ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

M.Yuvan.

நான்காவது கனவு – யுவன் சந்திரசேகர்


Posted by Singamani ⋅ May 8, 2011 ⋅ Leave a Comment

i1 Vote

யோசித்துப் பார்க்கும்போது அமானுஷ்யம் என்னும் ஒன்றே கிடையாதோ எனத் தோன்றுகிறது. சென்னையின் புறநகர்த் தெருவில் நடந்தவாறு, காதோரம் உள்ளங்கையில் எதையோ வைத்துக்கொண்டு, சற்றே சித்தம் பிறழ்ந்தவன்போலத் தனக்குத்தானே உரத்துப் பேசிக்கொண்டு போகும் தன் பேரன் வாஸ்தவத்தில் அமெரிக்காவிலுள்ள அவனுடைய பேரனுடன் உரையாடுகிறான் என்று அறுபதுகளின் கடைசியில் அமரராகிவிட்ட என் தாத்தா இப்போது பார்த்தால் நம்புவாரா?



அல்லது, என் அத்தையை எடுத்துக்கொள்ளுங்கள். அவள் பெயர் வனஜாட்சி. இளம் வயதிலேயே கணவரை இழந்தவள். ஒரே மகன் பட்டாளத்தில் இருந்தான். இன்னும் மணமாகாதவன். 71 பாகிஸ்தான் யுத்தத்தின்போது அத்தை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள் – என்னுடைய தாத்தா திவசத்துக்கு ஆசாரச் சமையலில் உதவ. அவள் வந்த மறுநாள் வெள்ளிக்கிழமைக் காலை எங்கள் வீட்டுச்சுவரில் தொங்கிய முகம் பார்க்கும் கண்ணாடி தவறி விழுந்து நொறுங்கியது. என்னுடைய அம்மா கண்ணாடிச் சில்லுகளை ஒற்றியெடுக்கச் சாணி உருண்டை தேடிப் போனாள். நியாயமாக அந்த வேலையைச் செய்ய விரைபவள் அத்தையாகத் தான் இருக்கும்-அவளோ நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.



உத்தரத்தைப் பார்த்து நிலைகுத்தின விழிகளிலிருந்து கரகரகரவென்று கண்ணீர் ஊற்றியது. என்னுடைய அப்பா அவளருகில் சென்று தோளைத் தொட்டு, என்னாச்சு வனஜீ என்று கேட்க முனைந்தார்.



‘போயிட்டாண்டா, என் ஒத்தெப் பிள்ள போயிட்டாண்டா. என்னை ஒத்தெ மரமா நிக்கவிட்டுட்டுப் போயிட்டாண்டா’ என்று குமுறி அழுதாள் அத்தை. நீண்ட நெடுங்காலமாகக் கைம்பெண்ணாய் இருந்துவரும் அவளுக்கு ஏதோ காரணத்தால் திடீரென்று மரை கழண்டுவிட்டதுபோலிருக்கிறதே என்று நாங்களெல்லாம் கவலைப்பட்டோம்.



ஆனால் சரியாக மறுநாளைக்கு மறுநாள் மிலிட்டரியிலிருந்து தந்தி வந்து சேர்ந்தது. கிழக்குப் பாகிஸ்தானில் வைத்து லட்சுமணன் – அதுதான் வனஜா அத்தையின் மகன் – எதிரியின் பீரங்கி வெடியில் அகப்பட்டுச் சிதறிவிட்டான் என்று சொன்னது. தேச சேவைக்கு மகனை அர்ப்பணித்த தாய்க்குத் தன் மரியாதையையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தது இந்திய அரசாங்கம்.



எங்களுக்கானால் ஆச்சரியம் தாங்கவில்லை. அது என்ன மாதிரியான தொலைத்தொடர்பு என்று புரியவும் இல்லை… எதற்கு இவ்வளவும் சொன்னேன் என்றால், ஒரு தலைமுறைக்கு அமானுஷ்யமாகத் தெரிவது இன்னொரு தலைமுறைக்கு நடைமுறையான விஷயமாக இருக்கிறது என்பதற்காகத்தான்.



நான் யார் என்றே சொல்லாமல் என் யோசனைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு போகிறேன், இல்லையா? அதன் காரணமாக, திடும்மென்று ஆரம்பித்து நான் சொல்லிவரும் விஷயங்களில் லேசாகப் புகைமூட்டம் படர்கிறது, இல்லையா? என்னைப் பற்றிய தகவல்களைச் சொல்லிய பிறகும், நான் சொல்லப்போகிற விஷயத்தை விஸ்தாரமாகச் சொல்லி முடித்த பிறகும் தற்போது நிலவும் இதே குழப்பம் தொடர்வதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது.



இத்தனை வருஷம் கழித்து எனக்கே சற்றுக் குழப்பமாகத்தானே இருக்கிறது.



நான் சுந்தரேசன். தற்போது வயது அறுபத்தொன்று. விற்பனைப் பிரதிநிதியாகத் தொடங்கி, அகில இந்திய நிறுவனமொன்றின் நிர்வாக இயக்குநர் பதவிவரை உயர்ந்தவன். சென்ற வருடம்தான் ஓய்வுபெற்றேன். முதன்முதலில் கர்நாடகத்தில் உள்ள ஒரு மதுவடிப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு சர்வதேச மென்பான நிறுவனம். அதன் பிறகு சிகரெட் நிறுவனம். கடைசியாக வேலை பார்த்த நிறுவனம் போதைப் பாக்குக்குப் பெயர் பெற்றது. இன்றைக்கு இந்தியா முழுவதும் இளைஞர்கள் சதா மென்றுகொண்டும் துப்பிக்கொண்டும் இருக்கிறார்கள் என்றால் அதில் என்னுடைய பங்களிப்பு கணிசமானது.



வாழ்நாள் முழுவதும் லாகிரி வஸ்துக்களை விற்றுவந்திருக்கிறேனே தவிர, அவற்றில் எதையும் நான் ருசிபார்த்ததுகூடக் கிடையாது.



எங்க சுந்தரம் மாதிரி ஒருத்தனைப் பார்க்க முடியாது. பாக்குத் துண்டு பல்லுலெ படாதே என் தங்கத்துக்கு. என்று இருபத்தைந்து வருடத்துக்கு முன் காலமாகிவிட்ட என் அம்மா அடிக்கடி சொல்வாள். பிதுர்லோகத்திலிருந்து பார்க்கும்போதும் அவள் என்னை எண்ணிப் பெருமைப்படத் தான் செய்வாள் என்று நம்புகிறேன். இந்த மாதிரி நம்பிக்கைகளுக்கும் நான் ‘மிஸ்ட்டர் டீட்டோட்டல’ ராக (அப்படித்தான் என் கடைசி நிறுவனத்தின் உபதலைவர் ஏ.கே. ஸின்ஹா என்னை அழைப்பார்) இருப்பதற்கும் நேரடித் தொடர்பு ஏதாவது இருக்கிறதோ என்னவோ?



ஆனால் எனக்குப் பிடித்தமான லாகிரி வேறு ஒன்று இருந்தது. தொழில் சார்ந்து ஊர் ஊராக அலையத் தொடங்கியவன் நான். பதவி உயர்ந்தபோது மாநிலம் மாநிலமாகத் திரிந்தவன். ஏழெட்டு முறை வெளிநாடு கூடச் சென்று வந்திருக்கிறேன், ஸிலோன், மாலத் தீவு, சிங்கப்பூர், பங்களாதேஷ், நேபாளம் என்கிற மாதிரி. அந்த நாட்களில், போகிற இடமெல்லாம் பரிச்சயமாகிற மனிதர்கள் விதவிதமான சம்பவங்களைக் கதைபோலச் சொல்வதைக் கேட்பதில் அலாதியான போதை எனக்கு.



சொன்னால் வியப்பீர்கள், யாருக்குமே சொல்வதற்கு ஒரு பேய்க்கதையோ பாம்புக்கதையோ இருக்கிறது அல்லது பரம்பரைப் பெருமைக் கதை. மேற்சொன்ன எதுவும் இல்லையா, ஒரு ராஜாராணிக் கதை நிச்சயம் உண்டு. வேற்றுமொழி பேசும் அயல் பிரதேசத்தில், எந்த நேரமும் ஏதோவொரு அவமானம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அதற்குத் தன்னை சதா ஆயத்தப்படுத்திக்கொண்டு இருக்கும் மனத்தில் சன்னமான பீதி நிரந்தரமாக இருக்கும். மேற்படிக் கதைகளைக் கேட்பது என்னை நடைமுறை அன்றாடத்திலிருந்து விலக்கிக் காப்பதோடு, கதைசொல்லியின் மனத்தில் என் சம்பந்தமாக ஒரு நம்பிக்கையையும் இதத்தையும் உருவாக்கிவிடும்.



நான் கேட்ட கதைகள் யாவற்றையும் விடாமல் என் நாட்குறிப்பில் பதிவுசெய்து வந்திருக்கிறேன். சமீபத்தில் என் சிநேகிதன் ஒருவனிடம் அதைக் காண்பித்தபோது, அவன் வெகுவாக ஆச்சரியப்பட்டான். கதைகளில் குவிமையம், செய்தியென்றெல்லாம் எதுவும் இல்லாவிட்டாலும் சுவாரசியத்திற்குக் குறைவில்லையென்றும், நான் கேட்டவிதமாக மட்டும் கதைகளை எழுதாமல் சொந்தச் சரக்காகச் சில வர்ணனைகள், சில வாக்கியங்களைச் சேர்த்திருப்பதால் இவற்றுக்கு ஒரு தனித் தன்மையும் சமச்சீர்மையும் உருவாகியிருப்பதாகவும், இளம் வயதில் எழுதியவை என்பதால் மொழியில் ஒரு முறுக்கும் விறுவிறுப்பும் இருப்பதாகவும் தமிழில் தற்சமயம் எழுத்தாளர்களின் எண்ணிக்கையை விடப் பதிப்பகங்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கிறபடியால் என் குறிப்புகளை ஒரு புத்தகமாகப் போடுவது எளிது என்றும் சொன்னான்.



அவனுடைய ஏற்பாட்டின்படி, மேற்படிக் கதைகளை மாநிலவாரியாகப் பிரித்துப் புத்தகமாகப் போட ஒரு பிரசுர நிறுவனம் முன்வந்திருக்கிறது. நான் காலவரிசையில் அடுக்கலாம் என்றிருக்கிறேன் – அதாவது நான் அவற்றைக் கேட்ட கால வரிசையில்.



ஆரம்பித்த இடத்திலிருந்து வெகுதூரம் தள்ளிப்போய்விட்டது என்று நினைத்துவிட வேண்டாம், நான் கூறிய முதல் பத்தியின் பின்னணியில் இன்னொரு விஷயம் மிக முக்கியமானது. சமீபத்தில் பொழுதுபோகாமல் என் நாட்குறிப்பை வரிவிடாமல் வாசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோது தான் நானே இதைக் கண்டுபிடித்தேன்.



அதாவது, இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் கொலைகள் நடைபெற்ற நாட்களிலெல்லாம் நான் வேறு மாநிலங்களில் இருந்திருக்கிறேன் என்பதை.



ரயில்வே அமைச்சராக இருந்த லலித் நாராயண் மிஸ்ரா சமஷ்டிபூரில் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டபோது நான் பீகாரிலேயே இருந்தேன். ஜர்னெய்ல் சிங் பிந்தரன்வாலேயைக் கொல்ல ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்தபோது மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் இருந்தேன். தமது பாதுகாவலர்களால் திருமதி. காந்தி கொல்லப்பட்ட தினத்தில் வங்காளத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தில். அவருடைய மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த நாளில் மேகாலயாவில். ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட மறுநாள் ஆந்திரத்தின் கடப்பைக்கு அருகே ஒரு கிராமத்து ரயில் நிலையத்துக்கு வெளியே நாள் முழுவதும் தடுத்துவைக்கப்பட்ட ரயிலில் இருந்தேன். இப்படி ஒரு விசித்திரமான பிரயாணத் திட்டத்தை எனக்கு வகுத்துத் தந்த கரம் மானுடக் கரமாக இருக்கச் சாத்தியமே இல்லை.



நாட்குறிப்பைப் படித்துவந்த போது, கடப்பையில்-உண்மையில் கடப்பை தாண்டி, எர்ரகுண்ட்லாவும் தாண்டி, பிறகு வந்த சிறு நிலையத்தையும் கடந்தபிறகு வந்த கிராமத்தின் வெளிவிளிம்பில் – சந்தித்த அல்லூரி வெங்கடேச ராவ் சொன்ன கதை அழுத்தமாக நெஞ்சில் வந்து அமர்ந்தது. அதைத்தான் இப்போது சொல்லப்போகிறேன்.



அன்று அதிகாலையில் கடப்பையைத் தாண்டிக் கொஞ்சநேரம் ஊர்ந்த ரயில் திடீரென்று வேர் பிடித்த மாதிரி நின்றது. ஓட்டுநரும் கார்டும் ரயில் இப்போதைக்கு நகராது என்ற தகவலையும் அதற்கான காரணத்தையும் பெட்டிபெட்டியாக அறிவித்துக்கொண்டு சென்றார்கள். நாள் முழுவதும் நகராதிருக்கும் ரயில் பெட்டிக்குள் சும்மா உட்கார்ந்திருப்பது சாதாரண விஷயமில்லை. மே மாத வெய்யில் கனக்கத் தொடங்கும் போது, ரயில்பெட்டி கொதிக்கும் இட்லிக் கொப்பரையின் உட்புறம் போல வெம்மைகொள்ளும். முந்தின இரவு நமக்கு நண்பராகிய அயல் மாநிலத்துக்காரரை மறுநாள் காலையில் விரோதியாக்குகிற அம்சங்கள் பெருகத் தொடங்கும்.



போக்கிடம் இல்லாமல் நின்றுகொண்டிருக்கும் ரயிலுக்குள் சிறையிருக்கும் பயணிகளுக்குச் சாப்பாடு முதல் எல்லாமே பிரச்சினையாகி விடும் அல்லவா? அக்கம்பக்கத்து ஜனங்கள் திடீர் வியாபாரிகளாவார்கள். அவசரத் தயாரிப்பின் அவல ருசியும் அளவுப் பற்றாக்குறையும் எச்சில்தொட்டி நாய்கள்போல அடித்துக்கொள்ள வேண்டிவருவதும் ரயில் பயணிகளுக்குள் தீராத குரோதத்தை விளைவிக்கும். தவிர, வேறு வழியேயில்லாமல் நாற்பது ஐம்பது முகங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அந்தரங்கமான, விதவிதமான, கொலைவெறிகள் கூடிவிடும். தண்ணீர் காலியாகிவிட்ட கழிவறை சொந்த உடல்மீதே அசாத்தியமான வெறுப்பை உண்டாக்கும். குழந்தைகள் சலிக்காமல் அழும் ஒலி சதா கேட்டவாறிருக்கும்.



ரயிலைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினேன்.



பொதுவாகவே, கல் விளையும் பூமி அது. விதவிதமான அளவுகளில் தகடுகளாக வெட்டியெடுக்கும்போது விளிம்புகளில் சேதமுற்ற கல்பலகைக் கற்கள் சிதறிக்கிடந்தன. கண்ணுக்கெட்டியவரை ஆகாயத்தில் செருகிக்கிடக்கும் புகைபோக்கிகள் கொண்ட சிமெண்ட்டுத் தொழிற்சாலைகள் மண்டிய பிரதேசம். காலடியில் நிரநிரக்கும் மண்ணில் சாம்பல் நிறம் பூத்திருந்தது.



பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட பெரும் பள்ளங்கள். கிணறுகள்போல ஆழம் கொண்ட அவற்றின் படுகையில் பாசிபடர்ந்த மழைத் தண்ணீர்மீது மேலும் தூசிகள் சென்று அடர்வது வெறும் கண்ணுக்கே தெரிந்தது. தரையையொட்டிக் கிடந்த அழுக்குத் தண்ணீரைக் குடிக்க இறங்கிச் சென்றிருந்த மைனா ஒருமுறை தலை நிமிர்த்தி என்னைப் பார்த்தது. கணவனும் மனைவியும்போலத் தென்பட்ட சக பயணிகள் இருவர் என்னை விரைந்து கடந்தார்கள். அந்தப் பெண் ஒரு புதருக்குப் பின் அவசரமாக ஒதுங்கினாள். அவன் அசட்டுப் பார்வையுடன் காவலுக்கு நின்றான்.



ரயிலின் சாந்தத்தில் ஏதாவது சலனம் இருக்கிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்துசென்றேன். மெல்ல வேகம் எடுத்த காற்றில் வறட்சியும் வெம்மையும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்தன. சிறிய தோட்ட வீடு போன்ற ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. ஆலமரம்போல அகலித்து வளர்ந்த பிரம்மாண்டமான வேப்ப மரத்தின் நிழலில் சாவகாசமாக நின்றிருந்த வீடு.



அங்கேதான் வெங்கடேச ராவைச் சந்தித்தேன்.



கடப்பைக் கல் கழிவுகளைச் செங்கற்கள்போல உபயோகித்துக் கட்டப்பட்ட குடில் அது. வாசலில் சிறு கீற்றுக்கொட்டகை போடப்பட்டிருந்தது. அதற்குள் இரண்டு மர பெஞ்சுகள். வெளியில், மெருகேற்றப்பட்ட ஏகப்பட்ட கல்பலகைகள் சாத்திக் கிடந்தன. அவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் பிடிமானமேயற்று அந்தரத்தில் தொங்கின. நேர்கோடுகளே இல்லாத லிபிகொண்டது தெலுங்கு மொழி என்று ஒரு அபிப்பிராயம் தோன்றியது.



எனக்குத் தெலுங்கு வாசிக்கத் தெரியாது. ஆனால் மிகச் சரளமாகப் பேசவும் புரிந்துகொள்ளவும் முடியும். மெல்லின ஓசைகள் நிறைந்ததும், பல சந்தர்ப்பங்களில் மூக்கால் பேசுகிறார்களோ என்று தோன்றவைக்கிறதுமான மொழியைச் சங்கீதத்துக்கான சிறப்பு மொழி என்று காலங் காலமாகச் சொல்லிவருகிறார்களே, இதற்கெல்லாம் என்ன அடிப்படை என்று ஒரு சந்தேகம் உண்டு எனக்கு. வெங்கடேச ராவ் பேசுவதைக் கேட்டபிறகு, இந்த மாதிரியான மூத்தோர் கூற்றுகளில் சட்டென்று புலப்படாத ஒருவகை ஞானம் ஒளிந்திருப்பது தெரியவந்தது.



தொழில் காரணமாக ஆந்திரா முழுவதும் மூன்று வருடங்கள் சுற்றியலைந்திருக்கிறேன். கர்நூல் என்னுடைய தலைமையிடமாக இருந்தது அப்போது. தவிர, மார்க்கெட்டிங் துறையில் என்னுடைய அபார வளர்ச்சிக்கு புதிய பாஷைகளை விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமையும் ஒரு காரணம் என்று என் முன்னாள் உபதலைவர் ஸின்ஹா பாராட்டுவார். ரூபாய் நோட்டில் போட்டிருக்கும் மொழிகள் பலவற்றிலும் என்னால் சரளமாகப் பேச முடியும். சொன்னால் நம்பமாட்டீர்கள், உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் மைதிலி என்ற பாஷை பேசுவார்கள். அதில்கூட என்னால் சகஜமாக உரையாட முடியும்.



கொட்டகைத் தூணாக நின்ற மூங்கில் கழிகளில் சாத்தியும் தரையிலும் கிடந்த பலகைகள் பலவும் பெயர்ப் பலகைகள். எழுத்துகள் பிசிறில்லாமல் பொறிக்கப்பட்டிருந்தன என்பதுபோக, அவற்றின் அமைப்பில் ஒரு நேர்த்தியும் சுற்றிலுமிருந்த அலங்கார வேலையில் நூதனமான வடிவங்களும் இருந்தன. இவ்வளவு தேர்ந்த கைவேலைக்காரன் இப்படி ஒரு அத்துவான வெளியில் வந்து குடியிருக்கிறானே, வாடிக்கையாளர்கள் எங்கிருந்து வருவார்கள் என்று ஆச்சரியமும் ஆதங்கமும் ஒரே சமயத்தில் தோன்றின. குடிலின் பின்புறம் இருந்த கிணற்றின் உறைச் சுவரையொட்டிக் கிளம்பிய வண்டிப் பாதையின் தடம் முடியும் இடத்தில் உயர்ந்திருந்த நாலைந்து காரைக் கட்டடங்கள் சிறுநகரொன்று அண்மையில் இருப்பதற்கான தடயம் அறிவித்தன. என் முதுகுப்புறம் யாரோ செருமும் ஒலி கேட்டது.



என்ன வேண்டும்?



சற்றுக் கிறீச்சிட்ட குரல்தான். வயதான மனிதர். பல நாட்களாக மழிக்கப்படாத முகத்தில் முள்முள்ளாகப் படர்ந்திருந்த வெண்முடிகள். பஞ்சு வெண்மையில் அடர்த்தியாக இருந்த தலைமுடி. மீசை கிடையாது. தாடைவரை இறங்கியிருந்த வெண் கிருதா. ஆனாலும் முகச் சருமத்திலும் முன்னங்கைகளிலும்கூடச் சுருக்கங்கள் எதுவும் இல்லை. சாம்பல் நிற விழிகள் பார்வையை அகற்றவொட்டாமல் ஈர்த்தன.



சும்மாதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வியாபார விஷயமாக வரவில்லை.



அதுதான் தெரிகிறதே. அந்த ரயிலிலிருந்து இறங்கி வந்தவர் தானே….?



அசட்டுத்தனமாகச் சிரித்து வைத்தேன்.



… அதனால்தான் கேட்டேன். சாப்பாடா தண்ணீரா, என்ன வேண்டுமென்று!



கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்.



பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் சீசாக்கள் புழக்கத்துக்கு வராத காலகட்டம் அது. பெரியவர் வாய் அகண்ட ஒரு தாமிரப் போணியில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். ரயிலில் கிடைத்த தண்ணீர் போல இல்லை அது. புத்துணர்ச்சியும் மென்மையும் நிரம்பிய குளிர்நீர். என் ஆச்சரியத்தைக் கவனித்தவர் போல, ‘மண்பானைத் தண்ணீர்’ என்று புன்னகைத்தபடி குடிலின் உட்புறம் கையைக் காட்டினார். தண்ணீரில் ஏதோ வேர் போட்டிருப்பதாகச் சொன்னார். தெலுங்கு வேர். சரியாகப் புரியவில்லை.



குடிலின் வாசலைப் பார்த்தபோது இரண்டாவது ஆச்சரியம் தொற்றியது. அதன் உள் ஷரத்தாக, இத்தனை நேரம் இதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன் என்று ஒரு உப ஆச்சரியமும் கிளர்ந்தது.



நிமிர்ந்து நின்றிருந்த ஆளுயரச் சிலை ஒன்று. வெண் பளிங்கால் ஆன சிலை. இந்தப் பிரதேசத்தில் கிடைக்கும் கற்கள் படிவக் கற்கள் அல்லவா? முதிராத பாறைகள், சிற்பம் செய்ய லாயக்கற்றவை என்றல்லவா சொல்வார்கள்? எனக்கு சிற்பத்துக்கும் சிலைக்கும் வித்தியாசம் தெரியாது அல்லது இரண்டும் ஒன்றுதானா என்பதுகூடத் தெரியாது. என்றாலும், அசந்தர்ப்பமாக அந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கும் சிலையை அருகில் சென்று பார்க்கத் தோன்றியது. பெரியவரிடம் அனுமதி கேட்டேன்.



‘தாராளமாய்’ என்றார் அவர்.



முழுமையாக விளைந்த ஒரு ஆணுடம்பின் சிற்பம் அது. பொதுவாகக் கோவில் சிற்பங்களில் உள்ள திருத்தமும் நேர்த்தியும் சமகால நபர்களை வடித்த சிலைகளில் இருக்காதல்லவா? அசல் நபரின் தொலைதூர நகல் மாதிரிக்கூட இல்லாத பஞ்சுமிட்டாய் நிறங்களில் வர்ணம் பூசப்பட்ட, சிமெண்ட் பொம்மைகளை எத்தனை கிராமங்களில் பார்த்திருக்கிறேன். அவற்றின் காரணமாக உருவாகும் அரசியல் தகராறுகளையும் வெட்டுக் குத்துகளையும் சாமான்யர்கள் உயிரிழப்பதையும் எத்தனை செய்திகளில் படித்திருக்கிறேன். இந்தச் சிற்பம் அப்படிப்பட்டதல்ல. அதன் வடிவத்திலும் திருத்தத்திலும் ஒரு புராணிகத் தன்மை இருந்தது. இந்த நாள் ஆச்சரியங்களின் தினம் போல என்று ஒரு கணம் தோன்றியது. அந்த வாலிபன் தன் வலது கையில் ஒரு சுத்தியலையும் இடது கையில் உளியும் வைத்திருந்ததுகூடப் பெரிய ஆச்சரியம் அல்ல, அவனுடைய கண்கள் உயிருள்ள கண்கள் போலவே என்னைப் பார்த்தன என்பதுதான் பேராச்சரியம். விலகி நின்று வேறு கோணத்தில் பார்த்தபோதும் அவனுடைய கண்களின் வெண்ணிறக் கருவிழிகள் என்னைப் பார்த்தன. விழிகளில் சலனமெதுவும் இருக்கிறதோ என்று ஒரு சந்தேகம் உதித்தது. மின் அதிர்ச்சிபோல அச்சம் என் முதுகுத் தண்டில் தாக்குவதை உணர்ந்தேன். தவறான இடத்தில் வந்து வேண்டாத வேலையில் இறங்கிவிட்டேனோ?



“பரவாயில்லையே. ஒரு பார்வையில் கண்டுபிடித்துவிட்டீர்களே?” முதுகுப்புறம் கிறீச்சிட்ட குரல் மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. திரும்பிப் பார்த்தேன். நான் என்ன கண்டுபிடித்தேன் என்று இவர் கண்டுபிடித்தார்?



“இந்தச் சிற்பத்தின் சிறப்பே அதுதான். எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் அது நம்மைப் பார்க்கிற மாதிரி இருக்கும். ஏன் தயங்கி நிற்கிறீர்கள்? இன்னும் கிட்டச் சென்று பார்க்கலாம். அது சிற்பம்தான். ஒன்றும் செய்துவிடாது…” குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.



இன்னும் அருகில் சென்றேன். நெருங்கிப் பார்த்தபோது இன்னமும் தீர்க்கமாக ஆகியது சிற்பம். மார்பின் குறுக்கே ஓடிய பூணூலின் புரிகள் துலக்கமாகத் தெரிந்தன. சிங்கத்தின் பிடரி போன்று தோளில் படர்ந்திருந்த கேசத்தின் ஒவ்வொரு இழையும் துல்லியமாய்த் தெரிந்தது. ராஜஸ்தானிய பாணி உருமாலில் துணி மடிப்புகளும் சுருக்கங்களும் குச்சத்தின் நுனிப் பிசிறுகளும் தத்ரூபமாய் இருந்தன. கண் இமைகளின் முடிகள் ஒவ்வொன்றும் தனித் தனியாக நீட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது எனக்கு மூச்சுத் திணறியது. பளிங்கின் நிறமில்லாமல் இயல்பான நிறங்கள் மட்டும் இருந்திருந்தால் உயிருள்ள ஆள் உறைந்து நிற்கிறான் என்றே நம்பியிருப்பேன்…. பெரியவரிடம் கேட்டேன்.



யார் செதுக்கிய சிற்பம் இது?



செதுக்கியதா? என்று கேட்டார்.



ஆழமாக இழுத்து ஒரு பெருமூச்சுவிட்டார். ஏதோ ஞாபகம் வந்த மாதிரி உதட்டோரம் சிறு முறுவல் உதித்தது.



நான் ஒன்றும் தவறாகக் கேட்டுவிடவில்லையே?



அட. அதெல்லாம் இல்லை. இந்தச் சிற்பத்தின் கதை பெரியதாயிற்றே. . .



தொலைவில் மரவட்டையின் பிரேதம்போல நின்றிருந்த ரயிலை ஒருமுறை பார்த்தார்.



…. அது இப்போதைக்குக் கிளம்பாது. உட்காருங்கள். சாவகாசமாகச் சொல்கிறேன். என்றவாறு குடிலின் உள்ளே சென்று திரும்பினார்.



ஒரு கையில் பருத்த சுரைக் குடுக்கையும் மறுகையில் ஒருவர் மட்டும் அமர்கிற மாதிரி சதுரமான கோரைத் தடுக்கும் கொண்டுவந்தார். தரையில் உட்கார்ந்து கொட்டகையின் தூணாக நின்ற கழியில் சாய்ந்துகொண்டார். தமக்கெதிரில் தடுக்கைப் போட்டு என்னை அமரும்படி சைகைகாட்டினார்.



குடுக்கையின் தக்கையைத் திறந்தவுடன் உறைந்து பல நாட்களாய்க் காடியேறிய ஊளைமோரின் புளிப்பு மணம் கொட்டகை முழுவதும் நிரம்பியது.



‘கொஞ்சம் கள் சாப்பிடுகிறீர்களா?’ – என்று என்னை நோக்கி நீட்டினார்.



‘பழக்கமில்லை…’ என்று தலையசைத்த மாத்திரத்தில், அவர் மனம் புண்பட்டுவிடக் கூடாதே என்று அவசரமாய்ச் சொன்னேன்.



“வாசலில் உள்ள பலகைகள் நீங்கள் பொறித்ததா? பிரமாதமாக இருக்கின்றன.”



அவர் பெருமிதமாகச் சிரித்துக்கொண்டார்.



“சும்மாவா? நான் பிறந்த வம்சத்தின் பெருமை அல்லவா அது? இதோ நிற்கிறாரே, இவர் யார் தெரியுமா?…” – மூலையில் நின்ற சிற்பத்தை மோவாயால் சுட்டிக்காட்டினார். இதற்குள் நாலைந்து மிடறுகள் அருந்தவும் செய்திருந்தார். பேசுவதற்காக வாய்திறந்தபோது இன்னும் விசையுடன் புளிப்பு பீறியது.



கர்நாடகத்தில் ஒரு ராஜாவின் ஆஸ்தான சிற்பியாக இருந்தவர். எனக்கு இருபது தலைமுறைக்கு முந்தியவர்.



ஏயப்பா. பல நூறு வருஷம் ஆகியிருக்குமே. அவருடைய சிலைதானா இது?



அவசரப்படாதீர்கள். அதை நிதானமாகச் சொல்ல வேண்டும் என்றுதானே இதை எடுத்துவந்திருக்கிறேன்.



குடுக்கையைச் செல்லமாகத் தட்டினார். மெல்ல மெல்ல அவர் கண்கள் சிவந்து வந்தன. கொஞ்சமும் தடுமாறாத மொழியில், ஏற்கனவே பலதடவை சொல்லி ஒத்திகை பார்த்துக்கொண்டது போன்ற நிதானத்தில், தான் காண்கிற கனவைக் காணும்போதே அடுத்தவருக்குச் சொல்கிற மாதிரிக் கிறக்கத்தில் சொல்லிக் கொண்டே போனார். இதுபோல ஆழ்ந்து கதை சொன்ன பலபேர் என் முகத்தைத் திரைபோலப் பாவித்து அதில் தெரியும் காட்சிகளை எனக்கே எடுத்துச் சொல்கிறவிதமாக என்னை உற்றுப் பார்ப்பதை ரசித்து அனுபவித்திருக்கிறேன். இவர் கதை சொல்லும்போது என் முகத்தை ஊடுருவிப் பார்த்தபடி சொன்னார். எனக்குப் பின்புறம் வேறெங்கோ தற்சமயம் நடந்துகொண்டிருக்கும் உண்மைக் கதைபோலும் அது.



…. கர்நாடகத்தில் ஒரு ராஜா என்று சொன்னேனே, அது எந்த ராஜா, எந்தக் காலகட்டம் என்று சொல்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. எங்கள் வம்சம் வெகு கறாராகக் கடைப்பிடித்துவரும் ரகசியம் அது. ஊரையும் பேரையும் சொன்னால் தீராத சாபம் பிடித்துவிடும். தெற்குக் கர்நாடகத்தில் ஒரு பிரம்மாண்டமான சிவன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தார் அந்த ராஜா.



என் மூதாதை – அதுதான் இங்கே சிலையாக நிற்கிறாரே, அவர் – அந்தச் சமயத்தில்தான் கர்நாடகம் வந்து சேர்ந்தார். அவருடைய பூர்வீகம் ராஜஸ்தானம். கல் தச்சர்கள் பரம்பரை. குடும்பத்தவரோடு ஏதோ பிணக்கு ஏற்பட்டு வெளியேறிவிட்டார். அப்போது இருபத்தோரு வயது அவருக்கு. தனியராகவும் கைவசம் சாமான் மூட்டை எதுவுமின்றியும் தம் முன்னால் வந்து நின்ற வாலிபனைப் பலவாறாகக் கேள்விகள் கேட்டு இவர் ஒரு சிற்பி என்று அறிந்துகொண்டார் ராஜா. கோவில் பணியில் சில சில்லறை வேலைகளைக் கொடுத்தார். இவருடைய வேகமும் திறமையும் ஒரே வாரத்தில் வெளிப்பட்டுவிட்டதாம். உடனடியாகப் பெரிய வேலைகளை இவர்வசம் ஒப்படைத்தார்.



குறிப்பாக, கோவிலில் விழா மண்டபத்தின் முகப்பில் நிறுத்துவதற்கான பெண் சிலை. பொதுவாக, அந்தக் காலகட்டத்தில் கருங்கல் அல்லது மாக்கல்லில்தான் சிற்பங்களைச் செதுக்கிவந்தார்கள். நமது சிற்பி ராஜஸ்தானத்தைச் சேர்ந்தவரல்லவா? வெண்பளிங்கில் வடிக்க முடிவெடுத்தார். ஆனால், கல்லைத் தேர்ந்தெடுக்கத் தம் பூர்வீக ராஜ்யத்துக்குப் போக மறுத்துவிட்டார்.



ராஜாவின் ஏற்பாட்டில் ராஜஸ்தானத்திலிருந்து தரமான கற்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவருவதற்கு நாற்பத்தியிரண்டு சிற்பிகள் கொண்ட ஒரு குழு ராஜஸ்தானம் புறப்பட்டுச் சென்றது. அவர்களுக்குப் பதினைந்து நாள் பாடம் சொல்லிக் கொடுத்தாராம் நமது சிற்பி. அறுபது யானைகள் சுமந்துவந்த பளிங்குக் கற்கள் கர்நாடகம் வந்து சேர்வதற்கு மூன்று மாதங்கள் பிடித்தன. அதுவரை ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சிற்பி, கற்களைப் பொறுப்பெடுத்துக்கொண்ட மாத்திரத்தில் பிசாசுபோல இயங்க ஆரம்பித்தார்.



உசிதமான கல்லைத் தேர்ந்தெடுக்க மட்டுமே ஒரு மாதம் ஆகிவிட்டதாம். தினசரியும் காலையில் கற்கள் குவிக்கப்பட்டிருக்கும் திடலில் வந்து ஒவ்வொரு கல்லையும் அங்குலம் அங்குலமாகத் தட்டி அதன் நாதத்தைக் கேட்டுக்கொண்டிருப்பாராம். முடிவாக ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்தார். அன்றாடம் நீராடிவிட்டு வந்து அதன் முன்னால் உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிடுவாராம். சரியான முகூர்த்த நாள் ஒன்று பார்த்து, அன்று சிற்பப் பணி ஆரம்பித்தது.



ராப்பகலாக வேலை. அவருக்குத் தாம்பூலம் தரிக்கும் வழக்கம் உண்டு. பிரம்மச்சாரி என்பதால் சுயம்பாகமாகச் சமைத்துச் சாப்பிடுபவர். பல நாட்கள் வேலை மும்முரத்தில் தாம்பூலம் தவிர வேறெதுவும் சாப்பிடாமலே பொழுது கழிந்துவிடுமாம். சுபாவமாகவே பிறருடன் அதிகம் உரையாடல் எதுவும் வைத்துக்கொள்ளாத தனிமை விரும்பி. இந்த வேலையை ஏற்றுக்கொண்டதன் பிறகு பேச்சு இன்னமும் குறைந்துவிட்டது.



இவருக்குத் தனியாக ஒரு விஸ்தாரமான குடில் அமைத்துத் தரச் செய்தார் ராஜா. தாமே சமைத்துச் சாப்பிடுகிறார் என்று கேள்விப்பட்டு இனி அது தேவையில்லை, தினமும் அரண்மனையிலிருந்தே ஆசாரமான சாப்பாடு வந்து சேரும் என்று ஏற்படுத்தினார். இரவில் இவர் உறங்கும்போது விசிறுவதற்காக இரண்டு பணிப்பெண்களை அமர்த்தித் தந்தார். ஓரிரு நாட்கள் கழித்து இந்தப் பெண்கள் வர வேண்டியதில்லை என்று சிற்பி கூறிவிட்டாராம். யாராவது பார்த்துக்கொண்டிருக்கும்போது உறக்கம் தன்னியல்பாக வந்து கவிய மறுக்கிறது என்று காரணம் சொல்லியிருக்கிறார்.



கற்கள் வந்து சேர்ந்த நாட்களிலேயே, ராஜாவின் ஒரே மகளான ராஜகுமாரி தினசரி வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ஒருமுறை ராஜகுமாரி சிற்பியிடம் கேட்டாள்.



சிற்பம் செதுக்குவதற்கான கல்லை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?



அது ரொம்ப சுலபம் அம்மா. எந்தக் கல்லுக்குள் நாம் தேடும் சிற்பம் ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டால் போதும்.



சிற்பியின் பதில் கொஞ்சமும் புரியவில்லை அவளுக்கு. ஆனால் அவருடைய கண்களைவிட்டுப் பார்வையை விலக்கிக்கொள்ளவும் முடியவில்லை.



ஓ… வேலை தொடங்குவதற்கு முன்னால் நாட்கணக்காகத் தியானத்தில் அமர்ந்தது எதற்காக?



சுற்றிப் போர்த்தியிருக்கும் பாறைத் திப்பிகளைத் தட்டி உதிர்ப்பதற்கு சிற்பத்தின் அனுமதியை வேண்டித்தான்.



இந்தவிதமாக அவ்வப்போது உரையாடிக்கொண்டு, சேடியர் கொண்டுவந்த அலங்கார நாற்காலியில் அசையாமல் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் வேடிக்கை பார்த்தது சிற்பத்தையா சிற்பியையா என்பது பெரும்பெரும் சர்ச்சையையும் தர்க்கத்தையும் விவாதத்தையும் ராஜ்யம் முழுவதும் ஏற்படுத்தியதாம்…



புதிதாக வந்த ஒருவனுக்கு இவ்வளவு சௌகரியமும் அங்கீகாரமும் கௌரவமும் கிடைப்பது சக சிற்பிகளுக்குள் பொறாமையை ஏற்படுத்தத்தானே செய்யும்? தலைமைச் சிற்பியாய் இருந்த கிழவர் இதை ஒரு விநோதமான வழியில் தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தார். ராஜஸ்தானத்திலிருந்து வந்த கற்களில் நமது சிற்பி வேண்டாம் என்று ஒதுக்கிய ஒன்றை எடுத்துத் தாம் ஒரு சிலை செய்யத் தொடங்கினார்.



அவர் செதுக்கிய சிலை வேறெதுவுமல்ல, நமது சிற்பியின் உருவம்தான். பெண் சிற்பம் உருவாகி முடியும் நாளில், தாம் வடிக்கும் சிலையையும் முடித்துவிடும் திட்டத்துடன் வேகமாக வேலை பார்த்து வந்தார். ஆனால் இந்த வேலை மிக ரகசியமாக நடந்துவந்தது. நமது சிற்பியின் வேலைபோலப் பகிரங்கமாக அல்ல.



ஆரோக்கியமான தாய் வயிற்றில் வளரும் சிசுவைப் போலப் பெண் சிற்பம் நன்கு வளர்ந்து வந்தது. ராஜகுமாரி அரண்மனை திரும்பும் நேரமும் தாமதமாகிவந்தது. ஓரிரு இரவுகள் குடிலிலேயே தங்கவும் செய்தாள்.



ஒரே சிற்பத்தை எவ்வளவு நேரம் அம்மா பார்த்துக்கொண்டிருப்பாய்?



என்று ராஜாகூட மகளைச் சற்றுக் கோபமாகக் கேட்டாராம்.



ஒரே ராஜ்யத்தை எவ்வளவு காலமாக ஆண்டுகொண்டிருக்கிறீர்கள்? என்று பதிலுக்குக் கேட்டாளாம் மகள்.



அவள் இப்படியெல்லாம் கேட்கக் கூடியவளே அல்ல. சிற்பியின் சகவாசம்தான் காரணமோ என்று மனம் புழுங்கியிருக்கிறார் மன்னர்…



ஆயிற்று, சிலைக்கு நாளைக் காலை கண்திறக்க வேண்டியதுதான் பாக்கி.



முந்தின நாள் இரவில் சில உற்பாதங்கள் தோன்றின. வெகுநாட்களாக ஆகாயத்தில் உலவிவந்த வால்நட்சத்திரம் சடாரென்று உதிர்ந்தது. பார்வையற்ற காக்கை ஒன்று குடிலின் வாசலில் ஓயாமல் பிலாக்கணம் வைத்தது. அதை விரட்டியடிக்கும் விதமாக நாலைந்து கோட்டான்கள் விடாமல் அலறின. இரவு முழுவதும் மார்கழி மாதத்துக்குச் சம்பந்தமேயற்ற வெக்கை நிலவியது. குடிலின் மூலையில் இருந்த எண்ணெய் விளக்கின் அருகே கொடியில் காய்ந்த வஸ்திரமொன்று காற்றுக்கு அசைந்து தீப்பற்றியது. இரவுச் சாப்பாட்டுக்காக அரண்மனையிலிருந்து வந்திருந்த அன்னத்தில் பல்லி விழுந்து இறந்துகிடந்தது. குடிலின் உத்தரத்தில் புதிதாகக் குடிவந்திருந்த மரப் பல்லி இரவு முழுவதும் துர்ச்சொல் உதிர்த்தவண்ணமிருந்தது. சிற்பி கை மறதியாய் வெற்றிலையில் தடவிய சுண்ணாம்பு அபரிமிதமாக அளவு கூடி வாய் வெந்துபோயிற்று.



ஆகாயத்தில் பரவிவிட்ட இரவையும் அதன் இருள் அடர்த்தியையும் தன் தனிமையையும் வெறித்துக் கொண்டு உறக்கம் பிடிக்காமல் உட்கார்ந்திருந்தார் சிற்பி. வெக்கை முற்றியபோது ஆயாசம் தாங்காமல் கண்கள் தாமே மூடிக்கொண்டன. உறக்கத்தினுள் வழுக்கினார்.



முதல் ஜாமம்



முதலாம் ஜாமம் ஆரம்பித்து ஒரு நாழிகை சென்றபின் ஒரு கனவு வந்தது. வழக்கமாகக் கனவுகளில் நிலவுவதுபோன்ற சாம்பல் நிற வெளிச்சம் இல்லை. கோடை நாளின் உச்சிப்பொழுது போன்ற ஒளி. கண்களை முழுக்கத் திறந்து பார்க்க இயலாதபடி பார்வை கூசியது.



