்? என் மயில்தான் சொல்கிறாள். இதை என் பகுத்தறிவும் இருதயமும் ஒப்புக் கொள்ளவில்லை;. காதல் வெறும் செக்ஸ் இல்லை என்பதை எப்படி விளக்குவேன்? காத்திருக்கிறேன்; காலத்திற்காக.







என்னுடைய மயிலைப் பியானோ பைத்தியம் என்றேன். பியானோவுக்கு மட்டுமல்ல, இசைக்கே அவள் பைத்தியம். இசைக்குஞ்சு என் மயில். கிளாரினெட்டில் தனித்வம் காட்டியவன் மொஸôர்ட் என்பாள். ஷைக்காவ்ஸ்கியின் ஃபிரான்ùஸஸ்கா - டி - ரிமினியாம். அதை அந்த ஸ்டீரியோவில் போட்டுக்கொண்டு ரெட் கார்பெட்டில் மயில் ஆடும் ஆட்டம்... ஆடு மயிலே ஆடு. பொன் வர்ணக் கூந்தலுக்கு பீர் ஊற்றிக் குளிக்குமா என் மயில்? அவளின் கூந்தல் அந்த வர்ணமாய்; அந்த நுரைபோல்...







ஃப்ரான்ஸ் ஷ÷பருக்கு பித்தோவன் கடவுள் மாதிரியாம். இசைஞர்களைப் பற்றி மயிலுக்குத் தெரியாத விஷயமே கிடையாதோ?







ஸம்மர். மயில் அப்பாவோடும் அம்மாவோடும் லோனாவாலாவில். லோனாவாலா என்ற பெயரைக் கேட்டாலே என் மயிலின் கண்கள் ஒரு மயக்கம் மயங்கிச் சிரிக்கும். கண்களுமா சிரிக்கும்? சிரிக்கும். என் மயிலுக்கு மட்டும். பத்து நாட்கள் மயில் அந்த மலைச் சரிவுகளின் ஈரக் காற்றில. அதெல்லாம் பித்தோவன் ரசனை மாதிரியாம். லோனாவாலா ரசனை. போகட்டும்..







மணக்கும் எங்கள் பாத்ரூம். ஜில்லென்ற ஷவரின் கீழ் பச்சை நிற ரப்பரின் மேல் பிதற்றிக் கொண்டிருக்கிறேன். பெப்பி பெப்பி பெப்பி.. மயிலே மயலே. என்னென்னவோ நினைக்கிறேன். மயில் பீர் வர்ணக் கூந்தல். ரெட் கார்பெட். ஜ÷ம் ரீவ்ஸ். ஜøலி ஆண்டரூஸ். ரசனை. ஓவியம். வாஷ்கோ. ரசனை. சீன்கானரி 007. ரெக்யல் வெல்ச். ரசனை, மயில், ரசனை. கண்டு பிடித்து விட்டேன். கண்டு பிடித்து விட்டேன். ஷவருக்கும் பச்சை நிற ரப்பருக்கும் இடையே போய் போய் வந்தேன். குளிரும் ஷவரில் ஷேக்.







மயிலே. நீ இறகு போடப் போகிறாய். குயிலாக இந்த ஷோல்டரில் சாய்ந்து பாடப் போகிறாய். ஆர்க்கமிடிஸ் போல ஓடினால் என்ன? பாம்பே டையிங்கின் கதகதப்பில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறேன். ஷவரை நிறுத்துகிறேன். நீர் சொட்டுச் சொட்டாக பச்சை நிற ரப்பரில் உருண்டு உருண்டு ஓடுகிறது.







கதவுக்கு வெளியே தங்கையின் குரல். "அண்ணா, என்ன பண்ணுகிறாய்? குளிக்கிறாயா, இல்லை பாத்ரூமை கழுவி விட்டுக்கொண்டு....." "ஷட்டப்," கதவைத் திறக்கிறேன்.







