செவ்வாய், 5 ஜூலை, 2011

Kal maram..!

My Photoகல்லாகிப் போன மரங்கள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

ஜோசப் இருதயராஜ் என் பள்ளியின் ஓவிய ஆசிரியர். பள்ளியோ அல்லது அவரது இல்ல உறுப்பினர்களோ அவரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. அதைப்பற்றிய கவலையோ, அக்கறையோ இல்லாத ஒரு அபூர்வ மனிதர். தன்பால் அளப்பறிய நம்பிக்கையும், பிறர் பால் சிறிதளவேனும் குரோதமும் இல்லாத பிறவி.மிகச்சிறந்த தைல ஓவியர். திரைச்சீலைகளை வரைவதில் வல்லவர். அவரின் அந்தரங்க சிஷ்யனான எனக்கு,அவரின் அபரிமிதமான திறமைகளைக் கண்டு சற்று பொறாமை கூட உண்டு. பள்ளி மதிக்காவிட்டாலும் ,என் தலைமை ஆசிரியர் ஃபாதர் மத்தாய் அவர்கள் மிகுந்த அன்பு பாராட்டினார். அவரது அறையை அழகுபடுத்தும் உரிமை இருதயராஜுக்கு மட்டுமே உண்டு. இவரது இல்லத்தில் மேல் மாடி அறை ,இவருக்கென ஒதுக்கப்பட்டது. அங்கு நானும், அவரும் ஓவியங்களுமாக இருப்போம். நிறைய தத்துவார்த்த கருத்துக்களைக் கூறுவார். நல்ல கலைஞனுக்கு பார்க்கும் இடமெல்லாம் பிறிதொரு பிம்பம் தெரிய வேண்டும் ,அது கல், மண், மரம் என எதுவாகவும் இருக்கட்டும் என்பார்.அந்த வழியிலேயே பல்வேறு ரூபங்கள், நிறங்கள், தன்மைகள் கொண்ட பாறைகள் அவர் அறையை அலங்கரித்தன. வெட்டிப்போட்ட மரத்துண்டங்களும் ,குச்சிகளும் அவர் கைபட்டு சற்று மாறுதலுக்குப் பின் பல்வேறு உருவங்களை சுமப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன். பாறைகளைக் குடைந்து அதில் கள்ளிகள் வளர்ப்பார். பல்வேறு நிற மண்களைக் குடுவைகளில் நிரப்பி அழகு பார்ப்பார்.இவ்வாறான குணம், அவரது குடும்பத்தினரை வெறுப்பில் ஆழ்த்தியது.அவர்களின் கோப இலக்காக நான் மாறிப்போனேன். இயற்கையை, இயற்கையாய் நேசிப்பதே ஒரு கலைஞனின் உன்னத நிலை என்ற அவரது கருத்துக்களெல்லாம் அப்போது விளங்கவில்லை. என் மனதுள்ளும், பல்வேறு வடிவ பாறைத்துண்டங்கள் மேல் காதல் மெல்லமெல்ல வரத்துவங்கியது. அதை ஊக்குவிப்பதில் பெருமுனைப்பு காட்டினார். இன்றும் குறையாத எண்ணமாய் உள்ளது. ஒரு மாலைப்பொழுதில், ஓவியம் வரைந்த நிலையிலேயே, இறந்து போனார். என்னைத் தவிர அவ்விடத்தில் யாருமே இல்லை. மாபெரும் கலைஞன், இவ்வுலகத்தால் அவமதிக்கப்பட்டும், அலைக்கழிக்கப்பட்டும் இறந்து போனார். காலடிச்சுவடுகள் அழுந்தப்பதிந்த என் இதயம். இன்றும் பாறைகளைக் கவனிக்கும் போதெல்லாம் அவரை நினைக்கத் தவறுவதில்லை.
பெட்ரி ஃபைடு என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மரங்கள் கல்லாகிப் போதல், அபூர்வ இயற்கை நிகழ்வின் ஆதாரமாகும். படிமங்களின் சிறப்புவகை கல்மரங்கள் என்கின்றனர் அகழ்வாராய்ச்சி மற்றும் புவியியல் தொடர்பான ஆய்வறிஞர்கள். சிலிகேட், குவார்ட்ஸ் போன்ற தாதுப்பொருட்கள், இயற்கையிலேயே மரத்திலிருக்கும் தனிமங்களை அகற்றும்போது நடக்கும் வினையே மரங்கள் கல்லாகிப் போதல். இதை அறிவியல் ,பர்மினரலைசேஷன் என்கிறது. இவ்வகையான நிகழ்வுகள் பூமிக்கடியில் மிக நீண்ட நாட்களாகப் புதையுண்டிருக்கும் மரங்களிலேயே இருக்கும். நீரினாலோ அல்லது பிற இயற்கை நகர்த்தலினாலோ இவ்வகையான புதையுறுதல் நடைபெறுகிறது. அப்போது ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மரங்களை மக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடும். இது வேதிவினையின் முதல்படி. இரண்டாவதாக ,தாதுப்பொருட்கள் அதிகம் கலந்த நீரானது, மழையின் மூலம் பாய்ச்சப்படும்போது, மரத்தில் உள்ள செல்கள் மற்றும் அதிலுள்ள பிற தனிமங்கள் படிப்படியாக அகன்று மரத்தைக் கல்லாக்கும் வினைக்குத் தள்ளுகிறது. குறைந்தது 100 வருடங்கள், வேதிவினைக்கு உட்பட்ட மரங்களே கல்லாகின்றன. குறிப்பாக மிக முக்கியமாக அவ்வாறான நிகழ்வுகளுக்கு மாங்கனீசு, இரும்பு, மற்றும் தாமிரம் கலந்த சகதி நீர் தேவைப்படும். இந்த தாது நீரே மரப்படிமங்களுக்கு வண்ணத்தை அளிக்கிறது. சுத்தமான குவார்ட்ஸ் கலக்கும்போது மஞ்சள், சிவப்பு வண்ணத்தையும், கார்பன் கலக்கும்போது கறுப்பு நிறமும், கோபால் பச்சை, நீல நிறத்தையும், இரும்பு ஆக்ஸைடு ,சிவப்பு, பழுத்த மஞ்சள் நிறத்தையும் தரும். இந்தியாவில்,தமிழ்நாட்டில் திருவக்கரை கிராமத்தில் மரப்படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவையே மிகச்சிறந்த படிமங்களாக கருதப்படுகிறது. இங்கு 247 ஏக்கர் பரப்பளவில் படிமங்கள் சிதறிக்கிடக்கின்றன. ஆனால் மிகச்சிறிய பரப்பளவே மக்கள் பார்வைக்கு உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ,சென்னை --திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்குக் கிழக்கே அமைந்துள்ளது சாத்தனூர் கிராமம். நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் இந்தியப் புவியியல் துறையால் பாதுகாக்கப்படும் கல் மரப்பூங்கா நம்மை ஆச்சரியமுற வைக்கிறது. இதற்கான அழைப்பு போர்டுகள், சாலையின் இடவலங்களில் அமையப்பெற்றுள்ளது. 12 கோடி ஆண்டுகளுக்கு முன் சாத்தனூருக்கு மேற்கே அன்று கடல் மட்டம் 8 முதல் 10 கி.மீ. தொலைவில்தான் இருந்ததாம். இதைப் புவியியல், கிரிடேஷஸ் காலம் என அழைக்கிறது. அக்காலத்தில், கடல் பிராணிகள் அதிகம் வாழ்ந்ததாகவும் ,இறந்த அவைகளின் உடல்கள் கடல் அலையாலும், பிற ஆறுகளில் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கால் ,மணல் ,களிமண் இவற்றுடன் அடித்துவரப்பட்டு , கடலோரக் கிராமங்கள், கரையோர மரங்கள் அதனுடன் மூடப்பட்டதாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் இன்று மிக நீண்ட உயரம் கொண்ட இக்கல்மரம், 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி பகுதி பாறையிடுக்குகளில் சிக்கி அமிழ்ந்து போயிருக்கலாம்.
ஆங்கியோஸ்பிரம்ஸ் என்றழைக்கப்படும் பூக்கள் பூக்காத தாவரயினம், பூக்கள் பூக்காத காலத்தில் தோன்றிய கோனிபரஸ் வகைச் செடிகளிலிருந்து பரிணாம மாற்றம் அடைந்தது. இங்கு காணப்படும் நீண்ட மரம் இவ்வாறான கோனிபரஸ் வகையைச் சேர்ந்தது என்கிறது தகவல்பலகை. இம்மரம் 10 மீ. நீளம் கொண்டது. இங்கு கட்டப்பட்டுள்ள அறையில் பல சிதிலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 1940ல் இக்கல்மரங்களின் இருப்பை இந்திய புவியியல் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணன் கண்டுபிடித்தார். இன்றும் இக்கல்மரங்கள் போதுமான பாதுகாப்பின்றி இருக்கிறது. திறந்த வெளியில், மேற்கூரையின்றி உள்ளதால், மழை வெயில், போன்றவைகளால் பாதிக்கப்பட்டு சிதைவுண்டு அழிந்து போகும் அபாயம் உள்ளது. தவிர மூங்கில், காட்டு கருவேலம், வேம்பு போன்ற மரங்கள் அவ்வளாகத்தில் நிறைந்து காணப்படுகிறது. இவைகளின் வேர் ஊடுருவலாலும் இவை பிளவுண்டு சிதைவுறலாம். அங்கே வசிக்கும் மக்கள் மத்தியில், இதன் பெருமை குறித்தோ அல்லது அது தொடர்பான விழிப்புணர்வோ காணப்படவில்லை.
உலகில் சில இடங்களில் கடல் மட்டம் திடீரென உயர்வதால் ,அருகிலுள்ள வனங்கள் மூழ்கடிக்கப்பட்ட ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இங்கிலாந்தில் இவ்வாறு மூழ்கடிக்கப்பட்டு படிமமாகிப் போன கல்வனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிலும் இதுபோன்ற வனத்தைக் கண்டறிந்துள்ளனர்.மரப்படிமங்கள் குறித்த ஆய்வு பேலே ஆக்ஸிலாலஜி என பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. இது மரம் தவிர்த்த உயிரினப் படிமங்கள் ,பிற படிமங்கள் குறித்த ஆய்வுக்கும் நம்மை இட்டுச் செல்லும். எல்லா மரங்களும், இவ்வாறு முங்கிப்போவதால் கல்லாகிப் போய்விடும் என்ற கருத்தியலுக்கு வருவது தவறு. அவ்வாறு நிகழாமல், அவை மண்ணோடு மக்கி கரைந்து போவதும் உண்டு. அதனால் இவ்வாறு கல்லாகிப் போன மரங்களை பெட்ரி ஃபைடு என்ற ஆங்கில வார்த்தையின் துணையோடு அழைக்கிறார்கள். இது கிரேக்க மொழியில் இருந்து தருவிக்கப்பட்ட வார்த்தை. கல் என்ற அர்த்தம் தொனிக்கும் இவ்வார்த்தை கல்லாகிப் போன மரங்கள் குறித்த ஆய்வில் அதிக உபயோகத்திலுள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகள் செயற்கையாகத் தயாரிக்கபட்ட கல் மரங்களை விற்பனை செய்து வருகின்றன. அழகு, ஆர்வம், அந்தஸ்து கருதி, பல டாலர் செலவழித்து இதை வாங்கிச் செல்கின்றனர். சிறிய பைன் மரத்துண்டுகளை அமிலத்தில் 2 நாட்கள் மூழ்க வைக்கிறார்கள். பின் சிலிகன் திரவத்தில் மீண்டும் 2 நாட்கள் மூழ்க வைத்து ஆர்கன் வாயு சூழ்ந்த அறையில் 1400 சென்டிகிரேட் வெப்பத்தில் பதப்படுத்துகின்றனர். இந்நிகழ்வு 2 மணி நேரம் நடைபெறும் இதற்குப்பிறகு அம்மரத்துண்டு சிலிகன் கார்பைடாக உருமாற்றம் கொள்கிறது. அதை டங்கஸ்டன் கலவையில் 2 நாட்கள் ஊற வைக்க செயற்கை கல்மரத்துண்டங்கள் உருவாகின்றன.
சோனோரெட் என்ற ஐரோப்பிய புவியியல் ஆய்வாளரே 1781ல் முதன் முதலாக மரங்கள் கல்லாகிப்போனதைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தார். சிறந்த பொக்கிஷம் இது. மக்கள் எப்படி அறியப்போகிறார்களோ தெரியவில்லை என தனது டைரிக்குறிப்பில் எழுதியும் வைத்தார். அமெரிக்க, ஐரோப்பியர்கள் இதன் சிறப்பு அறிந்து மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கிறார்கள். செயற்கை கல்மரங்களைக் கூட அவர்கள் அதிக கவனத்துடன் கண்ணாடிப் பேழையில் வைத்து அழகு பார்க்கிறார்கள். ஆனால் நாமோ, நமது தொன்மங்கள், பாரம்பரியம், குறித்த போதுமான விழிப்புணர்வும், அக்கறையுமின்றி இருப்பது வருத்தமுற வைக்கிறது.

Puthaiyal...!

My Photoரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?
மாயா

"மன்னன் என்றால் பேராசை. பாவங்கள்தான் அவனது பிரதம மந்திரி. பொய்களின் வித்தகன்தான் காசாளன். திட்டங்கள் வகுப்பதற்கு ’பாலியல் உந்துசக்தியே’ மீண்டும் மீண்டும் கலந்தாலோசிக்கப்படுகிறது. முட்டாள் பூசாரிகள் ஏமாற்று வித்தைகள் மூலமும் தந்திரமான வாதங்கள் மூலமும் செல்வம் சேர்க்கிறார்கள். இருளில் தவிக்கும் ஒன்றுமறியாத பொது மக்கள் (விவசாயிகள், கலைஞர்கள்) மீண்டும் மீண்டும் சுரண்டப்படுகிறார்கள், லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்."

குருநானக், குரு கிரந்த சாகேப் (சோம்நாத் கோவில் மீண்டும் மீண்டும் கொள்ளையடிக்கப்பட்ட காலக் கட்டத்தில் இன்றைய வட இந்திய பகுதிகளில் நிலவிய அரசியல்-சமூக சூழல் குறித்த கருத்து).