தன் எதிரில் நிற்பது சிற்பம் அல்ல, உயிருள்ள தேவதை என்று கண்டு சிற்பி அதிர்ந்தார். முந்தைய கணத்தில் உளியும் சுத்தியும் திறந்துவைத்த கண்களை முழுசாக மலர்த்திச் சிரித்தாள் அந்த மந்திரக் கன்னி. நேற்றுவரை உறைந்திருந்த சிரிப்பில் இல்லாத ஒரு கபடம் தற்போதைய சிரிப்பில் கூடியிருப்பதைக் கவனித்தார் சிற்பி. கண்களும்கூடத் தான் திறந்துவைத்த விதமாக இல்லாமல், அகலம் அதிகரித்திருப்பதைக் கண்டார். அவை அவ்வப்போது இமைக்கவும் செய்தன.



வெக்கையின் ஊடாகத் திடீரென்று ஒரு குளிர்ந்த காற்றலை ஊடுருவிச் சென்றது. திகைப்பின் காரணமாக மூடிய சிற்பியின் கண்கள் மீண்டும் திறந்தபோது சிலை பீடத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்திருந்தது.



அது நின்ற நிலையும் அதன் கன்னச் சதையின் துடிப்பும் நீட்டிய கைகளில் இருந்த பரபரப்பும் அதன் நோக்கத்தை வெளிப்படையாகத் தெரிவித்தன. தன் மார்பின் குறுக்காக இரண்டு கைகளையும் கோத்துக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தார் சிற்பி.



என்னம்மா வேண்டும் உனக்கு?



நீர்தான்.



தயக்கமில்லாமல் பதிலளித்தாள் சிற்பக் கன்னி. தீவிரமான யோசனை போல மௌனத்தில் அமிழ்ந்தார் சிற்பி. கண்களை மறுபடியும் மூடிக்கொண்டார். கண்களின் உட்புறம் எதையோ நிகழ்த்திப் பார்க்கிறவர் மாதிரி இமைகளுக்கடியில் விழிகள் உருண்டன. சில நிமிடங்கள் கழித்து கனிவான குரலில் பதிலிறுத்தார்.



அது முறையல்ல அம்மா.



ஏன்?



கல்லிலிருந்து உன்னைப் பிறப்பித்தவன் நான்தான். ஆகவே, உனக்குத் தகப்பன் ஸ்தானம். உன்னை என் மகளாகத்தான் பார்க்கிறேனே தவிர, பெண் உடம்பாகப் பார்க்க முடியாது.



உளறுகிறீர். கல்லிலிருந்து என் வடிவத்தைத்தான் உருவாக்கினீர். கல்லை நீர் உருவாக்கவில்லை. தவிர, என் உடம்பு பற்றிச் சொன்னீரே…



ம்.



மிக அருகிலிருந்து உம்முடைய உடம்பை அன்றாடம் பார்த்து வந்திருக்கிறேன் அல்லவா…



இன்று காலைதானே உன் கண்களைத் திறந்துவிட்டேன்?



… கண்ணை மூடிப் படுத்திருக்கும்போது உம் அருகில் யாராவது வந்தால் உம்மால் உணர முடியாதா?



வாஸ்தவம்தான்.



உம்மீது கிளர்ந்த மோகத்தின் கிறக்கம் தாளாமல்தான் இறங்கி வந்திருக்கிறேன். நான் பார்த்துப் பார்த்து மோகித்த அந்த உடம்பை ஒருமுறை தழுவி இன்புற்றாக வேண்டும் எனக்கு.



தொடர்ந்து உரையாடல் போய்க்கொண்டேயிருந்தது. சிற்பியின் சுண்டுவிரல் நகம்கூடச் சிற்பக் கன்னியின்மீது படவில்லை. விவாதத்தின் உச்சத்தில் அவர் முடிவாகச் சொன்னார்.



பாறையுடன் சம்போகம் செய்யும் திராணி எனக்கு இல்லை அம்மா – என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.



அவள் அடிவயிற்றிலிருந்து சாபமிட்டாள்.



என்னைச் சிலை என்றுதானே பரிகசிக்கிறீர். அடுத்த பிறவியில் நீரும் சிலையாக இருக்கக் கடவீர். அப்போதுதான் புரியும் என் தகிப்பு.



மீண்டும் சிற்பமாக உறைந்தாள் அவள்…



உடல் விதிர்த்து விழித்துக்கொண்டார் சிற்பி. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தார். யதேச்சையாக வந்த குட்டிமேகத்துக்குப் பின்னால் மறைந்துகொண்டாலும் நிலாவின் வெளிச்சம் அது இருந்த இடத்தைச் சுற்றிலும் வெகுதூரத்துக்கு ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இருளின் ரகசியத்துடன் ஓயாமல் கண்சிமிட்டிப் பேசிக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் விநோதமான ஏக்கத்தைக் கிளர்த்தின. வெற்றிலைப் பையை எடுத்துத் திறந்தார். தாம்பூலம் தந்த கிறுகிறுப்பு தனிமைக்கு மிக இதமான துணையாக இருந்தது. எழுந்து சென்று சக்கையைத் துப்பிவிட்டுத் திரும்புகிறார், சிலை தம்மையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். முதுகில் பூரான் ஓடுகிற மாதிரி ஒரு குறுகுறுப்பு. மேகத்தைவிட்டு வெளியே வந்திருந்த நிலா பளிரிட்டது. சிற்பம் கேட்டதைக் கொடுத்திருக்கலாமோ? என்று ஒரு கணம் சிந்தை தயங்கியது.



வாசலில் இருந்த மூங்கில் படலை யாரோ திறக்கிற மாதிரி சப்தம் கேட்டது. பாத சரங்கள் ஒலிப்பது போலவும், அவற்றின் ஒலி மிகவும் பரிச்சயமானது போலவும் தோன்றியது. இந்த நேரத்தில் யார் வரப் போகிறார்கள், பிரமையேதான் இது என்று சமாதானம் கொண்டு கண் கிறங்கினார்.



இரண்டாம் ஜாமம்



விட்ட இடத்திலிருந்து தொடர்வதுபோல, அதே கனவு மீண்டும் வந்தது. இந்தமுறை மிகப் பெரிய வித்தியாசம் ஒன்று நேர்ந்துவிட்டிருந்தது…



கண் திறந்த சிலையின் முகம் ராஜகுமாரியின் முகம்போலவே இருந்தது.



சிற்பம் முந்தைய கனவில்போல வேண்டுகோளெல்லாம் விடுக்கவில்லை. தன்னியல்பாக நெருங்கி வந்து அணைத்துக்கொண்டது. தனது பொருளைத் தான் எடுத்துக்கொள்ளும் சுவாதீனத்துடனும் வெகு நாளாகக் காணாமல்போயிருந்த பொருள் யதேச்சையாகக் கிடைத்து விட்ட ஆவேசத்துடனும் இன்னும் கொஞ்ச நேரம்தான், பிறகு அது நிரந்தரமாகக் காணாமல் போய்விடும் என்பது போன்ற பதற்றத்துடனும் பலநாள் திட்டத்தின் விளைவாகச் செயல்படுவது போன்ற சிரத்தையும் கச்சிதமும் கொண்டு சேர்க்கையின் பல்வேறு அடுக்குகளுக்கு இட்டுச்சென்றது.



தேர்ந்த சிற்பி ஆட்டுரல் கொத்துவதுபோல எளிமையாகவும் வாகாகவும் தன் உடம்பு கையாளப்படுவதை உணர்ந்தார் சிற்பி.



கனவில் நிகழ்ந்த முத்தங்களின் ஒலியும் மென்சதையின் ஸ்பரிசமும் மறைவிடங்களின் மணமும் எச்சிலின் ருசியும் அலையலையாக முன்னெழுந்த சதையின் திரட்சியும் என எதுவுமே கனவில்போல இல்லை. நிஜம்போலவே அவ்வளவு அண்மையில், அவ்வளவு நேரடியாக, அவ்வளவு கிளர்ச்சி தருவதாக இருந்தன.



உச்சத்தின் விளிம்பில் சட்டென்று தான் பிடுங்கி வீசப்படுகிற மாதிரி உணர்ந்தார் சிற்பி.



விழிப்புத் தட்டியது.



குடிலுக்கு வெளியில் குதிரைக் குளம்படிபோல ஒலிகள் கேட்டன. தழைந்த பேச்சுக் குரல்களும் இணைந்துகொண்டன. வெகு தத்ரூபமான ஒலிகள். இருளைத் தவிர வேறு மர்மங்களும் இரவின் நிசப்தத்தின் திரைக்குப் பின்னால் ஏதோ பயங்கரங்கள் ஒளிந்திருப்பது போல, பிரமை தட்டியது.



உடம்பு கடுமையாக வியர்த்திருந்தது. படுக்கை விரிப்பில் அகலமாக ஈரத்தடம் பதிந்திருந்ததைப் பார்க்க விகாரமாக இருந்தது.. வெளியில் வெக்கை இன்னும் அதிகரித்துவிட்ட மாதிரித் தோன்றியது. வெக்கை நிஜமாக இருப்பது எங்கே, சூழ்நிலையில்தான் நிலவுகிறதா அல்லது தனக்குள்ளிருந்து ஊறுகிறதா என்று தீர்மானிக்க முடியாமல் திகைத்தார். கைகள் அனிச்சையாகத் தாம்பூலப் பையை எடுத்தன.



குடிலுக்கு வெளியே குளம்படித் தடங்கள் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டால் கைகளின் நடுக்கம் சற்றுக் குறையக்கூடும் என்று தோன்றியது. விரும்பத்தகாத ஏதாவது உறுதியாகிவிடுமோ என்று கவலையாகவும் இருந்தது.



கனத்த மனத்துடன் பஞ்சணையில் சரிந்தார்.



ஆறுதலாகத் தொற்றியது உறக்கம்.



மூன்றாம் ஜாமம்



இந்தமுறை வந்த கனவு அதிக நேரம் நீடிக்கவில்லை. அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு விநாடிகள் இருக்கலாம். அவ்வளவுதான். அதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன.



முந்தைய இரண்டுமுறைகள் போலவே இப்போதும் சிற்பம் உயிர் கொண்டது. ஆனால் பெண்ணுக்குரிய அம்சங்கள் யாவற்றையும் துறந்துவிட்டு ஒரு பயில்வானைப் போன்று உடல்வாகை உருமாற்றிக் கொண்டது. முந்தைய ஜாமத்தில் உடலெங்கும் பொங்கித் தீர்ந்த பரபரப்பையும் உச்சத்தில் தொற்றிய கிளுகிளுப்பையும் மீண்டும் நிகழ்த்திக்கொள்ளும் ஆவலுடன் விரித்த கைகளுடன் நெருங்கிய சிற்பியின் நெஞ்சில் கைவைத்து நிறுத்தியது.



தனது வலது புஜத்தில் முளைத்துப் பெரிதாகப் புடைத்திருந்த மருவைச் செதுக்கியெறியும்படி சைகை காட்டியது. குடிலின் உள்ளே சென்று உளியும் சுத்தியலும் எடுத்துவந்தார் சிற்பி.



கண்ணிமைக்கும் நேரத்தில் அவரைச் செந்தூக்காய்த் தூக்கியது சிற்பம். முந்தைய ஜாமத்தின் மிருதுத் தன்மையும் காதலும் அறவே நீங்கியிருந்த ஸ்பரிசம். போர்வீரன்போல மாறியிருந்தது ராஜகுமாரியின் முகச் சாயல். சிற்பியைப் பீடத்தில் நிறுத்தியது.



தன் பாதங்களின் அடிப்புறம் நூல் சரங்கள்போல வேர் முளைத்துப் பீடத்துக்குள் ஊன்றிக்கொள்வதையும் தலைப்பகுதியிலிருந்து மரத்துக் கொண்டே வருவதையும் உணர்ந்த சிற்பி, ஏதோ ஒரு விபரீதச் சுழியின் மையத்தில் தான் சிக்கிக்கொண்டதை அறிந்து தப்பிக்க முனைந்த மாத்திரத்தில் அந்த உருவம் குடிலை விட்டு வெகுவேகமாக வெளியேறுவதைக் கண்டார். குதிரைக் குளம்படியோசை எழுந்து நகர்ந்து மெல்லத் தேய்ந்து மறைந்தது. நகரத் திராணியின்றி நின்றிருந்தார் சிற்பி.



நாலாம் ஜாமம்



வயலை நோக்கிக் கலப்பைகளுடனும் மண்வெட்டிகளுடனும் பிரம்புக் கூடைகளுடனும் சென்றுகொண்டிருந்த ஆண்களும் பெண்களும் ஆச்சரியத்துடன் பார்த்தார்களாம் – நேற்றுவரை ஒரு பெண் சிலை நின்றிருந்த இடத்தில் இப்போது ஆண் சிலை நிற்கிறதே என்று…



இதுவரைதான் என்னுடைய நாட்குறிப்பில் இருக்கிறது. அதன் பிறகும் பலதடவை கடப்பை வழியாகச் சென்று வந்திருக்கிறேன். ஒருமுறைகூட அந்தக் குடிலுக்கு மறுபடியும் போக வாய்க்கவில்லை. வாழ்க்கை என்னை உந்திச் சென்ற பாதைகள் அப்படி. கொஞ்சம்கூட அவகாசம் தராதவை.



எனக்குக் கதைசொன்ன பெரியவர் தற்போது உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பும் மிகக் குறைவுதான் என்று தோன்றுகிறது. நான் சந்தித்தபோதே அவருக்கு வயது எழுபதுக்கு அருகில் இருக்கலாம். அந்தச் சிற்பம் யார்வசத்தில் இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. ஆனால் என் ஞாபகத்தில் வெகு அழுத்தமாக ஏதோ முந்தாநாள்தான் பார்த்த வஸ்துவின் பிம்பம்போல அவ்வளவு திருத்தமாக அது வீற்றிருக்கிறது.



தொடர்ந்து பல வருடங்கள் அந்தச் சிற்பியின் கதையை அசைபோட்டு வந்தபோது இயல்பாகச் சில சந்தேகங்களும் எழுந்து வந்தன.



1. ராஜஸ்தானியரான சிற்பியின் இருபத்தோராம் தலைமுறை வாரிசு, ஆந்திரத்தின் ராவ் ஆனது எவ்விதம்?



2. பிரம்மச்சாரியாக வந்து சேர்ந்து பிரம்மச்சாரியாகவே வாழ்வு முடிந்த சிற்பிக்கு வாரிசுகளும் வம்சமும் தோன்றியது எப்படி?



3. இவருக்குப் போட்டியாக தலைமைச் சிற்பி செய்த சிலை பிறகு என்னாயிற்று? எங்கே போயிற்று?



4. ராஜகுமாரிக்குச் சிற்பியின் மீது ஒரு அந்தரங்கமான இச்சை உருவான செய்தியும் கதையில் வந்ததே, அவள் என்னவானாள்?



5. தன்னந்தனியாக வாழ்ந்து மறைந்தவராயிற்றே சிற்பி? அவருடைய மறைவுக்கு முந்திய துர்ச்சகுனங்களின் பட்டியலை யார் கவனித்துக் கோத்தார்கள்? நிகழப்போகும் அசம்பாவிதத்தின் முன்குறிகள் அவை என்று யாருக்குத் தோன்றியது?



ஓய்வுபெறுவதற்குச் சிலமாதங்கள் முன்பு, உத்தியோகரீதியாக மஹாராஷ்ட்ரம் செல்ல வேண்டி வந்தது. கடைசியாக அதுதான் நான் கடப்பையைத் தாண்டிச் சென்றது. அந்தமுறை இன்னொரு விசித்திரமான சந்தேகம் தோன்றியது.



அந்தக் கனவுகள் மூன்றையும் கண்ட மனிதன்தான் சிலையாகிவிட்டானே, நான் பார்த்த பெரியவர் வரை கர்ணபரம்பரையாக அவை எவ்விதம் வந்து சேர்ந்தன?



அப்புறம் சமாதானம் செய்துகொண்டேன்… போகட்டும், உயிருள்ள மனிதன் சிலையாக மாற முடியும் என்றால், ஒருவருடைய கனவை இன்னொருவர் காண்பதும் நடக்கக்கூடிய விஷயம் தானே!



******

சனி, 20 ஆகஸ்ட், 2011

Shoba.


Prabanchan- Agavan.

கல்வி செத்து புனைவு தோன்றும் கவி வெளி






சங்க இலக்கியம் என்று இன்று அறியப்படும் பிரதிகள், பாட்டும் தொகையுமான பதினெட்டுத் தொகுப்புகளின் கவிதைகள் எழுதப்பட்ட காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் முடிவுறுகிறதாகப் பெரும்பான்மை ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதாவது சுமார் ஐநூறு ஆண்டுகள் அவகாசத்தில் சங்க இலக்கியக் கவிதைகள்/பாட்டுகள் எழுதப்பட்டிருக்கின்றன.



கமில் ஸ்வலபில், சங்க இலக்கியக் காலத்தை இப்படியாக வரையறை செய்திருக்கிறார். ÔÔகி.மு.150 அளவில் ஆதிப் பாணர்கள் பாடல்கள். இவை பெரும்பாலும் கிடைக்கவில்லைÕÕ என்கிறவர் கி.பி. 350-400 கால அளவில் பாணர் மரபு மறைவு என்று கருத்துரைக்கிறார். இந்தக் காலக் கணக்கில் எந்தக் கருத்து வேறுபாடும் எழவில்லை. சுமார் முன்னூறு ஆணடு கால மரபு மறைந்து, புலமை மரபு எனப்படும் புலவர் அல்லது கிழார் மரபு அல்லது விவசாயம் சார்ந்த ÔÔமேலோர்ÕÕ மரபு உருவாகிறது.

சங்க இலக்கியப் புலமை தோற்றிய கவிதைகளைப் படிக்க நேர்கிற தொடக்க நிலை வாசகரும் கூட அதன் ஆச்சரியம் தரும் நுட்பங்களிலும், மனதின் அடி ஆழத்தைத் துழாவும் கவிப்பயணத்திலும் கவனம் குவிக்காமல் இருக்க முடியாது என்றால், பாணர் மரபு மறைந்துவந்த காலகட்டத்தில் உருவாகி வளர்ந்த புலமை மரபு உடனடியாக இத்தகைய செழுமையான விளைச்சலைத் தரமுடியாது. பெரிதும் வாய்மொழி மரபினவாகிய பாண் மரபுக் கவிதைகள் இன்னும் நீண்ட காலம் வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். ஒரு பெரும் மரபாக நிலைத்திருந்த பாணர் மரபு, சிறந்திருந்த நிலைக்கும் பசியே உடம்பாகத் தேய்ந்த நிலைக்கும் சில நூறு ஆண்டுகளாவது இருக்க வேண்டும். அதோடு, பாணர் மரபின் சத்தான பகுதிகளைச் செரித்துக்கொண்டே, புலமை மரபு தோன்றியிருக்க வேண்டும்

பாணர்கள் காலத்துப் பாடல்கள் என்று சங்க இலக்கியப் பெரும்பரப்பில் எதையும் திட்டவட்டமாக எடுத்துச்சொல்ல முடியவில்லை. அனுமானங்கள் துணைகொண்டே மறைந்துபோன இந்த வரலாற்றைக் கட்டமைக்க வேண்டி இருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் பல சரடுகள், அனுமானம் கொண்டே நிறுவ வேண்டியவையாக இருக்கின்றன.



ஆய்வாளர் அம்மன்கிளி முருகதாஸ், புலவர்களைக் கூறும் இடங்கள்தோறும் பாணர்களையும் சேர்த்தே உரைக்கிறார். சங்கப் பாடல்களில் பண்பாட்டுக்கும் புலவர் பாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில் இல்லாது சொல்வதே நியாயம். மட்டுமின்றி, பாணர் குழாத்தையும் தொகுத்து ஆராய்ந்த சிறப்பும் அம்மன் கிளிக்கு உண்டு.

பாடுநர் குழாம்களாக அவர் (சங்கக் கவிதையாக்கம், மரபும் மாற்றமும்) எட்டே பேரை அடையாளம் காண்கிறார். 1. பாணர், 2. புலவர். 3. கோடியர் 4. வயிரியர் 5. கண்ணுளர் 6. கிளைஞர். 7. பொருநர் 8. அகவுனர். கூத்துக் குழுவினரும் இதில் உண்டு. கிளைஞரும் பொரு நரும் பாணர்குழுக்களுடன் சேர்த்துப் பேசப்பட, அகவுனர் மந்திரச் சடங்குகளுடன் இணைந்தவராகக் காணப்படுகின்றனர் என்கிறார் அவர்.



அகவுனர் என்கிற மந்திரச் சடங்கோடு சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் குறைவாகவே காணப்படுகிறது. சமூக வளர்ச்சிப் போக்கில் இந்த அகவுனர் என்கிற மந்திரச் சடங்காளர்கள் முக்கியத்துவம் இழப்பது இயல்பேயாகும். மலை சார்ந்த இடங்களிலும் மற்றும் காடு, சமதளம், ஆற்றுப்படுகை, கடல்சார் மண்வெளி என்பது பழந்தமிழர் வாழ்வாதாரங்கள். காடும், அதன் செறிவும், இருண்மையும், தீ முதலான அபாயங்களுமாக வாழ்ந்த மக்கள், அதன் உருவமாகவே காளியை, காடுகிழானைப் படைத்து வணங்கினார்கள். ஐவகை நிலத்தும் வாழ்ந்த மானுடக் குழுக்கள், அந்தந்த நிலப்பகுதிக்கும் தாங்கள் வாழ்வாதாரங்களுக்கும் ஏற்பத் தெய்வங்களைப் படைத்துக் கொள்கிறார்கள் எனில், அதற்கான மந்திரமும் சடங்குகளும் தேவைப்படுகிறது. மனித மனதின்ஆதார சக்திகளுள் ஒன்று அச்சம்: காற்றும், தீயும், பெருமழையும், இடியும், மின்னலும், புரிபடா நோயும் அவர்களை அலைக்கழிக்கும்போது அவர்களுக்குத் தம்மைக் காக்கும் புறச்சக்தி தேவைப்படுகிறது. அந்தச் சக்திக்குத்தாம் உண்ணும் உணவையும் தாம் அரிதில் பெற்ற பொருளையும் தந்து சாந்தி செய்து கொள்வதில் இந்த மந்திரச் சடங்குகள் தோன்றி இருக்கின்றன. இவைகளை முன்னிறுத்திய சடங்காளர்களே அகவுனர்கள்.