"லிட்டில் நெல் ; இந்த பாத்ரூமில் நான் ஓர் உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறேன்.."







"உனக்கென்னப்பா, நீ பெரிய ஆர்க்கிமிடிஸ்."







எங்கள் வீட்டில் லிட்டில் நெல் பிரியம் வந்துவிட்டால் வீட்டில் எல்லோரையும் போப்பா வாப்பா என்றுதான் பேசும். ஒன்றும் சொல்லக்கூடாது. அருமையான குழந்தை..







என் அறைக்குள் ஓடுகிறேன். என் மயிலுக்கு ரோஜா நிறக் காகதிதங்களில் காதலுக்கு ஒரு தீஸிஸ். என்னுடைய காதல் ராணிக்கு காதல் சாசனம் எழுதுவது இந்தப் பட்டையடித்த லுங்கியைக் கட்டிக்கொண்டா? சுருட்டி எரிகிறேன். டார்க் ப்ளூ பேண்ட். சில நிமிடங்கள் மயிலின் கூந்தல் நினைப்பில். எழுத ஆரம்பிக்கிறேன்.







அன்புத் தோழி பெப்பி,

உன் நண்பன் ஆனந்த்ஷங்கர் எழுதும் இந்தக் கடிதம் உனக்கு ஆச்சரியத்தைத் தருகிறதா?பிரியமுள்ள பெப்பியே. எங்கள் வீட்டு பாத்ரூமில் நான் ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறேன். அது என்ன? எழுதுகிறேன். பெப்பி; கோடை வந்தால் நீ லோனாவாலா, லோனாவாலாயென்று ஓடிப் போகிறாயே.... அதை என்ன வென்று சொன்னாய்? ரசனையென்று. இப்போதும் இல்லையென்று மறுக்க மாட்டாய். உதகமண்டலத்தை விட அந்த லோனாவாலா உனக்கு சுகமாக. இனிமையாக..லோனாவாலா ரசனை. இது உன் ரசனை. உன்னுடைய இன்னொரு ரசனை - நிறைந்து வழியும் பீர் கிண்ணத்தில் பொங்கிப் பூரிக்கும் பொன்னிற நுரைகள் உரசி நொறுங்கும் ஓசை எப்படி இருக்கும்? நீ சொல்வாய் - ஜøலி ஆண்ட்ரூஸ் குரல் போல்யென்று. அந்தப் பீர் நுரைக் குரலுக்காக 'நட்சத்திர' படத்தை மூன்று தடவைப் பார்த்தது நீ ஒருத்தியாகத்தான் இருப்பாய் என் அம்மாவிற்கும் ஜøலி ஆண்ட்ரூஸ் ரசிக்குமா? ரசிக்கவில்லை. அவளுக்கு டி.கே பட்டம்மாளின் ஆலாபனை. சங்கராபரணம். புன்னாகவராளி. இது அவள் ரசனை.







இன்னும் உன் ரசனைகளின் அட்டவணை.







சௌன்ட் ஆஃப் ம்யூஸிக் ஏழு தடவை ஏன்? அந்த ரெஸ்பிகி அவனுடைய ரோமாபுரி ஊற்றுக்கள். ஜிம் ரீவ்ஸ். க்ளிப் ரிச்சர்ட். கார்லோ பான்டியின் மனைவியும் அவளுடைய நடிப்பும் - இவை அத்தனையுமே உனது ரசனை ரசனை ரசனை. அந்த ரசனை சுகமானது. ஆனந்தமானது - இதயத்திற்கு; அதன் உணர்வுகளுக்கு. இந்த சுகானுபவமான ரசிப்புக்குச் சரியான பொருள்தான் காதல். ஒப்புக்கொள். கர்ஸ்ங்ழ் ர்ச் அழ்ற்ள் என்றால் அர்த்தம் என்னவோ - காதலுக்கு அர்த்தம் அதுதான். அவசரப்பட்டு விடாதே பேபி. ரசனை எல்லாமே காதலா? உனக்கு ஒப்புக்கொள்ள சங்கடமாக இருக்கலாம். விளக்கமாகச் சொல்கிறேன். கவனமாய்ப் படி.