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பல காலமாக பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலவரையிலிருந்து குவியும் பொக்கிஷங்களின் மதிப்பு, ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாடு அடைந்ததாக கணிக்கப்படும் நஷ்டத்திற்கு இணையான தொகையாக இருக்கும் போல் தெரிகிறது. இந்த இணைய இதழுக்கான கட்டுரை எழுதப்படும் சமயத்திலேயே அதன் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டி வளர்ந்துகொண்டிருந்தது. வைரங்கள், தங்க நகைகள், தங்க நாணயங்களின் மேலோட்டமான இந்த மதிப்பைவிட அவற்றின் நிஜமான மதிப்பு இரு மடங்கு இருக்கும் என கணிக்கப்படுகிறது.
அந்தக் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டவை அனைத்தும் கோவிலின் சொத்து என்பதால் அதை எதன் பொருட்டும் கைவைக்கக்கூடாது; அவை கடவுள் பத்மநாப சுவாமிக்குச் சொந்தமானவை என்று பக்திமிகுதியில் சொல்பவர்களின் குரலில் தெரியும் உறுதியைப் பார்க்கும் போது இது ஒரு பிரச்சனைக்குரிய தலைப்பு என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. திருப்பதி ஏழுமலையானைவிட திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி பணக்காரராகிவிட்டார் என்று எழுதும் பத்திரிகைகள் இத்தகைய மேலோட்டமான பார்வைக்கும் கடும் சர்ச்சைகளுக்கும் தூபம் போடுகின்றன.
மன்னராட்சிக் காலத்தில் கோவில்கள், குறிப்பாக தென்னிந்திய கோவில்கள், வெறும் ஆன்மீக மையமாக இருந்ததில்லை என்பதை ஏராளமான ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அது செல்வத்தின், அதிகாரத்தின் மையமாகவும் இருந்திருக்கிறது. மன்னராட்சிக் காலத்தில் மக்களை கசக்கிப் பிழிந்து வாங்கப்பட்ட வரிப் பணத்தால் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கோவில்கள் அரசாங்கத்தின் கஜானாவாகவும் இருந்திருக்கின்றன. தற்போதைய குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலை கஜினி முகமது கொள்ளையடித்தது செல்வத்தை களவாடுவதற்காக மட்டுமல்ல என்ற பார்வை உள்ளது. அன்றைய இந்திய மன்னர்கள் மீண்டும் வலுப் பெற விடாமல் நிலைகுலையச் செய்வதும் கஜினி முகமதுவின் நோக்கம் என்று கூறப்படுகிறது. தங்க நாணயங்களே முக்கியமான பண்ட மாற்றுப் பொருளாக இருந்த காலக் கட்ட்த்தில் ஒரு கோவிலைக் கொள்ளையடிப்பது என்பது இன்றைய ரிசர்வ் வங்கியை வழித்துத் துடைத்து அள்ளிச் செல்வதற்குச் சமம்.
உங்கள் யூகம் சரிதான். திருவனந்தபுரத்தின் பத்மநாப சுவாமி கோவிலிலிருந்து எடுத்த பொக்கிஷங்களில் கணிசமானவை இந்திய ரிசர்வ் வங்கியில் சேர்ப்பிக்க வேண்டியவையாக இருக்கலாம். திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் விவசாயிகளிடமும் கலைஞர்களிடமும் பெற்ற வரியிலிருந்து உருவாக்கப்பட்டவையே அந்த கணிசமான பொக்கிஷங்கள். அவற்றில் சில கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கணிசமான வைரங்களும் நகைகளும் மன்னரின் சொத்துக்களாக அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கக்கூடும்.
இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு தமிழக பகுதிகளை ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் கட்டுப்படுத்தியுள்ளது. பத்மநாபசுவாமி கோவிலிலிருந்து கிடைக்கும் சொத்துக்களில் நமது மூதாதைய தமிழர்களின் வரிப் பணமும் அடங்கியிருக்கலாம். "ஆண்களின் தாடி, மீசைக்கும், பெண்களின் மார்பக வளர்ச்சிக்கும்" அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் வரி வசூலித்தது என்று அகிலத் திரட்டு நூலில் (அய்யா வைகுண்டர்) குறிப்பிடப்படுகிறது. " "அடிப்படை உரிமைகள், சொந்த நிலங்கள், உணர்வுகள் எல்லாமே பறிக்கப்பட்ட இவர்களுக்கு (இன்றைய குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்ட தமிழர்கள்) கொடுக்கப்பட்ட மிகக் குறைந்த கூலியும்வரிஎன்ற பெயரில் அடக்குமுறையை பிரயோகப்படுத்தி பிடுங்கப்பட்டது" என்று திருவிதாங்கூர் ஆட்சி நிர்வாகம் பற்றி குறிப்பிடப்படுகிறது.
திருப்பதிக்கு கிடைக்கும் செல்வத்தையும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமியின் வசமிருந்த சொத்துக்களையும் ஒப்பிடும் அபத்தம்தான் இந்தச் சொத்துக்கள் யாருக்கு என்ற குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. திருப்பதிக்கு வருவது பக்தர்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து, சொந்த விருப்பத்தின் பேரில் கொடுத்தது. திருப்பதியில் குவியும் இவ்வளவு நிதியையும் பொருளையும்கூட எடுத்து கல்விக்கும் இன்ன பிற பொதுக் காரியங்களுக்கும் செலவிட வேண்டும் என்று கூறுகிறவர்கள் உண்டு. ஆனால் எவ்வாறு ஒரு தனிநபர் தனது செல்வத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்று சமூகம் நிர்பந்திக்க முடியாதோ, அதே போல தனி நபர்கள் குவிக்கும் இவ்வளவு பெரிய செல்வத்தையும் சமூகம் தனதாக்கிக்கொள்ள முடியாது. கிட்டத்தட்ட 10 கோடி பேர் சேரியில் வசிக்கும் ஒரு தேசத்தில், 33,000 கோடி ரூபாய் ஒரு கோவிலில் உறங்கிக்கொண்டிருப்பது இந்த தேசத்தின் மனிதாபிமான மதிப்பீடுகளை இழிந்து கூறும் முரண்பாடு என்றாலும்கூட அந்தப் பணத்தின் மீது சமூகம் நேரடியாக கைவைக்க முடியாது. ஆனால் பத்மநாபசுவாமி கோவிலில் சொத்துக்கள் மக்கள் கொடுத்தது அல்ல. பொது மக்களின் நிதியைக் கையாளும் பொறுப்பைக் கொண்டிருந்த ஒரு மன்னனுக்குச் சொந்தமானவை அவை. திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்திய குடியரசுடன் இணைக்கப்பட்டுவிட்டதால் அந்த பொக்கிஷங்கள் இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.
ஒன்றைக் கொடுத்துவிட்டு அதற்கான "பரிசாக மதப் பற்றாளர்கள் பாவ மன்னிப்பை (கடவுளிடம்) கோருகிறார்கள். தங்களின் தாராள உள்ளத்தை அதிலேயே வீணடித்துவிடுகிறார்கள்" என்று மத நம்பிக்கையாளர்கள் பற்றி 15ஆம் நூற்றாண்டில் குருநானக் முன்வைத்த வாதம் 21ஆம் நூறாண்டிலும் மாறாமல் தொடர்வது இந்த தேசம் சமூக-அரசியல் மறுமலர்ச்சிப் பாதையில் நத்தை வேகத்திலேயே முன்னேறுகிறது என்பதைக் காட்டுகிறது.
மதம் மனிதர்களை மதம் பிடிக்கச் செய்வது என்பதால் கேரள அரசு சட்டப்படி, நியாயப்படி தனக்கு உரிய சொத்தின் மீது கைவைக்கத் தயங்குகிறது. ஆனால் அரசின் கைகளில் இந்த சொத்துக்கள் விரைவாக சென்று சேராவிட்டால் நம் சமூகத்திற்குள்ளேயே இருக்கும் கஜினி முகமதுகள் காலப் போக்கில் இந்த பொதுச் சொத்துக்களை தங்களின் தனிச் சொத்துக்களாக்கிவிடுவார்கள்.

வியாழன், 30 ஜூன், 2011

Chinna ..chinna..




































பட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி.

My Photo

சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்பூம்பட்டினம். திருவெண்காட்டின் கடவுளான ஸ்வேதாரண்யப்பெருமாளைக் குறிப்பதாய் சிறுவயதில் ஸ்வேதாரண்யன் என்று பெற்றோர்கள் பெயரிட்டனர்.



வணிகக் குடும்பத்தில் பிறந்த இவர் கடல்கடந்தும் பொருளீட்டி மன்னரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்தார். இவரின் செல்வாக்கைக்கருதி மரியாதை நிமித்தமாய் காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிக்கும் வகையில் மக்கள் இவரைப் பட்டினத்தார் என்றழைத்தனர்.



சிவகலை எனும் பெண்ணை மணந்த ஸ்வேதாரண்யனுக்கு நீண்ட நாட்கள் குழந்தைப் பேறின்றி வருத்தம் கொண்டிருந்தார். திருவிடைமருதூர் சென்று இறைவனை வழிபடும்போது ஓர் ஆண்குழந்தையை சிவசருமர் என்ற சிவபக்தர் ஒருவர் குளக்கரையில் கண்டெடுத்து அதை பட்டினத்தாரிடம் கொடுக்க அவரும் அக்குழந்தைக்கு மருதபிரான் என்ற பெயரிட்டு வளர்த்துவந்தார்.



மகன் வளர்ந்து பெரியவனானதும் வணிகத்துக்காக அவனைத் தயார் செய்து கடல் கடந்து வியாபாரம் செய்ய அனுப்பினார். அவனோ திரும்பிவரும்போது எருவரட்டியும் தவிட்டு மூட்டைகளுமாய் வந்திறங்கவே மிகுந்த கோபமுற்றார்.



மருதபிரானோ பதிலேதும் சொல்லாது ஒரு ஓலைத் துணுக்கையும் காதற்ற ஊசி ஒன்றையும் ஒரு பேழையில் வைத்துக் கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு எங்கோ சென்று விட ஓலைத் துணுக்கைப் பட்டினத்தார் எடுத்துப் படித்துப்பார்த்தார்.



அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.



அந்த வாக்கியமே அவரின் வாழ்வில் திருப்புமுனையாய் அமைந்தது. தன் ஒப்பற்ற செல்வம் பொருள் அனைத்தையும் துறந்து ஒரு கோவணம் மட்டுமே தரித்துத் துறவு பூண்டார். அவரின் இந்தத் துறவு புத்தரின் துறவுநிலைக்கு இணையான துறவாகக் கருதப்படுகிறது.



அவர் துறவிக் கோலம் தம் குடும்ப கௌரவத்துக்கு அவமானம் உண்டாக்குவதாய் எண்ணிய அவருடைய மூத்த சகோதரி விஷம் தோய்த்த அப்பத்தை உண்ணுவதற்குக் கொடுத்தார்.



அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள். அவரை ஒரு சித்தராகக் கருதி பட்டினத்தடிகள் என்று எல்லோரும் மதிக்கத் தொடங்கினார்கள்.



பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னை மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.



அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையை அடுக்கிப் பற்றச் செய்தார். அன்னையை எண்ணி கொழுந்துவிட்டெரியும் சிதையின் முன்னே பத்துப் பாடல்களைப் பாடினார்.



பெரும் புகழ்பெற்றவையாயும் கேட்பவரின் மனதை உருக்குவதாயும் இருக்கின்றன. அந்தப் பத்துப் பாடல்களும்.



ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே

அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி

சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ

எரியத் தழல் மூட்டுவேன்

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ

விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை

தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்

கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ

மெய்யிலே தீமூட்டு வேன்

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு

வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள

தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ

மானே எனஅழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்

கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள

முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்

மகனே எனஅழைத்த வாய்க்கு

முன்னை இட்ட தீ முப்புரத்திலே

பின்னை இட்ட தீ தென்இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்

ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்

குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்

கருதி வளர்த்தெடுத்த கை

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்

வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்

உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்

தன்னையே ஈன்றெடுத்த தாய்

வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்

நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க

எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்

எல்லாம் சிவமயமே யாம்





பொறுமையாய் இந்தப் பத்துப் பாடல்களையும் வாசிக்க அவற்றின் பொருள் மிக எளியதாய் விளங்கும். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எத்தனை எளியதாய் எத்தனை ஆழமானதாய் இருப்பது பெரும் வியப்பிலும் வியப்பு

Chinna chinna...

பட்டாணிக்குருவி ஞாபகங்கள்

சொல்லித் தந்ததை விடவும், பள்ளிக்கூடம், சொல்லித் தராதவை அதிகம். தூக்கணாங்குருவிகள் படபடக்கும் மரங்களடர்ந்த பள்ளிக்கு காலையில் சீக்கிரமே வருவது, பறவைகளின் மொழி படிக்க. ஸ்டாண்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு வந்தால் பெரிய அரச மரம். அதன் அருகிலேயே வாதமடக்கி மரங்களும் வேப்ப மரங்களும். கீழே சிமெண்ட் பெஞ்ச்கள். நிழல்கள் அடர்ந்திருக்கும் இந்த மரங்களில் படபடக்கும் பறவைகளின் பேச்சுக் கேட்டால் பரவசமாக இருக்கும். என்னுடன் வரும் பச்சைமுத்துவுக்கு பறவைகள் மீது பிரியம் அதிகம். குருவிகளுக்குண்டான சிறு சிறு வித்தியாசங்களும் அதன் பெயர்களும் அவனுக்கு அத்துப்படியாகி இருந்தது.


‘லேசா மஞ்சளும் செவப்புமா கம்பில இருக்கு பாரு ஒரு குருவி’ என்பேன். ‘அது பட்டாணிக்குருவிடா’ என்பான். அவனுடன் எனக்கும் பறவைகளின் மீதான ஆர்வம் அதிகமானது. ஆனால் எனக்கு கொக்கு மற்றும் கருவாலி, கோழி போன்ற வகையறாக்களின் மீது அதிகமானது ஆர்வம். இதையடுத்து, பள்ளிக்கூடத்துக்கு அவனுக்காக காலையில் சீக்கிரமும் மாலையில் ஆற்றுபாலத் தோப்பருகே ரிட்டர்ன் ஆகும் கொக்குக்களைப் பார்க்க, எனக்காக காத்திருப்பது எனவும் முடிவாகி இருந்தது.

பள்ளியில் பெண்களுக்கான யூனிபார்ம் இளஞ்சிவப்பு தாவணி மற்றும் ஊதா பாவாடை, வெள்ளை சட்டை. இதில் ஏதோ ஒரு காரணத்தை வைத்து பச்சைமுத்துவால் பள்ளி மாணவிகளுக்கு சூட்டப்பட்டப் பெயர், பட்டாணிக்குருவிகள். பத்தாம் வகுப்பில் பெயிலானதால் பச்சைமுத்துவின் நட்பு அத்தோடு முடிந்துவிட்டது. ஆனால், அவனால் உருவாக்கி வைத்திருந்த ‘பட்டாணிக்குருவிகள்’ மட்டும் மனதில் பதிந்துவிட்டது.

ப்ளஸ் ஒன் வகுப்பில் நட்புகள் அதிகம் இல்லாமல் அனாதரவாக இருந்த வேளையில் வந்து சேர்ந்தான் கணபதி. வலது ஓரம் பெண்களுக்கான கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த உயரமான பட்டாணிக்குருவிகள், சதா ஏதோ பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டுமாக இருந்ததை அடுத்து, கணபதி அவர்களில் ஒருத்தியை தோழியாக்கி கொண்டான். (அப்போது மாணவிகளிடம் பேசுவது மகா தப்பு). இவனைப்போலவே, வழு வழு பேண்ட்டும் பிரவுண் கலர் ஷூவும் போட்டு வரும் மாரியப்பனும், மூன்றாவது பெஞ்சில் இருந்த உமா மகேஸ்வரியுடன் நட்பை வளர்த்தான். இவன்களுக்கு ஏற்பட்ட பெண்கள் மீதான் நட்புக்குப் பிறகு நமக்கொரு தோழி கிடைக்க மட்டாளா என்கிற ஆசை அலைபாயத் தொடங்கியது. வலப்பக்கம் முதல் பெஞ்சில் இருந்து கடைசி பெஞ்ச் வரை தேடித் தேடி தினமும் பார்த்துக் கொண்டிருந்ததில் இரண்டு மூன்று, ...த்தூகளும், ‘மூஞ்சைப் பாரு, ஓ...ன்னு இங்கயே பாத்துக்கிட்டு’ என்கிற வசவுகளும் வந்து சேர்ந்ததையடுத்து நமக்கும் பெண்களுக்குமான நட்பு, எந்த ராகு, கேது கட்டத்துக்குள்ளும் வரவில்லை என முடிவு செய்தேன்.


ஒரு திங்கட்கிழமை, காலை வாய்க்காலுக்கு குளிக்கப் போகும்போது, ராசம்மா சித்தி, ‘ஏல இங்க வா’ என்று அழைத்தாள். அவள் சத்தம் வந்த திசையில் பார்த்தால், அது என்னுடன் படிக்கும் பகவதியின் வீடு. போனேன்.

‘இந்தா காபி குடி’.

ஐயமார் வீட்டு பில்டர் காபி. சூப்பராக இருந்தது. ‘சித்தி, இன்னும் கொஞ்சம் இருக்கா?’,

‘இந்தா..’

சித்தி, அந்த வீட்டில் வேலை பார்த்தாள். காலையில் பாத்திரங்கள் கழுவுவது மற்றும் துணிகள் துவைப்பது அவள் வேலையாக இருந்தது.

நான் காபி குடித்துக்கொண்டிருக்கும்போது பகவதி, முகத்தை துடைத்துக்கொண்டே வெளியே வந்தாள். என்னை பார்த்ததும் திரும்பிக்கொண்டாள். நான் எனக்கொரு தோழி கிடைத்துவிட்டாள் என்கிற ரீதியில் சந்தோஷமாக வந்தேன். தினமும் காலையில் இங்கு காபி குடிப்பது வழக்கமாகி விட்டது. சில நேரங்களில் பகவதியை பார்க்க நேரிடலாம். சில நேரங்களில் இல்லை.

இந்த நட்பின் மூலமாக, பள்ளியில் வைத்து அவளிடம் ஏதாவது சாக்கில் பேசலாம் என்று சென்றால், டமாரென்று முகத்தை திருப்பி, அருகில் இப்படியொரு உருவம் நிற்பதை கண்டுகொள்ளாமலேயே சென்றுவிடுவாள். இதையடுத்து என நட்பு டமாரானது. இதற்குள் கணபதி மற்றும் இன்ன பிற சக தோழர்கள் பள்ளிக்கூடத்தில் காதலர்களாக அறியப்பட்டார்கள். அவர்களுக்கான மரியாதை சக மாணவ, மாணவிகளிடத்தில் அதிகமாகி இருந்தது. இந்த கவலையில், நான் பாடத்திலும் கவனத்தை செலுத்தாமல் இருந்தேன்.

இந்த நிலையில் சித்தியிடம் இருந்து வந்தது அந்த குண்டு.


‘ஏல பள்ளிக்கூடத்துல பொம்பளை பிள்ளைலுவோட்ட ரொம்ப சொரணாவிட்டே இருக்கியாம்... நம்ம கெடக்க கெடப்புக்கு அதெல்லாம் ஆவாதய்யா... ஒழுங்கா படிக்க மட்டும் செய்யி’ என்றாள்.