அகவன் மகளை அழைத்து தன் தலைவன் குன்றத்தைப் பாடச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறாள் ஒரு தலைவி.



அகவன் மகளே! அகவன் மகளே!

மனவுக் கோப்பன்ன நல்நெடுங் கூந்தல்

அகவன் மகளே! பாடுக பாட்டே;

இன்னும், பாடுக, பாட்டே- அவர்

நல்நெடுங்குன்றம் பாடிய பாட்டே.

(குறுந்தொகை :23)



தெய்வாம்சத்தை அல்லது முருகாம்சத்தைத் தம் உடலில் ஏற்றிக் குறி சொல்வது அகவர்கள் தொழில். அத்தொழிலில் ஈடுபட்ட அகவன் மகள், தன் தலைவனின் குன்றைப் பாடினால் தலைவனுக்கும் தலைவன் குன்றுக்கும் நன்மைகள் விளையும் என்பது தலைவியின் எண்ணமாகலாம்.

பாடுநர் குழாம்களின் ஊடாக அகவுனர்களைச் சேர்த்த காரணம், மந்திரச் சொற்களை உச்சரிக்கும் பழக்கத்தின் ஊடாகச் சொற்களுக்கு வந்து சேரும் ஒருவித இசைச் சேர்க்கையைக் கணக்கில் கொண்டு, பின்னர் தழைத்து வளர்ந்த இசையைக் கைக்கொண்ட பாணர்களுக்கு முன்தலைமுறையினர் அவர்கள் என்கிற காரணமாய் இருக்கலாம்.



மக்கள் அடர்த்தி கூடக்கூட, நெருப்பை உருவாக்கிச் சமைக்கும் அறிவும், ஆயுதங்களைச் செய்துகொள்ளும் அனுபவம் வாய்த்த பிறகும், மந்திரங்களின் இடம் மற்றும் அதன் வாழ்க்கை வியாபகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டிருக்கிறது என்பதையே சங்க இலக்கியங்கள் அகவுனர்கள் பற்றி அதிகம் பேசாமைக்குக் காரணம். என்றாலும், பெண்களின் காதல் நோயைப் புரிந்துகொள்ளாத மூத்த தலைமுறையினரான செவிலித் தாய்கள் மற்றும் தாய்கள் மந்திரம் ஆடிகளை அழைத்துக் கொண்டிருந்தார்கள். தெய்வம் ஏறி இசைத்தலும், பிறகு ஆடலும் பிறகு தோன்றிய இசை நடனங்களுக்கு ஆதாரம் என்ற வகையில் பாணர்கள் அவர்களுக்குக் கடன்பட்டுள்ளார்கள்.



பாணர்களோடு வயிர் என்னும் இசைக்கருவியை இசைத்தவர்களும், கோடு என்னும் வாத்தியத்தை இசைத்தவர்களும், சேர்ந்தே பார்க்கப்பட வேண்டியவர்கள். ஆக, பாணர்கள் என்று பொதுவாகப் பேசும்போது ஆடற்குழுவினரும், இசைக்குழுவினரும் இணைந்தே இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். இதன் பொருள், இவர்கள் கூட்டம் கூட்டமாக இசைக் குழுவோடு பயணம் செய்து தொழில் செய்கிற இயல்புடையவர்கள் என்று ஆகிறது.



பாணர்கள் தங்கள் கவிதை அல்லது பாடல் இயற்றும் ஆற்றலை எங்ஙனம் கொண்டார்கள், அவர்களின் கல்வி எத்தகையது, எழுத்தறிவு எத்தன்மையது, புரவலர்களிடம் அவர்கள் தங்கள் பாடலை/கவிதையை எழுதிப் பாடினார்களா என்றால் அந்த எழுதப்பட்ட கவிதைகள் எங்கு போயின என்பது போன்ற பல கேள்விகளை ஆய்வாளர்கள் எழுப்பி விடை காண முயல்கிறார்கள்.



வரலாற்றுக்கு முந்தைய அல்லது வரலாறு அமைந்த காலத்து விஷயங்கள் குறிப்பாக இலக்கியம் குறித்த கருதுகோள்களுக்கு நாட்டார் மரபே பதில் உரைக்கும் ஒரே சாத்தியமாக இருக்கிறது. நாட்டுப்புற மக்கள், அக்காலத்தில் கல்வி அறிவும், எழுத்தறிவும் பெற்றவர்களாக இருக்கச் சாத்தியம் இல்லை. இன்றுவரை, பல கூத்துக் கலைஞர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களே. ஆனால் கேள்வி மூலம் இராமாயண, பாரதக் கதைகளின் கிடங்குகளாக அவர்கள் இருக்கிறார்கள். தங்களிடம் வந்து சேர்ந்த கதைகளை அவர்கள் தங்களின் புனைவுகளைச் சேர்த்துப் புதுக் கதைகளைப் புனைகிறார்கள். கற்பனைக்கும் புனைவுக்கும் கல்வி அறிவு தேவையில்லை. இன்னும் கேட்டால் பெரும் புலமைகள், கவித்துவம் இழந்த சக்கைகளாகவே இருக்கின்றன என்பது கண்கூடு.



கோவலன் கண்ணகி கூத்தும், இளங் கோவின் சிலம்பும் வேறுவேறானவை. நான் பார்த்த தென் ஆற்காடு கூத்து ஒன்றில், கண்ணகி கோவலனிடம், Ôஎங்கடா வந்தே? உன் கூத்தியாளுக்கு நகை வாங்கிப்போக வந்தியா? இந்தா, எடுத்துக்கிட்டு ஓடுÕ என்று கம்மலைக் கழற்றிக் கோவலனிடம் எறிந்தாள். அமைதியாகக் குனிந்து அந்தக் கம்மல்களை எடுத்துக்கொண்டு கோவலன் வெளியேறுவான். அவன் முதுகுப் பக்கம், பலமாகக் காறித்துப்புவாள் கண்ணகி. மக்கள் கரகோஷம் செய்வார்கள்.

ஒரு பாரதக் கூத்தில், பாஞ்சாலியின் துகிலை உரியப் போகும் துச்சாதனன் அதற்கும் முன்பாக, ஒரு தட்டில் கற்பூரம் ஏற்றி, பாஞ்சாலிக்கு முன்பு வந்து, Ôஅம்மாதாயே, தப்பு பண்ணப் போறேன். கதைப்படி நான் செய்தாகணுமே, என்ன பண்றது? மன்னிச்சுக்கோ. என்மேல் கோபம் வேணாம். என் குலத்தை வாழ வையிÕ என்று சொல்லியபடி கற்பூர ஆரத்தி காட்டி, வணங்கிச் சேவித்துக்கொண்டு அதன் பிறகே வஸ்திர அபகரணத்தை ஆரம்பிப்பார். அதுவரை உறக்கத்தில் இருந்த பார்வையாளர்கள் எழுந்து கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். இது ஒரு சமூகத்தின் கூட்டு நிகழ்வு. அறம் என்பதன் கலை வெளிப்பாடு இது.



ஒரு காதலன்-காதலி உரையாடல் இப்படி நிகழ்கிறது

ஒரு மரம் ஏறி

ஒரு மரம் பூசி

ஒரு மரம் பிடித்து

ஒரு மரம் வீசிப்

போகிறவன்-

“பெண்ணே உன் வீடு எங்கே?”

“பாலுக்கும் பானைக்கும் நடுவிலே

ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே.”

“நான் எப்போ வரட்டும்.”

“இந்த ராஜா செத்து

அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு

மரத்தோடு மரம் சேர்ந்த

பிறகு வந்து சேர்."



ஒரு காதலன் காதலியைத் தனிமையில் சந்திக்க அலாவுகிறான். அவன் எப்படி இருக்கிறானாம். ஒரு மரத்தில் செய்த பாதக் குறடில் ஏறி நிற்கிறான். தோல் செருப்பு மாதிரி கால் கட்டைகள என்று சொல்லப்பட்ட குறடுகள் அந்தக் காலத்தில் இருந்தன. ஒரு மரம் பூசி என்றால் சந்தனம் பூசி இருக்கிறான் என்று பொருள்.



ஒரு மரமாகிய பனை மரத்தால் ஆனபனை ஓலை விசிறியை வீசிக்கொண்டு, ஒரு மரமாகிய கைத்தடி வைத்துக் கொண்டு இருப்பவன், உன் வீடு எங்கே என்று கேட்கிறான். அதற்கு அவள் "பால் விற்கும் இடையர் வீட்டுக்கும், பானை செய்யும் குயவர் வீட்டுக்கும் நடுவில் இருக்கிறது என் வீடு. ஊசி செய்யும் கொல்லர் வீட்டுக்கும், நூல் நெசவு செய்யும் நெசவாளர் வீட்டுக்கும் அருகில் என் வீடு” என்கிறாள். இப்போது அவன் Ôநான் எப்போது வரட்டும்" என்கிறான். மிக உண்மையானதும் நேர்மையானதுமான பதிலை இப்போது அவள் சொல்கிறாள். “இந்த ராஜா- சூரியன் அஸ்தமனமாகி, அந்த ராஜாவாகிய சந்திரன் பட்டம் கட்டிக்கொண்டு வரும் இரவு வேளையில் மரக்கதவு, மரத்தால் ஆன நிலைப்படியோடு (மரத்தோடு மரம்) சேர்த்து மூடப்பட்டிருக்கும். நேரமாக வந்து சேர்" என்கிறாள் அந்தக் காதலி. கதவு மூடப்பட்டிருக்கும், தாழிடப்பட்டிருக்காது என்பது குறிப்புப் பொருள். மூடப்படுவது மக்களுக்காக. திறக்கப்படுவது உனக்காக என்பது மறைபொருள்.



நல்லவேளையாக நாட்டார் பள்ளி, கல்லூரிகளுக்குப் போனதில்லை. ஆகவேதான் இந்த வகைக் கற்பனைகள் தோன்றுகின்றன. இந்த நாட்டார் மரபு போன்றது தான் பாணர் மரபும். இந்தச் சொல் முறைகளைப் பாணர்கள் தங்கள் வாழ்வனுபவத்திலிருந்தே பெறுகிறார்கள். இந்தக் கற்பனையுடன் தாங்களே உருவாக்கிக் கொண்ட இசையோடும், உடல் அசைவுகளோடும் புரவலர்களிடம் சென்று அரங் கேற்றுகிறார்கள். இந்த மக்களைக் கல்வியும் எழுத்தும் அற்ற புலவர் மரபு 'கல்லா மாந்தர்' என்று கேலி, இழிவு செய்கிறது. உரிய இடத்தில் அந்தப் பாடல்களையும் காண்போம்.



சங்க காலத்தும் சங்க காலத்து ஒட்டியும் பரவலான எழுத்தறிவு சமூகத்தின் சகல தரப்பார்களிடமும் இருந்ததாக அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆதாரமாக, கிடைத்திருக்கும் பானை ஓடுகளின் மேல் பொறித்திருக்கும் உரிமையாளர்கள் பெயர்களையும் அவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள். அப்பெயர்கள், மக்களே எழுதியது என்பதற்கு ஆதாரம் இல்லை. சரவணா ஸ்டோர்சின் வாசலில் அமர்ந்து தொழிலாளி ஒருவர் பாத்திரங்களில் உரிமையாளர் பெயர் பொறிப்பது இன்று நடப்பது போல அன்றும் நடந்திருக்கலாம். தவிரவும் கல்வி அறிவும், எழுத்தறிவும் அன்றைய வாழ்க்கை முறைக்குத் தேவைப்படவில்லை. சங்க மனிதர்கள் குமாஸ்தா வேலைக்குச் செல்லவில்லை. விவசாயம், அது சார்ந்த வேலைகள், இரும்பு மற்றும் மண்பானை வேலைகள், தேவைப்பட்டால் போருக்குச் செல்வது போன்ற தொழில்களுக்கு மேலாகச் சமூகத்தில் வேறு ஒன்றும் இருக்கவில்லை. காதல் செய்யவும், சண்டை செய்யவும், நாற்று நடவும், பானை வனையவும், கல்லூரியில் யாரும் சொல்லித் தந்ததாக வரலாறு இல்லை.



மலைமுகடுகள், பனி வெண்மேகம் வந்து தங்கிப் போகும் குன்றின் பக்கச் சாரல்கள், பூக்கள், யானைகள், தேன் அடைகள், கருத்த காடுகள், முல்லைப்பூக்கள், தேர்கள், குதிரைகள், எருமைகள், ஆறுகள் என்று வாழ்ந்த தலைமுறை பாணர்களுடையது. ஆறுகள், நதியின் ஓடை, நாற்றின் அசைவுகள், மழை, பாலை வெம்மை ஆகியவைகளில் இருந்து கற்றுக் கொண்டவர்களாகவே பாணர்கள் இருந்தார்கள். அவர்கள் ஓலையில் அல்லது செம்பில் எழுதி வைத்துப் பாட்டு படித்தவர்கள் அல்லர். அந்தச் சமயத்து முன் நிற்கும் மனிதர்கள், சூழல்களே அவர்களுக்கு உந்துதல் தந்தன. மனதுக்குள் அவர்களுக்கு வார்த்தைகள் இருந்தன. அனுபவங்களை இசையாகப் பொருத்திக் கொள்ளும் கற்பனையும் இருந்தது. அவர்கள் பண் இசைத்துப் பாடினார்கள்.



பாணர்கள் பாடல்கள் ஒன்றும் கிடைக்கப் பெறவில்லை. இவை பாணர்களுடையதாக இருக்கலாம் என்று சில பாடல்களைச் சங்கப் பாடல்களில் அறிஞர்கள் இனம் கண்டிருக்கிறார்கள்.

பாணர் பாடல்களாகிய இசைப் பாடல்கள், எதிரில் இருப்போரை விளித்துச் சொல்லும் தன்மை பெற்றவை என்கிற தொ.பரமசிவம், சங்க இலக்கியத்தில் சில பாடல்களை அடையாளம் கண்டு இவை பாணர் பாடல்களாக இருக்கலாம் என்று கருத்துரைக்கிறார். பெயரையும், பனையையும் மூன்று நான்கு முறை திரும்பத் திரும்பச் சொல்லி இசைக்கும் பாட்டு முறையைக் கொண்டு அவர் அடையாளம் கண்ட பாணர் பாடல்கள் இவை. அகவன் மகளே என்கிற பாடலை முதலில் கண்டோம்.



பார்ப்பன மகனே பார்ப்பன மகனே

செம்பூ முருக்கின் நல்நார் களைந்து

தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்

படிவ உண்டிப் பார்ப்பன மகனே...

எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்

பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்

மருந்தும் உண்டோ? மயலோ இதுவே.

குறுந்தொகை: 156



பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே. புரசமரத்துக் கோலினைக் கையில் பிடித்து, கரகம் ஏந்தி விரத உணவு உண்ணும் பார்ப்பன மகனே. நீ படித்த வேதத்துக்குள் காதலித்துப் பிரிந்தாரைப் பிறகு சேர்த்து வைக்கும் மருந்து போன்ற சொற்கள் ஏதேனும் உண்டோ, சொல். இன்னொரு பாடலையும் பார்க்கலாம்.



மெல்லிய லோயே! மெல்லிய லோயே

நல் நாண் நீத்த பழிதீர் மாமை

வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்

சொல்ல கிற்றாம் மெல்லிய லோயே

சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே

நாள் இடைப் படாஅ நளிநீர் நீத்தத்து

இடிகரைப் பெருமரம் போல,

தீது இல் நிலைமை முயங்குகம் பலவே

(குறுந்தொகை : 368)



மெல்லிய இயல்பை உடைய என் தோழியே. ஊர் எல்லாம் என் காதலைப் பற்றி தூற்றுகிறது. என் மேனி அழகு (மாமை) நீங்கிவிட்டது. இருந்தாலும் என்ன, காதல் அனுபவம் இல்லாத சின்னப் பையன்களும், காதல் மறந்துபோன கிழவர்களும் கொண்ட ஊருக்குச் சொல்கிறேன். குளக்கரையில் செழிப்புடன் நிற்கும் மரம் போல, நான் என் காதலனுடன் சேர்ந்து வாழும் நாள் வெகு தூரத்தில் இல்லை.



இதேபோன்று ஐங்குறுநூற்றுப் பாடல்களான 'வாழி ஆதன் வாழி அவினி’ என்று தொடங்கும் பாடல்கள், பாணர்த்தன்மை பெற்றன என்று கொள்வதில் தவறில்லை. சங்க இலக்கியக் கவிதை மரபில் இருந்து விலகிச் சென்றிருக்கும் குறுந்தொகை, ஐங்குறு நூறு மற்றும் கலித்தொகை பரிபாடல் போன்றவை அதிகமும் இசைத் தன்மையும், நாடகத் தன்மையும் பெற்று இருக்கின்றமை சிந்திக்கத்தக்கதாகும்.



சங்க இலக்கியத்தில் பாணர்ப் படைப்புகள் இவை போல்வன என்று அடையாளம் காணக் கூடும். பெரும் பாலும் எழுதி வைத்துப்படிக்கப்படாத இந்தப் பாடல்கள், சில வேளைகளில் பாணர்களாலும் பல வேளைகளில் புரவலர்கள் பக்கம் இருந்தோராலும் எழுதி வைக்கப்பட்டிருக்கக்கூடும். சங்க இலக்கியத் தொகுப்புக் காலத்து அரசியல் அவைகளைப் புறக் கணித்திருக்கும்.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2- ஆம் நூற்றாண்டு வரையிலும் சுமார் 500 ஆண்டுகள் நீடித்த சங்க இலக்கியப் புலவர் கவிதைகள் இயற்றப்பட்ட காலத்துக்கும்முன், சில நூறு ஆண்டுகளில் பாணர் கவிதைகள் இயற்றப்பட்டிருக்கலாம். சங்க இலக்கியம், எழுதப்பட்ட காலத்திலிருந்து அவை தொகுக்கப்பட்ட காலம் சில நூறு ஆண்டுகள் தள்ளிப் போய் இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள்.



மன்னர்களே இவைகளைத் தொகுக்கச் சொல்லி இருக்கிறார்கள். புலவர்கள் தொகுத்துள்ளார்கள். தொகுப்பின்போது செயல்பட்ட அரசியலில் பாணர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். புலமை மரபு ஏற்பட்ட பின், பாணர்களைக் Ô கல்லா வாய்ப்பாணர்Õ என்று புறக்கணித்தார்கள். இப்புறக்கணிப்புக்கு முக்கிய காரணம், பார்ப்பன மேலாண்மை, பூணூல் அணியாத பிராமணர்களாகிய Ôகிழார்Õ அல்லது விவசாயத் தலைவர்கள் உருவாக்கம் ஆகும்.



நாட்டுப்பாடல்கள் உதவி : திருவள்ளுவன்

ஓவியங்கள் : செல்வம்



Creaa.

Saturday, January 8, 2011அடையாளம்


க்ரியா ஸ்டாலில் வீடு போல விரிக்கப்பட்டிருந்தது பாய். க்ரியாவை 80களில் இருந்து பைலட் தியேட்டர் பக்கத்தில் இருந்த காலத்தில் இருந்தே பார்த்தவன் ஆதலால் எனக்கு வித்தியாசமாகப் படவில்லை.





ஒரு அடர்கருமீசைப் பையர் பில்லுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். முதுகில் தட்டினேன். சிரித்தார். ஈரடியில் தாண்டி உள்ளேபோய் திலீப்குமாரின் கடவு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தவர் முதுகில் தட்டினேன். சார் என்றார் சிரித்தபடி.



கொஞ்சம் பேசிக் கொண்டிருக்கையில் பில் கொடுத்து வாங்கிய புத்தகத்துடன் மீசையும் சேர்ந்து கொண்டது. அப்புறம் நான் அப்படியே வெளியே செல்ல மீசைப் பையரும் சிரித்தபடி கூடவே வந்தார். பேசிக்கொண்டே வர ஒரு எழுத்து கூட இன்னும் எழுதப்படாத புதிய கதை ஒன்றை சொல்லிக் கொண்டே வந்தேன்.





இது போல ஏகப்பட்ட கதைகள் சொல்லி வருகிறேன் பல வருஷங்களாய் ஆனாலும் ஒருத்தரும் எழுதியதாகத் தெரியவில்லை என்றேன்.





எழுதத்தெரியணும் இல்லே. அவனவனுக்குத் தெரிஞ்ச கதையவே இன்னும் எழுதின பாடில்லே. இதுல கேட்ட கதைய கேள்விப்பட்ட கதையை எப்படி எழுதுவது என்றார்.





எனக்கு ஒரு செய்தியை அனிச்சையாக அந்த சிரித்தமுக இளைஞர் அளித்ததாகப் பட்டது. கொஞ்சம் நெருக்கமாய் உணர்ந்தேன். க்ரியாவின் உள்ளே இருந்தவரின் பெயர் சொல்லி அவர் எங்கே என்றேன்.





ஓ அவர்தான் அவரா!





நான் திகைத்து விட்டேன்.யோவ் என்னைய்யா நீர் அதுக்காக டைப்படிக்கிறவர் இல்லையா!