லோனாவாலாவின் அமைதியான புல்வெளியில் ஓடி ஓடி வண்ணத்துப் பூச்சி பிடிக்கிற உன்னுடைய ரசனை; ஜøலி ஆண்ட்ரூஸின் பாட்டில் மயங்கும் உன் ரசனையின் சுகம் - இவற்றிலெல்லாம் செக்ஸ் - பாலுணர்வு ஒட்டி இருக்கின்றதா? அல்லது இதற்கு அடிப்படை செக்ஸô? சொல்வாயா நீ? சொல்ல மாட்டாய். ஜாக்கிரதையாக வாசி தோழி. இது ப்ரையோபைட்டா இல்லை. ரசனை என்பது காதல்தான். செக்ஸ் அல்ல. காதல் வேறு, செக்ஸ் வேறு. இரண்டையும் ஏன் பிணைத்து நோக்க வேண்டும்? கூடாது - அது தப்பு. செக்ஸ் என்றால் என்ன?







Sex is an instinct ; A biological need. காதல் அது போன்ற instinct அல்ல. உடல் பூர்வமான தேவையும் அல்ல. பாலுணர்வு எல்லோருக்குமே பொதுவாக. ஆனால் காதல், ரசனை - எல்லோரிடமும் இருக்கிறதா சொல்? இல்லை. எல்லா மனிதர்களுமா காதலிக்கிறார்கள்? சொல் பேபி. அப்பாவின் அறையில் 'கிங்ஸ்' ஸ்டோரி இருக்கும். படித்துப்பார். எல்லோருக்குமே பொதுவான பாலுணர்வோடு எல்லோருக்கும் பொதுவாக இல்லாத காதலையும் ரசனையும் பிணைப்பது கூடாது. காதல் வயப்படும் ஒரு ஆண் பெண் இருவரிடையே பாலுணர்வு கிடையாது என்பதல்ல நான் சொல்லிக் கொண்டு வருவது. அந்தக் காதலுக்கு அடிப்படை பாலுணர்வு உடலில் இருந்து - அதாவது Physical. காதலுணர்வு உள்ளத்தில் இருந்து - அதாவது psychical.







உடலின் உஷ்ணமான எழுச்சியும்; ஹிருதயத்தின் ஆன்ம ரசிப்பும் ஒன்றா பேபி? இப்போது நீ ஒப்புக் கொள்வாய் - காதல் செக்ஸ் அல்ல என்பதை. காதல் ஒரு ரசனைதான். ஆனால் ரசனைகள் எல்லாமே காதலா? சந்தேகம் வரலாம் உனக்கு. சொல்கிறேன். ஒரு பொருளின், இசையின், நபரின் மீது நமக்கு ரசனை உள்ளது என்றால் அந்த ரசனை என்பதுதான் முதல் கட்டம் என்பதல்ல. ரசனை நமக்கு ஏற்பட்டிருக்கிற பொருளின் மீது முதலில் ஏற்படுவது அட்மிரேஸன்தான. அந்த அட்மிரேஸன் நேற்று இன்று நாளை என்ற அப்பியாசத்தில்தான் ரசனையாக மலர்கிறது. கவனமாகப்படி. அந்த ரசனையின் பரிணாம மலர்ச்சிதான் காதலா? பரிணாம வளர்ச்சி மட்டுமல்ல - ஒரு பெண்ணின் இயல்புகளை ரசிக்கின்ற ஆண் மகனை அதே பெண்ணும் ரசிக்கும்போது ஒருமிக்கின்ற ரசனைதான்; ரசனையின் பரிவர்த்தனை காதல.