சித்தியின் இந்தப் புகாரை என்னால் தாங்கிகொள்ள முடியவில்லை. அவள் சொன்ன மாதிரி எந்த தவறும் நடக்கவில்லை என்றாலும், ‘நமக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் சோதனை’ என்று நொந்துகொண்டு, வகுப்பில் இடத்தை மாற்றிக்கொண்டேன். இந்த புகாருக்குப் பிறகு காலையில் காபி குடிக்க செல்வது ரத்தாகியிருந்தது.

இத்தனைக்கு பிறகும், வகுப்பில் எந்த மாணவியாவது, என்னை பார்க்க நேர்ந்தால் அது ஏதோ சவலப்பிள்ளையை பார்ப்பது போலவே தெரிந்தது.

கல்லூரிக்குப் போனதிலிருந்து நிலைமை மாறியிருந்தது. வேறு ஊர். ஒரே பஸ், முன் பின் அறிமுகமில்லாத, புதுமுகங்கள் என தோழிகளிடம் காரணமே இல்லாமல் தொடர்ந்தது நட்பு. பிறகு, பிழைப்புக்கு வெவ்வேறு இடம் பறந்து, கல்யாணம் ஆகி, குழந்தைகள் பிறந்து, 20 வருடத்துக்குப் பிறகு ஒரு விழாவுக்கு ஊருக்குப் போனால்... அதே பட்டாணிக்குருவிகள்!

நான்கு பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் என்னுடன் படித்த எல்லாரது முக ஜாடையும் தெரிகிறது. இரண்டு பேர் குண்டாகியிருந்தார்கள். ஒருத்தி மட்டும் அடையாளம் கண்டுகொண்டு கேட்டாள்.

‘ஹலோ... எப்படியிருக்கீங்க? எங்களை தெரியுதா?’

‘தெரியுதுங்க... நல்லாயிருக்கீங்களா?’-விசாரிப்புகளுக்குப் பிறகு பகவதியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் இன்னொருத்தி, ‘ஏண்டி இவனை தெரியலை. கவிதை, கதைன்னு எழுதிட்டிருப்பானே...’

‘ஓ... எங்க வீட்டுல வேலை செய்தாளே ராசம்மா... அவளோட அக்கா மகன்தானே...’ என்ற பகவதி என்னை திரும்பி பார்த்தாள்.

எனக்கு சந்திக்காமலேயே இருந்திருக்கலாம் போலிருந்தது.

Biriyaani...

ரஹ்மத்துன்னிசா நிக்காஹ்வும்,ஒரு பிரியாணிக்கதையும்

ஆளுயர கரண்டிகளும்
வானமளவு வானலிகளும்
வெங்காய‌மும் க‌த்திரிக்காயும்
புதினா க‌ட்டும் ம‌ட்ட‌ன் ம‌லைக‌ளும்
முன்னிர‌வே டெம்போவில்
வ‌ந்திற‌ங்கி விடுகின்ற‌ன‌.

கோழி போட்டால் பேரிழிவாம்
ஆடு போட்டால் தான் அந்த‌ஸ்தாம்
ஒரு கிலோ அரிசிக்கு
ஒன்னே கால் கிலோ க‌றி.
கிலோ அரிசிக்கு எட்டு பேரு
பேய்ச்சாப்பாடு சாப்ட‌லாமென்றாலும்
ஒரு இலைக்கு ஒரு துண்டு க‌றி தான்.
தண்டலுக்கு வாங்கி ஏற்பாடு செய்த‌
ரஹ்மத்துன்னிசா வாப்பா க‌ண‌க்கு.

தெரிஞ்ச‌ முக‌மென்றால் ம‌ட்டும்
"தூணோர‌மா உக்காந்திருக்க‌
ப‌ச்ச‌ ச‌ட்ட‌ பய நம்மாளு ! பீஸூ கேக்குறாப்ள‌!"
ப‌த்தாம‌ போகுமோண்டு
ப‌ய‌த்துட‌னே ப‌ரிமாறும்
ர‌ஹ்ம‌த்துன்னிசா மாம‌ன் மாருஹ‌.

வந்த மக்க மனுசரையெல்லாம்
வாண்டு கேட்டே நா வறண்டு
ஒருவா சோறுங்காம
மக கல்யாணம் நல்லபடியா முடியணுமேங்கிற‌
தவிப்புல தடுமாறி நிக்கிற‌
ரஹ்மத்துன்னிசா உம்மா.

இவங்க யாருக்குமே தெரியாதாம்.
கல்யாணப்பொண்ணு
நூரே ச்சஸ்மி
ரஹ்மத்துன்னிசாவுக்கு மட்டுந்தா தெரியுமாம்.
எதித்த வீட்டு முருகேசனுக்கு
பிரியாணிண்டா உசுறுண்டு !


********

Aaa...Vikatan..?

தரம் தாழ்ந்த ஆனந்த விகடனின் டாலடித்த ஜெ கம்மல்

---------

ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் வழிதவறும் போது தவறுகளை எடுத்துரைத்து நல்வழிப்படுத்த வழிமுறைகளைச் சொல்லித்தர வேண்டிய புனிதப்பணி பத்திரிக்கையினுடையது.எழுத்து சுதந்திரம் என்பது நடுநிலைமை பிறவாமல் வாள்சுழற்றும் வித்தை.அந்த வாள் இரத்தத்தை கொணர்வதற்காக அல்ல.மேலும் வதைகள் ஏற்படாமல் தடுக்க.

மெழுகுவர்த்தி புகழ் ஞாயிற்றுக்கிழமை புரட்சியாளர்களையும் கிரிக்கெட்டையும் பிரதான செய்திகளாக வெளியிடும் வடஇந்திய ஊடகங்களுக்கு இணையாக ஆனந்த விகடன் இப்போது தரம் தாழ்ந்து இயங்கி கொண்டிருக்கிறது.பக்கத்திற்கு பக்கம் கனிமொழி கைதை நையாண்டி செய்வதிலும் கலைஞரையும் திமுகவையும் கிண்டலடிப்பதிலும் தற்பொழுது ஆ.வி முழுமூச்சில் ஈடுபட்டிருக்கிறது.ஏற்கெனவே அணைந்து போன நெருப்பை
மீண்டும் மீண்டும் நீர் தெளித்து அணைப்பதில் ஒரு ஆழ்மன வக்கிரம் தொனிக்கிறது.

ஆனந்த விகடன் அதிமுக விகடனாக புத்துயிர் பெற்று கனகாலமாகி விட்ட நிலையில்,ஜெ.வின் வெற்றியை ஜெ எந்தளவு கொண்டாடினாரோ,அதைவிட ஆ.வி அந்த வெற்றியில் ஊறி ஊறித் திளைத்து இத்து போகும் அளவு ஊறிக் கொண்டிருக்கிறது.கடந்த கால திமுக ஆட்சியின் பேயாட்ட ஊழல்,விலைவாசி உயர்வு,மின்வெட்டு போன்ற ஆயிரம் காரணங்கள் தான் அதிமுகவை ஜெயிக்க வைத்திருக்கிறது என்ற உண்மை ஒருபுறமிருக்க,ஏதோ ஜெயலலிதா மக்களுக்காக வீதியில் இறங்கி போராடி ஜெயித்ததாக உச்சி மோர்ந்து கொஞ்சுகிறது ஆ.வி.அதிலும் ஜெவுக்கு அட்வைஸ் செய்து நல்லபேர் வாங்கி கொள்ள நினைப்பது அதைவிட பேரபத்தம்.

கலைஞர் ஜெயா டிவிகளின் அபத்தங்களுக்கு இணையாக‌ "முதல்வரின் கம்மல் டாலடித்தது முகம் டாலடித்தது" போன்ற மூன்றாந்தர எழுத்துக்களை வாரி இறைத்து கொண்டிருக்கிறது.வீட்டுவசதி திட்டத்தை "தீப்பெட்டி திட்டம்" என்று கேலி செய்து பேசியதற்காக வீட்டுவசதி துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதையும்,கல்வி பற்றி நாலு வார்த்தை உளறியதற்காக உயர்கல்வித்துறை ஒரு அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டதையும் ஏதோ ஜெயலலிதா தமிழ்நாட்டின் மிகப்பெரிய புரட்சி சீர்திருத்தம் செய்து விட்டதாக கொண்டாடுகிறது.

லோக்பால் திட்டத்தின் வெற்றி லட்சணம் எந்த அளவு என்கிற முகாந்திரத்தின் அடிப்படை தெரியாமலேயே, இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியையும்,மும்பை ரவுடி ராஜ் தாக்கரேவையும் அபிமானியாக கொண்ட அண்ணா ஹசாரே (எ) கொல்லு தாத்தாவை வாராவாரம் பாலாபிஷேகம் செய்து ம‌கிழ்கிற‌து.இதில் வரும் வாரங்களில் வெத்து வேட்டு விஜயின் கேள்வி பதில் வேறாம்.ஏற்கெனவே ஏ.பி.ஜே அப்துல் கலாமின் கழுவுற மீனில் நழுவுற மீன் கேள்வி பதில்களை படித்து சலித்துப் போன வாசகர்களுக்கு மேலும் ஒரு துன்ப அதிர்ச்சி.பொக்கிஷம்,எனர்ஜி பக்கங்கள் போன்ற பதிவுகள் ஓரளவு ஆறுதல் அளித்தாலும்
மேற்கூறிய‌ மொக்கை கேள்வி பதில்களும் முகம் சுழிக்க வைக்கும் நையாண்டி விருதுகளும் டிவிட்டர் உளறல்களும் விகடனின் வாசகப்பரப்பை குறைத்துக் கொண்டிருக்கிறது.

பூந்தளிர்,அம்புலிமாமா,சிறுவர்மலர்,தினசரி செய்தித்தாள் இவைகளுக்கு பிறகு வாசக அனுபவ பரிணாமத்தை விரிவுபடுத்துவதில் விகடன் எல்லா கால கட்டங்களிலும் முன்னணி வகித்திருக்கிறது.சராசரி நடுத்தர வர்க்க சமூகத்திலிருந்து மேட்டுக்குடி வரை விகடன் வாசிக்கப்படுகிறது.ஓரளவு எழுதப்படிக்கத் தெரிந்த‌ பாமரனிலிருந்து இலக்கியவாதிகள் வரை கொண்டாடப்பட்டு வரும் ஒரே பத்திரிக்கை விகடன்.தமிழ் எழுத்தாளர்களையும் படைப்புகளையும் ஏறத்தாழ அனைத்து ஊடகங்களும் மறந்து விட்ட நிலையில்,கி.ரா வண்ணதாசன் சிறுகதைகளை இன்றும் ஆனந்த விகடனில் பார்க்கலாம்.அழகிய பெரியவனின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.இப்படி எல்லா அருமை பெருமைகளையும் தன் ஒருதலை பட்சமான எழுத்துகளால் இன்று விகடன் குழுமம் இழந்து கொண்டே இருக்கிறது.தரமான வாசகர்களையும் சேர்த்து தான்.


-----

Kanimozhi.

My Photoகனிமொழியை தங்கள் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் வலியப் போய் சேர்த்துக்கொண்டவர்கள், அவரது முதல் பாராளுமன்ற உரையை வரிக்கு வரி அச்சிட்டு புளகாங்கிதம் அடைந்தவர்கள் இன்று கனிமொழி கணவனுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார் என்று எழுதுகிறார்கள். கணவர் அதற்கேற்ற உடல் பருமன் கொண்டவர் என்று எழுதுகிறார்கள்.
கனிமொழியின் பேட்டியை மாதம் ஒருமுறையேனும் வெளியிட்டுக்கொண்டிருந்த பத்திரிகைகள் இப்போது அவரது கவிதைகளின் இலக்கியத் தரமின்மை பற்றி விவாதம் நடத்துகின்ற
கனிமொழி யாரை நோக்கிஅவர் எனது தந்தையைப் போன்றவர்என்றுநெகிழ்ச்சியுடன் அழைத்தாரோ அவர் இன்று கனிமொழி ஜெயிலில் எப்படிக் குளிப்பார், அவரது கணவருக்கு ஃபீஸ் எவ்வளவு என்று எழுதுகிறார்.
இது என்ன மாதிரியான காலம்? இவ்வளவு பெரிய இழிவை நோக்கி மனிதர்கள் எப்படி வந்து சேருகிறார்கள் என்பதை நம்பக்கூட முடியவில்லை.
கனிமொழியின் கவிதைகள் உலகத் தரமானவை என்று எழுதியவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அத்தகைய நிர்ப்பந்தம் எதுவும் வந்ததில்லை. நான் பேட்டிகளில் நம்பிக்கைக்குரிய கவிஞர்களின் பெயர்களை சொன்ன சந்தர்ப்பதில்கூட அவரது பெயரைச் சொன்னதில்லை என்று அவருக்கு என்மேல் மிகுந்த வருத்தம் உணடு. கடந்த ஐந்தாண்டுகளில் அவரிடம் இரண்டு முறை சிறு உதவிக்காக போயிருக்கிறேன். இரண்டு முறையும் அதை அவர் மறுத்திருக்கிறார். அதைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நானும் அவரும் பங்கேற்ற மேடைகளில் அவர் பல முறை நான் பேசியதை கடுமையாக மறுத்துப் பேசியிருக்கிறார். குட்டி ரேவதி தொடர்பான சர்ச்சையில் அவர் என்னை திட்டியே எழுதினார். அவர் உயிர்மையில் ஒரு வரிகூட எழுதியதில்லை. அதனால் என்ன? ஒரு நண்பராக அவர் எனக்களித்த அன்பும் மதிப்பும் கூடிய கணங்கள் இதனால் எல்லாம் இல்லாமல் ஆகிவிடுமா? அவரது நல்லியல்புகளைக் கண்டு வியந்த கணங்கள் பொய் என்று ஆகுமா? நான் மகாபாரதம் படித்து வளர்ந்தவன். பொது நீதிக்கும் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கும் நடுவே உள்ள போராட்டத்தை அதுபோல சொன்ன ஒரு காப்பியம் இந்த உலகில் இல்லை. எவ்வளவு நீதியுணர்ச்சியுள்ள கர்ணன் துரியோதனை ஆதரித்து நின்ற தருணத்தை கவித்துவ நீதியால்தான் விளக்க முடியுமே தவிர உலகியல் நீதியால் அல்ல.
எனக்கு கனிமொழியிடம் எப்போதும் எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. நாளை அவரை நான் எனது ஒரு புத்தக வெளியீட்டுக் கூடத்திற்கு எந்தத் தயக்கமும் இன்றி அழைப்பேன். 2 ஜி விவகாரம் நிரூபிக்கப்பட்டு அவர் தண்டனையடைந்தால் கூட அவர் எனது நண்பர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. திருட்டுக் குற்றத்த்தின் சந்தேகத்தின் பேரில் மரத்தை கட்டிவைக்கப்பட்ட ஒருவரை போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் நாலு அடி அடிப்பதுபோல நமது பத்திரிகையாளர்கள் , எழுத்தாளர்கள் நடந்துகொள்கிறார்கள். அவரது பெயரைச் சொல்லி பொது இடங்களில் சிறு மதிப்பு தேட முயன்றவர்கள் இன்று அவரை மானபங்கம் செய்ய முற்படுகிறார்கள். நமது தார்மீக எழுச்சியின் அளவுகோல்கள் எவ்வளவு கபடத் தன்மை வாய்ந்தது என்பதை பார்ப்பதற்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பம் வரப்போவதில்ல
எதிர்பார்புகளோடும் ஆதாயங்கள் குறித்த கனவுகளோடும் உறவுகளை பராமரிக்க விரும்கிறவர்கள் அவை நிறைவேறாதபோது தடுமாறிப் போகிறார்கள்.

திங்கள், 27 ஜூன், 2011

M.K.T.Bhagavathar.

இந்த நாளின் ஒரு பிரத்யேக குணவிசேஷத்தை இங்கு உங்களுடன் நான் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். சுமார் அறுபது ண்டுகளுக்கு முன் ஒருவருக்கு திருவையாறு தியாகராஜ உற்சவத்தில் சில காரணங்களுக்காக பாட இடம் மறுக்கப்பட்டது. திரைப்படங்களில் பாடுகிறவர் என்கிற காரணத்தினால் அந்த மனிதர் அங்கு சிறுமைப்படுத்தப்பட்டார். பிறகு அவர் உயிரோடு இருந்த வரையில் திருவையாறு சென்று பாடவில்லை.
My Photo

அறுபது ண்டுகளுக்கு முன்னால் திருவையாறில் பாட அனுமதிக்கப்படாத அந்த எழிலிசை வேந்தர் தியாகராஜ பாகவதர் பற்றிய நினைவுச் சொற்பொழிவினை தியாக பிரம்மத்துக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்வின் முன்னொட்டாக அமைத்து தில்லித் தமிழ்ச் சங்கம் அந்த மாமனிதருக்கு அன்று நேர்ந்த ஒரு அவமதிப்பினை இன்று தலைநகரில் பிராயச்சித்தம் செய்திருக்கிறது. தில்லித் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றில் இந்த நாள் இசை ரசிகர்களால் மிகவும் பெருமையுடன் நினைத்துக் கொள்ளப்படும் நாளாக அமையும். இதற்காக தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழுவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.