ஆமாம் நான் மட்டும் இல்லை சென்ஷியும்





எனக்கு ஒன்றுமேப் புரியவில்லை! ஏளனத்திற்கு ஆளாகக்கூடும் என்கிற பிரக்ஞை கிஞ்சித்தும் அற்ற, தீவிர பெந்தகொஸ்தே பிரச்சாரகர்கள் போலவோ அல்லது டீயும் கஜுரேவும் சாப்பிட்டு, அந்த நேரப் பசியை ஒத்திபோட்டு, கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் புரட்சி, தான் சரியாக ஒட்டாத போஸ்டரால் தவறிவிடப் போகிறதே என்கிற பதற்றத்தில் சுவர் தேடும் இளம் போராளியைப் போலவோ மாங்கு மாங்கென்று டைப்படித்து தமிழின் நவீன முகத்தைப் போஷிக்கும் இவர்கள் ஒருவருக் கொருவர் நேர்ப்பரிச்சயம் கூட இல்லாதவர்கள்.





என்னால் நம்பவே முடியவில்லை. எப்படிய்யா ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சிக்காம...





ஒருத்தருக்கொருத்தர் மெய்ல் அனுப்பிப்போம் அவ்ளவுதான்.





அந்தப் பையரின் முன்னால் தழுதழுத்து விடுவேனோ, என உள்ளூர நான் உதறிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, நல்ல வேளையாக அதிஷாவும் யுவ கிருஷ்ணாவும் வந்து சேர்ந்தனர்.





விஷயத்தைச் சொல்லி யோவ் நீங்க ரெண்டுபேர் மட்டும்தான் எனக்குப் பரிச்சயம்னு நெனச்சிகிட்டு இருக்காங்கய்யா என்றேன்.





மொதல்ல உங்களைப் பார்க்கறவங்க உங்ககிட்டப் பேசறவங்க லிஸ்ட்டை எடுங்க. லிஸ்டை வெளியிட்டு இவங்கள்ளாம் என்னோட நண்பர்கள்னு அறிவிங்க, அப்பதான் உங்குளுக்கே தெரியும். உங்களுக்கு எவ்ளோ பேருன்னு.





ஒருத்தருக்கொருத்தர் தனிப்பரிச்சயத்திற்கு வராமலே மெயிலில் இணைந்து முன்னோடிகளின் எழுத்துக்களை சி.சு.செல்லப்பா போல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வலையேற்றிக் கொண்டிருப்பவர்கள் தன்னலமற்ற இலக்கியப் போராளிகள் இல்லையா?





கீழ்மையென்று நாம் நம்புவதை ஆயுதம் தாங்கி மூர்க்கமாக எதிர்த்து அழிப்பதே போராட்டம் என்பதாக ஸ்தபிக்கப் பட்டுவிட்டது. ஸ்தாபனத்தின் நீடு துயிலைக் கலைக்க ஊதப்படும் பாஞ்சஜண்யம் எல்லாம் சைக்கிள் பெல் போல ஆகிவிட்டது. கிணுகிணுப்பெல்லாம் நானும் ஒரு கச்சேரி வாசிச்சேனே எனக்கும் ஒரு தேங்காய் மூடி எடுத்து வை என்பதாக ஆகிவிட்ட்டது.





மேன்மை என்று நாம் நினைப்பது, அடுத்தவனுக்கும் போய்ச் சேரவேண்டும் போஷிக்கப்பட வேண்டும் என்று மனதை நிறைத்த எழுத்துக்களை ஏதோ விளையாட்டு போல சுமந்து திரிந்து இணையத்தில் இறக்குவதை இலட்சியமாகக் கொண்டிருப்பதும்தான் எவ்வளவு பெரிய விஷயம்.





நான் சுமந்த புத்தகங்களைப் பார்த்துவிட்டு அதிஷா கேட்டான் என்ன இது! எல்லாம் அந்தக் காலம்?





பழைய பொக்கிஷம் தேடித்தேடி வாசி. கலையின் செய்திறனை உள்வாங்கி செரித்துக் கொள். உனக்குப் பரிச்சயப்பட்ட உலகத்தைவிட்டு ஒரு போதும் பார்வையை விலக்காதே. பொறிதட்டும் போதெல்லாம் புதிதாக யோசி. முடிந்தபோது எழுதிப்பார். வரும் போது சரியாக வரும்.





அப்ப அழியாச்சுடர்கள் படிச்சாலே போதும் போல இருக்கே.





க்ரியாவிற்கு உள்ளே இருந்து கடவு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது அழியாச்சுடர்கள் வலைபூ நடத்தும் ராம் பிரஸாத்.





க்ரியாவிலிருந்து பேசியபடி, என்கூடவே வந்தது சங்கர நாராயணன்.





கடல்களைத் தாண்டி சத்தமில்லாமல் டைப்படித்துக் கொண்டிருப்பவன் சென்ஷி.





இன்று நான் வாங்கி இருந்த புத்தகங்கள் மூன்று. தி.ஜானகிராமன் சிறுகதைகள் இரண்டு பாகங்கள் ஐந்தினைப் பதிப்பகம் மற்றும் குபரா முழுத்தொகுதி - அடையாளம் வெளியீடு.



முன் அட்டை ஓவியம்: மருது

அட்டை வடிவமைப்பு: த பாபிரஸ்

அடையாளம். தரமான புத்தகங்களைத் தரமாகத் தயாரிப்பதற்கு மட்டுமல்ல நன்றி, தரம் இல்லாதவற்றை வியாபாரம் கருதியும்கூட தராதரமற்று வெளியிட மாட்டேன் எனப் பிடிவாதமாய் இருப்பதற்காக. இப்படியே நீர் என்றும் இருப்பீராக - கை சுட்டுக் கொள்ளாமல் - இன்ஷா அல்லாஹ்.



சிறு பத்திரிகைகள் போல சிறு பதிப்பகங்கள் என்கிற பெருமரியாதைக்கு உரியவை உங்களது அடையாளம் போன்ற பதிப்பகங்கள்.



குறைந்த பட்சமாக நாம் செய்யக் கூடியதெல்லாம் அடையாளம் மாதிரியான பதிப்பகங்களை வெளிச்சம் போட்டு அடையாளப் படுத்துவதுதான். தயவு செய்து கடை எண் 247க்குச் செல்லுங்கள். ஒருவர் புத்தகம் வாங்குவதும் வாங்காததும் அவரவரின் அந்த நேர வசதி. இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்து, காசா பணமா, ஒரு பதிப்பகக் கலைஞனைக் கெளரவியுங்கள்.





தன்னைக் கரைப்பதில்தான் இருக்கிறது ’தான்’ அழிந்த பொதுமை.




வியாழன், 18 ஆகஸ்ட், 2011

G Nagarajan.

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்-ஜி. நாகராஜன்


வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம்
நேரம்: 10:28 PM
வகை: கதைகள், ஜி. நாகராஜன்



ஜி. நாகராஜன்







போலீஸ் ரெய்டு ,ருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். 'ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட கமலாவைப் பற்றி ஒரு செய்தியும் ,ல்லை. ஓணத்துக்குப் பிறந்த ஊர் போயிருந்த சரசா ,ன்னும் திரும்பி வரவில்லை. வெளிக் கதவை அடைத்துவிட்டு ரேழியை அடுத்திருந்த அறையில் குழல் விளக்கொளியில் மெத்தைக் கட்டிலின் மீது தனியே உட்கார்ந்திருந்த தேவயானைக்கு அலுப்புத் தட்டிற்று.







ஏதோ நினைவு வந்தவளாய் ரேழியிலிருந்து படிக்கட்டுகளின் வழியே ஏறி மாடியறைக்குச் சென்று விளக்கைப் போட்டாள். அங்கு கீழறையைக் காட்டிலும் சற்று அதிகமான வசதிகள் ,ருந்தன. பலவகை அந்நிய நாட்டுப் படங்கள் சுவரை அலங்கரித்தன. அறையில் மிகப் பெரிய செட்டிநாட்டுக் கட்டில் ஒன்றும். அதன் மீது 'டபில்' மெத்தை ஒன்றும் சுவரோரமாக ,ருந்தன. 'நைட் புக்கிங்'குக்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த அவ்வறை சென்ற ஒரு மாத காலமாக மனித நடமாட்டம் அற்றுக் கிடந்தது. கமலாவுக்குத்தான் 'நைட் புக்கிங்' ராசி அதிகம். தேவயானை கட்டிலின் மீது ,ருந்த மெத்தையை ,லேசாகத் திருப்பி, அதன் அடியிலிருந்து ஒரு நீளமான அரை டூஞ்சு மணிக்கயிற்றை எடுத்தாள். அவள் ஊரிலிருந்து வரும்போது அவளது தாயார் அவளது படுக்கையைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு அது. அறையின் நடுவில் நின்றுகொண்டு, கயிற்றின் உறுதியைச் சோதிப்பது போல அதைப் பலவிடங்களில் டூழுத்துவிட்டுக்கொண்டே, மேலே அறையின் நெற்றுக் கண்ணைப் பார்த்தாள். உத்திரத்தில் ஒரு டூரும்பு வளையம் தொங்கிக்கொண்டிருந்தது. அது கட்டிலின் விளிம்புக்கு நேர் மேலே சற்று விலகி அமைந்திருந்தது. கட்டிலின் மீது நின்றுகொண்டு, கயிற்றைக் கொண்டு வளையத்தை எட்ட முடியுமா? நடுவில் டூருந்த மெர்க்குரி விளக்கின் மேற்பாதி, ஒரு வளைந்த தகட்டினால் மறைக்கப்பட்டிருந்ததால், வளையம் தெளிவாகக் கண்களுக்குக்குப் படவில்லை. சற்று அவசரமாகக் கீழே சென்று துணி உலர்த்தப் பயன்படும் நீளமான மூங்கிற் கழியொன்றை எடுத்து வந்தாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு, கழியின் ஒரு நுனியில் கயிற்றைச் செலுத்த முடியுமா என்று பார்த்தாள். கீழே கதவு தட்டும் சத்தம் கேட்டது. கழியையும் கயிற்றையும் கட்டிலில் போட்டுவிட்டு, கீழே ஓடினாள். வெளிக் கதவைத் திறக்குமுன் சற்றுத் தயங்கினாள். கதவை யாரும் தட்டவில்லை என்பதுபோல் பட்டது. அடுத்த பூங்காவனத்து வீட்டின் கதவு திறக்கும் சத்தம் மட்டுமே கேட்டது. கதவிடுக்கின் வழியே யாரும் நின்றுகொண்டிருந்தனரா என்று பார்த்தாள். யாரும் நின்றுகொண்டிருந்ததாகப் படவில்லை. தேவயானை மாடிப்படியறைக்கு வந்தாள்.



மீண்டும் கழியைக் கொண்டு கயிற்றை வளையத்தின் உள்ளே செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். தோள்பட்டைகளில் நோவு எடுத்தது. முகத்தில் வியர்வை அரும்பி, நெற்றி வியர்வை ஜவ்வாதுப் பொட்டைக் கரைத்து வழிந்தது. தேவயானைக்கு ஒரு யோசனை வந்தது. அவசர அவசரமாகக் கழியையும் கயிற்றையும் தரையில் போட்டுவிட்டுக் கீழே ஓடிவந்தாள். புழக்கடையில் ஒரு சன்னலருகே கிடந்த அரையடி நீளமான துருப்பிடித்த ஆணியொன்றைக் கண்டுபிடித்தாள். அதை எடுத்துக்கொண்டு மாடியறைக்கு வந்தாள். ஆணியின் நடுவில் கயிற்றின் ஒரு நுனியை டூறுகக் கட்டினாள். அவள் டூழுத்த டூழுப்பில் கயிறு கையை அறுத்துவிட்டது. வலி பொறுக்காமல் கையில் எச்சிலைத் துப்பிவிட்டு, அதன் மீது ஊதிக்கொண்டாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு கழியின் உதவியால் ஆணியை டூரும்பு வளையத்துக்குள் செலுத்த முயன்றாள். ஆணி கழி நுனியில் ஸ்திரமாக அமையாமல் பொத்துப் பொத்தென்று கீழே விழுந்தது. ஒரு நிமிஷம் டூளைப்பாறிவிட்டு, கை நடுக்கத்தையும் சரிபடுத்திக்கொண்டாள். பிறகு ஆணியை டூரும்பு வளையத்துக்குள் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். ஆணியின் ஒரு பாதி வளையத்துக்குள் நுழைந்தாலும், மறு பாதி நுழைவதைக் கயிற்றின் முடிச்சு தடை செய்தது. கயிற்றின் கனமும் ஆணி வளையத்துக்குள் செல்வதைத் தடுத்தது. கயிறு நீளமான கயிறு. அவ்வளவு நீளம் கூடாதென்று தேவயானைக்குப் பட்டது. கயிற்றைப் போதுமான அளவுக்கு வெட்டக் கத்தி எங்கு கிடைக்கும் என்று யோசித்தாள். வீ£££££££ட்டில் கத்தி ஒன்றும் கிடையாது. பிளேடு? அதுவும் டூல்லை. தேவயானைக்கு அடுப்பங்கரை அரிவாள்மனை நினைவுக்கு வந்தது. குதித்துத் கீழே சென்று அரிவாள்மணையை எடுத்து வந்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு, தன் கழுத்துக்கும் டூரும்பு வளையத்துக்கும் உள்ள டூடைவெளியையும், சுறுக்கு விட வேண்டிய நீளத்தையும் உத்தேசமாகக் கயிற்றைத் துண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். நல்ல வேளையாக அரிவாள்மணை சற்றுப் பதமாகவே டூருந்ததால் , கயிற்றை நறுக்குவதில் சிரமம் டூல்லை. மற்றொரு யோசனையும் தேவயானைக்கு வந்தது. அரிவாள்மணையைக் கொண்டே கழியின் ஒரு நுனியை சிறிதளவுக்கு டூரண்டாக வகுத்துக்கொண்டாள். டூப்போது கயிற்று நுனியைக் கழிநுனியில் டூருந்த பிளவில் கவ்வவைத்துக் கயிறு கீழே நழுவாதவாறு கழியை உயர்த்த முடிந்தது. டூவ்வாறு ஆணியை வளையத்துக்குள் செலுத்தி, ஆணி வளையத்தைக் குறுக்காக அழுத்திக்கொண்டிருக்க, கயிறு நேர்ச்செங்குத்தாகத் தொங்குமாறு செய்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு கயிற்றின் நுனிப்புறம் தலை செல்லுமளவுக்கு ஒரு வளையம் செய்து சுறுக்கு முடிச்சுப் போடப் பார்த்தாள் தேவயானை. சுறுக்கு முடிச்சும் சரியாக விழவில்லை. அவளுக்கு டூதிலெல்லாம் அனுபவம் போதாது. டூரண்டு மூன்று தோல்விகளுக்குப் பிறகு, ஒருவாறாக முடிச்சு சரியாக விழுந்தது. அப்போது கீழ்க் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தேவயானை சற்றுத் தயங்கினாள். கீழே கதவைத் தட்டும் சத்தம் பலப்பட்டது. 'டூப்போது டூதுக்கு என்ன அவசரம்?' என்று நினைத்தவள் போல், தேவயானை கீழே ஓடிச்சென்று, சேலை முந்தானையால் முகத்தை ஒற்றிவிட்டு ஆடைகளையும் சரி செய்தவாறே வெளிக் கதவைத் திறந்தாள்.



அத்தானும் வேறொருவரும் வெளியே அறை வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தனர்.



''கதவெத் தெறக்க டூந்நேரமா?'' என்றான் அத்தான்.



''மேலே டூருந்தேன்'' என்றாள் தேவயானை.



''கதவை அடைச்சிட்டு, லைட்டை அணைச்சிட்டு டூருன்னா, ஒன்னே யாரு மேலே போகச் சொன்னது?'' என்றுகொண்டே அத்தான் நுழையவும், கூட டூருந்தவரும் உள்ளே நுழைந்தார்.



''உம், லைட்டைப் போடு'' என்றுவிட்டு அத்தான் வெளிக்கதவை அடைத்தான். ரேழி விளக்கைப் போட்டாள் தேவயானை. அத்தான கூட வந்திருந்தவர் நன்றாக வளர்ந்து டூருந்தார். அரைகுறை பாகவதர் கிராப்போடு, டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்திருந்தார். வழக்கமாக வருபவர்களைப் போல் அவளையே உற்று நோக்காது ரேழியையும், ரேழியை ஒட்டியிருந்த அறையையும் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். ''சரிதானேங்க?'' என்றான் அத்தான், அவரைப் பார்த்து.



ரேழியை அடுத்திருந்த அறையினுள் நுழைந்து, குழல் விளக்கொளியில் அறையின் சுவர்களை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ''பரவாயில்லை, எல்லாம் சுத்தமாகவே வச்சிருக்கீங்க'' என்றார் அவர்.



''டூங்கே எல்லாம் சுத்தமாகத்தான் டூருக்கும்'' என்றான் அத்தான் கள்ளச் சிரிப்போடு. ''அப்ப நா வர்றேன்.''



''பணம்?'' என்றார் வந்தவர்.



''எல்லாம் டாக்டர்கிட்டே வாங்கிக்கறேன்'' என்றுகொண்டே வெளியேறினான் அத்தான்.



வெளிக் கதவைச் சாத்தித் தள்ளிவிட்டு, ரேழி விளக்கையும் அணைத்துவிட்டு, வந்தவரிடத்து, ''வாங்க'' என்று கூறிக்கொண்டே ரேழியை அடுத்திருந்த அறையின் குழல் விளக்கின் பிரகாசத்தில் பிரவேசித்தாள் தேவயானை. அவள் நேராகச் சென்று கட்டிலில் அமர்ந்தாள். அவர் தயங்கியவாறு அருகில் வந்து நின்றார்.



''டூப்படி உட்காருங்க'' என்றாள் அவள்.



''டூல்லே, அந்த ரேழி ஓரத்துலே ஒரு நாற்காலி டூருக்கே, அதை எடுத்திட்டு வா'' என்றார் அவர். அவள் சிரித்தாள்.



''எப்போதுமே சாய்வு நாற்காலியில் சுகமாய் படுத்துத்தான் எனக்குப் பழக்கம்'' என்று அவர் விளக்கினார்.



பலர் அந்தச் சாய்வான பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தேவ¨யானையைக் கொஞ்சியதுண்டு. எனவே உடன் எழுந்து பிரம்பு நாற்காலியை எடுத்து வந்து கட்டிலின் அருகே அதைப் போட்டாள். அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார்; அவள் மீண்டும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டாள். டூருவரும் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டனர்.



''நீ அழகா டூருக்கே'' என்றார் அவர். அவள் சிரித்தாள்.



''கொஞ்சம் சேலையை வெலெக்கிக்க'' என்றார் அவர். அவள் மீண்டும் சிரித்தாள். ''உம், வேடிக்கைக்குச் சொல்லலே; ஒன் மார்ப முழுசும் மறைக்காதபடி சேலய கொஞ்சம் வெலெக்கிப் போட்டுக்க.''



அவள் அவ்வாறே செய்தாள்.



''கொஞ்சம் நிமிர்ந்து உட்காரு.''



அவள் மீண்டும் சிரித்தாள்.



''கொஞ்சம் நிமிர்ந்து உட்காரேன்'' என்று கொஞ்சுவது போல் அவர் சொன்னார்.



''நீங்க என்ன போட்டாப் படம் பிடிக்கப் போறீங்களா?'' என்று அவள் சிரித்தாள்.



''ஆமா, அப்படித்தான் வச்சிக்கயேன்'' என்றார் அவர்.



அவளும் அவளது சேலையையும், முடியையும் ஒரு சைத்ரீகனுக்கு முன் உட்கார்ந்து சரி செய்துகொள்வதுபோல் சரி செய்துகொண்டாள். சற்று நேரம் அவளைப் பார்த்து ரசித்துவிட்டு, ஏதோ குறை கண்டவராய், ''உட்கார்ந்திருந்தா சரியாப்படலயே; கொஞ்சம் படுத்துக்க'' என்றார் அவர்.



''நீங்க உட்கார்ந்துதானே டூருக்கீங்க, வெறுமனே'' என்றாள் அவள் சிரிக்காமல்.



''நான் டூங்கே உக்காந்து டூருந்திட்டுப் போகத்தானே வந்திருக்கேன்'' என்றார் அவர். அவள் சிரித்துக்கொண்டே படுத்துக்கொண்டாள். ஒரு கையை மடித்து அதைக் கொண்டு தலையைத் தாங்கி அவரை நோக்கிச் சிரித்தவாறே அவள் படுத்துக்கொண்டாள். அவர் அவளைப் பார்த்துக் கொண்டு டூருந்தார்.



''உங்களுக்கு ஆசை டூல்லையா?'' என்றாள் அவள்.



''நிறைய டூருக்கு.''



''அப்ப?''



''அதனாலேதான் ஒன்னைப் பார்த்துகிட்டே டூருக்கேன்.''



''பாத்துகிட்டே டூருந்தாப் போதுமா?'' அவள் சிரித்தாள்.



''தொட்டுப் பார்க்கலாம்.''



''நீங்க தொட்டுப் பாக்கலயே.''



''தொட்டா நீ சும்மா டூருக்கணுமே!'' என்றார்.



அவள் சிரித்தாள். ''நான் ஒண்ணும் சேட்டை செய்யமாட்டேன்; நீங்க சும்மா தொட்டுப் பாருங்க.''



வெளிக்கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் எழுந்திருக்க முடியாது போல் தவித்தாள். அவர் நிதானமாக எழுந்து கதவைத் திறந்தார். கதவைத் தட்டியது அத்தான்தான். அத்தான் அவரை எதுவும் கேட்குமுன் அவர் பையிலிருந்து எதையோ எடுத்து அத்தானிடம் கொடுக்க வந்தார்.