என் அன்புள்ள பெப்பியே ; இனியும் நீ காதல் என்றால் செக்ஸ் என சொல்லமாட்டாய். மை டியர் ஸில்வியா ஆண்டர்ஸன், காதலைப் பற்றி இவ்வளவு நீண்ட விளக்கத்தை உனக்கு எழுதியிருப்பது, காதல் செக்ஸ் அல்ல என்பதை வெறுமே விளக்குவதற்கு மட்டும்தானா? இல்லை பெப்பி, இல்லை. இக் கடிதம் வெறும் காதல் பற்றிய சாஸனம் அன்று. என் காதலின் வெளிப்பாடு. உன்னுடைய குயில் இசையை நான் ரசித்த ரசிப்பும்; அந்த ரெட் கார்பெட்டில் அண்டனியாக ஹாம்லெட்டாக எனது நடிப்பாற்றலை நீ ரசித்த ரசிப்பும் உன் நாட்டியத்தில் நான்; கீட்ஸிற்கு ஒப்பாக கிதை இயற்றும் என் கவித்துவத்தில் நீ; உன் ஆடை அலங்காரத்தில் நான்; ஷேக்ஸ்பியரின் முப்பத்தேழு நாடகங்களையும் பிளந்து பிளந்து சொல்லித் தருகிற என் ஆங்கில இலக்கியப் புல1மையில் - நீ இப்படி உன்னில் நானும், என்னில் நீயும் கொண்ட, பாலுணர்வின் நெடியே அற்ற ஒருமித்த ரசனையின், ரசனைப் பரிவர்த்தனையின் அர்த்தம் என்ன சொல் தோழீ? ஸôரி நான் அழுகிறேன். என்னைச் சில நாட்கள் காணாமல் நீயும், உன்னைச் சில நாட்கள் காணாமல் நானும் எப்படி சோகமாகிச் சோர்வடைந்து போகிறோம். ஏங்கிக் கலங்கிப் போகிறோம். மீண்டும் கண்டதும் அந்த ரெட் கார்ப்பெட்டில் நீ ஆடும் ஆட்டம் என்ன, பாடும் பாட்டென்ன? - இதற்கெல்லாம் பொருள் என்ன ராணி? நான் சொல்லட்டுமா கோடிட்டு எழுதுகிறேன். லவ். ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அட்மிரேஸன் ரசனையாக உயர்ந்து காதலாக மலர்ந்திருப்பதை நீ புரியவில்லையா? உணர்வு வயப்பட்டுக் கண் கலங்கி எழுத முடியாமல் தவிக்கிறேனே - அதே கண்ணீரும் உணர்ச்சி நெரிசலும் உன்னில் ஏற்படவில்லையா? அந்த மன நெரிசலை காதல் என நீ புரிந்து கொண்டால் - தோழி; உனக்காக எட்டாம் தேதி மாலை 5 மணிக்கு மெரீனா ரெஸ்டாரண்ட்டில் காத்திருப்பேன் - அன்புடன் வந்து சேர்...







உன் அன்பு நண்பன்







ஆன்ந்த் ஷங்கர்







கடிதத்தை முடித்தேன். தெருவுக்குத் தெரு குப்பைத் தொட்டி போல சிகப்பு நிற தகர டின்; என் காதல் ராணிக்குத் தூது போகிற காதல் அஞ்சலும் இதற்குள் தானா? ஒரு பால் வெள்ளை அன்னம் கொண்டு செல்லாதா? ஒரு பஞ்சு மேனி பொமரேனியன் எடுத்துப் போகாதா? வழியில்லை. கடிதத்தைத் தெரு முனை பாக்ஸில் போடுகிறேன்.







ஏழாம் தேதி இரவு நான் தூங்கவில்லை. மகத்.தான காதல் காவியங்களை எடுத்து வாசிக்கிறேன்.