கர்நாடக இசையை, பல கர்நாடக இசை ராகங்களை திரைப்படங்களின் வழியாக பிரபலமாக்கியதில் பாகவதரின் பங்கு மிகவும் முக்கியமானது. திரைப்படப் பிரவேசத்துக்கு முன்னரே பாகவதர் பங்கு பெற்ற நாடகப் பாடல்கள் எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு அடுத்தபடியாக பிரபலம் அடைந்து விளங்கியிருக்கின்றன. இசைமேதைகள் என்னும் தன்னுடைய நூலில் பாகவதரை ஒரு மிகவும் திறமை வாய்ந்த கர்நாடக இசைக்கலைஞராக இனம் கண்ட பெரியவர் சுப்புடு, பாகவதருக்கு அளித்திருக்கும் உன்னதமான இடம் பாகவதரின் கர்நாடக இசைத் திறமைக்கு மிகப் பெரிய கட்டியமாக விளங்குகிறது. னால் மிகவும் துரதிருஷ்டவசமாக பாகவதர் சினிமாப் பாடகராக மட்டுமே பல இடங்களில் அறியப்பட்டிருக்கிறார்.

இசையின் மீதான பாகவதரின் ஈர்ப்பு அவருடைய மிகச்சிறிய வயதிலேயே துவங்கியிருக்கிறது. திருச்சி அவருடைய சொந்த ஊர் என்று அறியப்பட்டாலும் பெற்றோர் வழியில் அவர் மாயவரத்துக்காரர். மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன் என்னும் எம்கேடி பாகவதர் சிறுவயதில் அவருடைய தந்தையின் நகைகளை நகாசு செய்யும் தொழிலில் எவ்வித ஈடுபாடும் ர்வமும் காண்பிக்கவில்லை. மிகவும் வறுமையான குடும்பச்சூழல். தந்தைக்குத் தெரியாமல் ஸ்பெஷல் நாடகங்களைப் பார்ப்பதில் ர்வம். எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகங்களைப் பார்ப்பதில் வெறி. சினிமாவும் பிடிக்கும். தந்தைக்குத் தெரியாமல் அவர் தூங்கியபின் தம்பி கோவிந்தராஜனுடன் திருச்சி சென்ட்ரல் டாக்கீசில் (இப்போது அது பிரபாத் டாக்கீஸ்) விட்டல் நடித்த ஊமைப்படத்தைப் பார்த்துவிட்டு தந்தையிடம் விசிறிக்காம்பால் அடி வாங்கியிருக்கிறார்.



பாகவதரின் தந்தையும் கலா ரசிகர்தான். சில நாடகங்களில் அவரே அயன்ஸ்திரீ பார்ட் வேடம் போட்டிருந்தாலும் தன்னுடைய மைந்தன் கலைத்துறையில் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை. அக்கால சூழலில் நாடகக் கலைஞர்களுக்கு எவ்வித சமூக அந்தஸ்தும் கிடைக்காததினால் தன்னுடைய மகன் அத்துறையில் ர்வம் காட்டுவதை அவர் விரும்பவில்லை.

சிறுவன் தியாகராஜனுக்கு தந்தையாரின் தொழிலின் மீதும் படிப்பின் மீதும் ர்வம் இல்லை. தந்தை கடையில் இல்லாத போது கிட்டப்பாவின் நாடகப் பாடல்களைப் பாடிக் காட்டுவான். கடையில் மிகப் பெரும் கூட்டம் சேரும். கடைத்தெருவே அங்கு வந்து அந்த சிறுவனின் அற்புதக் குரலில் இழைந்தோடும் கார்வைகளைக் கேட்டு மயங்கியிருக்கும். இதனை தியாகராஜனின் தந்தையார் விரும்பவில்லை. அடிக்கடி அவர்களுக்குள் பிரச்னைகள் எழுந்தன. எனவே ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் கடப்பைக்கு ஓடிப்போனார். அங்கு நாடகம் நடத்திக் கொண்டிருந்த ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து மிகக்குறைந்த காலத்திலேயே மிகுந்த பிராபல்யம் அடைந்தார். அங்கு அவரைத் தேடிவந்த தந்தைக்குப் புரிந்து விட்டது. இனி ஒன்றும் செய்யமுடியாது. கலைத்தாய் தன் மகனைத் தனக்காக எடுத்துக் கொண்டு விட்டாள் என்று. மிகுந்த சமாதானம் செய்து மகனை திருச்சிக்கு மீண்டும் அழைத்துப்போனார். திருச்சிக்குத் திரும்பிய தியாகராஜன் பல இடங்களில் பாடத் துவங்கினார். முறையான பயிற்சி ஏதுமின்றி வெறும் கேள்வி ஞானத்திலேயே பல தேவாரப்பண்களைப் பாடும் அந்தச் சிறுவன் அப்பகுதியில் மிகவும் அதிகப் பிரபலம் அடைந்தான். அப்போது திருச்சியில் திருச்சி ரசிக ரஞ்சனி சபாவை நடத்திக் கொண்டிருந்த ரயில்வே அதிகாரி எ·ப்.ஜி.நடேசய்யர் (எம்.எஸ்.அம்மாவின் சேவாசதனம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்) சிறுவன் தியாகராஜனின் இசைத்திறமை குறித்துக் கேள்விப்பட்டு தன்னுடைய அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசன் வேடமேற்க அழைத்தார். தியாகராஜன் தன் தந்தையின் அனுமதியுடன் அந்நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். லோகிதாசன் வேடமேற்றிருந்த தியாகராஜன் அம்மா பசிக்குதே என்று பாடி வரும்போது பார்வையாளர்கள் பதைத்துப்போய் இந்தப் பச்சிளம் பாலகனை வதைக்கும் காலகண்டன் எங்கே என்று மேடையேறி அந்த நடிகரைத் தாக்கப் போய்விட்டார்கள். பிறகு அது வெறும் நாடகம் என்று அவர்களுக்குப் புரிய வைத்து அந்த நடிகரைத் தப்பிக்க வைத்தார்களாம். இளம் தியாகராஜனின் திறமையைப் பார்த்த மதுரை பொன்னுவய்யங்கார் அவருக்கு இலவசமாக இசை கற்பிக்க முன்வந்தார். று வருடக் கடும் பயிற்சிக்குப் பின்னர் தியாகராஜனை அரங்கேற்றம் செய்ய முனைந்தார் பொன்னுவய்யங்கார். அப்போது அபிநவ நந்திகேசுவரர் என்று அழைக்கப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையின் சீடரான மிருதங்கம் தட்சிணாமூர்த்தி ச்சாரியை மிருதங்கம் வாசிக்க அழைத்தார். இந்த சிறுவனுக்கா வாசிக்க வேண்டும் என்று மறுத்துவிட்டார் தட்சிணாமூர்த்தி ச்சாரி. இதைக்கேள்விப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை தானே முன்வந்து கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க அமர்ந்ததும் தட்சிணாமூர்த்தி ச்சாரி தயக்கத்துடன் மிருதங்கம் எடுத்து வாசித்தார். பொன்னுவய்யங்கார் வயலின் வாசித்தார். மூன்று மணி நேரம் நடந்த அந்தக் கச்சேரி திருச்சியில் அனைவராலும் பாராட்டப்பட்டது. கச்சேரியின் இறுதியில் அபிநவ நந்திகேசுவரர் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி தியாகராஜனை வானளாவப் புகழ்ந்து அவருக்கு பாகவதர் என்னும் பட்டம் வழங்கினார். அன்றிலிருந்து மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன், எம்.கே.தியாகராஜ பாகவதராகப் பெயர் மாற்றம் பெற்றார்.



(பின்னர் வரும் காலங்களில் லத்தூர் சகோதரர்கள், விளாத்திகுளம் சுவாமிகள், பாபநாசம் சிவன் என்று பாகவதர் பல ஜாம்பவான்களிடம் தன் இசைத்திறமையை மெருகேற்றிக்கொண்டார்.



20ம் நூற்றாண்டின் துவக்கம் பல நாடகக் குழுக்களின் துவக்கமாகவும் அமைந்தது. ஜெகந்நாத அய்யர் பாய்ஸ் கம்பெனி, மதுரை பாலமீனரஞ்ஜனி சங்கீத சபா, ஸ்ரீபாலஷண்முகானந்த சபா. கன்னையா கம்பெனி, நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் ஸ்ரீ தேவி பால விநோத சபா, வைரம் செட்டியாரின் ஸ்ரீ ராம பால கான விநோத சபா போன்ற அற்புதமான நாடகக்குழுக்கள் பிரபலம் அடைந்திருந்த நேரம். இந்த நாடகக் குழுக்கள் எஸ்.ஜி.கிட்டப்பா, டிகேஎஸ் சகோதரர்கள், என்.எஸ்.கிருஷ்ணன், காளி என்.ரத்தினம், கே.பி.கேசவன், கே.கே.பெருமாள், கே.பி.காமாட்சி, பி.யு.சின்னப்பா, எஸ்.வி.சகஸ்ரநாமம், எம்.வி.மணி, எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற பல முன்னணி நாடக நடிகர்களை அளித்தன. கே.பி.சுந்தராம்பாள், எஸ்.டி.சுப்புலட்சுமி, ரத்னா பாய், ரமணி பாய், சரஸ்வதி பாய், டி.பி.ராஜலட்சுமி போன்ற பெண் நடிகைகளும் முன்னணியில் இருந்தனர். கிட்டப்பாவுக்கு கே.பி.சுந்தராம்பாள் இணையானது போல நாடகங்களில் பாகவதருக்கு எஸ்.டி.சுப்புலட்சுமி இணையானார். பின்னாளில் எஸ்.டி.சுப்புலட்சுமி இயக்குநர் கே.சுப்பிரமணியத்தையும் கே.பி.சுந்தராம்பாள் கிட்டப்பாவையும் மணந்து கொண்டனர்.



பாகவதர் நடித்த முதல் நாடகம் பவளக்கொடி. ண்டு 1926. அதிகமான நாடகங்களை எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் இணைந்து நடித்தார். நடராஜ வாத்தியார் மற்றும் நரசிம்ம ஐயங்கார் போன்ற நாடக ஜாம்பவான்களிடம் நாடகப் பாடங்களைக் கற்றார் பாகவதர்.



அவர் எந்தக்குழுவிலும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. அவர் நடித்த நாடகங்கள் ஸ்பெஷல் நாடகங்கள் என்று அழைக்கப்பட்டன. பாகவதருக்கு ஒரு குறை இருந்தது. அது தனக்கு உத்வேகமாக இருந்த எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் ஒரு நாடகத்தில் இன்னும் நடிக்கவில்லையே என்பது. அந்த வாய்ப்பும் வந்தது. கிட்டப்பாவுடன் நாரதராக நடித்துக்கொண்டிருந்த எஸ்.ராதாகிருஷ்ண பாகவதருக்கு உடல்நிலை சரியில்லாது போனதால் அவரிடத்தில் கிட்டப்பாவுடன் பாகவதர் நடிக்கவேண்டும் என்று அழைப்பு வந்தது. நாடகம் நெருங்கும் சமயம் கிட்டப்பா என்ன நினைத்தாரோ பாகவதர் வேண்டாம் என்றும் ராதாகிருஷ்ண பாகவதர் உடல்நிலை தேறியதும் அவரை வைத்தோ நாடகம் நடத்தலாம் என்றும் சொல்லிவிட்டார். இது ஒரு பெருங்குறையாக பாகவதருக்கு இருந்தது. இது நடந்து சில நாட்களுக்குப்பின் செங்கோட்டையில் பாகவதர் நடித்த வள்ளி திருமணம் நாடகம் பார்க்க கிட்டப்பா சென்றிருக்கிறார். பாகவதர் தன் எல்லா நாடகங்களிலும் மேடையில் பிரவேசிக்கும்போது பாடி வரும் பிரவேசப்பாட்டு தியாகராஜ சுவாமிகளின் ஏதாவது ஒரு கீர்த்தனை. அன்று அவர் பாடி வந்து கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த ராமா நீயெட பிரேம ரசிகலுகு நீ நாம ருசி தெலியுனா. கிட்டப்பா தன்னையறியாது வாய்விட்டு உரக்கக் கத்தினார் - ஒன்ஸ் மோர். பாகவதரும் முழுப்பாடலையும் அவருக்காக மீண்டும் மீண்டும் - மூன்று முறை பாடியிருக்கிறார். மேடையேறி அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்ட கிட்டப்பா தான் அணிந்திருந்த பவளங்கள் பதித்திருந்த தங்கச் சங்கிலியை பாகவதர் கழுத்தில் அணிவித்து பாகவதர் பட்டத்துக்கு மிகவும் பொருத்தமானவர் இவரே என்று மனம் விட்டுப் பாராட்டிச் சென்றார். பாகவதரின் நாடகங்களுக்கு தேவுடு ஐயர் ர்மோனியம் வாசித்தார். பின்னாளில் பாகவதரின் பல படங்களுக்கு இசையமைத்த ஜி.ராமநாதனும் அவர் நாடகங்களில் ர்மோனியம் வாசித்து இருக்கிறார். (எஸ்.ஜி.கிட்டப்பாவின் எவரனியில் தேவுடு ஐயர்). பாகவதர் தமிழகத்தில் மட்டுமல்லாது தமிழர்கள் வசித்த உலகின் பல பகுதிகளிலும் தன்னுடைய நாடகங்களை எடுத்துச் சென்றார். பாகவதரின் நாடகங்களுக்கான பிராபல்யத்தை ஓரிரு சம்பவங்களின் வழி சொல்லலாம் என்று தோன்றுகிறது.



புதுக்கோட்டை பிரகதாம்பாள் தியேட்டரில் வள்ளி திருமணம் நாடகம் நடக்க இருந்தது. ஊரெங்கும் பெருமழை. கூட்டம் வராது என்று கான்டிராக்டர் ஓடி விடுகிறார். மழை வெள்ளம் தியேட்டருக்குள் பெருகுகிறது. நாளை நாடகம் போடுகிறேன் என்கிறார் பாகவதர். னால் மக்கள் அவரை விடவில்லை. ஊர் மக்கள் நடிகர்களுக்குக் குடை பிடிக்க பெருமழையில் நனைந்து கொண்டே விடிய விடிய அந்த நாடகம் புதுக்கோட்டையில் நடந்தேறியது. அதே போல சேலம் பொருட்காட்சியில் நாடகம் நடந்தபோது யிரக்கணக்கில் மக்கள். மின்சாரக் கம்பங்களில் தொங்கிக் கொண்டும் நாடகம் பார்க்கிறார்கள். அந்தக் களேபரத்தில் மின்சாரம் தாக்குண்டு இருவர் அதே இடத்தில் மாண்டு போகின்றனர். அவர்களின் குடும்பத்துக்குப் பெருந்தொகையை எவ்விதப் பத்திரிகை விளம்பரமும் இன்றி அளித்தார் பாகவதர். அதே போல ஈரோட்டில் ஒரு முறை அவரைச் சூழ்ந்த பெண்களின் கூட்டத்தைக் கலைக்க போலீசார் பெருத்த தடியடியைக் கையாளவேண்டியதாயிற்று.