''டூல்லே வச்சிக்கோங்க, எல்லாம் டாக்டர்கிட்டேருந்து வாங்கிக்கறேன். டாக்டர் கடைக்கு வந்திட்டாரு; நீங்க வர்லயான்ட்டு கேட்டாரு'' என்றான் அத்தான்.



''டூப்ப வந்திடறேன்ட்டு சொல்லுங்க'' என்றார் அவர்.



அத்தான் வெளியேறுகிறான்; அவர் கதவை அடைத்துத் தாளிடுகிறார்.



''கொடுமை'' என்றுகொண்டே அவர் நாற்காலியில் சாய்கிறார்.



''எது?'' என்றாள் அவள், கட்டிலிலிருந்து எழுந்து அவர் அருகே நின்றுகொண்டு.



''டூந்த நேரக் கணக்குதான்'' என்று அவர் சொல்லவும் அவள் அவரைக் கட்டியணைக்க முயன்றபடியே, அவரது டூரு கன்னங்களிலும்டூ டூறுதியாக அவசரமாக அவர் உதடுகளிலும் முத்துகிறாள்.



''சரி, நீ போய்ப் படுத்துக்க'' என்கிறார் அவர்.



''நீங்க என்ன செய்யறீங்க?'' என்று கேட்டுக்கொண்டே அவள் மெத்தையில் சாய்கிறாள்.



''டூங்கே டூருக்கேன்'' என்கிறார் அவர்.



''அதெக் கேக்கலே; என்ன தொளில் செய்யறீங்க?''



''பெறந்து, வளந்து, சாவற தொளில்தான் செய்யறேன்.''



அவள் கட்டிலிலிருந்து எழுந்து அவரை கட்டியணைக்க முயலுகிறாள். அவரோ நாற்காலியில் சாய்ந்தவராகவே கிடக்கிறார். தோல்வியுற்றவளாய் அவள் கட்டில் மெத்தைக்குச் சென்று அதன் மீது விழுகிறாள்.



''எனக்குத் தண்ணி தவிக்குது'' என்கிறாள் தேவயானை.



அவர் எழுந்து, ரேழி விளக்கைப் போட்டு, மூலையிலிருந்த பானையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவளுக்குக் கொடுக்கிறார். படுத்தபடியே அவள் தண்ணீரைப் பருகும்போது, அதில் ஒரு பகுதி வாய்க்குள் நுழையாது அவளது மார்பகத்தை நனைக்கிறது.



நின்றுகொண்டிருக்கும் அவர், ''சென்று வருகிறேன்'' என்கிறார்.



''அடுத்த வாட்டி எப்ப வருவீங்க'' என்றுவிட்டு அவர் பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை அவளிடத்து நீட்டுகிறார். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைக்கிறாள். அவர் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்கிறார்.



டூரவு மூன்று மணிக்கு அத்தான் வீட்டுக்கு வந்தான். அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று அவளுக்கு ஆவல். ஆனால் வாடிக்கைக்காரர் யாரிடத்தும் அவள் விசேட ஆர்வம் காட்டுவது அத்தானுக்குப் பிடிக்காது. எனவே அவள் எடுத்த எடுப்பிலேயே, ''அவர் எனக்கு அஞ்சு ரூவா கொடுத்தார்'' என்றாள்.



''யாரவன்?'' என்றான் அத்தான்.



''அதான் நீங்க மொதல்லே கூட்டியாந்தீங்களே, அவருதான்.''



''மொதல்லே யாரக் கூட்டியாந்தேன்? நான் டூன்னிக்கு ஒருவாட்டி தானே வந்தேன்?''



''அதான், ஏளு ஏளரை மணிக்குக் கூட்டியாந்தீங்களே, அவரே நெனப்பில்லையா?''



''ஏளு, ஏளரை மணிக்கா? நான் சுப்பு வீட்லேந்து கிளம்பும்போதே ஒம்பது மணி ஆயிருக்குமே!''



'',ன்னிக்கு சுப்பு வீட்டுக்குப் போயிருந்தீங்களா?''



''ஆமாம், டூருபது ரூபா வரைக்கும் கெலிப்பு. டூன்னைக்கு ஒன்பது மணிவரைக்கும் தெருவுலே தலைகாட்ட வேண்டாம்னுட்டு ஏட்டையா சொல்லியிருந்தாரு. நானும் ஒம்பது வரைக்கும் சுப்பு வீட்டோடவே டூருந்திட்டேன்.''



''அப்ப, அந்த டெர்லின் சட்டைக்காரரே நீங்க கூட்டியாரலையா? அவர் கூட ஒரு டாக்டர் வந்தாராமே; நீங்க கூட டாக்குட்டரே வேறே வீட்டுக்குக் கூட்டிப் போனீங்களே?''



''டாக்டரா? அவர் யாரு டாக்குட்டரு? ஒனக்கு என்ன புத்தி தடுமாறிடுச்சா, டூல்லே கதவெத் தெறந்து போட்டுக்கிட்டு கனவு கண்டிட்டிருந்தயா?''



'',ல்லயே, கதவ அடச்சிட்டு மேலேதான் டூருந்தேன். நீங்க கதவைத் தட்டினப்பதான் கீளே வந்தேன்.''



அத்தான் முழித்தான். அவள் தொடர்ந்தாள்.



''கொஞ்சம் நீளமா முடி வச்சிருந்தார். நீலநெற டெர்லின் சட்டையும் எட்டு மொள வேட்டியும் கட்டிருந்தாரு. ஆனா என்னெத் தொட்டுக்கக் கூட டூல்லே'' என்றுவிட்டு தேவயானை சிரித்தாள்.



''தேவு, சும்மா உளறாதே. நான் தெருவுக்கு வரும்போதெ மணி ஒம்பதுக்கு மேலே ஆயிரிச்சே. அந்த சாயபுப் பையனே மட்டுந்தானே டூன்னைக்கு நா கூட்டியாந்ததே. அதுக்கு முன்னாடி யாரெக் கூட்டியாந்தேன்?''



''நா உளர்றேனா, நீங்க உளர்றீங்களா?'' என்றுகொண்டே, தான் அவரிடமிருந்து வாங்கிய ஐந்து ரூபாயை அத்தானிடம் காட்ட தலையணையைத் திருப்பினாள் தேவயானை. தலையணைக்கு அடியே எதுவும் காணப்படவில்லை. தேவயானைக்கு மெய் சிலிர்த்தது. பதட்டத்தில் தலையணையை முழுமையாகப் புரட்டினாள். எதுவும் காணோம். மெத்தைக்கு அடியிலும், பிறகு தலையணை உறைக்குள்ளும் தேடினாள். ஒன்றும் காணவில்லை. தலையணை உறையின் டூரு முனைகளைப் பிடித்துக்கொண்டு தலையணையைத் தலைகீழாகக் கவிழ்த்தாள். தலையணை தலையில் விழுந்தது. உறையினுள் தேடினாள். தரையில் தேடினாள். ஐந்து ரூபாயைக் காணோம். அத்தான் முழித்தான்.



''எங்கே போயிருக்கும்; டூங்கேதான் எங்காவது டூருக்கணும்'' என்றாள் தேவயானை நம்பிக்கையோடு.



''எது?'' என்றான் அத்தான்.



''அந்த டெர்லின் சட்டைக்காரர் கொடுத்த அஞ்சு ரூபாதான்.''



''நீ என்ன கனவு ஏதாச்சும் கண்டாயா?'' என்றுகொண்டே அத்தான் சிரித்தான்.



''நீங்கதான் வெறிச்சீலே எல்லாத்தையும் மறந்திடுவீங்க'' என்றாள் தேவயானை, டூன்னும் காணாமற் போன ஐந்து ரூபாயைத் தேடியவாறே.



''ஒருவேளை மேலே மாடியிலே டூருக்கும்'' என்றுகொண்டே, தேவயானை வேகமாகப் படிகளேறி மாடிறயறைக்குச் சென்றாள். அவள் அணைக்காது விட்டுப்போன மெர்க்குரி விளக்கு ஒளியில், அவள் பிரயாசைப்பட்டு டூரும்பு வளையத்திலிருந்து தொங்கவிட்ட கயிறும், அதன் கீழ் நுனியை அலங்கரித்த வட்டமும் அவளைத் திகைக்க வைத்தன.



Yumaa vasugi.

வேட்டை- யூமா வாசுகி


வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம்
நேரம்: 6:19 AM
வகை: கதைகள், யூமா வாசுகி



வாசல் வரை வந்து நின்று தயங்கித் திரும்பினார் உஸ்மானி. தளர்ந்த உடலை நாற்காலியில் கிடத்திக்கொண்டு விறகுச் சாம்பல் கிடக்கும் கணப்படுப்பிற்குள் கண்களைச் செலுத்தியிருந்தவனை அவரது அழைப்புக்குரல் சலனப்படுத்தவில்லை.



“பொனாச்சா....”



“-------------”



“மகனே பொனாச்சா”



“----------------”



“சீக்கிரம் வந்துவிடுவேன். வீட்டிலேயே இரு. குடிக்கறதானா கொஞ்சம் சாப்பிட்ட பிறகு குடி, உடம்பு தாங்காது.” கெட்டுச் சீரழிந்து கொண்டிருக்கிற மகனது உடல் நிலைக்காக வெளிப்பட்ட பெருமூச்சுடன் உஸ்மானி படியிறங்கினார். கொழுத்த புலி மாதிரி திமிராய் அலைந்து கொண்டிருப்பான் பொனாச்சா. சேர்ந்தாற் போல ஒரு மணி நேரம் வீட்டில் நிலைக்குமா அவன் கால்கள். ரத்தம் உறைந்து போகிற இரவுக் குளிரில், அகால நேரங்களில் உறங்குவதற்கு வீடு திரும்புகிறவன். ஒரு நண்பனின் பின்னால் அமர்ந்து பைக்கிலோ, தனித்த நடையிலோ வரும் மகனை எதிர்பார்த்து, உஸ்மானி ஜன்னலைப் பிடித்தபடி நின்றிருப்பார். மகன் தோட்டத்திலிருக்கும்போது சில தடவைகள் அவரும் செல்வதுண்டு. கூலிப் பெண்களுடன் சிரிப்பு அரட்டையுமாயிருப்பான் பொனாச்சா. அப்பாவைக் கண்டதும், கடுகடுப்பாய் வேலை வாங்குபவன் போல அவர்களை அதட்டுவான். சில நிமிடங்கள் நின்றிருந்து புன்னகை மனதுடன் உஸ்மானி புறப்படுவார். சரிவில் இறங்கி அருவிப்பாலத்தைக் கடப்பதற்கு முன்பாகவே பின்னாலிருந்து வரும் பொனாச்சாவின் பாட்டு. அதிரடியான பேச்சையும் சிரிப்பையும் போன இடம் தெரியாமலாக்கி வீட்டோட முடக்கிவிட்டாயே ராசய்யா, சரிதானா இதெல்லாம். உரித்த ஆட்டுத் தோலாய்த் துவண்டு கிடக்கிறான் என் மகன்.



சூரியன் மேகத்துள் சோம்பியிருந்தான். காலையின் மங்கலான வெளிச்சத்தோடு மலைச் சரிவுகளின் செழுமையை இன்னும் போர்த்தியிருந்தது பனி. கணுக்கால்வரை தொளதொளப்பாய் நடையில் அசைந்தது கருப்பு கூர்க் உடை. விழா நாட்களில் மட்டுமே அணிப் படுவதால் படிந்து போன பீரோ வாசனை. தோளிலிருந்து குறுக்கே தொடங்கிய சங்கிலியின் இடுப்பு முடிச்சில் இணைக்கப்பட்டிருந்த குறுவாளின் கைப்பிடி சற்று துருவேறியிருந்தது. நினைவாய் எடுத்து வைத்திருந்த ரப்பர் பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார். வந்து உரசி முதுமையைச் சீண்டிப் பார்க்கும் குளிருக்கு மார்போடு கைகளை அணைத்து மெதுவாக நடந்துக் கொண்டிருந்தார். வழியின் இருபுறமும் மண்டிக்கிடந்த ஊதா மலர்கள் நடையைத் தட்டுபடுத்திற்று. நேற்றிருந்ததை விட இன்று அதிகம். அடுத்த நாட்களில் இலைகளே தெரியாமல் பெருகும் போலிருக்கிறது. இதுதானே பருவம். பொனாச்சாவின் அம்மா இருந்தால் இவைகள் காவேரியம்மனுக்கு மாலையாகும். குளிருக்கெல்லாம் பயப்படாமல் பூப்பறிக்கவென்றே வெயில் வருமுன் எழுந்துவிடுவாள். இரவு யாருக்கும் தெரியாமல் மலர்ந்த பூக்களை விடியலில் பார்க்கிற சந்தோஷத்தை அனுபவிக்கத் தெரிந்திருந்தது. பொனாச்சா சிறுவனாக இருந்தபோது இந்தப் பூக்களை அவனுக்குச் சூட்டி, சிறுமிகளின் உடையை இரவல் பெற்று அணிவித்து - ஒரு பெண் குழந்தையைப் போன்ற ஒப்பனையில் போட்டோ எடுத்து வைத்திருந்தாள்.



தூரத்திலிருந்தே மண்டபத்தின் முகப்பிலுள்ள ‘அப்பர் கோடவா சமாஜ்’ எனும் வார்த்தைகள் வெளிறியும் சில எழுத்துக்கள் அழிந்தும் தெரிந்தன. யாரு கண்டுகொள்கிறார்கள் இதையெல்லாம். கூர்க் ஆச்சாரப்படி நடப்பவன் எவனைப் பார்க்க முடிகிறது. சண்டை சச்சரவின் போது ஒருத்தருக்கொருத்தர் வெட்டிக் கொள்ளும்போதுதான் மூதாதைகளின் வேட்டைப் புத்தி தெரிகிறது. மற்றபடி நிஜ கூர்க் என்று எவனுமில்லை. கல்யாணம் கருமாதின்னு வரும்போது செய்கிற சடங்குகளெல்லாம் கூட கொஞ்ச நாளைக்குத்தான். பிள்ளைகளை வெளிநாடு, வெளி மாநிலம்னு படிக்க அனுப்பிவிடுகிறார்கள். அதுகள் படிக்கப் போனபோது கத்துக்கிட்ட பழக்கத்தையெல்லாம் இங்கேயும் நடத்த ஆரம்பிச்சாச்சு. எதுவானாலும் ராசையா, இந்த மடிக்கேரி மண்ணில் கூர்க்க பொறந்த ஒருவர் எந்த நிலையிலேயும் வாக்குத் தவறக்கூடாது.



வெளியே பறையடிப்பவர்களைச் சுற்றி ஆடிக்கொண்டிருந்தது சிறு கூட்டம். அவ்வப்போது துந்துபியொத்த இசைக்கருவியிலிருந்து பிளிறிய ஓசை மேலும் அவர்களை உற்சாகப்படுத்தியது. புதுப்புது மனிதர்களாய் பலர் வாசலருகே நின்று ஆடுபவர்களைப் பார்த்திருந்தார்கள். வெளியாட்கள். மாப்பிள்ளை உறவுகளாயிருக்கலாம். உஸ்மானி நுழைவுத் தோணத்தைத் தாண்டும்போது ஓட்டமும் நடையுமாக வந்து எதிர்கொண்டார் ராசையா.



குனிந்து உஸ்மானியின் பாதங்களை மூன்று முறை தொட்டு நெஞ்சில் ஒற்றிக்கொள்ள, தன் இடதுகையை மார்பில் வைத்து மேலே முகமுயர்த்தி ராசையாவின் சிரத்திற்குமேல் நீண்ட வலக்கரத்தால் ஆசிர்வதித்தார் உஸ்மானி. பவ்யமாக உள்ளே அழைத்துச் செல்லப்படுகையில் ராசையாவின் கருப்பு அங்கியை உரிமையுடன், சரிப்படுத்திவிட்டு “எல்லாம் முறைப்படிதானே ராசையா” என்றார் லேசான அதிகாரத் தோரணையில்.



“ஆமாம். ஷகீலாவிற்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. நான்தான் சொல்லிப் புரியவச்சேன். சிறுசுகள் சொல்லுதேன்னு வம்ச பழக்கத்தையெல்லாம் விட முடியுமா...”



“விடக்கூடாது ராசையா. கூடாது. ரொம்ப காலம் வெளியே போய் படிச்சவள்ளே, மாறிப்போய்ட்டாள். எவனையோ இழுத்துக்கிட்டு வராம ஒரு ‘கூர்க்’கா பாத்து காதலிச்சாளே - அதுவரைக்கும் சந்தோஷம்.”



விஸ்தாரமான ஹாலில் வரிசையில் அமைந்திருந்த இருக்கைகளில் ஒன்றில் உஸ்மானி அமர்ந்தார். அருகில் உட்காந்திருந்தவர்களை நோட்டமிட்டு - மெலிதான புன்னகையில் இதழ்கள் விரிய நரைபுருவத்தை நீவி விட்டுக் கொண்டார்.



கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது. திடீரென்று எழும் உரத்த சிரிப்புகளும் பரபரப்பாய் வேலை ஏவும் சப்தமும் கூடமெங்கும். வண்ணக் காகித ஜோடனை நேர்த்தியை குழந்தைகள் ரகசியமாகப் பிய்த்துப் பார்த்து சிதைத்தார்கள். வெளியிலிருந்து வந்த தாளகதிக்கு உள்ளேயும் சிலர் சேர்ந்து ஆடத்தொடங்கினார்கள். இருவர் இணைசேர்ந்து ஆடும் போட்டி ஆட்டத்தில் ஒருவர் சட்டென்று நடன அசைவை மாற்றினால் சேர்ந்து ஆடுபவரும் நொடியும் தாமதமின்றி ஆட்டத்தை அதேபோல் மாற்றியாக வேண்டும். ஆணும் பெண்ணுமாய் ஆடும்போது தோற்றுப்போய் அசடுவழிபவர்கள் அனேகமாக ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். தோற்ற ஆண்மகன் வெட்கி அந்த இடத்தைவிட்டு நகரும்படிக்கு கிண்டலால் துரத்துபவர்கள் பெண்கள். பிறழ்ந்தும் முறை தவறியும் ஆடப்படும் நடனத்தை வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்த உஸ்மானிக்கு அருகே பினு வந்து நின்று மண்டியிட்டாள். எழுந்து நின்று ஆசி வழங்கி பக்கத்து இருக்கையைக் காட்டினார். மறுத்து தரையிலேயே காலருகில் உட்கார்ந்த தங்கையின் சிரத்தை பரிவுடன் தொட்டன விரல்கள்.



”ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து... ம், சௌக்கியம்தானே. நீயும் கிழவியாயிட்டு வரே போலிருக்கு. தலையில் பாதி நரைச்சாச்சு. ராசையாவிற்கு அக்கா மாதிரியிருக்கே” அண்ணனுக்கு மட்டும் கேட்கும் மெதுவான குரலில், “நீங்க கல்யாணத்துக்கு வர மாட்டீங்கன்னு நெனச்சேன்” என்றாள். உஸ்மானி சற்றுக் குனிந்து செவிமடுத்துக் கொண்டார்.



“அப்படியெல்லாம் ஏன் நினைக்கிற பினு. யார் வராவிட்டாலும் நான் வராமல் இருக்க முடியுமா? நாம் எதிர்பார்க்கிறபடியா எல்லாம் நடக்குது. யாரைக் குத்தம் சொல்றது இதுக்கெல்லாம்... சரிதான்னு ஏத்துக்க வேண்டியதுதான்.” பினுவின் கண்களிலிருந்து நீர் உதிர்வதைக் கண்டு பதட்டமாய் “அழாதே! அழாதே பினு. பொண்ணுக்கு அம்மா நீ. யாரும் பாத்துடப் போறாங்க, நீ என்ன செய்வே பாவம். உம்மேலே எனக்கொண்ணும் வருத்தமில்லே. வருத்தப்பட்டிருந்தா இங்கே வந்து உட்கார்ந்திருப்பேனா. ஷகிலாக்குட்டிக்கு இது சந்தோஷம்னா எனக்கும் தான்” கனிந்து குழைந்தது குரல்தொனி. தலை மூடிய துணியை இழுத்து பினு கண்களையும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள்.



“பொனாச்சா எப்படியிருக்கான்.”



“கொஞ்சம் நாளானா எல்லாம் சரியாகும்.”



”சின்ன வயசிலேர்ந்து சொல்லிச்சொல்லி வளர்த்துவிட்டு இப்போது இப்படி முடியுதுன்னா எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான். காதலிச்சவனை கல்யாணம் பண்ணலேன்னா செத்துப்போவேன்னு மிரட்டுகிறாள் அண்ணா இவள். திமிர். ரொம்பப் படிக்க வச்சிட்டோம் பாருங்க அந்தத் திமிருதான்.”



“அவளைத் திட்டாதே. அப்போதெல்லாம் ராசையா கூடத்தான் ஷகிலாவை பொனாச்சாவிற்காகத்தான் பெத்திருக்கேன்னு அடிக்கடி சொல்லிட்டிருப்பான். அவனே சம்மதப்பட்டு செய்யும்போது நீ என்ன பண்ண முடியும்... சரி போகட்டும். மாப்பிள்ளைப் பையன் யாருன்னு தெரியலையே. இன்னும் மண்டபத்துக்கு அழைத்து வரவில்லையா....”



வெளியே ஆட்டக்காரர் மத்தியில் மதுப்புட்டியுடன் தள்ளாடுபவனை பார்வையில் சுட்டினாள்.



“பெரிய வசதிக்காரனோ...”



“அவங்கப்பா துணிமில் வச்சிருக்காருண்ணா.”



”சரிதான்! நான் வீட்லேர்ந்து இவ்வளவு தூரம் நடந்தே வரேன். என் வீட்டுக்கு வந்தா என் மருமகளும் இப்படித்தான் இருக்கணும்.... பணக்காரனாக் கெடச்சது ஷகிலாவுக்குப் பாக்கியம்.”