எட்டாம் தேதி. சரியாகச் சாப்பிடவில்லை. யாரோடும் பேசவில்லை. என் மயில் வராவிட்டால்? என் காதலை நிராகரித்து விட்டால்? என்ன செய்வேன் நான்? ஸலீம் மாதிரி கண்ணீர் விடுவேனா? தாடி வைத்துக்கொண்டு தாஜ்மஹாலில் பெப்பி பெப்பி யென்று அலைவேனா? இல்லை - அண்டனியைப் போல கண் கலங்கியது.







கலகத்திலும் கவனமாய் ட்ரெஸ் செய்கிறேன். கிளம்புகிறேன். மயில் வீட்டுப் போர்டிகோவில் மஞ்சள் நிற ஹில்மன் கேம்பிரிட்ஜ். டேவிட் அதைத் துடைத்துக் கொண்டிருக்கிறான். எனக்கு வியர்க்கிறது. மயிலைச் சுமந்துகொண்டு அந்த மஞ்சள் வர்ணம் புறப்படுமா? காதல் தேவதையைப் பிரார்த்திக்கிறேன்.







பஸ்ஸில் கிளம்புகிறேன். 4.46 சாந்தோம். 4.48 ராணிமேரி. 4.50 மெரீனா. இறங்கி நடக்கிறேன். 5 மணி. ரெஸ்டாரண்ட்டில் மஞ்சள் வெயில் முகத்தில் அடிக்கிறது. பிரதான வாயிலில் கூர்க்காவின் ஊதல். மஞ்சள் வர்ணமா? இல்லை. வேறு கார். 5.05. வருவதெல்லாம் எம்எஸ் க்யு; எம்எஸ்ஆர்..எங்கே அந்த சிசி. எங்கே என் மயிலின் மயில் வாகனம்?







கூர்க்கா ஒரு முட்டாள். ஊத மறந்து நிற்கிறான். ஹில்மன் கேம்பிரிட்ஜ் ஆகாயத்திலிருந்து வழிந்து வருவதைப் போல..டிரைவிங் ஸீட்டல் மயில. மயிலின் கண்களில் சிரிப்பு. தாமரை இதழ் என்னை நோக்கி அசைகிறது. அழைக்கிறது. சிரிக்கிறேன். ஓடுகிறேன். கதவைத் திறக்கிறேன். மயிலுக்குப் புடவை என்ன அழகாய்...







மயிலின் கண்கள் ஆனந்த ஷங்கரின் கண்களை. ஆனந்த் ஷங்கரின் கண்கள் மயிலின் கண்களை. ஜுய்க் பாக்ஸ் பாட்டுப் பாடி எங்களை வரவேற்கிறது.







ப்ளு டயமண்டில் ரோஸ் மேரீஸ் பேபி. கேலார்டில் ரத்தச் சிகப்புக் கம்பளத்தின் மேல் வெளிச்சமான நடனங்கள். ட்ரைவ் இன். கடற்கரைக் கோயில்.







மயில் ஒரு நாள் என்னிடம் சொன்னது : "தாடி வைத்துக் கொள்ளுங்கள்." நான் சொன்னேன் : "நானென்ன ஆப்ரஹாம் லிங்கனா? ஆஃப்ட்ரால..." க்யூடெக்ஸ் முலாமிட்ட மயிலின் நகங்கள் என் உதடுகளை மூடின. மயில் கேட்டாள். "யாரெல்லாம் உங்கள் குருஜிகள்; யாருக்கெல்லாம் நீங்கள் அட்மைரரர்?" தொடர்ந்தும் மயிலே சொன்னாள்.







"ஷேக்ஸ்பியர்?"







"யா.."







"ஷா.."







"யா.."







"டால்ஸ்டாய் அன் ஹேமிங்வே?"







"யா.."







"யுவர் செகால்."







"யா.."