நாடகத்துக்குச் சொன்னது போலவே தமிழ்த் திரையுலகின் ரம்ப காலகட்டங்களில் திரைப்படங்களை இசைமேதைகளே க்கிரமித்துக் கொண்டு இருந்தனர். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், வித்வான் ஸ்ரீனிவாச ஐயர், மன்னார்குடி நரசிம்ம ஐயங்கார், மாதிரிமங்கலம் நடேச ஐயர், மகாராஜபுரம் விசுவநாத ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், துறையூர் ராஜகோபால சர்மா, வி.வி.சடகோபன், எம்.எம்.மாரியப்பா, தண்டபாணி தேசிகர், கொத்தமங்கலம் சீனு. கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, என்.சி.வசந்தகோகிலம் போன்ற அரிய இசைமேதைகள். னால் இவர்களில் பலரும் திரையுலகில் இருந்து சிறிதாக மங்கிப்போயினர். னால் தன் திரையுலக வாழ்வு முழுதும் சீரான புகழ் பெற்று விளங்கியவர் பாகவதர் ஒருவரே. அவருடைய மேடை நாடகம் பவளக்கொடி 1934ல் திரைப்படமானது. அதைத் தொடர்ந்து பத்து ண்டுகள் திரும்பிப் பார்க்க நேரமின்றி திரைப்படங்களில் புகழைக்குவித்தார். வெறும் ஒன்பது படங்களில் அவர் அடைந்த புகழை இதுவரை வேறு எந்த நடிகனும் பெறவில்லை. அவர் நடித்த ஹரிதாஸ் சென்னையில் நான்கு தீபாவளிகளைக் கண்டது. அதே போல அவருடைய சிந்தாமணி திரைப்படத்தை வெளியிட்ட மதுரை முருகன் டாக்கீஸ் உரிமையாளர், சிந்தாமணி படத்தில் கிடைத்த லாபத்தை வைத்து இன்னும் ஒரு பெரிய திரையரங்கைக் கட்டினார். அதற்கு சிந்தாமணி என்றே பெயர் வைத்தார். பாகவதர் பெரிய நடிப்புத் திறன் வாய்ந்தவர் அல்ல. அவருடைய காலத்தில் நடிகர்கள் எல்லோருக்கும் பாடும் திறமை வேண்டியிருந்தது. அவர் கொடுத்த முதல் கிராமபோன் ரிகார்டு அவருடைய சாரங்கதாரா திரைப்படத்தில் வரும் சுருட்டி ராகத்தில் அமைந்த சிவபெருமான் கிருபை வேண்டும் என்னும் பாடல். நான் ஏற்கனவே சொன்னதுபோல, கர்நாடக இசைக்குத் தன் திரைப்படங்களில் பெரிதும் முக்கியத்துவம் அளித்தவர் பாகவதர். சாருகேசி ராகத்தை கர்நாடக இசைப்பிரியர்களின் இடையில் பிரபலம் க்கியவர் பாகவதரே. தியாகராஜ சுவாமிகளே ஒரே ஒரு கீர்த்தனையைத்தான் சாருகேசியில் அமைத்திருக்கிறார். அப்போது இந்த ராகம் கச்சேரிகளில் அவ்வளவாகப் பிரபலமாகாத ராகம். பாகவதரின் மன்மத லீலையை வென்றார் உண்டோ பாடலுக்குப்பின் சாருகேசியை முணுமுணுக்காத உதடுகள் தமிழகத்தில் இல்லை என்றானது. அதைத் தொடர்ந்து டிஎம்எஸ் பாடிய வசந்தமுல்லை போலே வந்து பாடலும் எம்.எல்.வசந்தகுமாரியின் டல் காணீரோவும் சாருகேசியில் துலங்கியது.



கச்சேரிகளில் பிரபலமாக இருந்த பல பாடல்களை அதே சாயலில் தன் திரைப்பாடல்களுக்காக பிரயோகித்தார் பாகவதர். தண்டபாணி தேசிகர் பாடிப் பிரபலப்படுத்திய ஜெகஞ்ஜெனனி சுகவாணி கல்யாணி என்னும் ரதிபதிப்பிரியா ராகத்தில் அமைந்த பாடலை மனம் கனிந்தே என்று தன் படத்தில் பிரபலப்படுத்தினார். ஜோன்புரி ராகத்தில் பாடப்படும் எப்போ வருவாரோ என்னும் பாடல் சத்வகுணபோதன் னது. (மணி ஐயர் சம்பவம்). பஜனை சம்பிரதாயத்தில் பிரபலமான காபி ராகத்தில் அமைந்த ஜானகி ரமணா (ஜேசுதாஸ்) கீர்த்தனையை தியானமே எனது மனது நிறைந்தது சந்திரபிம்ப வதனம் என்று பாடினார்.



ஒரே ராகத்தில் பலவித பாவங்களை அமைத்துப் பாடியதில் மன்னனாக விளங்கினார். சிந்துபைரவியில் வரும் வதனமே சந்திரபிம்பமோ என்று மிக லாவகமாக சந்தோஷ லாகிரியில் பாடிய அதே பாகவதர் அதே ராகத்தில் வன்பசி பிணி போன்றும் பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் புண்ணியமின்றி விலங்குகள் போல் என ழமான தத்துவார்த்தமான பாடல்களை மிகுந்த பாவத்துடன் பாடினார். வள்ளலைப் பாடும் வாயால் செஞ்சுருட்டியில் அமைந்த பக்திப் பாடல். அதே ராகத்தில் (முதல் பாதி பாடல்) சிருங்காரமான ராதே உனக்குக் கோபம் காதேடி. அவருக்கு மிகவும் பிடித்தமான கமாஸ் ராகத்தில் இருவகையான பத்ததியில் பாடியிருக்கிறார். ஒரு நாள் ஒருபொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும் -

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர்...

பாபநாசம் சிவன், பாகவதர் மற்றும் ஜி.ராமநாதன் போன்ற மூன்று இமயங்கள் ஒன்றிணைந்து திரை இசையில் காவியங்களை வடித்துக் கொண்டிருந்த காலம் அது என்று சொல்லலாம். தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே... கிருஷ்ணா முகுந்தா முராரே... போன்ற பாடல்கள் எக்காலத்தும் மனதில் ரீங்கரித்து நிற்பவை. மறைவாய் புதைத்த ஓடு, உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ... சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே.. ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே... அன்னையும் தந்தையும் தானே... மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய்... போன்றவற்றை இப்போது நான் சொல்லும்போதே எத்தனை பேர்களின் உதடுகளும் உள்ளங்களும் உச்சரித்து வருகின்றன என்பதை நாம் அறிவோம்.



புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் அவர் பலரின் மனங்களைக் கவர்ந்த காந்தமாக இருந்தார். அவரை நேரில் பார்த்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம் - வானில் இருந்து இறங்கி வந்த தேவனைப் போல விளங்கினார் என்று சொல்வார்கள். தங்கத் தட்டில் உணவினை உண்டார். அக்காலத்தில் அதிகம் பேசப்பட்ட மோட்டார் கார்களை விலைக்கு வாங்கினார். மிக விலை உயர்ந்த குதிரைகளை வைத்திருந்தார். ஒரு அரசனைப் போன்ற வாழ்க்கையை வாழ்ந்தவர் பாகவதர். அவருடைய ரசிகர்கள் பலர் அவருடைய காலடி மண்ணை சேகரித்தும் பாகவதர் கைபட்ட பொருட்களுக்கு முத்தம் கொடுத்தும் அன்பினைக் காட்டினார்கள். அவர் பயணித்த ரயில் வண்டிகளை ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நிறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவரைப் பாடவைத்து பின்னரே அந்த ஸ்டேஷனில் இருந்து ரயிலை வெளியே விட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. (ரயில்வே கிராசிங் சம்பவம்) தேவகோட்டைக்கு ஒரு கச்சேரிக்கு அவர் சென்றபோது அவரை பல குதிரைகளால் அலங்கரித்த கோச்சில் அமரவைத்து மேள தாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அந்த ஊர்வலத்தின் நீளம் இரண்டு மைல்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.கந்தர்வ கான ரத்னா. சப்தஸ்வர விஷாரதா. சங்கீத கலா சாகரா. ஏழிசை மன்னர், இசை நாடகப்பேரொளி, போன்ற பல விருதுகளை அடைந்தவர் பாகவதர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் பாகவதரின் பல படங்களில் மிகச் சிறிய வேடங்களில் தோன்றியிருக்கிறார். பாகவதர் மேல் பெரும் மதிப்பு வைத்திருந்தார். திருச்சியில் ஒரு கலையரங்குக்கு பாகவதர் பெயரை வைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார் எம்.ஜி.ர். திருச்சி வானொலி நிலையத்தில ஏ கிரேடு வித்வானாக கடைசி வரையில் இருந்தார் பாகவதர். திருச்சி அகில இந்திய வானொலியில் பணியாற்றிய திரு.சங்கரன் அவர்கள் மிக அற்புதமான பதிவு களை செய்து வைத்திருக்கிறார். சங்கீத கலாநிதி டி.எல்.வெங்கடராம ஐயர் முத்துசுவாமி தீட்சிதரின் நவாவர்ண கீர்த்தனைகள் குறித்து ய்வுகளை மேற்கொண்டவர். பாகவதர் புகழின் உச்சியில் இருந்தபோது அவரை சந்திக்க வேண்டும் என்று சைப்பட்டு திருச்சி வானொலி நிலையம் வழியாக அவரை சந்திக்கிறார். அப்போது பாகவதர் அவருக்கு தீட்சிதரின் நாககாந்தாரி ராகத்தில் அமைந்த ஸரசிஜநாப சோதரி கீர்த்தனையைப் பாடிக் காண்பிக்கிறார். அப்போது அந்தக் கீர்த்தனை அவ்வளவு பிரபலம் அடையாது இருந்தது. பாகவதர் பாடிக்காண்பித்த முறையும் ஸ்வராவளியும் ஐயரின் ய்வுக்கு மிகவும் பயன்பட்டதாக அவர் பதிவு செய்திருக்கிறார். பாகவதரை வெறும் சினிமாப் பாட்டுக்காரர் என்று இன்றும் கருதும் யாரேனும் மகானுபாவர்கள் இந்த சபையில் இருந்தால் அவர்களின் கவனத்துக்கு இந்தப் பதிவினை மிகவும் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.



புகழின் உச்சத்தில் இருந்த நேரத்தில் 1941ம் வருடம் எழுத்தாளர் கல்கி, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் மற்றும் சர்.ர்.கே.சண்முகம் செட்டியார் கியோர் பாகவதரையும் எம்.எம்.தண்டபாணி தேசிகரையும் சந்தித்து தமிழிசை வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கின்றனர். அன்றிலிருந்து பாகவதர் மேடைகளில் தெலுங்கு சமஸ்கிருதப் பாடல்களைப் பாடுவதை நிறுத்திக் கொண்டு தமிழிலேயே முழுக்கச்சேரியும் செய்யத் துவங்கினார். தமிழிசைச் சங்கத்துக்காக தேவாரப் பண்ணிசை ராய்ச்சிப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். மாநிலத்தின் பல இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழிசை மாநாடுகளில் கலந்து கொண்டார். 1943லிருந்து 1954வரை தொடர்ச்சியாக தமிழ் இசை விழாக்களில் கலந்து கொண்டார். அதே போல பாகவதரின் திருநீலகண்டர் படப்பிடிப்பு நடந்த நேரம். இரண்டாம் உலகப்போர் மூண்ட சமயம். காந்தி பிரிட்டிஷ்காரர்களுக்கு சாதகமாக இல்லை. னால் பாகவதர், உலகப்போர் வேறு இந்திய சுதந்திரப் போராட்டம் வேறு என்று கருதினார். எனவே அப்போது கவர்னராக இருந்த சர் ர்தர் ஹோப் பாகவதரிடம் போர் நிதி திரட்டித் தருமாறு கேட்டபோது ஊர்ஊராக நாடகம் நடத்தி அரசுக்கு நிதி திரட்டித் தந்தார். இதனால் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அவர் மீது எரிச்சல் உற்றிருந்தார். போர் சமயத்தில் நிதி திரட்டித் தந்த பாகவதரின் சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு அவருக்கு திவான் பகதூர் பட்டம் வழங்க முன்வந்தபோது பாகவதர் அதை பணிவுடன் மறுத்தார். மேலும் பிரிட்டிஷ் அரசு அவருக்கு திருச்சிக்குப் பக்கத்தில் பட்டாவாக அளிக்க முன்வந்த 100 ஏக்கர் நிலத்தையும் பெற்றுக்கொள்ள மறுத்தார். அப்போது சத்தியமூர்த்தி பாகவதர் பற்றிப் புரிந்து கொண்டார். ஒரு கூட்டத்தில் சத்தியமூர்த்தி தனக்குப் போடப்பட்ட மாலையை பாகவதருக்கு அணிவிக்க முன்வந்தார். அதைக் குனிந்து பெற்றுக்கொள்ள பாகவதர் முனைந்தபோது அவருடைய பட்டு அங்கவஸ்திரம் சரிந்து கீழே விழ, இன்று முதல் பட்டினை விட்டு கதர் கட்டிக்கொள்ளுங்களேன் என சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டாராம். அன்றிலிருந்து இறுதிவரை கதராடையை மட்டுமே உடுத்தினார் பாகவதர். (கே.சுப்பிரமணியம் - ரயில் பயணம் - வங்காளப் பெண்மணி - நகைகளை விட்டது). ஒரு முறை நேரு, காமராஜருடன் திருச்சியில் திறந்த ஜீப் ஒன்றில் ஊர்வலம் போயிருக்கிறார். அவர்களை வணங்க வாசலுக்கு வந்தார் பாகவதர். அப்போது திரண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்து வியந்த நேருவிடம் ''இது நமக்காகத் திரண்ட கூட்டம் என்று நினைத்துவிடாதீர்கள். இந்த மனிதருக்காகக் கூடிய கூட்டம் இது என்றிருக்கிறார். நேரு பாகவதரிடம் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் நிற்கும்படிக் கூற பாகவதர் அரசியலில் தனக்கு ஈடுபாடு இல்லை என்று சொல்லி மறுத்துள்ளார்.



பாகவதரின் ஹரிதாஸ் படம் 100 0 நாட்கள் பிராட்வே தியேட்டரில் ஓடியது. இந்த சாதனை இதுவரை தமிழ்த் திரைப்படங்களில் முறியடிக்கப்படவில்லை.

இந்த காலகட்டத்தில் இந்துநேசன் என்று ஒரு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. பிரபலங்களைப் பற்றிய அந்தரங்க செய்திகளை வெளியிட்டு அவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையை அதன் சிரியர் லட்சுமிகாந்தன் என்பவர் செய்து வந்தார். புகழின் உச்சியில் இருந்த பாகவதர் பற்றியும் என்எஸ்கே பற்றியும் தாறுமாறாக செய்திகள் வெளியிட்டு வந்தார். இருவரும் லட்சுமிகாந்தனை கண்டுகொள்ளவில்லை. 1944ம் ண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி காலை 10 மணியளவில் சென்னை வேப்பேரியில் ஒரு ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தபோது லட்சுமிகாந்தன் சிலரால் கத்தியால் குத்தப்பட்டார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட லட்சுமிகாந்தன் நன்றாகவே இருந்துள்ளார். சாதாரண நிலையில் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தவர் நவம்பர் 9ம்தேதி காலை மர்மமான முறையில் இறந்து போனார். இது நடந்து பல நாட்களுக்குப்பின் டிசம்பர் 27ம் தேதி தமிழிசைச் சங்கத்தில் கச்சேரி முடித்து வந்த பாகவதர் கைது செய்யப்பட்டார். கலைவாணரும் வீட்டில் கைது செய்யப்பட்டார்.



பாகவதர் மற்றும் கலைவாணர் கிய இருவரின் அந்தரங்க வாழ்க்கையை கொலையுண்ட லட்சுமிகாந்தன் எழுதியது மட்டுமே இவ்விருவரின் கைதுக்கு தாரமாக இருந்திருக்கிறது. இந்த வழக்கில் வி.டி.ரங்கசாமி ஐயங்கார், ராஜகோபாலாச்சாரியார், பிராண்டல், கே.எம்.முன்ஷி போன்ற மிகப்பெரிய வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவருக்கும் யுள் தண்டனை கிடைத்தது. இதை எதிர்த்து இருவரும் பிரிவி கெளன்சில் என்னும் மேல் கோர்ட்டுக்கு முறையீடு செய்ய இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி சென்னை உயர்நீதி மன்றத்துக்கு ணை பிறப்பிக்கப்பட்டது. வழக்கின் மேல் முறையீட்டில் எதிராஜ் என்னும் வழக்கறிஞர் திறமையாக வாதாடினார். மறுவிசாரணையில் பாகவதர் மற்றும் கலைவாணரை நிரபராதிகள் என அறிவித்து யுள் தண்டனை ரத்து செய்யப்பட்டு 1947 ஏப்ரல் 25ம்தேதி இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.