மீண்டும் கண்களில் நீர் துளிர்க்க, “என்னை மன்னிச்சுடுங்கண்ணா” என்றாள் பினு. “மன்னிக்கறதாவது! எங்கேர்ந்து கத்துக்கிட்ட இப்படியெல்லாம் பேச, சரி எழுந்துபோ. போய் ஆகவேண்டியதைப் பாரு. நான் இருந்து நெறயக் குடிச்சிட்டு தின்னுட்டுதான் போவேன். பை கொண்டு வந்திருக்கேன் பாத்துக்க....” எடுத்து வைத்திருந்த ரப்பர் பிளாடரை வெளியே உருவிக் காண்பித்ததும் அமைதியாகச் சிரித்து பினு அகன்றாள்.



உஸ்மானி எழுந்து மறைவாக கழிப்பறைப் பக்கம் சென்று ரப்பர் பிளாடரை தொடையிடுக்கில் சரியாகப் பொருத்திக்கொண்டு வந்தார். அழகான பெரிய டிரேக்களில் விஸ்கி நிரம்பிய கண்ணாடிக் குவளைகளைச் சுமந்து வரிசையாக விநியோகித்து வந்தார்கள். ததும்பி தரை விரிப்பில் தெறித்தது மது. சிறுக சிறுக சுவைத்துப் பருகினார் உஸ்மான். பெண்களிடமும் சிறு பிள்ளைகளிடத்தும் விநியோகம் கொஞ்சம் தாராளமாகவே. தேவைப்பட்டுக் கேட்பவர்களுக்கு மட்டும் சிகரெட். கல்யாணத்திற்காக நாற்பதாயிரம் ரூபாய்க்கு மதுவகைகளை பெங்களூரில் இருந்து ராசையா வாங்கி வந்திருப்பதாக பக்கத்திலிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். வியப்பு மேலீட்டால் உஸ்மானி மேலும் இரண்டு குவளைகள் பெற்றுப் பருகினார். சிறிது நேரத்தில் சிறுநீருக்காக பொருத்தப்பட்ட பை லேசாக மேடிட்டிருந்தது உடைக்குள்.



பிடித்து வைத்திருந்த காவேரியம்மனுக்கு சில பெரிய உயர்ரக மதுப்புட்டிகளை வைத்து வணங்கி வாளை உயர்த்தி சில சம்பிரதாய வார்த்தைகளை உச்சரித்து முடிந்ததும் - மணமக்களை எதிரெதிரே இருந்த இரண்டு தனியறைகளுக்கு அலங்கரிப்பதற்காக அழைத்துச் சென்றனர். கூட மத்தியில் ஒரு பீப்பாயை வைத்து அனைத்துவகை மதுவையும் கலந்து காக்டெயில் தயாரிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. குடியில் மயங்கி விழுந்த தம் சிறார்களை அம்மாக்கள் தூக்கிச் சென்று யாருக்கும் இடையூறு இல்லாதபடி சுவரோரங்களில் கிடத்தினர். போதை உந்த அனாயாசமாய் நடனமாடும் தங்கள் பிள்ளைகளை வாத்ஸல்யத்துடன் மகிழ்ந்து பார்த்தனர் சிலர்.



வெளியே இசைத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் பையில் ஐந்து ரூபாய் தாளொன்றைத் திணித்து - அவருக்கு இஷ்டமான இசைலயத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்கள் அதை வாசிப்பது கேட்டு உஸ்மானியும் நடனமாடினார். தவறாக ஆடியவர்களிடம் சொன்னார். “பார்த்துக் கொள்ளுங்கள்! இதுதான் கூர்க் நடனம், இப்படித்தான் ஆட வேண்டும்.” உடை வியர்வையில் நனைய ஆட்ட முனைப்பிலிருந்தவரை பெண் பிள்ளைக்கு மருதாணியிட வேண்டுமென்று ராசையா உள்ளே அழைத்துப் போனார்.



அலங்காரம் பூர்த்தியாகி மாப்பிள்ளையும் பெண்ணும் அருகருகே அமர்த்தப்பட்டிருந்தார்கள். எதிரே வெள்ளித்தட்டில் குழைந்த மருதாணி. கூடவே நிறைய ஒடித்த ஈர்க்குச்சிகளும். ஒவ்வொருத்தராக குச்சியில் மருதாணியைத் தொட்டெடுத்து மணமக்களின் உள்ளங்கைகளில் வாழ்த்துக்களோடு பதித்தார்கள். ஷகிலாவின் தோழி குச்சியின் ஒரு முனையை பல்லில் கடித்து கூராக்கிக்கொண்டு மருதாணியைத் தொட்டு மணமகனின் கையில் கொஞ்சம் பலமாக அழுத்தினாள். சுருக்கென்ற வலியில் புன்னகையுடம் பார்த்தான் அவன். “இது போதாது, சஷீவ் கிட்டே ஹேர்பின் கொடுத்து மருதாணியை வைக்கச் சொல்லவா....” காதலன் காதில் சன்னமாகக் கிசுகிசுத்தாள் ஷகிலா. இருவருக்கும் மருதாணியிடுகையில் “ஒரு கூர்க் தம்பதிகளா வாழணும் மக்களே....” என வாழ்த்தி வந்து மீண்டும் உஸ்மானி மதுவைத் தொடர்ந்தார். கையை விரித்து மணமகன் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு கணம் பொனாச்சா இருந்து மறைந்தான்.



தரையில் ஓங்கி வீசப்பட்ட பாட்டில் உடைந்து சிதறி கூடமெங்கும் சிதறல்களாய்க் கீழிறங்கின. உறக்கத்திலிருந்த உஸ்மானி பதறியெழுந்து பார்த்தார். வியர்த்து மூச்சிரைக்க தரையைப் பார்த்துக்கொண்டிருந்தான் பொனாச்சா. கண்ணாடிச் சில்லுகளின்மீது கால்பட்டுவிடாமல் அணைத்து மகனை நாற்காலிக்குள் அழுத்தினார். “கொஞ்சம் சாந்தமாயிரு பொனாச்சா! வளர்ந்த பையனில்லே... அமைதியாயிரு. இப்படியெல்லாம் செய்யலாமா நீ” தரையில் கிடந்த பாதி உடைந்த பாட்டிலை எடுத்து ஆவேசங்கொண்டவனாய் எரிந்து கொண்டிருந்த கணப்படுப்பிற்க்குள் எறிந்தான். உஸ்மானி இறுக்கமாய் அணைத்துக் கொண்டு ஆதரவாய்ப் பேசினார். பேச்சிடையில் குரல் கம்மியது. “இப்படிச் செய்வதையெல்லாம் நிறுத்திவிடு மகனே. சித்ரவதையாயிருக்கு எனக்கு. அவள் மட்டும்தானா பெண். அவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி. இவ்வளவுதான் விஷயம். உன்னை சிதைத்துக்கொள்வதால் என்ன நடந்துவிடப்போகிறது. நான் இன்னும் சாகவில்லையடா பொனாச்சா, அவளைவிடவும் அற்புதமான பெண்ணொருத்தியை உனக்குக் கொண்டு வருவேன். மனசை அலட்டிக் கொள்ளாமல் அவளை மறக்கத்தான் வேணும் நீ.” அலமாரியிலிருந்து ஒரு புதிய பாட்டிலை எடுத்துத் திறந்து டம்ளரின் விளிம்பு வரை ஊற்றி பொனாச்சாவின் அதரத்தில் பதித்தார்.



மாப்பிள்ளை பெண்ணுக்கு கருகமணி கட்டியாயிற்று. இருவரையும் ஒன்றாய் உட்காரவைத்து கழுத்திலிருந்து முழங்கால்களை மறைக்கும் விதமாக பட்டுத்துணியைக் கட்டினார்கள். அருகிலேயே பெரிய பாத்திரத்தில் அரிசி. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே வரிசையமைந்தது. வரிசையில் வருபவர்கள் பாத்திரத்திலிருந்து எடுத்த கொஞ்சம் அரிசியை மணமக்களின் பட்டு விரிப்பிலிட்ட பிறகு அன்பளிப்புகளைக் கொடுத்துச் சென்றனர். உஸ்மானியின் முறை வரும்போது தன் மோதிரத்தைக் கழற்றி மணமகனுக்கு அணிவித்தார். தன் விரலுக்குப் பொருந்தாமல் பெரிதாயிருந்த தங்க மோதிரம் கழன்று விழாமலிருக்க மணமகன் கையை மூடிக்கொண்டான்.



விருந்தில் பன்றியிறைச்சியும் காக்டெயில் மதுவும் பரிமாறப்பட்டன. கூடுதலாக பருப்பு நீரும் கோதுமை ரொட்டியும். எதிர்வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷகிலாவிடம் - மணமகனுக்கு இறைச்சி ஊட்டிவிடச் சொல்லி ஜாடை செய்து உஸ்மானி பலமாகச் சிரித்தார். சிரிப்பின் வேகத்தில் வாயிலிருந்து இறைச்சித் துணுக்குகள் வெளிவந்து விழுந்தன. பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை உடைக்குள் உப்பிப் பருத்திருந்த தன் சிறுநீர்ப்பையை தொட்டுப் பார்க்கச் சொல்லி ஆனந்தப்பட்டுக்கொண்டார். குடித்தவர்கள் போதையிறங்கி சாப்பிட வேண்டுமென்பதற்காக கொண்டுவந்து வைக்கப்பட்ட டிகாக்‌ஷன் டீயிலும் ஒரு குவளை குடித்துவைத்தார் உஸ்மானி.



தகப்பனிடமிருந்து டம்ளரைப் பெற்று ஒரே மூச்சில் காலி செய்து டம்ளரைக் கீழே வைப்பதற்குக் குனிந்தவன் - அப்படியே முழங்கால்களிடையில் முகத்தை மறைத்துக்கொண்டு குலுங்கியழுதான். செய்வதறியாது திகைத்துப் போனார் உஸ்மானி. அவரும் கண்கலங்கி வார்த்தைகளற்று பொனாச்சாவின் அதிரும் முதுகைத் தடவியபடியிருந்தார். இரவுகளில் இதைப்போல ஏதாவது நடந்து கொண்டுதான் இருக்கிறது - ஷகிலாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டதிலிருந்து. ”அவள் உன்னைக் காதலிக்கவில்லையே, நீதானே அவளை விரும்பிக் கொண்டிருந்தாய். நீ அழுகின்ற பாவம் அவளைத் தொட வேண்டாம். போகட்டும் விடு. போகிற இடத்தில் நல்லா இருக்கட்டும்....” ஒரு பாம்பைப்போல சட்டென்று தலை நிமிர்த்திப் பார்த்தான் பொனாச்சா. “இருக்கட்டும். சந்தோஷமா இருக்கட்டும். நான் இதே ஊர்லே இருக்க முடியாது. இருக்கறதை வித்துட்டு நாம எங்கேயாவது போயிடலாம்...” ஒரு துணியைச் சுருட்டி கையில் வைத்துக்கொண்டு தரையில் கிடந்த பாட்டில் சிதறல்களை உஸ்மானி ஒன்று சேர்த்தார்.



“கொஞ்சம் யோசித்துப் பேசுகிறாயா நீ. ஆறு ஏழு தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தைவிட்டு ஒரு பெண்ணுக்காகப் போய்விடமுடியும... என்னைப் போல இல்லாவிட்டாலும் நீ ஒரு கோழையாக மாறாமல் இருக்கணும்.”



“இங்கே யார் இருக்கா உங்களுக்கு. யாருக்கும் நாம தேவைப்படலே. எல்லோருக்கும் பணம் இருந்தா போதும். எம்மேலே நம்பிக்கையிருந்த என்னோட புறப்பட்டு வாங்க. இனிமேலும் நான் இங்கே இருந்தால் பைத்தியம் பிடிச்சிதான் சாக வேண்டியிருக்கும்.”



நொடியில் சினம் கவ்விக்கொள்ள நின்றபடி உஸ்மானி முறைத்தார். சிவப்பேறின விழிகள். “இது உன் பேச்சுதானா பொனாச்சா! பொத்திப் பொத்தி வளர்த்து உன்னை ஒரு பெண் பிள்ளையாக்கிட்டனோன்னு சந்தேகமா இருக்கு. தேவைக்கதிகமா கவலைப்படுறே ஒன்றுமில்லாத காரியத்துக்கெல்லாம். வம்ச கௌரவத்தையும் பொருட்படுத்தாம ஒருத்திக்காக ஓடிப்போயிடலாம்னு சொல்றவன் ‘கூர்க்’கா இருக்க முடியாது. உனக்கு விருப்பமிருந்தா சொல்லு. இந்த இரவே செத்துப் போறேன். நான் செத்தபிறகு நீ எங்கே வேண்டுமானாலும் போ...” பக்கத்திலமர்ந்து மகன் தோளைப் பற்றி மடியில் சாய்த்துக் கொண்டார்.



“இன்னும் குழந்தையாகவே இருக்கிறாயே மகனே. உனக்கு ஏன் பைத்தியம் பிடிக்கணும், ஏன் சாகணும். உனக்காகத்தானே என்னைக் காப்பாத்திட்டு இருக்கேன். மனம் பொறுக்கலைடா எனக்கு, சாகற அளவுக்கா துணிஞ்சிருக்கே. போயிடலாம். எங்கே போகலாம்னு நெனக்கறயோ அங்கே போயிடலாம். உன்னைவிட முக்கியமானது எனக்கு என்ன இருக்கு. போயிட வேண்டியதுதான்... தூங்கு அமைதியா. தூங்கிடு பொனாச்சா. எல்லாம் நல்லபடியாகும்.” ஆஜானுபாகுவான தன் மகனை வெகுநேரம் தட்டிக்கொண்டிருந்துவிட்டு விளக்கை அணைத்தார். ஜன்னலைத் திறந்ததும் குப்பென்று முகத்திலறைந்தது குளிர். தூரத்து மலைமுகடுகளின் விளிம்புகள் லேசாகத் தெரிந்தன. ரேடியோ நிலைய கோபுரத்தின் உச்ச விளக்கு பனியில் மறைந்து மங்கலான செம்புள்ளியாயிருந்தது.



பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட விளக்குகளின் பிரகாசத்திற்கு இருள் சற்றுத் தொலைவே ஒதுங்கிக் கொண்டது. மதுமகிமையில் குளிர் உறைக்கவில்லை யாருக்கும். இடைவிடாத ஆட்டத்தில் போதை விலகியவர்கள் உள்ளே சென்று ஊற்றிக்கொண்டு வந்தார்கள். இதற்காக உள்ளே செல்வது அசௌகரியமாகப் பட்டதால் வெளியே கொண்டு வரப்பட்டது பீப்பாய். விளக்கிலிருந்து தவறி விழுந்த வெட்டுக்கிளியொன்று மதுவிற்குள் தத்தளித்தது. ஐம்பது அடி தொலைவில் மண்டபத்தைப் பார்த்தபடி ஷகிலா நிறுத்தி வைக்கப்பட்டாள். பாதி நிரம்பிய பன்னீர்ப் பானையை தலையில் வைத்துப் பிடித்திருந்தாள். பானைக்குள் ரோஜா இதழ்கள் மிதந்தன.



அவள் பின்னால் தோழி சஷீவ். ஷகிலாவிற்கு எதிர்ப்புறமாய் மூன்றடி தூரத்தில் மணமகனின் தம்பி ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருந்தான். அருகிலேயே அவன் அம்மா, மகனுக்கு ஆட்டக் கிளர்ச்சி குன்றிவிடாதிருக்க சரியான விகிதத்தில் மது கலந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். வேகம் விஞ்சிப்போய் இரண்டொருதரம் ஷகிலாவின் மேல் விழத்தெரியவே ஷகிலாவிற்கு முன்னால் சஷீவ் நின்றுகொண்டாள். மாப்பிள்ளைத் தம்பியின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, ”விடாதே சுகிர்த்! ஒரு அடிகூட விட்டுக்கொடுக்காதே. அவள் உள்ளே நுழைந்துவிட்டால் உன்னையும் உன் அண்ணனையும் பிரித்துவிடுவாள். விடாதே” உரக்கச் சத்தமிட்டார் உஸ்மானி. நேரம் கடந்துகொண்டிருந்தது. ஒரே இடத்தில் - உச்ச வெறியில் களைப்படையாமல் ஆடிக் கொண்டிருந்தான். சில தடவைகள் சஷீவின் மேலே விழுந்தான். மேலே விழுந்தவனை நகைப்புடன் விலக்கி நிற்க வைத்தாள் சஷீவ். சுகிர்த் சீக்கிரம் வீழ்ந்து ஷகிலா உள்ளே போவதற்காக காட்டமான மதுவை பெண் வீட்டார் கொண்டு வந்து கொடுத்தார்கள். சுகிர்த் அதை தட்டிவிட்டு பக்கத்திலிருந்தவனைப் பிடித்து அவனிடத்தில் நிற்க வைத்தான். “இங்கேயே நின்று ஆடிக்கொண்டிரு. வந்துவிடுகிறேன்” என்று சொல்லி அவனுக்குத் தேவையானதை தேவையான கலவையில் பருகி வந்து - இடத்தைப் பெற்றுக்கொண்டு ஆடினான். தலையில் பானைச் சுமையில் நெளிந்தாள் ஷகிலா. சஷீவிடம் கேட்டான் சுகிர்த். “ஒரு முத்தம் தருகிறாயா, இரண்டடி வழிவிடுகிறேன்.”



“இரண்டடி வேண்டாம். பத்தடி விட்டுக் கொடுக்கிறாயா?” சஷீவிடமிருந்து கன்னத்தில் ஒரு முத்தம் பெற்றுக்கொண்டு பின்னால் சென்று ஆடினான். பெண்ணும் தோழியும் பத்தடி முன்னேறினார்கள். கிண்டலும் சிரிப்புமாய் உஸ்மானி இரைந்தார். “அடே சுகிர்த் மடையா ஒரு முத்தத்துக்குப் பத்தடி தூரமா. இது அநியாயம்...”



“என்னையும் அண்ணனையும் பிரித்து விடுவாயா நீ? மாட்டேன் என்று சொல், ஐந்தடி வழிவிடுகிறேன்....” ஷகிலா பத்தடி வேண்டுமென்றாள்.



சுகிர்த் ஆட்டத்திலேயே தலையாட்டி மறுத்தான்.



“முடியாது ஐந்தடிதான்.”



“சரி பிரித்துவிடமாட்டேன் உங்களை” என்று ஷகிலா ஒத்துக் கொள்ளவும், சுகிர்த் ஐந்தடி பின்னகர்ந்தான். சஷீவ், அவள் கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க அனுமதித்ததற்காகவும் - அவன் அழகைப் புகழ்ந்ததற்காகவும் மேலும் சில அடிகள் சலுகை கொடுத்தான்.



மண்டபத்திற்குச் சுமார் இருபதடி தூரம் நெருங்கிய பிறகு எந்த சமரசத்திற்கும் கட்டுப்படாமல் ஆட்டத்தில் தீவிரமானான். அவனாக மனமிரங்கி வழிகொடுத்தால்தான் ஆயிற்று என்ற நிலையில் - அசைவு புலப்படாமல் காற்பெருவிரலால் ஷகிலா ரகஸியமாக முன்வந்து கொண்டிருந்தாள். சற்றுத் தள்ளி கரகோஷங்கள் நடுவில் ஆடிக் கொண்டிருந்த மாப்பிள்ளை அங்கிருந்தபடியே கூச்சலிட்டான். “நகர்கிறாள் பார் சுகிர்த்! அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடாதே!” பறையோசையால் அவன் சொல்வது சரியாகக் கேட்காமல், அண்ணன் விட்டுக் கொடுக்கச் சொல்கிறான் எனக்கருதிய சுகிர்த் “முடியாது!” என்றலறினான். சுகிர்த்தை விரைவில் படுக்க வைக்க பெண்வீட்டாரும் - இன்னும் நீண்ட நேரம் பெண்ணைத் தடுத்து வைப்பதற்காக மாப்பிள்ளை வீட்டாரும் அவரவர் வழிகளில் முயற்சித்துக் கொண்டிருந்தனர்.



சாக்கடையில் விழுந்துவிட்ட மாப்பிள்ளையின் நண்பன் ஒருவனுக்கு போதை தெளிவதற்கான சிச்ருஷைகளைச் செய்துவிட்டு சிறுநீர்ப்பை அசைய நடந்துவந்த உஸ்மானி “போகட்டும் விடு. எவ்வளவு நேரம்தான் தலையில் பானையுடன் நிற்பாள் பாவம்” என்றார். மேலும் சக்தியேற ஆடிக்கொண்டிருப்பவனின் காதுகளில் அவர் சொன்னது விழவில்லை. அவன் அம்மாவிடம் அவனுக்கு மிகப் பிடித்த மதுவின் பெயரைச் சொல்லி அதைக் கொண்டு வரும்படி ஏவினான். சென்று கொண்டிருக்கும் அவளுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காக அவனறியாமல் பக்கவாட்டில் ஓரடி விலகி “கிளாஸில் ஊற்ற வேண்டாம் - பாட்டிலைத் திறந்து அப்படியே எடுத்து வா” என்று சொல்லி முடிப்பதற்குள் பெண்ணும் தோழியும் அவனைக் கடந்து பாய்ச்சலாய் உள்ளே ஓடினார்கள்.



அமர்ந்தபடியே பொனாச்சா வெளிக்கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்த தந்தையை வெறித்துப் பார்த்தான். ஸ்வெட்டர் கைகளிலிருந்து கையை எடுத்து நெஞ்சோடு சேர்த்திருந்தான். தோளின் இருபுறமும் ஸ்வெட்டரின் நீள் கைகள் கூடாய்த் தொங்கி அசைந்தன.