அவர்களைப் போலவே நானும் தாடி வைத்தேன். தாடியுடன் நான். என்னுடன் மயில். எங்களுடைய காதலை எப்போது வீட்டில் சொல்லப் போகிறோம்? விரைவில் மயிலின் அப்பா தெரிந்தால் சந்தோ1ப் படுவார். ஆனந்த் ஷங்கர் ஒரு நவீன ஷேக்ஸ்பியர் ஆயிற்றே...என் அம்மாவிற்குத் தெரிந்தால்? மயிலுக்கும் காது குத்தி வைரத்தோடு போடுவேன் என்பாள்.







நானும் மயிலும் கலாம் கனியக் காத்திருக்கிறோம்.







ஓடியன் கடைசி வரிசையில் நானும், மயிலும். எல்லோரின் கண்களும் எங்கள்மேல்.







'க்ராஜ்யேட்' ஆரம்பத்தில் மயில் வெட்கமடைந்தது. அப்புறம் சிரித்தது. பின் மௌனம். சந்தோஷம். வருத்தம். கடைசியில் அதிகமான பூரிப்பு. அருமையான திரைப்படம். பின் மயில் ஏனோ சிந்தனையானாள். மஞ்சள் வர்ணத்தை மௌனமாகச் செலுத்துகிறாள். ஒரு வாரமாகவே அவள் ஏதோ சிந்தனையில்.







ஒரு நாள், என்ன மழை என்ன காற்று. ஸ்வப்னாவிலிருந்து நாங்கள். காரின் கண்ணாடிகளில் பனிப்போர்வை. குளுமையாக, மஞ்சள் தேய்த்துக் குளித்தது போல ஹில்மன் கேம்பரிட்ஜ் நீர் வழிந்து அதன் மஞ்சள் வர்ணமே கரைவது போல். நாங்கள் இருவரும் மௌனமாக.







வைப்பர்கள் இயங்குகின்றன. கார் கிளம்புகிறது. அண்ணாசாலை, சேப்பாக், மாநிலக் கல்லூரி...க்வின் மேரிஸ்.







மயில் என்னைப் பார்க்காமலே, "ஆனந்த்; உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்..."







சாந்தோம். க்ரீன்வேஸ்ரோட்...







'பொகைன்வில்லா - ஈரம் சொட்டச் சொட்ட..







ஒட்டப்பட்ட வெள்ளைக் கவரை என்னிடம் நீட்டுகிறாள்.







"குட் நைட்.."







"குட் நைட்"







மேலே மேகங்கள் முட்டி மோதி வெடிக்கின்றன. கடிதத்துடன் என்னுடைய அறைக்கு ஓடுகிறேன். கதவைப் பூட்டுகிறேன். மயிலின் கடிதத்தைப் பிரிக்கிறேன்.







அன்புள்ள நண்பரே -









ஐந்து தினங்களுக்கு முன்பாக ஷைக்காவ்ஸ்கியின் குளிர்காலக் கனவுகளை ரிக்கார்ட் ப்ளேயரில் போட்டேன். எனக்கு என்ன ஆகிவிட்டது? சிவப்பு விரிப்பில் என்னைக் கூத்தாட வைக்கும் அந்த இசை வறண்டு போயிருந்தது. மயங்கி மயங்கி நான் ரசித்த ரசிப்பெல்லாம் எப்படி எதனால் சலித்துப் போயிற்று. பாதியில் நிறுத்தினேன். சிந்தித்தேன். ரசனையும் சலித்துப் போகுமா?