எந்தக் குற்றமும் செய்யாமல் யுள் தண்டனை விதிக்கப்பட்டு 2 ண்டுகள் 2 மாதங்கள் 13 தினங்கள் சிறையில் இருந்த பாகவதருக்கு அவர் வாழ்க்கையை பாதித்த பல சம்பவங்கள் நிகழ்ந்தன. ஹரிதாசுக்கு முன்னால் ஒவ்வொரு படமாக ஒப்புக்கொள்ளும் பழக்கம் இருந்த பாகவதர் தயாரிப்பாளர்களின் நெருக்கடி தாளாது சுமார் ஒன்பது படங்களை ஒப்புக்கொண்டு முன்பணம் வாங்கியிருந்தார். முன்பணம் கொடுத்த தயாரிப்பாளர்கள் அனைவரும் பாகவதருக்கு தீவாந்திர தண்டனை கிடைக்கப்போகிறது - அவர் எங்கே நடிக்கப்போகிறார் என்று கொடுத்த பணம் கேட்டு நெருக்க ரம்பித்தனர். பாகவதர் உறவினர்களை சிறைக்கு அழைத்து தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுக்கொண்டார். அப்படியே அவர்களும் செய்தார்கள். பாகவதர் விடுதலையானதும் மீண்டும் பணப்பெட்டிகளுடன் முதலாளிகள் சிறைக்குப் படையெடுத்தனர். அவர்களிடம் இனி தான் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்து விட்டு வடபழனி முருகன் கோவிலுக்கு நேராகச் சென்று முருகனை வணங்கினார். சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்ததும் அவரது நெடுங்கால நண்பரான அண்ணாத்துரை தான் கதை வசனம் எழுதிய சொர்க்கவாசல் படத்தில் நடிக்குமாறு பாகவதரை அழைத்தார். தான் த்திகன் என்றும் நாத்திகவாதம் பேசும் அண்ணாத்துரையின் படங்களில் தன்னால் நடிக்க இயலாது என்று பணிவாக மறுத்தார். அதேவேளையில் அண்ணாத்துரையை தேடிச் சென்று அவருக்காக அவருக்குப் பிடித்த வேதாந்தப் பாடல்களை பாடிக்காட்டுவார்.

சிறைவாசத்துக்குப்பின் பாகவதர் சற்று பணக்கஷ்டத்தில் இருப்பதைகக் கண்டு சிவாஜிகணேசன் நடித்த அம்பிகாபதி படத்தில் கம்பர் வேடத்தில் சிவாஜி கணேசனை விட 10000 ரூபாய் அதிகம் கொடுத்து நடிக்க அவரை அழைத்தபோது மறுத்துவிட்டார் பாகவதர்.



அப்போது நடிகர் டி.ர்.மகாலிங்கம் தன் மகன் சுகுமாரனை பள்ளியில் சேர்க்க ஒரு விழா எடுத்தார். அந்த விழாவில் பாகவதர் பாடினார். பாகவதருக்கு சன்மானமாக 1000 ரூபாயை தட்டில் வைத்துக்கொடுத்தார் மகாலிங்கம். பாகவதர் அந்த யிரம் ரூபாயுடன் ஒரு ரூபாயை வைத்து சுகுமாரனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறார். சிறைவாசத்துக்குப் பின் 1948ல் பாகவதர் ராஜமுக்தி என்னும் படத்தைத் தயாரித்தார். புதுமைப்பித்தன் அதற்குக் கதை வசனம் எழுதினார். படம் படுதோல்வியடைந்தது. அவருடைய பதினோராவது படம் அமரகவி. சுமாரான வெற்றியடைந்தது. அவருடைய இறுதி மூன்று படங்கள் சியாமளா, புதுவாழ்வு, சிவகாமி கிய மூன்று படங்களும் படுதோல்வியடைந்து அவருடைய சினிமா உலக வாழ்க்கை அஸ்தமனம் பெற்றது. பாகவதரின் சினிமா வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்கள் 1947லிருந்து 1952 வரை நிகழ்ந்த பெருமளவு மாற்றங்கள். நிலப்பிரபுத்துவம் சார்ந்த மதிப்பீடுகள், தெய்வபக்தி, மாட்டு வண்டி ஓட்டுபவரும் கர்நாடக சங்கீதம் பாடும் ரசனை, இரவு முழுவதும் நாடகம், கச்சேரி கேட்கும் வழக்கம் என்பனவெல்லாம் மாற்றம் அடைந்து திராவிட இயக்க மதிப்பீடுகளும், திராவிட இயக்கம் சார்ந்த ரசனைகளும் முன்னணிக்கு வந்ததே பாகவதரின் சினிமா வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும். மேலும் அந்தக் காலகட்டத்தில்தான் சினிமா தொழில் ரீதியாக பெரும் மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. பின்னணி பாடும் முறை வழக்கத்துக்கு வந்தது. பாடகர் மட்டுமே நடிகர் கமுடியும் என்னும் வழக்கம் முடிவுக்கு வந்தது. தமிழ் சினிமாவில் அடிப்படையான மாற்றங்கள் பல வந்தன.



சினிமாவை விட்டு இசைக்கச்சேரிகளில் கவனம் செலுத்த விரும்பினார் பாகவதர். னால் தமிழில் மட்டுமே பாட வேண்டும் என்கிற அவருடைய பிடிவாதத்துக்கு இடம் கொடுப்பவர்கள் யாரும் இல்லாமல் போனார்கள். எனவே சினிமா, இசை என்ற இரண்டு இடங்களிலும் அநியாயமாகப் புறக்கணிக்கப்பட்ட பாகவதர் தன் நண்பரான சேலம் நாகரத்தினத்துடன் யாத்திரை கிளம்பினார். வழியில் அவருக்குக் கண்பார்வை போனது. புட்டபர்த்தி சென்று பாபாவை வழிபட்டார். அவருடைய நண்பர் நாகரத்தினம் பாபாவிடம் ''எனது நண்பர் மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறார் என்று சொல்ல றுமாதங்களில் எல்லாம் முடிந்து போகும் என்கிறார் பாபா. பாபாவை தரிசனம் செய்ய ஐந்து நிமிடங்கள் பார்வை வேண்டுமே என்கிறார் பாகவதர். பார்வை கிடைக்கிறது. தரிசனம் னதும் போதுமா என்று கேட்கிறார் பாபா. போதும் என்கிறார் பாகவதர். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறார்.

1959ம் ண்டு நவம்பர் முதல் தேதி நோய்வாய்ப்பட்டிருந்த பாகவதர் தன் இறுதி மூச்சினை விடுகிறார்.



மிகப்பெரிய சகாப்தம் ஒன்று முடிவுக்கு வந்தது. தன்னுடைய பாடல்களில் - இசையில் இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகிறார் பாகவதர்.

முடிக்கும் முன் மனவேதனையுடன் ஒரு விஷயத்தை சொல்லி முடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. லட்சுமிகாந்தன் கொலை இன்று வரை முடிவுக்கு வராத ஒரு மர்மமாகத்தான் உள்ளது. வழக்கை மறுவிசாரணை செய்த நீதிபதிகளில் ஒருவர் குறிப்பு ஒன்றினை எழுதியிருக்கிறார் -பாகவதருக்கு எதிராக சாட்சியமாக சமர்ப்பிக்கப்பட்ட, கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் அந்தக் கத்தியால் ஒரு எலியைக் கூடக் கொல்ல முடியாது''.



Komal swaminathan.























ராகவன் தம்பி





கோமல் என்னும் மாமனிதர் பாகம்-1



My Photo

பழகிய அனைவருக்கும் மிகவும் அற்புதமான ஒரு நண்பராகத் திகழ்ந்தவர் கோமல். நட்புக்கு அற்புதமான ஒரு மரியாதையையும் கௌரவத்தையும் தந்தவர் கோமல். ஏதோ ஒரு காரியத்துக்காக மட்டுமே நட்பினை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் கொச்சைப் படுத்தாமல் நட்புக்கு ஒரு அழகு சேர்த்தவர் கோமல். இங்கு எழுதுவதற்காகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு சம்பிரதாயத்தின் பாற்பட்டோ இல்லாது கோமலைப் பற்றிய பல தனிப்பட்ட நினைவுகள் நெகிழ்ச்சியைத் தருவன. பல நேரங்களில் கண்ணீரை வரவழைப்பவை.





தில்லிக்கு வருவதற்கு முன்னர், இடை எழுபதுகளில் ஒரு குளிர்நாளில் கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகம் கிருஷ்ணகிரி அண்ணா கலையரங்கில் (இப்போது அது வேறு ஏதோ பெயரில் திரையரங்காக மாறி விட்டது). நாடகம் ரொம்பவும் புதுமையாக, என்னவென்று சொல்லத் தெரியாமல் ரொம்பவும் பிடித்துப்போனது. இறுதியில் கோமல் சுவாமிநாதனை மேடையில் அறிமுகப் படுத்தினார்கள். அருகில் சென்று வணக்கம் சொல்லவேண்டும் என்று ஆசையாக இருந்தது. இருவார தாடியுடன் அறிவுஜீவியாக மாற முயற்சித்துக் கொண்டிருந்த நண்பன் ஒருவன், ""அந்த ஆளு கம்யூனிஸ்டு, கிட்டப்போனா ஏதாவது கன்னாபின்னான்னு கேள்வி கேட்டு கடிச்சிடுவான். உனக்கு இதெல்லாம் தேவையா?'' என்று பயமுறுத்தவே எம்.ஜி.ஆர் படம் ஓடிக்கொண்டிருந்த தாரா டாக்கீûஸ நோக்கித் தலைதெறிக்க ஓடிப்போய்விட்டேன். மறுநாள் காலையில் ரவுண்டானாவில் அந்த நாடகத்தில் நடித்த வீராச்சாமி (""எனக்கொரு உம்ம தெரிஞ்சாகணுஞ்சாமி'') மற்றும் சில நடிகர்கள் மாம்பழம் விற்றுக்கொண்டிருந்த கவுண்டச்சியுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். வீராச்சாமியிடம் மெல்லப் பேச்சைக் கொடுத்து, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். கோமலைப் பார்க்க முடியாத என் குறையையும் விலாவரியாக அவரிடம் சொன்னேன். அவர் (பின்னாளில்) முதல் மரியாதை படத்தில் பேசிய அதே தொனியில், அதே குரலில், எந்தப் படுபாவிப்பய சொன்னான் தம்பி. அவரு எவ்வளவு தங்கமான ஆளு தெரியுமா?நீ வேணும்னா அவர் கிட்டே ஒரு தடவை பேசிப்பாரு. ஆயுசு பூரா உன்கிட்டே அவரு உசுரை விடுவாரு. பழகிப்பாரு. அவரைப் பத்தித் தெரியும்'' என்றார்.





















வீராச்சாமி சொன்ன ""உம்ம'' யைத் தெரிந்து கொள்ளப் பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. தொண்ணூறுகளின் துவக்க வருடங்களில் ஒன்று. தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலர் ராஜாமணி, கோமல் தில்லி வந்திருப்பதாகவும் அன்று மாலை கோமல் ஆசிரியராக சேர்ந்துள்ள சுபமங்களா பத்திரிகையின் அறிமுக விழா வித்தல்பாய் பட்டேல் ஹவுசில் இருப்பதாகவும் முடிந்தால் அந்த இதழ் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசலாம் என்றும் சொன்னார். கையில் ஓரிரு சுபமங்களா இதழ்களையும் கொடுத்துச் சென்றார். ஒருவித அலட்சியத்துடன் படிக்கத் துவங்கினேன். கையில் எடுத்ததும் ஒரு விஷயம் புரிந்தது. எவ்விதக் குழுமனப்பான்மையும் இல்லாது சகல கோஷ்டிகளுக்கும் இடமளித்திருந்தார் கோமல். அதில் ஒன்றிரண்டு குப்பைகளும் இருந்தன. அவை அப்போது வெகுஜன இதழ்களில் மிகவும் பிரபலமாக இருந்த குப்பைகளின் எச்சங்கள். இது போதாதா? எனக்கு சிறுபத்திரிகைகளின் அறிமுகங்கள் கிடைத்து சில வருடங்கள் ஆகியிருந்த நேரம். சிறுபத்திரிகை எழுத்தாளப் பெருந்தகைகளின் சகவாசத்தால் அருளப்பட்ட ஞானஸ்நானம். நவீன நாடகப் புலவர்களுடன் சகவாசம். அதன் விளைவாகக் கொஞ்சம் பெரிய மனிதனாகக் காட்டிக் கொள்ளப் பிரத்யேகமாக வளர்க்கப்பட்ட தாடி. வாயில் எப்போதும் புகையும் சிகரெட். ஜோல்னாப்பை. பையில் கொஞ்சம் புத்தகங்கள். அறைகுறை ஞானம். கண்களில் எல்லாவற்றின் மீதும் ஒரு அலட்சியம். இவை அனைத்தையும் சுமந்து கொண்டு வித்தல் பாய் பட்டேல் ஹவுஸ் நோக்கிப் படையெடுத்தேன். பேசிய எல்லோரும் கோமலை வாழ்த்தினார்கள். அவருடைய முயற்சியை வாழ்த்தினார்கள். தில்லித் தமிழர்களின் வழக்கப்படித் தங்களைக் கொஞ்ச நேரம் புகழ்ந்து கொண்டு மிச்சம் கிடைத்த நேரத்தில் தங்களைப் போலவே கோமலும் இருப்பதற்கு ஆச்சரியம் தெரிவித்துக் கொண்டு அவரை வாழ்த்தினார்கள். அடுத்து என்முறை வந்தது. கோமலின் முயற்சியை ஏதோ போனால் போகட்டும் என்று பாராட்டி விட்டு சிறுபத்திரிகை வாசக மரபுப்படி கொஞ்சம் அவ நம்பிக்கையினையும் தெரிவித்து, பல நல்ல சிறுபத்திரிகை ஞானவான்கள் எழுத முனைந்திருக்கும் இந்தப் பத்திரிகையில் குப்பைகளையும் தெளிக்க கோமல் முன்வந்திருப்பதை கண்டித்து விட்டு அடுத்த சிகரெட் பிடிக்க வாசல் நோக்கி ஓடிப்போனேன். கோமல் தன் முறை வந்தபோது மிகவும் அற்புதமாக சிரித்துக்கொண்டே என் ஐயப்பாடுகளுக்கும் அச்சத்துக்கும் மிகத் தெளிவாக பதிலளித்தார். இதில் பயப்பட ஒன்றுமில்லையென்றும், தான் ஆசிரியப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பிருந்தே சில படைப்புக்கள் வந்து கொண்டிருப்பதால் அவற்றை உடனே நிறுத்துவது நாகரிகமாக இருக்காது என்பதால் இன்னும் சில இதழ்களில் அவை வரும் என்றும் உடனடியாக நிறுத்துவது கடினம் என்றும் சொன்னார். அந்தப் பெருந்தன்மையைப் புரிந்துகொள்ள பல வருடங்கள் பிடித்தன எனக்கு என்றுதான் சொல்லவேண்டும். அவர் செய்த காரியத்தின் மாண்பு புரிபட எனக்குப் பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.





















கூட்டம் முடிந்ததும் அவர் என்னிடம் சற்று மனத்தாங்கலாக இருப்பார் என்று கற்பனை செய்து கொண்டு சற்று பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தேன். என்னைத் தேடிக்கொண்டு வந்தார் கோமல். கண்களில் எந்தக் குரோதமோ, விரோதமோ இல்லை. மிகவும் நட்புணர்வுடன் கைகளைப் பிடித்துக் கொண்டு ""நாடகம் எல்லாம் போடறீங்கன்னு கேள்விப்பட்டேன். சென்னை வர்றப்போ கண்டிப்பா சந்திக்கணும்'' என்று சொல்லி விட்டுச் சென்றார். அந்த ஆதுரம் மனதுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. கொஞ்சம் புடுங்கித்தனமாகப் பேசியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. அந்த சிரிப்பு என் முகத்தின் முன்னே உறைந்து ரொம்ப நாட்களாக என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தது. சாதிப்பவர்கள் முகங்களில் மலரும் சிரிப்பு அது. சுபமங்களா இதழைத் தொடர்ச்சியாக என் முகவரிக்கு அனுப்ப ஆரம்பித்தார்.





















என் இயக்கத்தில் சி.சு.செல்லப்பாவின் ""முறைப்பெண்'' நாடகம் தில்லியில் மேடையேறியது. வெங்கட்சாமிநாதன் எழுதிய விமரிசனத்தை பெரிய படங்களுடன் சுபமங்களாவில் பிரசுரித்திருந்தார் கோமல். சென்னைக்கு வேறு வேலையாக சென்றபோது கோமலையும் மற்ற நண்பர்களையும் பார்க்க சுபமங்களா அலுவலகம் சென்றேன். ""எல்லாரையும் கடுமையாக விமர்சிக்கிற வெங்கட்சாமிநாதனே உங்க நாடகத்தைப் பத்தி நல்லா எழுதியிருக்கார். நீங்க ரொம்ப குடுத்து வச்சவர். அப்போ அதுலே கண்டிப்பா விஷயம் இருக்கணும். மதுரைக்குப் போய் செல்லப்பாவைப் பார்ப்பீர்களா?'' என்று கேட்டார். ""அவர் கோபிச்சுக்குவார். என் நாடகத்தை நீ கண்டிப்பா கெடுத்து இருப்பே என்று ஏற்கனவே என்னிடம் ஒருமுறை சொன்னார். வெங்கட்சாமிநாதனையும் திட்டுகிறவர் அவர். எங்கேயோ போகிற எதையோ எடுத்து எங்கேயோ விட்டுக்கொள்ளும் தைரியம் இப்போதைக்கு எனக்கு இல்லை'' என்று சொன்னேன். ""அதெல்லாம் இல்லை. நீங்க கண்டிப்பா செல்லப்பாவை சந்திக்கணும். நானும் அவரிடம் சொல்றேன். முறைப்பெண் நாடகம் கண்டிப்பாகத் தமிழ்நாட்டுக்கு வரணும்'' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். சுபமங்களாவில் அவர் தொடர்ச்சியாக எழுதி வந்த ""பறந்து போன பக்கங்கள்'' பகுதியிலும் என்னைப் பற்றியும் முறைப்பெண் நாடகத்தைப் பற்றியும் எழுதினார். தொலைபேசியில் பேசும்போதும் அடிக்கடி ""உங்கள் நாடகத்தை தமிழ்நாட்டுக்கு எப்படியாவது கொண்டு வரணும்'' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.