“நீங்கள் போகத்தான் வேண்டுமா?” அந்தப் பலகீனமான கேள்வி பதில் கொண்டு வரவில்லை. ஸ்வெட்டருக்குள் கைகளைத் திணித்துக் கொண்டு உள்ளங்கைகளைத் தேய்த்துக் கன்னத்தில் வைத்துக்கொண்டான். விழி சிவந்து வெளுத்திருந்தது முகம். உதட்டில் தோல் வெடிப்புகளை நாவால் தடவிக் கொண்டான்.



“அந்தக் கல்யாணத்திற்கு நீங்கள் போக வேண்டாம். அது உங்கள் மகனுக்கு நடக்க வேண்டிய கல்யாணம்” மரபான கருப்பு உடை அணிந்து தோற்சங்கிலியைப் பொருத்திக் கொண்டிருந்தார் உஸ்மானி.



“உங்களுக்கு நான் வேண்டுமென்றால் போக வேண்டாம். உங்கள் தங்கை மகள் திருமணம்தான் முக்கியமென்றால் தாராளமாகப் போய்க் கொள்ளலாம்” உஸ்மானி அந்த தீர்க்கமான எச்சரிக்கைக்காகப் புன்னகைத்தார். கண்ணாடிமுன் நின்று ஏதாவது விட்டுப் போயிருக்கிறதாவென சரிபார்த்துக் கொண்டார். நீட்டிய சுட்டுவிரல் கோபத்தில் நடுங்க கண்ணாடிக்குள்ளிருந்து மகன் பேசினான், “நீங்கள் திரும்பி வரும்போது நான் இங்கே இருக்கமாட்டேன்...” கடைசியாக தன் ரப்பர் பையைத் தேடுவதில் முனைந்தார். விழாக்காலங்களில் அதிகம் குடிக்க நேரும்போது அது இல்லாமல் முடிவதில்லை. மேசை இழுப்பறையிலிருந்ததை உடைக்குள் வைத்துக்கொண்டு - முதுகின் பின்னே துளைக்கும் பார்வைக்கு எதிர்வினை எதுவும் காட்டாமல் வாசலை நோக்கி நடந்தார். கம்பீரமாயிருந்தது நடை.



உஸ்மானி, முடிந்தவரையில் குடித்தும் - நடனமாடியும் அயர்ந்து நின்றிருந்தார். தள்ளாட்டத்தை மறைப்பது சிரமமாயிருந்தது. இளவட்டங்களெல்லாம் இன்னும் ஆடிக்கொண்டுதானிருந்தனர். எப்படி மிதமாகப் பருகி போதையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் பெண்கள் தேர்ந்திருந்தனர். சரிந்த ஆண்களைச் சுட்டிக்காட்டி பெண்கள் பேசிச் சிரித்தபோது - விழுந்தவர்களின் மனைவிகள் வெட்கினார்கள்.



தலைவெட்டப்பட்ட வாழைமரங்கள் போதுமான இடைவெளியில் வரிசையாக ஊன்றப்பட்டிருந்தன. அன்றுதான் வெட்டப்பட்ட செழுமையான மரங்கள். அதன் வட்டமான மேற்தளத்தில் குச்சி செருகி சுற்றப்பட்டிருந்தது பூச்சரம். மரங்களைச் சுற்றிலும் நீர் தெளித்து தரை துப்புரவாக்கப்பட்டிருந்தது. மரங்களைச் சூழ்ந்தது கூட்டம். மாப்பிள்ளையின் தாய்மாமன் முறைக்கு ஒருவர் வந்தார். நீளமான வாளொன்று கொடுக்கப்படவும் - வாளின் முனையால் தாம் வெட்டுவதற்குரிய மரங்களின் உச்சியிலுள்ள பூச்சரத்தை அகற்றிப்போட்டார். விளிம்பின் கூர்மையில் ஒளிமிளிரும் வாள் மந்திர உச்சாடனங்களுடன் பின்னோக்கி உயர்ந்தது. பிறகு அரைவட்டமாய்ச் சுழன்று மரத்தைத் துண்டித்தது. பறையோசையும் உணர்ச்சிக் கூவலும் கீழே - பள்ளத்தாக்கின் வீடுகளையும் தொட்டெழுப்பின. ஒவ்வொரு மரமும் வெட்டப்படும்போது மேல்ஸ்தாயிக்குத் தாவியது பேரோசை. மரங்களின் அருகிலேயே நின்று - தடையில்லாமல் வெட்டுண்டு விழ வேண்டுமென மணமகன் பார்த்திருந்தான். மாப்பிள்ளை தரப்பு மரங்கள் வெட்டுப்பட்டு முடிவதற்குக் காத்திருந்து வாளௌ உஸ்மானி பெற்றுக் கொண்டார் பெண்ணுக்குத் தாய்மாமனாய்.



இரண்டு கைகளாலும் வாளை உயர்த்தி மந்திரம் சொல்வதற்கு அதிக நேரமானது. உச்சிப்பூச்சரத்தை நீக்கிய பிறகு அவரது வாள்வீச்சில் துண்டாகி விழுந்தது மரம். அவரது வேக அசைவில் அதிர்ந்தாடும் சிறுநீர்ப்பந்து எங்கும் சிரிப்பைத் தூவியது. அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஆண்களும் பெண்அளும் சிரித்தார்கள். உடைத்துக்கொண்டு பீறிட்ட சிரிப்பால் பறையடிப்பவர்களாலும் இசைக்க முடியவில்லை. குழலூதுபவன் குழலைத் தரையில் ஊன்றி அதன்மேல் நெற்றியை முட்டுக்கொடுத்து மறைவாகச் சிரித்தான். பினு தர்மசங்கடமாக அண்ணனையே பார்த்துக்கொண்டிருந்தாள். உஸ்மானியும் சிரித்துக்கொண்டுதான் மரம் வெட்டினார். ஒவ்வொரு மரத்தையும் வெட்டி நிமிரும்போது மணமகன் நிற்கும் இடத்தை கவனித்துக் கொண்டார். இன்னும் ஒரே ஒரு மரம். இதோடு திருமணம் முடிந்தது. மணமகன் நிற்கும் பக்கத்தில் வாகாக தள்ளி நின்றுகொண்டார். முகத்தில் சிரிப்பில்லை. போதையின் அலைக்கழிப்பில்லை. சர்வ கவனமாய் கூர்ந்த விழிகளில் வேட்டைக்களை. வாளை பக்கவாட்டில் ஓங்கினார் உஸ்மானி. சுவாசம் திணறியது. கடைசி மரமும் சாய்ந்தவுடன் தீவிர இசை முழக்கத்திற்கு சமிக்ஞை கொடுப்பதற்காக ஒரு கையை உயரே தூக்கியிருந்தான் மணமகன். இறுதி முறையாக வீசப்பட்ட வாள் மின்னல் தெறிப்பாய் வந்து மணமகனின் அடிவயிற்றில் ஆழப்பதிந்து நின்றதை, புலன் குவியப் பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.



Pramil.

வண்ணத்துப்பூச்சியும் கடலும்


சமுத்திரக் கரையின்

பூந்தோட்டத்து மலர்களிலே

தேன்குடிக்க அலைந்தது ஒரு

வண்ணத்துப் பூச்சி...

வேளை சரிய

சிறகின் திசைமீறி

காற்றும் புரண்டோட

கரையோர மலர்களை நீத்து

கடல்நோக்கிப் பறந்து

நாளிரவு பாராமல்

ஓயாது மலர்கின்ற

எல்லையற்ற பூ ஒன்றில்

ஓய்ந்து அமர்ந்தது.

முதல் கணம்

உவர்த்த சமுத்திரம்

தேனாய் இனிக்கிறது.







******



(உன்) பெயர்

சீர்குலைந்த சொல்லொன்று

தன் தலையைத்

தானே

விழுங்கத் தேடி

என்னுள் நுழைந்தது.

துடித்துத் திமிறி

தன்மீதிறங்கும் இப்

பெயரின் முத்தங்களை

உதறி உதறி

அழுதது இதயம்.

பெயர் பின் வாங்கிற்று.

“அப்பாடா“ என்று

அண்ணாந்தேன்...

சந்திர கோளத்தில் மோதியது

எதிரொலிக்கிறது.

இன்று, இடையறாத உன்பெயர்

நிலவிலிருந்திறங்கி

என்மீது சொரியும் ஓர்

ரத்தப் பெருக்கு.



****



நன்றி: அரியவை



புதன், 17 ஆகஸ்ட், 2011

Aadukalam.

ஆடுகளம் : துரோகத்தின் வினைத்தொகை


Posted by நர்சிம் Thursday, January 20, 2011 comments (32) எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டாலும் சில படங்களைப் பார்க்கும்பொழுது மட்டும்தான் அதுகுறித்து எழுதத் தோன்றுகிறது. ஆடுகளம். துரோகம் ஆடியது,ஆடுகின்றது,ஆடும் என்ற வினைத்தொகையின் பண்பு, உலகம் இருக்கும் வரை. ஒருவரின் அன்பில்,அவர் நம்மீது கொண்டிருக்கும் அக்கறையில் திக்கித்திணறி நாம் மூர்ச்சையாகிப் போகும்பொழுது முதுகில் விழும் குத்து...ஆடுகளம்.



சேவல் சண்டையைப் பற்றிய வரலாற்று குறிப்போடு டைட்டில் தொடங்குகிறது. பொல்லாதவன் பாணியில் முதலில் க்ளைமேக்ஸ்..அதிலிருந்து பின்னோக்கி என வெற்றி ஃபார்முலாவை மீண்டும் கையாண்டிருக்கிறார்,வெற்றி-மாறன்.



கதையைப் பற்றிப் பேசுவதை விட அதற்கும் அப்பால் பேச நிறைய இருக்கிறது இப்படத்தில்.



சினிமாவில் வில்லன், நாயகன், குணச்சித்திரம் என அவரவர் பாத்திரம் உணர்ந்து எப்பொழுதுமே நல்லவனாகவும் எப்பொழுதுமே கெட்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுவந்ததில் இருந்து முற்றும் மாற்றாக, அன்றாடத்தில் எப்படி அவ்வந்த சூழலுக்கு ஏற்ப வாழ்கிறோம் என்பதை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தி இருப்பதே இப்படத்தின் ஆகச் சிறப்பு.



கிஷோர்/துரை பாத்திரம். கொஞ்சம் பணமும் பார் வைக்குமளவிற்கு செல்வாக்கும் இருக்கும் ஒரு மதுரைக்காரன் எப்படி இருப்பானோ அப்படியே இப்பாத்திரம். மிகக் கூர்ந்து கவனித்ததில் இந்தப் படத்தின் அற்புதமானப் பாத்திரம் என்றால் அது துரைதான். ஒரு இடத்தில் கூட இயல்பிற்கு மீறியச் செய்கையைச் செய்யவில்லை.



எதிர் அணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தன்னை ஸ்டேஷனில் இருந்து விடுவிக்க உதவியதும் மறுநாள் அவர் வீட்டிற்கே சென்று நன்றி தெரிவிப்பது.



தன் கூட்டாளி அயூப்பை அதே இன்ஸ்ப்பெக்டர் கொன்றது தெரிந்து, தண்ணியடித்துவிட்டு, ‘இப்பிடி எல்லாத்தையும் செஞ்சுப்புட்டு ஒண்ணுமே தெரியாதமாதிரி நிக்கிறாங்களே’ என அவரை அடிக்கப்போவது.



குருவின் பேச்சைக் கேட்காத தனுஷின் முதல்சுற்று போட்டிக்கு, ‘விடுண்ணே சின்னப்பய,தெரியாம பண்ணிட்டான்’ என ஆதரிப்பது. மீண்டும் திமிறில் தனுஷ் களம் இறங்கும்பொழுது, ‘என்னடா ஓவராப் போற’ என தனுஷை எதிர்ப்பது.



மீண்டும் தனுஷ்க்கு வாழ்க்கையில் செட்டில் ஆகும் வாய்ப்பு வரும் எனத் தெரிந்ததும், தனுஷை ஆதரித்து, மூன்று லட்சம் வாங்கித் தருவது.



குரு அளவிற்கு மீறி கோவப்பட்டதும், ‘எனக்கென்னமோ நீ பண்றது தப்புன்னு தோணுதுண்ணே’ என குருவிடம் நியாயத்தைப் பேசுவது.



கடைசிவரை துரைக் கதாப்பாத்திரம் எந்த இடத்திலும் பிசகவே இல்லை.



பேட்டைக்காரன் என்ற பெரியசாமி : நான் சில மாதங்களுக்கு முன்னர் ‘அம்பத்தாறு’ என்ற கதையை எழுதி இருந்தேன். அந்த அம்பத்தாறு பாத்திரத்தின் குணாதிசயம், அடிப்படையில் நல்லவன், ஆனால் எவராவது ஊரில் நல்லபெயர் வாங்கினால் பொறுக்காது, தனக்கு யாராவது துரோகம் செய்வதாகப் பட்டால், நேரடியாக மோதாமல் கெடுதல் செய்வது.



இந்த குணாதிசயத்தையும் தாண்டிய படைப்பு பேட்டைக்காரன். அடிப்படையில் திறமையான, நல்லவர் தன் சிஷ்யன் தன்னை மீறும் பொழுது ஏற்படும் மனஉளைச்சலை எப்படி துரோகமாக மாற்றுகிறார் என்பதே.



இவர் பேச்சை மீறி தனுஷ் களத்தில் இறங்கும்பொழுது, கோயில் முன்னர் நின்று கொண்டிருப்பார் பேட்டைக்காரன். ‘அண்ணே நம்ம சேவ ஜமீனாகிப்போகும் போலண்ணே, தோத்துறும்’ என ஒருவன் வந்து சொன்னதும், லேசான திருப்தியோடு கடவுளைப் பார்க்கும்பொழுது அவரின் குரூரம் தெரிகிறது. ஆனாலும் தனுஷ் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றதும், தன் மானம் காப்பாற்றப்பட்டது போன்ற திருப்தியும் அடுத்த முகபாவனையில்.



‘அதிர்ஷ்டம் அவன செயிக்க வச்சுருச்சுடா’ என மீசை மண் வசனத்தில் சமாளிப்பது.



‘இல்லண்னே, அன்னிக்கு மாதிரி ஏதாச்சும் மாத்தி ஆகிப்போச்சுண்டா’ என சேவல் வாங்க வருபவன், இவரின் பேச்சை மீறி வேறு சேவல் கேட்கும்பொழுது, மனம் முழுதும் வன்மம் குடிகொள்வதை டாப் ஆங்கிளில் பேட்டைக்காரனின் முதுகில் காட்டி இருப்பது.



இந்தக் கதாப்பாத்திரத்தின் மிகச்சிறந்த டீட்டெய்லிங், கடைசியில் எல்லா உண்மையும் தெரிந்த தனுஷை குத்தக் கத்தியைக் கையில் எடுக்கும் பேட்டைக்காரன், தனுஷ் சொல்லும், ‘வெளில தெரிஞ்சா இம்புட்டு நாளா உனக்கு இருந்த பேரு என்னண்ணே ஆகும்,’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும், கத்தியின் முனை திசை மாறும். அவ்வளவே. தன்மீது இருந்த பிம்பம் சிதைபடும்பொழுது ஒருவன் என்ன செய்வானோ அதைச் செய்துகொள்ளும் அற்புத பத்திரப்படைப்பு பேட்டைக்காரன்.



தனுஷ்/கருப்பு : I AM LOVE YOU என்ற மதுரை திருப்/தென்பறங்குன்ற கைலி இளைஞன். எல்லாக் கோவத்தையும் தாயிடம் காட்டும் சராசரியாக, டைவாவைக் கரெக்ட்பண்ணும் காதலனாக, நல்லது செய்யும் கிஷோரை அண்ணண் நிலையில் வைக்கும் நண்பனாக, துரோகம் தெரியவந்ததும் வெடித்துச் சிதறும் சிஷ்யனாக...



மிகக் கச்சிதமாய் செய்திருக்கிறார் தனுஷ். மதுரை பாஷை கொஞ்சம் தடுமாறினாலும், ஒன்றச் செய்துவிடுகிறது. தனுஷிடம் இருக்கும் நடிப்புத் திறமையே இவரை இந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் படம் இது. புதுப்பேட்டையில் ஒரு பெரிய கூட்டமே அடித்துத் துவைத்தும், முகமெல்லாம் ரத்தமாக, எழுந்து நிற்கும்பொழுது ஒரு சிங்கத்தின் பார்வையை ரீரிக்கார்டிங்கோடு செல்வராகவன் கொண்டு வந்திருப்பார். அந்தக் காட்சி தனுஷின் மிகச்சிறந்த நடிப்பிற்கு ஒரு உதாரணம். அதைப்போல இந்தப் படத்தில் நிறைய இடங்களில்.



அயூப் : ஃபாரின் சரக்கை ஆசையாக, இதை திருப்பி கேட்க மாட்டியே என வெள்ளந்தியாக கேட்பதாகட்டும், தன்னை விலை பேசுவது தெரிந்த அடுத்த நிமிடத்தில், “என்னடா வேணும் உங்களுக்கு” என அதே பாட்டிலை தரையில் எறிந்து விட்டு, நாலு கிளாஸ் சாராயத்துக்கே இம்புட்டு கேட்குறீங்களேடா, நாப்பது வருச பழக்கம்னா எம்புட்டு இருக்கும்’ என்று நிற்பது கம்பீரம்.



ஊளை : மதுரையில், கிட்டத்தட்ட எல்லா கேங்கிலும் ஒரு ஊளை கேரக்டர் உண்டு. அவ்வளவு தத்ரூபமாக செய்திருக்கிறார். ‘எந்தத் தெருடா ஏழுமணிக்கு வெறிச்சோடி இருக்கு, தப்பாத் தெரிதே மாப்ள’ இந்த ஒரு வசனம் போதும். அவ்வளவு கச்சிதமான ஏற்ற இறக்கம். படம் முழுதும் வரும் இப்பாத்திரம் தனுஷ் என்ற பாத்திரம் எது செய்தாலும் அதற்கு உடன்பட்டு எப்பொழுதும் உடன் இருக்கும் நண்பன் பாத்திரம். காதலியைத் தேடிப்போகும் பொழுது உடன் வந்து கம்பெனி கொடுப்பதில் துவங்கி இறுதியில் வழியனுப்பி வைக்கும் வரை இருக்கும் மதுரை நட்பை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கும் இந்தப் பாத்திரமும் கிஷோருக்கு அடுத்தபடியாக அமைந்திருக்கும் அற்புதம்.



தவிர, சில சுவாரஸ்யங்கள் :



1.சேவல் சண்டையின் நுட்பங்களை உள்வாங்கி அற்புதமாக திரையில் கொண்டு வந்திருப்பது. குறிப்பாக இருவாசியின் பொழுது ஜெயிப்பது யார் என சீட்டின் நுனிக்கு நம்மை இட்டுச் சென்றது.



2. மதுரை என்றாலே அங்கிட்டு இங்கிட்டு அறுவா என்பது மட்டும் அல்ல, அதையும் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை காட்டிய விதம்.



3. சேவல் சண்டை நடக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஃப்ளெக்ஸ் பேனரில், கிஷோர் ராஜா உடை அணிந்து நிற்பார். பேட்டைக்காரன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். மதுரையின் அன்றாட காட்சிகள் இவை. இதில் துவங்கி ஒவ்வொரு காட்சியில் நுட்பங்களை காட்சிப் படுத்திய விதம்.



4. ஒவ்வொரு பாத்திரத்தின் தேர்வும், அவர்கள் ஒரு இடத்தில் கூட தேவையில்லாமல் கையை என்ன பண்ணுவது என்று தெரியாமல் நிற்பதோ, மற்றவர் வசனம் பேசும்பொழுது அடுத்த வசனத்திற்கு ரெடியாக துடித்துக்கொண்டு நிற்பதோ இல்லாமல், வெகு இயல்பாக வந்து போவது.



5. வாழ்வினூடாக பாடல் இருப்பதை அப்படியே வசனங்களுக்கு ஊடாக சேர்த்து இருப்பது..யாத்தேப் பாடலின் பொழுது தனுஷின் குதூகலம் நம்மையும் தொற்றச் செய்துவிடும் கேமிரா/டான்ஸ்/இசை.



6. இரண்டாம் பாதியில், ஒரு இடத்தில் கூட நாம் நினைப்பது நடக்காதது போல அமைத்திருக்கும் திரைக்கதை. இன்ஸ்பெக்டர் மொட்டை அடித்ததும் அறுவா பறக்கும் என்று எதிர்பார்த்தால் ..இல்லை. இதே நிலம உனக்கும் வரும்ணே..என தனுஷ் கிஷோரைப் பார்த்து சொல்லும் பொழுது கிஷோரின் நிலை அப்படி ஆவது இல்லை, காதலி இனி அவ்வளவுதான் எனில் அவ்வளவு இல்லை என மிக இயல்பாய் சம்பவங்களைக் கடந்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.



7. ‘என்கிட்டயே உன்னத் தப்பாச் சொல்றாரு’ என காதலியின் நம்பிக்கை.இந்த வசனம் வந்ததும் கைத்தட்டல் எழுகிறது அரங்கில். சாதாரண வார்த்தைகளில் வாழ்வைக் காட்டுவதே வசனம். விக்ரம் சுகுமாரன் & வெற்றி மாறன் இருவரின் வசனங்கள் இயல்பான உரையாடல்களாக அற்புதமாய் இருக்கிறது.



8. மதுரை என்றாலே இரவு. அதை அற்புதமாய் பாடலில் கொண்டு வந்திருக்கும் நேர்த்தி.



9. ராதாரவின் வெகுநேர்த்தியான பின்குரல்.



10. மீனாள் கதாப்பாத்திரம்.



நன்றி வெற்றிமாறன்.



Labels: சினிமா விமர்சனம்