ஒவ்வொரு சம்மருக்கும் லோனாவாலா இன்னும் சலித்துப் போகவில்லையா? அங்கு போய்ச் சேரும் நாளில் நான் எப்படி மகிழ்ச்சி கொள்வேன்? பிரியும்போது எப்படி மனம் கனத்துக் கலங்குவேன். அப்படிப் பிரிந்து வந்து விடுவதாலேயேதான் அந்தப் பள்ளத் தாக்குகளின் மேல் உள்ள ரசனை மாறாமல் சலிக்காமல் இருக்கிறேனா? அதை விட்டு வர முடியவில்லை என்பதற்காக அந்தப் பள்ளத்தாக்கிலேயே என் வாழ்க்கையை நிரந்தரமாகப் பிணைத்துக் கொண்டால், அப்படிப் பிணைத்துக் கொள்வதாலேயே என் ரசனை என்ன வாகும்? காலத்தில் உலர்ந்து ஆவியாகிப் போகும்.







- அப்படி உலர்ந்து போய்விடக்கூடாது என் ரசனை. அந்த ரசனையின்; காதலின் இனிமையை உலரவிட மாட்டேன் நான். அந்த லோனாவாலாவைப் பிரிந்திருக்கிற பிரிவுதான்; அந்தப் பிரிவின் ஏக்கம்தான் - ரசனையின் காதலின் ஜீவன். சாரம். லோனாவாலாவிலேயே என் வாழ்வைப் பிணைத்து ரசனையின் சுக உயிரை இழப்பதைவிட அதைப் பரிந்திருந்து காலமெல்லாம் கரையாத காதலுடன் வாழவே நான் விரும்புகிறேன்.







ஆனந்த் : வாழ்க்கையில் நாம் நம்மை நிரந்தரமாக பிணைத்துக் கொண்டு சலிப்படையக் கூடாது. பெரு மூச்சுக்களின் உஷ்ணத்தில் நம் காதல் கனலாகிவிடக் கூடாது. நம் நெஞ்சங்களின் ஆழத்தில் என்றும் அது ஜீவ ஊற்றாக ஜீவித்திருக்க. நம் நினைவுகளிலும் கனவுகளிலும் காதல் என்றைக்கும் உயிர்த்திருக்க ; பசுமையாக நிலை பெற்றிருக்க - நாம் நம்மைப் பிரித்துக் கொள்வோம். பிரிவின் ஏக்கம்தான்; அந்தக் ஏக்கத்தின் கண்ணீர் தான் நம் காதலுக்கு உரம். அந்த உரத்துடன் வாழ்ந்திருப்போம் - கண்ணீருடன்; மாறாத காதலுடன் உங்களுடன் விடை பெறுவது - ஸில்வியா ஆண்டர்ஸன் என்ற - உங்களின் பெப்பி...







நான் கண்ணீர் விட்டேன். பெட்ரூமில். பாத்ரூமில். இனி நான் என்ன செய்யப் போகிறேன்? யாரிடம் சொல்வேன்? மயிலின் பொன் வர்ணக் கூந்தலை வாரிவிடாமல்; அவளின் நீல நிற விழிகளைக் காணாமல் - இவ்வளவு அருகாமையில் என்னால் சிறைப்பட்டிருக்க முடியாது. நான் போய் விடுகிறேன். ஹார்வர்ட் யுனிவர்ஸிட்டி யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா. உறுதி செய்து விட்டேன்.







ஸாண்டாகுரூஸ். அப்பா, அம்மா, புரபஸர் மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன்; நீலவிழிகளில் நீர்படிய என் மயில்...







ஜூஹிவில் இருந்து குளிர்ந்த உப்பங்காற்று. அந்தக் காற்றில் பொன் வர்ணக் கூந்தல் தலைதெறிக்க விடை தருகிறது. குலுக்கிய தாமரைக் கையை ஒரே ஒரு முத்தம்? முடியவில்லை.







விமானத்தின் கதவுகள் மூடுகின்றன.







ஹார்வர்ட் யுனிவர்ஸிட்டியில் ; மஞ்சள் நிறப் பூக்கள் விரிப்பாய் உதிர்ந்திருக்கின்ற மைதானத்தில்; மூடு பனியில் - நான் மட்டும்.....கண்ணீருடன்