கோமலின் தீவிரம் மதுரை நிஜ நாடக விழாவில் கலந்து கொள்ள மு.ராமசாமி அனுப்பிய அழைப்பில் தெரிந்தது. மு.ராமசாமியிடமும் பார்க்கும் நண்பர்கள் எல்லோரிடமும் முறைப்பெண் நாடகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் அபாரமான நம்பிக்கையினைத் தெரிவித்திருக்கிறார் கோமல் என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன்.





















அது மட்டுமல்ல. யதார்த்தா நாடகக் குழு மதுரையில் சென்று இறங்கியதுமே, ராஜா அண்ணாமலை மன்றத்தில் எங்களுக்காகக் காத்திருந்தார் கோமல். அவர் என்னைக் கேட்ட முதல் கேள்வி þ செல்லப்பா மதுரையில்தான் இருக்கார். அவரை நாடகத்துக்கு வரச்சொல்லி கடிதம் போட்டீங்களா? என்றார். நான் போடவில்லை என்று சொன்னேன். ""நல்லா இருக்காது. நீங்க அவரைக் கட்டாயம் நாடகத்துக்குக் கூப்பிடணும். அவரும் சந்தோஷப்படுவார்'' என்று வற்புறுத்தினார் கோமல். மு.ராமசாமி, விழாவுக்காக ஓடியாடி உழைத்துக் கொண்டிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் தோழரை அனுப்பி செல்லப்பாவின் முகவரியைக் கொடுத்து மாலையில் நடைபெறும் நாடகத்துக்குக் கலந்து கொள்ள அவரை அதே ஆட்டோவில் அழைத்து வரச்சொன்னார். அந்தத் தோழர் போன வேகத்தில் பேயறைந்தது போலத் திரும்பி வந்தார். ""என்னங்க இது, ஒரு கெட்ட கிழவர் கிட்டே போய் என்னை அனுப்பிச்சீட்டீங்களே. அவர் ஆளை உண்டு இல்லைன்னு பண்ணிட்டார். எனக்கு என்ன வண்டி எல்லாம் அனுப்பி தாஜா பிடிக்கிறானா? அவன் யார் என்னைக் கூப்பிடுவதற்கு? நான் அங்கெல்லாம் வரமாட்டேன் என்று போய்ச் சொல்லு'' என்று கோபித்துக் கொண்டதாகச் சொல்லி வருத்தப்பட்டார். அந்தத் தோழரின் முகத்தில் ""எங்கே போய் என்னை மாட்டிவிட்டாய்?'' என்கிற பாவனை ரொம்ப நேரம் இருந்தது. ""என்ன செல்லப்பா வரலையா?'' என்று கேட்டார் கோமல். இல்லையென்றும், நடந்த கதையையும் சொன்னேன். விருட்டென்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு செல்லப்பாவைப் பார்க்கக் கிளம்பினார் கோமல். ஒரு பலியாட்டை பார்ப்பது போல அவரைப் பரிதாபமாகப் பார்த்தோம். அதே ஆட்டோ தோழரை தாஜா பிடித்து தைரியம் சொல்லி அவருடன் கிளம்பினார் கோமல். சிவதாணு போன்ற மூத்த கலைஞர்களும் அவருக்காகக் கொஞ்சம் பரிதாபப்பட்டார்கள். ஆனால் போன வேகத்தில் திரும்பி வந்தார் கோமல். உடன் குழந்தை போல் சிணுங்கிக்கொண்டே செல்லப்பா. செல்லப்பா நேராக என்னிடம் வந்து ""என் நாடகத்தை நீ எப்படிக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி இருக்கேன்னு பார்க்கத்தான் வந்திருக்கேன். கோமல் கூப்பிட்டாருன்னு வரலை'' என்று சொன்னார். (இப்போது கோமலை விட்டு செல்லப்பாவுடன் கதையை நகர்த்திப்போகிற ஆபத்து இருக்கிறது. என் பிறவிக்குணம் இது. ஜாக்கிரதையாகத் தான் இருக்கிறேன். செல்லப்பா கதையை வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.













வியாழன், 23 ஜூன், 2011

Deisy

டெய்சி அக்காவும் முருகா போலீஸும் My Photo




ஒரு ஞாயிறு அதிகாலை எங்கள் வீட்டின் எதிர் வீட்டுக்கு குடி வந்தது அந்த குடும்பம். அம்மா,அப்பா, ஒரு பையன், ஒரு பெண் என்று அளவான குடும்பம். அந்த சிறிய ஊருக்கு சற்று பொருந்தாத நடை,உடை அமைப்புடன் இருந்தார்கள் அவர்கள். பேங்க் உத்தியோகம் காரணமாக மாற்றலாகி அந்த ஊருக்கு வந்திருந்தனர். அவர்கள் வீட்டு வாசலில் சிறுமிக்கே உரிய ஆவலுடன் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். அந்த பெண்ணின் பெயர் ஏஞ்சலா டெய்சி. பெயரைப் போலவே ஆளும் தேவதைதான். கதாசிரியர்கள் கதைகளில் வர்ணனை செய்யும் அழகின் இலக்கணங்களுடன் இருந்தார். நான் நிற்பதை பார்த்து டெய்சியின் அண்ணன் என்னை உள்ளே அழைத்தார்.வெட்கத்துடன் தயங்கி நின்றேன். எட்டிப் பார்த்த டெய்சி அக்கா என் கையைப்பிடித்து உள்ளே அழைத்து சென்று கைகளில் ஆரஞ்சு மிட்டாய்களை திணித்தது. ஓட்டமாய் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். முன்னே பின்னே தெரியாதவங்களிடம் எதுவும் வாங்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல என்று முதுகில் இரண்டு போட்டார்.



அவர்களது தோற்றத்தைப் பார்த்து யாவரும் நெருங்கவில்லை என்று நினைக்கிறேன். அவர்களோ யாரைப் பார்த்தாலும் மானாவாரியாக சிரித்து வைத்தனர். டெய்சி அக்காவின் சிரிப்பு அந்த கால கே.ஆர்.விஜயாவை நினைவுபடுத்தியது. இப்போது உள்ள அக்கபோர்கள் அப்போது இல்லாததால் இரண்டாவது நாளே டெய்சி அக்கா எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்து விட்டது. அக்கா நான் படிக்கும் பள்ளியில் சேர்ந்தது எனக்கு ஏனோ சந்தோஷமாக இருந்தது.(அக்கா கல்லூரியில் படிக்கும் பெண் என்றே நினைத்திருந்தேன்). அடுத்து வந்த நாட்களில் அக்காவுடன் சேர்ந்து பள்ளிக்கு செல்வது இயல்பானது. பள்ளிக்கு போகும் போது அக்கா என் கையைப் பிடித்தபடி ஏதாவது கதைகள் அல்லது அவர்கள் ஊரைப்பற்றி பேசிக்கொண்டு வரும். அக்காவின் கதை சொல்லும் திறமைக்கு நிச்சயம் அது ஒரு நல்ல ஸ்க்ரீன் ப்ளே ரைட்டர் ஆகி இருக்கலாம். காட்சிகளை கண்முன் நிறுத்திவிடும். நான் ஒரு இனம் புரியாத பெருமிதத்துடன் நடந்து வருவேன். அக்காவின் கலகலப்பான சுபாவத்தால் விரைவிலேயே எல்லோரிடமும் நெருக்கமாகி விட்டனர் அவர்கள். அதன் பலனாக அவர்கள் வீட்டில் அடிக்கடி ஏதாவது வித்தியாசமான பலகாராங்களை செய்து அக்கம் பக்கத்தினரை சோதித்து கொண்டிருந்தார்கள். பிரியாணி தொடங்கி கேக் வரை எங்கள் ஊருக்கு அரிதான அயிட்டங்களை சர்வசாதாரணமாக போட்டு தாக்கினர்! மனிதர்கள் மட்டுமின்றி தெருவில் போகும் மாடு, நாய்களுக்கும் கஞ்சி, தண்ணி எல்லாம் உண்டு. காக்கை குருவியையும் விடுவதில்லை.



ஞாயிற்றுகிழமை பெரும்பாலும் அக்காவுடன்தான். தினமும் அக்கா அதிகாலையில் பெட்ரூம் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து கிண்ணத்தில் பாலை வைத்து இங்க் பில்லர் மூலம் அணில்களுக்கு பாலூட்டும். புசு,புசுஅணில்கள் அக்காவின் மடி மீதும் தோள் மீதும் ஓடியாடும். ஞாயிற்று கிழமைகளிலும், விடுமுறைகளிலும் அந்தக் காட்சியைக் காண ஓடிவிடுவேன். எத்தனை வயதானாலும் மறக்க முடியாத அழகான காட்சி அது. பின்னர் சர்ச். பிற்பகலில் மரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுவோம்.



அந்த நாட்களில் எங்கள் ஊரில் முருகா என்று ஒரு பிச்சைகாரான் இருந்தான். சிவப்பேறிய கண்களும்,ஒட்டிய வயிறும், சடைப்பிடித்து தொங்கும் செம்பட்டை முடியும்,தாடியுமாக பயப்படுத்தும் தோற்றத்துடன் இருப்பான். பிள்ளைகள் மட்டுமன்றி, பெண்களே அவனைப் பார்த்து பயப்படுவார்கள். போலீஸ் என்ற வார்த்தையைக் கேட்டால் போதும் அசிங்கமாக திட்ட ஆரம்பித்துவிடுவான். வேறு எதுவும் பேசவராது! போலீஸிடம் அடிவாங்கி மன நிலை பிழன்றவன் என்று ஒரு சாரரும், போலீஸீல் வேலை பார்த்து பைத்தியமாகி வேலை இழந்தவன் என்று மற்றவர்களும் ஊகங்களை கருத்துக்களாக சொல்லினர். அடர் நீலம் அல்லது காக்கி வண்ணத்தில் ஒரு அரை டிராயர் அணிந்திருப்பான். கையில் ஒரு அலுமினிய சட்டி. அவன் பிச்சை எடுக்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு வீட்டின் முன் நின்று கேட்பது எல்லாம் கிடையாது. இவனைப் பார்த்தால்தான் தெருவே காலியாகிவிடுமே! ஆங்காங்கே வாசலுக்கு முன் சிறிது நேரம் அமர்ந்திருப்பான். யாராவது ஏதாவது கொடுத்தால் உண்பான் அவ்வளவே! அடம்பிடிக்கும் குழந்தைகள் அனைத்தும் அவன் பேரைக் கேட்டால் அடங்கி விடும். நான் எப்போதும் மறைந்திருந்தே அவனைப் பார்ப்பேன். பெரிய பையன்கள் மறைந்திருந்து முருகா போலீஸ் என்று கத்தி அவனை டென்ஷன் ஆக்குவார்கள். இவனும் குரல் வரும் திசையைப் பார்த்து கல்லெறிந்து கத்துவான்.



டெய்சி அக்கா வீடு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டைத் தவிர அந்த தெருவில் உள்ள வேறு யார் வீட்டின் முன்பும் அவன் உட்காருவதில்லை. காரணம் அவர்கள் சாதம்,குழம்பு,காயோடு சேர்த்து கொடுத்து விடுவார்கள். ஒரு நாள் அக்கா அவனிடம் ஏதோ பேசியதை தொலைவிலிருந்து பார்த்தேன்.மறுநாள் அக்காவிடம், அவங்கூட பேசாதே புடுச்சுட்டு போய்டுவான், என்றேன். சே!அவன் பாவம், நல்லவன். உனக்கு பிடிக்காததை செய்தாலோ, சொன்னாலோ உனக்கு கோபம் வருமில்லையா? அது போல்தான் அவனும் என்றது. அவன் பேசுவது புரியாவிட்டாலும் அவர்கள் வீட்டில் அவனோடு உரையாடுவார்கள். ஒரு முறை டெய்சி அக்கா அவர் அண்ணனிடம் சொல்லி, அவனைக் கூட்டிப் போய், தலையை மொட்டை அடித்து தாடி எல்லாம் மழித்துவிட்டனர். எப்போதும் கோபமாக இருக்கும் முருகா, அக்காவைக் கண்டால் யேசுவின் கைகளில் இருக்கும் ஆடு போல் ஆகிவிடும். அவர்கள் சொல்லும் சின்ன,சின்ன வேலைகளை அமைதியாக செய்யும். கிறிஸ்மஸ் அன்று புது லுங்கியும்,சட்டையும் வாங்கிக் கொடுத்தனர்.



பின் ஒரு மழைக்கால மாலைப் பொழுதில் அவர்கள் வீட்டை காலி செய்து எல்லோரிடமும் விடை பெற்று ரயிலடிக்கு சென்ற போது பெட்டி படுக்கைகளை தூக்கிகொண்டு முருகாவும் கூடவே சென்றது. ரயில் புறப்படும் வரை அதற்கு ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் ரயிலில் ஏறி அது புறப்பட ஆரம்பித்தும் கத்தி அழுது கொண்டே ரயிலுடன் ஓட ஆரம்பித்து. அக்காவின் கண்களிலும் கண்ணீர். அந்தக் காட்சி திரைப் படத்தில் வரும் சோகமான க்ளைமாக்ஸை போன்று இருந்தது. அன்றிலிருந்து கதைகளில் இறக்கைகளும், நட்சத்திரமும் கொண்ட தேவதைகளைப் பற்றி படிக்கும் போது அந்த தேவதைகள், டெய்சி அக்காவின் சாயலுடனே காட்சியளித்தனர்.

புதன், 22 ஜூன், 2011

Kanmani gunasekaran.

முந்திரிக்காட்டின் பாடல் : கண்மணி குணசேகரன்






சென்னை ஓவியக் கல்லூரி முதல்வராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓவியக் கலைஞர் சந்ரூ அற்புதமான ஆசான். அவருடனான ஒவ்வொரு சந்திப்பிலும் புதிதாக எதையேனும் கற்றே வந்திருக்கிறேன். நேர்மறையாக, வெளிப்பார்வைக்கு அழகான நாயகர்காலச் சிற்பங்களைவிட முற்காலச் சோழர்கள், பல்லவர்களின் கலைப் படைப்புகள் எவ்வாறு கலையழகும், கலையமைதியும் கூடிவரப் பெற்றிருக்கின்றன என்பதை விளக்குவதானாலும், அல்லது எதிர்மறையாக நவீன ஓவியத்தில் இரண்டரக் கலந்திருக்கும் போலிகளைச் சாடி, நையாண்டிச் செய்வதானாலும், அல்லது ஓவியத்தின் தொழில் நுட்பக் கூறுகளைச் சொல்லித் தருவதானாலும் முற்றிலும் செயல்முறையாய் வரைந்தே விளக்கி விடுவார். தாளில் சரசரவென வந்திறங்கும் கோடுகளையும், பரவும் வண்ணங்களையும் கவனிப்பது ஒரு அற்புதமான அனுபவம்!



ஒருமுறை நாற்று நடும் பெண்களைப் பற்றிய ஒரு புகழ் பெற்ற ஓவியத்தைக் காட்டி, ”இதை வரைஞ்ச ஆளைப் பற்றி என்னப்பா நினைக்கிறே?” என்றார். ஓவியத்தைக் கவனித்தேன். வண்ணங்கள் இசைவாயும், கோடுகள் அழகாகவும் இருந்ததன. “எனக்குப் பிடித்திருக்கிறது” என்றேன். ஏனென அவர் வினவியபோது எனக்குத் தோன்றிய காரணங்களைச் சொன்னேன். சிரித்துவிட்டுச் சொன்னார், “யேயப்பா! அழகு, இசைவு, எந்தப் பாணி ஓவியம், எல்லாம் பெரிய வார்த்தைகளா இருக்கேப்பா! போகட்டும் புத்தகத்தில இந்த விமர்சனப் பய என்னவெல்லாம் பினாத்தி இருக்கான் பாரு! எல்லாம் கெடக்கட்டும்ல, கிராமத்தான் இல்லையாப்பா நீ! சரி கெடக்கட்டும், நாத்து நடும்போது அவங்க கால்களைக் கவனிச்சிருக்கியாப்பா நீயி?” ஆமாம் எனத் தலையசைத்தேன். “எப்படி? ”என்றார். கொஞ்சம் பதற்றமாகி, “புரியலை ஸார்!” என்றேன். ”நடவுக்குப் போற பொம்பளைங்க சேலை முட்டிக்கு மேல இருக்கும் ஏன் தெரியுமா? கால்கள் முழங்கால் வரை சேத்தில முங்கி இருக்குமப்பா! கறைபடியாத, அக்குள்ள வேர்த்து ஜாக்கெட்டு நனைஞ்சி, முள்ளு கெளயில மாட்டிச் சேலைக் கிழியாத, எண்ணை இல்லாம காய்ஞ்ச தலையோட, இல்லாத வயக்காட்டுப், பொண்ணையேப் பார்க்க முடியாது. வான்காவோட ’உருளைக் கிழங்கு தின்பவர்கள்’ படத்தைப் பார்த்திருக்கியாப்பா, அவங்க நிஜமான மனிஷங்க. இது கட் அவுட்டு. பெரிய ஓவியர்ன்னா ஏழைங்கள வரையறதுதானப்பா பேஷன்! அதான் வரைஞ்சிருக்கார்! ஆனா என்ன பண்ணார்? தனக்குத் தெரிஞ்ச பொண்ணுங்களை, தான் வயல்லுன்னு நெனைச்சிக்கிட்டதில வரிசையா நிக்க வைச்சிட்டாரு!- பெரிய்ய ஓவியரு இல்ல அதான் பொலிவான பொண்ணுங்க புது சேலையில, கால் கொலுசோட பார்க் மாதிரி இடத்தில குனிஞ்சிகிட்டிருக்கு, நாத்து நடனும் இல்ல... அதான் கையில பாரு நாத்துக் கட்டு திணிச்சிருக்கு!” நான் குறுக்கிட்டு ”ஆனா படம் செய்நேர்த்தியோட நளினமாத்தானே இருக்குது” என்றேன் குழப்பத்தோடு. “பொணத்துக்கு கல்யாணப் பொண்ணு போல அலங்காரம் பண்ணினா ரமேஷு கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றாம்பா ஹரி! என்னான்னு கேளேன்!” என்றார்.



வேனிற்கால சிறப்பிதழாக வந்துள்ள கல்குதிரையில் ஜப்பானிய எழுத்தாளரும், நாவலாசிரியருமான ஹாருகி முரகாமியின் (Haruki Murakami) பேட்டியில் வாசித்த விஷயம் என்னைக் கவர்ந்தது. ஆலன் ஸில்லிடொவின் (Alan Silitoe) “The Loneliness of the Long distance runner” பற்றிக் கருத்து கேட்கிறார் பேட்டியாளர். அதற்கு அவர் அந்தப் படைப்புத் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், மிகவும் சலிப்பாக இருந்ததென்றும் கூறுகிறார். அதற்கான காரணமாக அவர் கூறியது, “ஸில்லிடொ ஓட்டக்காரர் அல்ல என்பதை நீங்கள் உடனே அறிந்து கொள்ளலாம்.” என்பதுதான். ஹாருகி முரகாமி ஒரு மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர் என்பதை நாம் இச் சமயத்தில் நினைவிற் கொள்ள வேண்டும்.!



எண்பதுகளின் இறுதியில் என்னுடைய நண்பன் உதயகுமார் ஒரு சிறுகதை எழுதியிருந்தான். ஒரு தோழியின் தந்தைக்கு திடீரென இதய வலி வந்து அவரை மருத்துவ மனையில் சேர்ப்பதைக் குறித்த கதை. முற்றிலும் தான் பார்த்த புற சித்தரிப்புகளைக் கொண்டே அக் கதையை நிகழ்த்தியிருந்தான். ஆசிரியர் குறுக்கீடு எங்குமே நிகழவில்லை. நுணுக்கமாக கதாபாத்திரங்களின் செயல்கள், பேச்சுகள் ஆகியவற்றைப் பதிவு செய்திருந்தான். ”பெரிய அபாயம் தவிர்க்கப் பட்டுள்ளது, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என மருத்துவர் கூற ஆசுவாசம் பெற்று நாயகனும், அவனது தோழியும் வெளியே வருவதாகக் கதையை முடித்திருந்தான். அகவுலக சித்தரிப்புகளின்றியே நாயகியின் மன நெருக்கடியும், பின் அடையும் ஆசுவாசமும் சொல்லப்பட்டிருந்த விதம் புதுமையாக இருந்தது. அக்கதை குமுதத்தின் சிறுகதைக்கான போட்டியில் பரிசு பெற்றபோது, இதே அம்சத்தைச் சிலாகித்திருந்தார்கள்.



தமிழில் இத்தகைய இலக்கியப் படைப்புகளை யதார்த்த வகைப் படைப்புகள் என்றோ அல்லது இயல்புவாதப் படைப்புகள் என்றோ வகைப்படுத்துகின்றனர். ஆசிரியர் புறச் சித்தரிப்புகள் மற்றும் பாத்திரங்களின் பேச்சு மொழியின் ஊடாக கதையை நகர்த்துவதையும், இலக்கிய ஆழங்களையும், கலாபூர்வமான வெற்றிகளையும் கண்டடைகிறார். மிகக் குறைந்த அளவிலேயே ஆசிரியரின் குறுக்கீடு நிகழ்கிறது. ஆசிரியர் எந்த நிலையிலும் சார்பு நிலை எடுப்பதில்லை. கதாபாத்திரங்களின் வாழ்வினை இயக்க ஆளில்லாமல், தானே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படக் கேமராவைப்போல புனைவு பதியப்படுகிறது.



ஜி. நாகராஜனின் இலக்கியச் செயல்பாடு இத்தகைய வகைப்பாட்டின் கலாபூர்வமான வெற்றிகள் எனலாம். கண்மணி குணசேகரன் ஒரு இயல்புவாதப் படைப்பாளி. அவரது பிரக்ஞைபூர்வமான தேர்வு அதை உறுதிபடுத்துகிறது. சாதாரணமாகச் சொல்ல, சிறிய அளவிலான அழகுகளைக்கூட முற்றிலும் தவிர்த்து, வட்டார வழக்குடன் கூடிய மொழி நடையை உருவாக்குகிறார். அரிதாக குறுக்கிடும் ஆசிரியரின் சித்தரிப்புகளிலும் வட்டார மொழியையேக் கையாள்கிறார். தலித்திய நிலைப்பாடோ, பெண்ணிய நிலைப்பாடோ, முற்போக்கு இலக்கியமோ சார்பு, சார்புகளற்று தம் மக்களின் வாழ்வினை சிரத்தையுடன் பதிவு செய்கிறது கண்மணியின் கவனிப்பு.



அசலான எந்த மண்சார்ந்த இலக்கியப் படைப்பும், அந்த மக்களின் மூச்சுக்காற்றை எந்த அளவில் படைப்பாளி சுவாசித்திருக்கிறான், அந்த மக்களின் வாழ்வையும், சாவையும் எந்த வழிகளில் வாழ்ந்து பார்த்திருக்கிறான், அவர்களாக அவன் எவ்வளவு உருமாறி இருக்கிறான் என்பதைப் பொறுத்தது. அது கரும்புக் கொல்லையாகட்டும், முந்திரிக் காடாகட்டும், தேயிலைத்தோட்டமாகட்டும், அல்லது ரப்பர் மரக் காடாகட்டும், ஒவ்வொரு தோட்டப்பூவைப் போல ஒவ்வொரு மண்ணுக்குமான வாசம் போல ஒவ்வொரு மண்பூசிய மனிதருக்குமான வீச்சத்தை ஒரு கலைஞனால் மட்டுமே பதியவைக்க இயலும். முந்திரியும், பலாப்பழமும் விளையும் கடலூர், வடலூர், விழுப்புரம், நெய்வேலி, பண்ருட்டி, விருதாச்சலம் சார்ந்த நடு நாடு எனப்படும் தென்னார்க்காடு விளைவிக்கும் மனிதர்களின் மீதான அக்கறை கொண்ட படைப்புகளைக் கண்மணி குணசேகரன் படைக்கிறார். நுண்மையான சித்தரிப்பும், இயல்பான கதாப்பாத்திரங்களும், சாதாரணமான நடு நாட்டு வட்டார வழக்கிலான பேச்சு மொழியும், புறவுலகச் சித்தரிப்புகளையும் கொண்டவை இவரது கதையுலகு.



எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் இயர்பெயர் குணசேகரன். போக்குவரத்து துறையில் தொழிலாளராக உள்ளார். விருதாச்சலத்திலுள்ள மணக்கொல்லையில் வசிக்கிறார். யதார்த்தவாத படைப்புகளுக்குச் சொந்தக்காரர். உயிர்த்தண்ணீர் இவரது முதல் சிறுகதை தொகுதி. இதை கவிதாசரண் பதிப்பகம் வெளியிட்டது.



தமிழினி பதிப்பக வெளியீடுகளாக இவரது நூல்கள் வந்துள்ளன. ஒரு அடித்தள சமூகப்பெண்ணின் வாழ்க்கையை சித்தரிக்கும் “அஞ்சலை” “கோரை” இவரது முக்கியமான நாவல்கள். இவர் ’நடு நாட்டுச் சொல்லகராதி’ என்ற கடலூர் வட்டார வழக்கு அகராதி ஒன்றையும் தயாரித்திருக்கிறார். சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார்.



பூரணி பொற்கலை, ஆதண்டார் கோயில் குதிரை, உயிர்த்தண்ணீர், வெள்ளெருக்கு, ஆகியவை இவரது சிறுகதைத் தொகுப்புகள்.



அஞ்சலை , கோரை , நெடுஞ்சாலை ஆகியவை இவரது நாவல்கள்.



தலைமுறைக் கோபம், காட்டின் பாடல் ஆகியன கவிதை நூல்கள்

Kanimozhi.

கனிமொழி தின்ற உப்பு !


Wednesday, June 08, 2011

மக்களாட்சி அரசியலும், அரசு பதவிகளும் குடும்பச் சொத்தாக மாற்றி கையகப்படுத்தும் முயற்சியின் குறுக்கு வழிகள் எவ்வளவு பேராபத்தானவை என்பதை இந்தியாவிற்கு பாடமாக வைக்கும் அளவுக்கு கருணாநிதியின் குடும்பம் பற்றி இந்திய ஊடகங்கள் அனைத்திலும் பதிவு செய்யப்பட்டுவருகிறது. திராவிட அரசியலில் வெற்றிகரமாக 5 முறை முதல்வர் பதவியையும், பல்வேறு மத்திய அமைச்சர் பதவிகளை தன் கட்சியினருக்குப் பெற்றுத் தந்த கருணாநிதி இன்று வேதனையில் இருக்கிறார், இந்த சூழலில் அவரது நாக்கும், எழுத்து இலக்கிய நடையின் சுவை மாறாது அந்த வேதனையை 'திகார் சிறையின் கடும் வெப்பம் பறித்து வைக்கும் அன்றைய மலர்களைக் கூட 10 நிமிடத்தில் கறுக்கி விடும்' என்று பேச முடிகிறது.



கருணாநிதி நான்கு முறை முதல்வராக இருந்தும் கூட (இரண்டாம்) துணைவி திருமதி ராசாத்தி அம்மாளும் அவரது மகளும் அரசியல் சார்ந்த பதவிகளுக்கு உரிமை கோர கருணாநிதி அனுமதித்து இருக்கவில்லை அல்லது அவர்களே ஆசைப்படவில்லை. கருணாநிதியின் வயோதிகம் மற்றும் தனக்கன எதிர்காலப் பாதுகாப்பு என்ற வகையில் கருணாநிதியின் அரசியல் (சொத்துக்களின்) வாரிசுகளில் ஒருவராக தன்னையோ தன் மகளையோ ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற நெருக்குதல் காரணமாக ராசாத்தி அம்மாளின் தூண்டுதல் மூலமாகவோ கனிமொழி அரசியலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றே கருத வேண்டியுள்ளது. 'என்னால் தானே இத்தனையும் ?' என்று கனிமொழியிடம் சிபிஐ நீதிமன்றத்தில் சந்தித்த போது இராசாத்தி அம்மாள் வேதனையுடன் அழுது கொண்டே கூறினாராம் (ஜூவி) இது கற்பனையென்றாலும் கூட மெய்பிக்கும் வண்ணம் தேர்தலுக்கு முன்பே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு முன்பே, கருணாநிதி ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் இராசாத்தி அம்மாளின் கட் அவுட்டுகள் இருந்ததை மறுப்பதற்கில்லை.



கருணாநிதியின் வழிகளில் ஒன்றாக இலக்கியம், கவிதை என்ற ரீதியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இலக்கிய வட்டத்தில் வளர்ந்த கனிமொழி, கருணாநிதியின் அரசியல் வாரிசாக மாற்றிக் கொண்டு வளர்ந்தவிதம் முழுக்க முழுக்க இராசாத்தி அம்மாளின் நச்சரிப்பினால் தான் நடந்திருக்க வேண்டும். தயாளு அம்மாவின் ஆண் வாரிசுகள் (ஸ்டாலின், அழகிரி) அரசியலில் கொடி கட்டிப் பறப்பதைப் பார்க்கும் போது இராசாத்தி அம்மாள் தான் பெற்ற ஒரே ஒரு வாரிசு அவ்வாறு உச்சத்தை அடைய நினைத்தது அவரது எண்ணப்படி தவறு இல்லை, ஆனால் கனிமொழி மீதான அவரது அரசியல் திணிப்பு அவரை நீராராடியாவின் நெருக்கம் அளவிற்கு செல்ல வைத்து, குறுக்கு வழியில்ர ( அன்பு மணி / இராமதாஸ் ஆசைப்படும்) மேலவை உறுப்பினர் ஆக்கி, ஊழலில் முகாந்திரம் இருந்து விசாரணைக்கு சிறையில் அடைக்கும் அளவுக்கு ஆக்கியுள்ளது.



என்ன தான் மாட மாளிகை தங்கத்தில் இழைத்த வீடு என்றாலும் ஒருவர் அதில் தனியாக இருப்பது கொடுமையான ஒன்று தான், அதே நிலையை சற்று எதிராக திகார் சிறை பற்றி நினைத்துப்பாருங்கள், பத்து - பத்து சதுர அடியில் ஒற்றை கழிவரை, இவ்வளவு நாள் குடும்பம், கட்சியினர், மகன் என்று தன்னைச் சுற்றிலும் யாராவது இருந்து கொண்டே இருந்த ஒருவர் சிறையில், எப்போதும் எதிர்கால அரசியல் வளர்ச்சி பற்றி சிந்தனையில் இருந்த ஒருவர் இரவுப் பொழுதை தனிச்சிறையில் கழிப்பதென்பது எவ்வளவு கொடுமையான ஒன்று.



இதை எழுதும் போது எனக்கு கருணாநிதியின் ஈழம் குறித்த செயல்பாடுகள் கூட நினைவுக்கு வரவில்லை, நான் இதை திமுக எதிர்ப்பு அல்லது ஆதரவு நிலையில் இருந்து கூட எழுதவில்லை. இன்று கனிமொழிக்கும், கலைஞர் தொலைகாட்சி இயக்குனர் சரத் குமாருக்கும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதாம். இதன்படி மீண்டும் திகாருக்குச் செல்கிறார்கள், இனி எப்போது கனிமொழி வழக்கில் இருந்து மீண்டுவருவாரா அல்லது தண்டனையின் தொடர்ச்சியாக தொடர்வாரா என்பது கேள்விக்குறி ? கனிமொழியின் இன்றைய நிலைக்கு திருமதி ராசாத்தி அம்மாளின் பேராசையும், அதற்கு தடை போட வக்கிலாமல் இன்றும் இலக்கிய சுவை மாறாது பேசும் கருணாநிதியும் தான் காரணம். கனிமொழியும் தெரிந்தே தவறு செய்திருக்கிறார் காரணம், அரசியல் அதிகாரம் தன் தந்தையின் கட்டுப்பாட்டை மீறிவிடாது என்ற நம்பிக்கையாக இருந்திருக்கலாம். இதில் பரிதாப்பபட வேண்டிய இருவர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் அவர்களது வாரிசு ஆதித்யா தான், வேறு எவரையும் விட கனிமொழியின் அன்பும் அரவணைப்பம் இவர்கள் இருவருக்குத்தான் தேவைப்படும். இவர்களுக்காக கனிமொழி மீதான அரசியல் மற்றும் ஊழல் குற்றச் சாட்டுகள் குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.



தாயார் இராசாத்தி அம்மாள் காய்ச்சியை உப்பை, தந்தை கருணாநிதியிடம் கொடுத்து ஊட்டிவிடச் சொல்ல கனிமொழியும் ஆசை ஆசையாக தின்றுவிட்டார்.